சென்ற வாரம் நண்பர் மதுரை தமிழனின் "அவர்கள் உண்மைகள் " என்ற வலைத்தளத்தில் ...
" பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்"
என்ற தலைப்பில் ஒரு பதிவை படித்தேன். அதில் சகோ ராஜி எழுதிய பதிவை தழுவி தம் கருத்தை வெளியிட்டு இருந்தார்.
மதுரை தமிழன் ... பயமரியா கன்று... அவர் பதிவில் சொல் குற்றம் இல்லாவிடிலும் பொருள் குற்றம் சில காண முடிந்தது. அவரை மன்னித்து விடலாம்.
ஆனால், ராஜி அவர்கள் எழுதிய பதிவை படித்தவுடன்.. .இவர்கள் இந்த பதிவை ஆண்வர்கத்திற்கு எதிராக எழுதி இருக்கின்றார்கள் என்றே பட்டது.
வேண்டுமென்றே தவறுதலாக நமக்கு அறிவுரையை வழங்கி உள்ளார்கள். இதை படிக்கும் ஆண் மக்கள் ராஜி அவர்களின் பதிவை படிக்க நேர்ந்தால் இந்த உண்மை புரியும்.
ராஜியையும் விடுங்க... தமிழனையும் விடுங்க.. இந்த விஷயத்தில் நான் முனைவர் பட்டம் வாங்கியவன், நான் சொல்வதை கேட்டு சந்தோசமா இருங்க.
கீழே.. சிவப்பு நிறத்தில் இருப்பது ராஜி அவர்களின் டிப்ஸ்.. கருப்பில் இருப்பது அடியேனின் அறிவுரைஸ்..
"பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்"
1. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன தப்புகளை சொல்லி திட்டாதீங்க. நிதானமா பக்குவமா எடுத்து சொல்லுங்க.
என்னாது.. ?
பெண்டாட்டி சின்ன சின்ன தப்பு செய்யுறாங்களா? தவறு.. அவங்க எப்ப தவறு செய்தாங்க... அவங்க எதை செஞ்சாலும் சரியா தான் செய்வாங்க..காலத்தின் கட்டாயம் அது தவறு போல் தெரிந்தது..
மேலும்... ராஜி அவர்கள் "திட்டாதீங்க" என்று சொல்லி இருக்கின்றார்.
இந்த பதிவை மேலே படிக்கும் முன் ஒரு அறிவுரை.. உயிரே போனாலும் மனைவியை திட்டாதீங்க., அவங்களே திட்ட சொன்னாலும் திட்டாதீங்க,
2. பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா.
அட பாவி.. என்ன அநியாயம் இது? பொண்டாட்டி கோவமா இருக்கும் போது.. கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன். அதுதான் நீங்க வாழ்க்கையில் கடைசியா சிரிச்ச சிரிப்பா இருக்கும். மேலும்... இவங்க சொல்றாங்கன்னு சொல்லி சும்மா சிரிக்காதீங்க. மனசுல எவளை நினைச்சிக்கினு இந்த சிரிப்புன்னு இன்னொரு கேள்வி வரும்.
3. முக்கியமான வேலைல இருக்கும் போது தொணதொணன்னு பேசாம வேலை முடிஞ்சதுக்கு பின்னாடி அது பத்தி பேசுங்க.
முதலில் அவங்க முக்கியமான வேளையில் இருக்கும் போது உங்களுக்கு அங்கே என்ன வேலை?
அப்படியே அந்த நேரத்தில் அங்கே இருந்தாலும்.. இந்த மாதிரி வேலையெல்லாம் எங்க வீட்டில் எங்க அப்பா தான் செய்வார்.. நீங்களும் இருக்கீங்களேன்னு திட்டு தான் விழும். இந்த மாதிரி நேரத்தில்.. ஆபிசில் வேலைன்னு கிளம்பிடனும்.
4. வேலைக்கு போற பொண்ணா இருந்தா அங்க என்ன நடந்துச்சுன்னு கேட்டு தெரிஞ்சுக்கோங்க. நீங்களும் உங்க வேலை இடத்துல நடந்ததை பத்தி சொல்லுங்க.
கிழிஞ்சது போ.. என்னாது.. நம்ம வேலையில் நடக்கும் விஷயத்தை வீட்டுல சொல்லனுமா?
ஓ நீங்க இங்க தான் இப்படின்னு நினைச்சேன் .. அங்கேயும் இப்படித்தானா? உங்களுக்கு எல்லாம் ஏன் சம்பளம் தரான்னு இன்னொரு திட்டு ..
தேவையா ?
அவங்க வேலையை பத்தி அவங்களே சொன்னா கேட்டு வைங்க... நடுவுல.. நீ இல்லாமல் அங்கே ஓர் வேலையும் நடக்காதுன்னு உற்சாக படுத்துங்க. அவங்க ஆபிஸை பத்தி தவறா பேசி அவங்க வேலைய விட்டுட்டாங்கன்னா.. மவனே.. அப்புறம் உனக்கு 24 மணி நேரமும் "பங்கஜ வள்ளி அம்புஜ நேத்திரி" தான்.
