வயது ஐம்பது ஆனாலும் வாழ்ந்தது பதினேழே வருடங்கள்.
வாழ்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையை படித்தது பதினேழே வருடங்கள்..
படித்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் மகிழ்ந்தது பதினேழே வருடங்கள்..
மகிழ்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் ரசித்தது பதினேழே வருடங்கள்...
ரசித்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் சிரித்தது பதினேழே வருடங்கள்...
சிரித்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் உணர்ந்தது பதினேழே வருடங்கள்...
உணர்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் ... வாழ்ந்தது பதினேழே வருடங்கள்...
ஐம்பதில் பதினேழை கழித்தேன்... மீதம் வந்த முப்பத்தி மூன்று வருடங்களை எப்படி கழித்தேன் என்று புரியாமல் .... இந்த பதினேழு, நூறாக ஆண்டவனிடம் கேட்டு கொண்டு...
வாழ்த்துகிறேன்.. என்னையே... எனக்கும் பிறந்த நாள் தானே....
என்னை அப்பாவாய் பதினேழு வருடங்களுக்கு முன் இன்றுதானே ஈன்றெடுத்தாள்... அவள் பல்லாண்டு வாழ்க வார்த்தையின்றி வாழ்த்துகின்றேன்.
காலையில் எழுந்தவுடன்... பிடிக்க சிகரெட், ஒன்று மட்டும் இருந்தால் போதும், அடுத்த நாளை சமாளித்துவிடலாம் என்ற ஒரு சில்லறை எண்ணத்தையே .. குறிக்கோளாக வளர்ந்த - வாழ்ந்த என்னையும் ஒரு மனிதனாக்கினாளே ...
தந்தை என்ற ஒரு அந்தஸ்தை தந்த இவள் என் சேய் அல்ல தாய்...
இன்னாரின் மகன் என்பதை விட...
அம்மணியின் ஆத்துகார் என்பதை விட...
அலுவலகத்தின் கணக்கு பிள்ளை என்பதை விட....
அவளின் "அப்பா" என்பதில் தான் மெய் சிலிர்க்கிறது..
பின் குறிப்பு :
காலையில் எழுந்தவுடன் ... டாடி.. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க இரவு வெளியே போய் சாப்பிடலாம்னு சொன்னாளே .. இவளோட வெளிய போனா.. வீட்டை தானே எழுதி வைக்கணும்....
நான் இப்ப வளர்ந்துட்டேன் டாடி.. எனக்கு நல்ல பொறுப்பு வந்துடிச்சி ... நிறைய செலவு செய்ய மாட்டேன்னு சொல்லுவாளா?
சொல்லுவாளா? சொல்லுவாளா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

Happy Birthday my Life... Have a Blast...
பின் குறிப்பு :
காலையில் எழுந்தவுடன் ... டாடி.. சீக்கிரம் வீட்டுக்கு வாங்க இரவு வெளியே போய் சாப்பிடலாம்னு சொன்னாளே .. இவளோட வெளிய போனா.. வீட்டை தானே எழுதி வைக்கணும்....
நான் இப்ப வளர்ந்துட்டேன் டாடி.. எனக்கு நல்ல பொறுப்பு வந்துடிச்சி ... நிறைய செலவு செய்ய மாட்டேன்னு சொல்லுவாளா?
சொல்லுவாளா? சொல்லுவாளா?
பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.
உங்களின் ராசத்திக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் இந்த நல்ல நாளில் அவள் விரும்பிய ஆசைப்பட்ட வேண்டிய பிரார்த்தித்த நம்பிய அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள். ஆண்டவர் தேவதைக்கு எந்த குறையும் இல்லாமல் ஆசிர்வாதத்தை அள்ளி வழங்குவார் தேவதை செல்லும் வழியில் எல்லாம் தேவ தூதர்களை அனுப்பி வழியை செம்மை படுத்துவார். வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குதங்கள் வாழ்த்திற்கு நன்றி...
நீக்குஇங்குள்ள கார் ராசத்திக்கு வாங்கி கொடுத்த பிறந்த நாள் பரிசா?
பதிலளிநீக்குஅந்த டிபார்ட்மெண்டுக்கும் அடியேனுக்கும் சம்பந்தமே இல்லை.. ராசாத்தி ஆச்சி ... அவங்க அம்மா ஆச்சி....
