ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

கொடி காத்த குமரன்...

1982 ம் ஆண்டு லாஸ் அஞ்சல் நகரில் நடந்த ஒலிம்பிக்சில் இருந்து நான்கு வருடத்திற்கு  ஒரு முறை இந்த போட்டியை கண்டு களித்து  வருபவன் நான்.

இந்த போட்டிகளில் என்னை பெற்ற அன்னை எதுவும் பெரிதாக சாதிக்காவிட்டாலும் என்னை பராமரிக்கும் அன்னை முதல் தரத்தில் இருக்கின்றாள்.

விளையாட்டை ரசித்து பார்க்கும் அனைத்து ஆர்வலருக்கும் ஏதாவது ஒரு அணியை ஆதரிக்கும் போது தான் அதை பார்க்கும் போது ஒரு திகில் உணர்வு கிடைக்கும்.

அப்படி பார்க்கும் போது, இந்தியர்களாகிய நமக்கு அவ்வளவு பாக்கியம் இல்லை. நம் வீரர்கள் போட்டியிடுவது மிக குறைந்த அளவு போட்டிகள். அதிலும் அவர்கள் வெற்றி பெறுவது இன்னும் குறைவு.

நாம் கொடுத்துவைத்தது அம்புட்டு தான் என்று இந்தியாவில் வாழும் இந்தியர்கள் நினைக்கையில், என்னை போன்றோருக்கு இரண்டு வாய்ப்பு. முதலில் இந்தியாவிற்கான ஆதரவு. இரண்டாவது நான் வாழும் அமெரிக்காவிற்கு.



விளையாட்டு வெறி பிடித்த மக்கள் இந்நாட்டு  மக்கள். அதனால் தான் என்னமோ , எல்லா துறைக்கும் ஒரு அமைச்சர் வைத்து இருந்தாலும் விளையாட்டு துறையை அரசியல்வாதிகளின் கையில் கொடுக்கவில்லை.

ஒரு வளரும் சிறுவனோ சிறுமியோ ஏதாவது ஒரு விளையாட்டில் சிறந்து விளங்கினால், ஊரே அவர்களை பற்றி பேசும்.

பள்ளிக்கூடத்தில் யாராவது பிரகாசித்தால் ... சொல்லவே வேண்டாம்.

உதாரணத்திற்கு..

சென்ற வருடம் அடியேனின் ராசாத்தியின் பள்ளியின்  Baseball  என்ற ஆட்டத்தில் வெற்றி மேல் வெற்றி பெற்று வந்தது. அந்த அணியை சார்ந்த வீரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு கொண்டு சிறக்க...

இந்த அணி 2015 ம் ஆண்டின் தேசிய சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

இந்த அணியை பற்றி கேள்விப்பட்ட "Atlanta Braves" என்ற அணி (நம்ம Cricket   IPL போன்ற அணி) உடனடியாக அவர்களின் ஆட்களை இந்த பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி இவர்களின் ஆட்டத்தை பார்த்து வர சொல்ல..

வந்த அவர்கள் பேய் அறைந்ததை (அந்த கடகியை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) போலானர்கள். இந்த மாணவர்களின் ஆட்டம் அவ்வளவு அட்டகாசம்.

வந்தவர்கள் ஆட்டத்தின் முடிவில் இரண்டு மாணவர்களை தேர்ந்தெடுக்க.. இந்த இருவருக்கும் ...கோடிக்கணக்கான ஒப்பந்தத்தை அளித்து தங்கள் அணிக்காக தேர்ந்து எடுத்தார்கள்.

இதில் இன்னொரு விஷயம்.. இந்த இரு மாணவர்களும் சரி, இந்த அணியை சார்ந்த  மற்ற மாணவர்களும் சரி, இந்த அணியில் உள்ள அனைவருக்கும் இவர்கள் பள்ளி இறுதி ஆண்டை முடிக்கும் முன்பே இங்கு உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகத்தில் இருந்து அவர்களின் பட்ட படிப்பை இலவசமாக முடிக்க ஏகபட்ட வரவேற்பு.

விளையாட்டிற்கு அவ்வளவு முக்கியம்.

அரசு பள்ளியோ.. தனியார் பள்ளியோ.. ஒவ்வொரு நடு நிலை பள்ளி மாணவ மாணவியருக்கும் தினந்தோறும் PE வகுப்புகள் உண்டு. இதில்  வாரத்திற்கு குறைந்த பட்சமாக இவர்கள் 4 அல்லது 5 மைல் ஓடியாக வேண்டும். அது ஒரு சட்டம் போல் செயல் படுகின்றது.

அதே போல்.. மாணவர்களிடம்.. நாட்டு பற்று - மற்றும் தேசிய கீத பற்று - மற்றும் தேசிய கோடி பற்று என்று சிறுவயதில் இருந்தே ஊட்டி வளர்த்துவிடுவார்கள்.

என்ன ஒரு விளையாட்டு போட்டியாக இருந்தாலும் போட்டியின் ஆரம்பத்தில்  அங்கே உள்ள ஒருவரை அழைத்து தேசிய கீதம் பாட சொல்லி அந்த பாட்டு முடிக்கையில் ஒரு ஆரவாரத்துடன் ஆட்டம் ஆரம்பிக்கும்.

இந்த பாடலை யார் பாட போகின்றார்கள் என்ற ஏக்கம் .. ஆட்டத்தை பார்க்கும் முன் அனைவருக்கும் இருக்கும். தேசிய கீதம் மட்டும் அல்லாமல் மற்ற சில தேசிய பற்று பாடல்களும் பாடப்படும்.

இங்கே வருடா வருடம் Super Bowl என்ற ஒரு ஆட்டம் நடக்கும். இந்த ஆட்டத்தின் அன்று மொத்த நாடே ஸ்தம்பத்திவிடும்.  சென்ற வருடம் இந்த ஆட்டத்தை தொலைக்காட்சியில் கண்டு களித்தோரின்  எண்ணிக்கை 114.5 மில்லியன். இந்த ஆட்டத்தின் நடுவே வரும் விளம்பரத்திற்கு 30 நொடிக்கு 4.5 மில்லியன் டாலர் கட்டணம். இவ்வாரான போட்டி கூட தேசிய கீதம் மற்றும் நாட்டு பற்று கொண்ட பாடல்களை கொண்டு தான் ஆரம்பிக்கும்.

2012 ல் "செண்டி ஹூக்" என்ற ஊரில் ஒரு மனநோயாளி  20 சின்னஞ்சிறு பிள்ளைகளையும் மற்றும் ஆறு ஆசிரியர் ஆசிரியர்களையும் கொன்றது நாம் அறிவோம்.

2013 ல் இந்த Super Bowl போட்டியில் இந்த பாடல்களை பாடியது யார் தெரியுமா? இந்த ஸெண்டி ஹூக் பள்ளியில் கொடூரத்தில் இருந்து தப்பிய மாணவ மாணவியர். அவர்கள் அந்த பாடலை பாடும் போது.. அதை கண்டு ஈரமாகாத இமையே இல்லை.


கொடூரத்தில் இருந்து தப்பித்த சிறுநெஞ்சங்கள் ....

அவர்கள் பாடுவதை பார்க்கும் போது மனதில் வந்த எண்ணம். இவ்வாறான  பிஞ்சு குழந்தைகளை கொல்ல எப்படி இவனுக்கு மனம் வந்தது? மற்றும், இது மீண்டும் நடக்கலாம் இருக்க என்ன செய்ய வேண்டும்? மற்றும் மாண்ட நெஞ்சுகளின் ஆத்மாவிற்காக ஒரு பிரார்த்தனை.

இந்த பாடலை பார்க்கும் போது.. என் மனதில்... கும்பகோணம் பள்ளியில் தீயை  (இதை விபத்து என்றே நான் சொல்லமாட்டேன், ஸெண்டி ஹூக் கொலையை செய்தவன், கும்பகோணத்தில் கொலை செய்தவர்கள்.. செய்தவனாவது ஒரு மன நோயாளி .. இந்த தீயை வைத்து கொலை செய்தவர்கள்.. பேராசை பிடித்த நச்சு பாம்புகள்.  லஞ்சம் வாங்கி இந்த பள்ளியை கட்ட அனுமதித்த அரசியவாதிகள் மற்றும் அதிகாரிகள்)  வைத்து 94 குழந்தைகளை கொன்ற சம்பவம் தான்.

இந்த குழந்தைகளுக்கும் சரி இவர்களை குடும்பத்திற்கும் சரி..உதவி செய்வதற்காக நிறைய நல்லுள்ளங்கள் பண உதவி செய்தனர். அதில் நான்கில் ஒன்று கூட அந்த பிள்ளைகளுக்கு செல்லவில்லை.

அரசியல் வாதி -அதிகாரிகளை விடுங்கள்.. இவர்களுக்கு உதவியாக சரத்குமார் - ராதா ரவி - சந்திரசேகர் தலைமையில் இருந்த அன்றைய நடிகர் சங்கம் லட்ச கணக்கில் பணத்தை வசூலித்து அதில் ஒரு பைசா கூட கும்பகோணத்திற்கு அனுப்பவில்லை என்று கேள்வி படுகையில்... நெஞ்சு பதறுகிறது.

சரி தலைப்பிற்கு வருவோம்.

2016 ஒலிம்பிக்சில் நிறைய விஷயங்களை ரசித்து பார்த்தேன். அதில் மனதை தொட்ட ஒன்று.

அமெரிக்க வீரன் ஒருவன்.."போல் வால்ட்" என்ற உயரம் தாண்டும் போட்டியில்  அந்த குச்சியை எடுத்து கொண்டு தாண்டுவதற்காக ஓடி வருகையில் .. மைதானத்தில் அமெரிக்க தேசிய கீதம் ஒலிக்கின்றது. அந்த குச்சியை அப்படியே கீழே வைத்து அவன் நிமிர்ந்து நின்று அந்த கீதத்திற்கு மரியாதை செலுத்துவதை பார்க்கையில் மனம் சிலிர்த்தது. மற்றும் நிமிர்ந்து நின்ற அவனின் கண்கள் தேசிய கொடியை தேடுவதும் அதை கண்டவுடன்... அப்படியே நிற்பதையும்.. நீங்களே பாருங்கள்.

Its moments like this that we live for...

காணொளி வேலைசெய்யாவிடில் கீழே   அதன் தொடர்பு...

https://www.youtube.com/watch?v=PechzO5LASs

பின் குறிப்பு :

சரி, இந்த வீரன் அமெரிக்கன் .. அவன் தேசிய  கீதத்திற்கு மரியாதை செலுத்துகிறான். இது என்ன பிரமாதம்.

நல்ல கேள்வி?

தேசிய கீதம் - மற்றும் தேசிய கொடி என்பது ஒரு நாட்டின் சின்னம். அதை நாம் மதிப்பது அந்நாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை.

நான் சொல்லலைங்க.. அதிரடி புயல்... உசைன் போல்ட் செஞ்சத நீங்களே பாருங்க. அதுவும் அவர் நாட்டு பாடலுக்கு அல்ல.. அடுத்தவன் தேசிய கீதத்திற்கு..


மேன் மக்கள் மேன் மக்களே... 

வந்தே மாதரம்.

6 கருத்துகள்:

  1. நல்ல தகவலுடன் கூடிய பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  2. தேசீய கீதத்திற்கான மரியாதையைக் கண்டேன். சிலிர்த்தேன்.

    பதிலளிநீக்கு
  3. காணொளியுடன் பகிர்ந்தது
    உணர்ந்து படிக்க முடிந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. முதல் வீடியோ யூடியூப்லேயே இல்லையாம். (கடல்லயே ஜாமீன் இல்லையாம் என்ற தொனியில்)

    அளவுக்கதிகமான சுதந்திரம் கொடுக்கும் ஜனநாயகம், சட்டங்கள் செயல்படுத்தப்படாதவரை விளங்காது என்பதற்கு நாம் மிகச் சிறந்த உதாரணம்.
    விஜயன்

    பதிலளிநீக்கு
  5. அருமையான பகிர்வு! நாட்டுப்பற்றை விட நம் நாட்டினருக்கு வேறு பற்றுக்கள் அதிகம் என்பதை மறுக்க முடியாது!

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு பதிவு. தேசீயகீதத்தின் முக்கியத்துவத்தை பிற நாட்டவர் எப்படி மதிக்கின்றனர் என்று உதாரணங்கள் அருமை. நம் நாடு சுதந்திரம் பெற்ற நாடு சுதந்திரம் மிக்க நாடு என்று சொல்லி சட்டங்களும் சுதந்திரமாகச் செயல்படுவதால்தான், அளவுக்கு அதிகமான சுதந்திரத்தினால்தான் நம் நாடு இப்படிச் சீரழிகின்றது. நல்லதொரு கட்டுரை விசு.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...