5. பொண்டாட்டி செய்யுற சின்ன சின்ன விசயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க. அதே மாதிரி தப்பு செஞ்சீங்கன்னா, உடனே மன்னிப்பு கேளுங்க. தப்பில்ல.
மீண்டும் தவறான அறிவுரை.. பொண்டாட்டி செய்யாத சின்ன சின்ன விஷயத்துக்கு கூட நன்றி சொல்லுங்க.. பின்னாலே செய்ய போற சின்ன சின்ன விஷயத்துக்கும் நன்றி சொல்லுங்க.
அதே மாதிரி நீங்க தப்பு செய்யுறீங்களோ இல்லையோ... காலையில் எழுந்தவுடன் பொதுவா ஒரு மன்னிப்பை கேட்டு வைச்சுருங்க..ஏன் மன்னிப்புன்னு கேட்டா "செஞ்ச - செய்யுற -செய்ய" போற தவறுக்குன்னு சொல்லிடுங்க..
6. பொண்டாட்டி செஞ்ச தப்புக்களை சொல்லி காட்டிக்கிட்டே இருக்காதீங்க. அதேமாதிரி அவங்க பொறந்த வீட்டை பத்தி விளையாட்டுக்கூட குத்தம் சொல்லாதீங்க.
ராஜி மீண்டும் மீண்டும் "பெண்டாட்டி தவறு, பெண்டாட்டி தவறுன்னு " சொல்லி நம்மை பலிகடா ஆக்க பாக்குறாங்க..
ஜாக்கிரதை..
பெண்டாட்டி தவறு செய்யுறாங்கன்னு என்ற ஒரு எண்ணத்தையே உங்க மனதில் இருந்து எடுத்துடுங்க.,
அப்புறம்,
அவங்க புறந்த வீட்டை குத்தமா பேசுறது இருக்கட்டும். முதலில் எதுக்கு எடுத்தாலும்.. உங்க வீட்டு ஆளுங்க மேலே குத்தம் கண்டு பிடிச்சி அவங்களிடம் சொல்லுங்க.
இப்படி பண்ணீங்கன்னா .. நீங்க பண்ற தப்புக்கு எல்லாம்.. பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க? உங்க வளர்ப்பு அப்படின்னு ஒரு "பரிதாப பாசம்" கிடைக்கும்
7. பொண்டாட்டியை அடிக்கடி இல்லன்னாலும் எப்பவாச்சும் கூட்டி போங்க.
பெரிய தவறு.. எப்ப பாரு என்கூடவே இருந்து என் மூஞ்சையே பார்த்துன்னு இருக்கியே.. கொஞ்ச நேரம் ஜாலியா உன் தோழிகளோடு வெளியே போய்ட்டுவானு அனுப்பி வைங்க.. அதை விட்டுட்டு .. வெளியே போகலாம் வானு சும்மா தொந்தரவு பண்ணாதீங்க.
8.எதை பத்தியாவது பேசும்போது பிடிவாதமா இல்லாம பொண்டாட்டி சொல்லுறதை காது கொடுத்து கேளுங்க.
முதலில் எதை பத்தியும் பேசாதீங்க. அவங்க ஏதாவது சொன்னா அதை மட்டும் கேட்டு நீ சொன்னா சரியாதான் இருக்கும்ன்னு சொல்லி அந்த இடத்தை விட்டு "எஸ்கேப்".
ஒரு விஷயம் பேசும் போது ஒரே பதிலை நம்ம சொன்ன நடக்குறதே வேற அவங்க சொன்ன நடக்குறதே வேறே...
உதாரணத்துக்கு
ஏதாவது ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் போது ..
கணவன் ....
:உன் இஷ்டம் " ன்னு சொன்ன.. அந்த பிரச்சனை அங்கே முடிஞ்சது.
அதே மனைவி....
உங்க இஷ்டம்னு...
சொன்னா.. பிரச்சனையே அப்ப தான் ஆரம்பிக்க போதுன்னு அர்த்தம் ..
அதனால் உங்க பதில் எப்போதும்.. " உன் இஷ்டம்" ன்னு இருக்கட்டும்.
9. பொண்டாட்டி எதாவது கேட்டா முடிஞ்சா உடனே வாங்கி கொடுங்க. இல்லன்னா உண்மையான காரணம் சொல்லி இதமா மறுப்பு சொல்லுங்க.
உணமையான காரணம்ன்னு சொல்லி "தீக்குளிக்க" முயற்சி பண்ணாதீங்க. திருமணம் ஆனவுடன்.. இந்தம்மா.. இது தான் என் சம்பளம்.. இது தான் பேங்க் கணக்கு..இது தான் கிரெடிட் கார்டுன்னு அவர்களிடமே கொடுத்துடுங்க..
இப்படி பண்ணா அவங்களும் சந்தோசமா இருப்பாங்க.. நமக்கும் கை செலவுக்கு காசு கிடைக்கும் .
