பனிரெண்டு வயது.. என் இல்லத்திலும் இரு ராசாத்திக்கள் சில வருடங்களுக்கு முன் பனிரெண்டு வயதில் இருந்தார்கள்..
அந்த நாட்களை எண்ணி பார்க்கின்றேன்.
உலகமே அவர்களின் அம்மா... அப்பாவோ சூப்பர் மென்.
எங்க அப்பாவினால் முடியாதது எதுவும் இல்லை என்ற நினைப்பு.
ஐந்து மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு எதிரில் வண்டியை நிறுத்தியதும் .. ஓடி வந்து. அரவணைப்பு.. அம்மாவிற்கும் சரி.. அப்பாவிற்கும் சரி. உலகமே... இதுதான்.
ஒரு நாள் இரவு .. கனவில் நான் இறந்தேன் என்று அழுது கொண்டே ஓடி வந்தவள்.. அடுத்த ஒரு வாரம் என் அறையை விட்டு விலகவே இல்லை.
பனிரெண்டு வயது பெண்.. என்ன ஒரு மகத்தான வயது. இது ஒருத்தி சிறுமி பருவத்தில் இருந்து பெண்ணாகும் தருணம் அல்லவா? எவ்வளவு மென்மையாக நடத்தபட வேண்டிய வயது.
நேற்று.. ஒரிசாவில் தகப்பன் தன் தாயின் சடலத்தை தூக்கி கொண்டு நடக்கையில் ... கையில் இரண்டு பையோடு கூடவே அழுது கொண்டு வந்தாளே ... அவளுக்கு பனிரெண்டு தான்.
பனிரெண்டு வயதில் ஒருத்திக்கு தன் தாயை இழப்பதை விட வேறு ஏதாவது நடக்கும் என்றால் .. அது இவளுக்கு நடந்தது தான்.
தேம்பி தேம்பி அழுது கொண்டு....அவளை பார்க்கையில் நெஞ்சு பதறிவிட்டது.
இவளின் அம்மா இரவு 12:30 க்கு இறந்து இருக்கின்றாள்.. அடுத்த ஆறு மணி நேரம்... பத்து கிலோ மீட்டர்.. பிணத்தோடு தகப்பன் நடக்க..கூடவே இவள்.
வாகனத்தில் அமர்ந்து இருக்கையில் வெளியே இருந்து யாராவது பார்த்தாலே.. "இங்கே ஏன் பார்க்கின்றார்கள் என்று என்னை கேள்வி மேல் கேள்வி கேட்பாள் என் பனிரெண்டு"
இவளோ...
ஊரெல்லாம் வேடிக்கை பார்க்க ... ஐயோ ..
இந்த இளம்பிஞ்சு 6 மணி நேரம் ... எதையாவது சாப்பிட்டாளா? குடித்தாளா? கழிவறை ? அய்யகோ...
ஆறு மணி நேரம் ஒரு பிணத்தோடு நடந்து இருக்கின்றார்கள்.. அங்கே ஒரு காவல் அதிகாரி கூட இல்லையா? ஒரு சமூக ஆர்வலர்கள் இல்லையா? இந்த ஊரில் சட்ட சபை பாராளுமன்ற சபை என்று எந்த உறுப்பினர்களும் இல்லையா?
ஏன் .. இங்கே மனிதன் எவனும் இல்லையா?
பனிரெண்டு வயது பெண்..
"நாளைக்கும் நடக்கும் விளையாட்டு போட்டியை நினைத்தேன்.. பயமா இருக்கு தூக்கமே வரல " என்று வந்தாளே.. என் பனிரெண்டு...
இவளோ.. இனி எப்படி தூங்குவாள்....?
ஒரு சமுதாயமாக நம் தவறிவிட்டோம் ..
இந்த பனிரெண்டுக்கு நாம் இழைத்த அநீதி கண்டிப்பாக நம்மை சும்மா விடாது..

வார்த்தைகளில்லை விசு..சார்
பதிலளிநீக்குMr Visu my heart bled too immediately when i saw that report and i wrote a mail to send a humble token of sg $100 to the affected family , sent to the Kalahandi collector, but may be too early to get a reply but let's all try our best to offer some financial assistance to that poor girls studies at least? UPPILI RAGHAVAN SINGAPORE
பதிலளிநீக்குThanks....please dont send any noney to any officials. Oru kilo mutton vaangi kudumpsthodu saapida utkaanthuduvaanga...find a NGO volunteer...and take their help.
நீக்குThanks....please dont send any noney to any officials. Oru kilo mutton vaangi kudumpsthodu saapida utkaanthuduvaanga...find a NGO volunteer...and take their help.
நீக்குவிசு!!! செம விசு! என்ன சொல்ல என்று தெரியவில்லை!
பதிலளிநீக்குமாந்தர்களா நாம்.. நெஞ்சு பொறுக்குதில்லையே....
பதிலளிநீக்குவார்த்தைகளில் வலி வடித்துவிட்டிர்கள் !!
பதிலளிநீக்குசொல்லவதுக்கு வார்த்தையில்லை துயரம் துயரம்!
பதிலளிநீக்குவலிக்கிறது! இந்தியாவில் மனிதம் மரணித்துவிட்டது!
பதிலளிநீக்குவலி மிகுந்த பதிவு. மனிதம் மரித்து விட்டது.....
பதிலளிநீக்குAN EMOTIONAL ARTICLE BRO
பதிலளிநீக்கு