நீக்கு
நீக்குஅம்மா ஆச்சி....வாழ்க அம்மா ஆச்சி....வாழ்க அம்மா ஆச்சி....வாழ்க அம்மா ஆச்சி....வாழ்க நான் நிறைய தடவை வாழ்க என்று சொன்னதாக அம்மா ஆச்சியிடம் சொல்லி எனது விலாசத்தை கொடுங்கள்
ஹலோ விசு உங்களுக்கு இரண்டு ராசத்திகள் மட்டும் இருக்கின்றன ஆனால் ராஜ குமாரான் இல்லை .ராஜகுமாரனை தத்து எடுப்பத்தாக இருந்தால் உங்கள் வீட்டில் ராஜகுமாரனாக இருக்க நான் ரெடி தத்து எடுக்க அம்மா ஆச்சி ரெடியா என்று கேட்டு சொல்லவும்
நீக்கு//நான் இப்ப வளர்ந்துட்டேன் டாடி.. எனக்கு நல்ல பொறுப்பு வந்துடிச்சி ... நிறைய செலவு செய்ய மாட்டேன்னு சொல்லுவாளா?//
பதிலளிநீக்குஉங்கள் ராசாத்தி நிறைய செலவு பண்ணமாட்டாள் என்று நிச்சயம் சொல்லுவாள் அதற்கு நான் க்யாரண்டி ஆனால்
அவள் உங்களை நிறைய செலவு பண்ண வைத்துவிடுவாள் ஹீஹீ
நீங்க நல்லவரா ... கெட்டவரா?
நீக்குநல்லவனாக இருக்க ஒன்றும் செய்யவேண்டாம் சும்மா அசடாட்டம் இருந்தால் போதும் ஆனால் கெட்டவனாக இருக்கும் ஸ்மார்ட்தனம் வேணும் அதனால நா நல்லவன் மாதிரி நடிக்கும் கெட்டவன் .என்று சொல்லலாம்
நீக்குவிசு முதலில் உங்கள் ராசாத்தி...இல்லை இல்லை எங்கள் அனைவரது ராசாத்தியும்தான்...(நம் நண்பர்கள் அனைவரது ராதாத்திகளும், ராசாக்களும் நம் எல்லோரது குழந்தைகளும் என்ற நோக்கில்) எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! ராசாத்திக்கு எல்லா வித நன்மைகளையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக! பிரார்த்திக்கின்றோம் ராசாத்திக்காக!
பதிலளிநீக்குநிச்சயமாக ராசாத்தி பொறுப்புடன் இருப்பார்....பாருங்கள்!
வாழ்த்துக்கள். முதல் குழந்தை எப்போதும் முதல்தான். பொறுப்பிலும்.
பதிலளிநீக்கு"நான் இப்ப வளர்ந்துட்டேன் டாடி.. எனக்கு நல்ல பொறுப்பு வந்துடிச்சி ... நிறைய செலவு செய்ய மாட்டேன்னு சொல்லுவாளா" - அவங்க நம்ம கிட்ட டிமாண்ட் பண்ணாம வேற யார்கிட்ட பண்ணுவாங்க? By God's grace, they ask when you (or I ) have money. 'நம்ம கிட்டதான் அவங்க உரிமையாகக் கேட்பாங்க. நம்மளைக் குறை சொல்வாங்க. அனுபவியுங்கள்.
அவங்க காசுன்னு வரும்போது அவங்க ரொம்ப கேர்ஃபுல்லாக இருந்துக்குவாங்க.
அன்பு மகளுக்கு இனிய பிறந்த நாள்
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்
(மகனைப் பெற்றவர்கள் எல்லாம்
மன்னர்களெனில்
மகளைப் பெற்றவர்கள் எல்லாம்
மாமன்னர்கள்தான்
நானும் தங்களைப் போல்
மாமன்னனே )
ராசாத்திக்கு,இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசெல்ல மகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :) May God Bless You ..
பதிலளிநீக்கு//நிறைய செலவு செய்ய மாட்டேன்னு சொல்லுவாளா?
சொல்லுவாளா? சொல்லுவாளா?//
அவங்க சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் அதனால் சொல்ல விட மாட்டீங்க :)
நான் பெற்றது இரண்டும் பெண்களே! இன்று அவர்கள் தாய்! நான் சேய்! தங்கள் மகள் வளமுடன் வளர, வாழ வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஉங்கள் செல்ல மகளுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு