புதன், 17 ஆகஸ்ட், 2016

பதினாலு நொடியும் அடியேனின் கடியும்

கேரள மாநிலத்தில் பெண்களை பதினாலு நொடிகள் தொடர்ந்து பார்த்தால் கைது செய்ய படுவார்கள் என்று ஒரு செய்தி வந்தது.

அந்த நொடியினால் எனக்கு உதித்த கடி.



மன்னிக்கணும் யுவர் ஹானர் .. 
தூரத்தில் இருந்து பார்க்கும் போது என் மனைவி மாதிரி தெரிஞ்சா.. அதனால் தான் பதினாலு நொடிக்கு மேலே பார்த்தேன்.
பொய்.. உனக்கு ஆறு மாசம் சிறைத்தண்டனை.
யுவர் ஹானர் .. பொய்யுன்னு எப்படி சொல்றிங்க?
எந்த முட்டா பையன் அவன் பொண்டாட்டியை தொடர்ந்து பதினாலு நொடி பாத்து இருக்கான்?


அந்த பொண்ணையே பார்த்து இருக்கியே.. பதினாலு நொடிக்கு மேலே பாக்க கூடாதுன்னு சட்டம் இருக்கே . .. எம்புட்டு தைரியம் உனக்கு... உன் பெரு என்னடா?
கண்ணாயிரம்...
யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்.



யுவர் ஹானர்..
சின்ன வயசுல இருந்தே எனக்கு மாறு கண். அப்படியே 14 நொடின்னு பார்த்தாலும் அதை ஒன்னறையில் வகுத்தால் குத்து மதிப்பா ஒம்போதரை நொடி தான் வருது. இதை கருத்தில் கொண்டு என்னை விடுவிக்க வேண்டும்.


யுவர் ஹானர்!
நாங்க மொத்தம் மூணு பேர். அஞ்சு நிமிஷம் தான் பாத்து இருப்போம் . மூன அஞ்சலா பெருக்கி பதினால தாண்டிடுச்சின்னு கைது பண்ணிட்டாங்க. இந்த 14 நொடி தலைக்கா.. இல்லாட்டி க்ரூப்புக்கா ?


மொத்தம் 14 வினாடி பார்த்தேன் அது என்னவோ உண்மை தான். இருந்தாலும் நான் பாக்க ஆரம்பிக்கும் போது நைட் 11:59:52 , பாத்து முடிக்கும் போது 12:00:06.
இந்த கணக்கில் பாத்தா.. நான் நேத்து 8 நொடியும், இன்னைக்கு 6 நொடியும் பாத்து இருக்கேன். இதை மனதில் கொண்டு என்னை விடுவிக்குமாறு கேட்டு கொள்கிறேன் யாவர் ஹானர்.


மேடம் .. நீங்க மலையாளியா?
ஏன்...
கொஞ்சம் உத்து பாக்கணும். பதில் சொல்லிங்கன்னா 14 வினாடி பாக்கலாமா? இல்லை அதுக்குமேல பாக்கலாமான்னு டிசைட் பண்ணனும் !








4 கருத்துகள்:

  1. ஹஹஹாஹ்ஹஹஹ் செம விசு!!!

    யுவர் ஹானர்! சட்டம் ஓகே! சாலையில் மட்டுமா? நெட்ல கொட்டிக் கிடக்கிற பெண்களின் படத்தினை 14 நொடி/ இல்லை பார்த்துக் கொண்டே இருந்தா பார்த்தா அதற்குத் தண்டனை?

    பதிலளிநீக்கு
  2. யுவர் ஆனர். வந்தது பொம்பளையா ஆம்பளையானு கன்ப்யூஸ் ஆயிட்டேன். அதுனாலதான் ரொம்ப'நேரம் உத்துப்பாக்க வேண்டியதாப் போச்சு.

    விசு.. சட சடவென நகைச்சுவையை எழுதிட்டீங்களே.. நல்லா இருந்துச்சு.

    பதிலளிநீக்கு
  3. bro john keats wrote >>>the thing of beauty is a joy for ever so the celebrated poet might also be arrested if he were alive

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...