10. மத்தவங்க எதிர்க்க குறை சொல்லாதீங்க. தனியா அழைச்சுட்டு போயி எடுத்து சொல்லுங்க.
எது இருந்தாலும் மத்தவங்க எதிரிலேயே வைச்சி மெதுவா பேசி முடிங்க.. தனியா போய் எடுத்து சொன்னா என்னவாகும் என்பதை திருச்சி சிவாவிடம் கேட்டு தெரிஞ்சுக்குங்க.
பின் குறிப்பு :
என்னுடைய இந்த அறிவுரையை கேட்டிங்கனா ..ஒரு கல்லில் ரெண்டு மங்கா இல்ல.,. ஒரு தோப்பே கிடைக்கும். மனைவியையும் மனசு கோணாம வைச்சுக்கலாம்.. நீங்களும் நிம்மதியா இருக்கலாம்..
பதிலளிநீக்குஆஹா ராஜியின் பதிவு தொடர் பதிவாகி தொடர்கிறது போல இருக்குதே....விசு உங்க பாணியல கலக்குறீங்க ,,, சபாஷ்
ஹலோ தமிழா நீங்க ரெண்டு பேரும் தான் தைரியமா பேசறீங்க பொது வெளில....மத்தவங்க யாரும் பேசுவாங்களானு தெரில..தொடர் பதிவாகுமா....ஹிஹிஹிஹி...இல்ல சும்மா ஜாலியா எஞ்சாய் பண்ணத்தான்..
நீக்குகீதா
ஹஹஹஹ்ஹஹ்ஹ் செம விசு...தாக்கிட்டீங்க போங்க....ஹும் எனக்குச் சுத்தமா சம்பந்தமே இல்லாத பாயின்ட்ஸா இருந்தாலும், நான் சிரித்து சிரித்து....கிழக்கும் மேற்கும் செம போட்டிதான் போங்க...
பதிலளிநீக்குநீங்க எப்படி உங்க பாக்கெட் மணிய தேத்தறீங்க அப்படின்ற ரகசியம் எங்களுக்குத்தான் தெரியுமே..சத்தியமா போட்டுக் கொடுக்க மாட்டோம்..ஹிஹிஹி
கீதா
விசு ரொம்ப அதிர்ஷடகாரர் அவருக்கு பாக்கெட் மணியெல்லாம் கிடைக்குது... எனக்கு மூணு வேளை சாப்பாடுமட்டுதான் கிடைக்குது ஹும்ம்ம்ம்ம்
நீக்குஎனக்குத் தெரிஞ்சு பொண்டாட்டி மனசு கோணாம இருக்கிறதுக்கு ஒரே வழி....
பதிலளிநீக்கு*
*
*
*
*
*
கல்யாணம் பண்ணாம இருக்கிறது தான்...!!
என்ன மலர் நீங்களுமா!!!!! எப்ப நல்ல புள்ளை ஆனீங்க ஹஹஹ்
நீக்குகீதா
கல்யாணத்திற்கு முன்பு எல்லோரும் அமைதியாக இருந்து விட்டு கல்யாணம் பண்ணினதுக்கு அப்புறம்தானே இப்படி அட்வைஸ் எல்லாம் பண்ணுறாங்க... இந்த ஆண்கள் பொழப்பே ரொம்ப மோசமாகத்தான் இருக்கிறது
நீக்குபொண்டாட்டி மனசு கோணாம நடக்கிறதுக்கு பதிலா இமய மலைக்கு ரஜினி மாதிரி பாதயாத்திரை செய்து--அதான் தம்பி [தமிழில்] நடந்து, 2000 வருடமா உயிரோடா இருக்கிற பாபா சாமியாரைப் பார்த்து அவருடன் ஒரு சிங்கிள் டீ அடிக்கலாம்! இல்லை இருவரும் சேர்ந்து ஒன்று சேர ஒரே பீடியில் ஒரு இஷ்ப்பு (கஞ்சா இழுப்பு தான்பா சென்னை தமிழிலில்!) இழுக்கலாம்!
நீக்குஉண்மையிலேயே நீங்க இதில் முனைவர் பட்டம் வாங்குனவர் தான்... நீங்க சொன்ன எல்லாமே உண்மையோ உண்மை .. அதிலும் இந்த வரிகளை ரொம்ப ரசிச்சு உணர முடிந்தது...
பதிலளிநீக்கு//ஏதாவது ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் போது ..
கணவன் ....
:உன் இஷ்டம் " ன்னு சொன்ன.. அந்த பிரச்சனை அங்கே முடிஞ்சது.
அதே மனைவி....
உங்க இஷ்டம்னு...
சொன்னா.. பிரச்சனையே அப்ப தான் ஆரம்பிக்க போதுன்னு அர்த்தம் ..//
வாழ்த்துக்கள். நீங்க இன்னும் நிறைய சொல்லி தரலாம் எங்களுக்கு :)
//2. பொண்டாட்டியை பார்க்கும்போது உர்ர்ருன்னு இல்லாம லேசா சிரிச்சு வைங்க. நீங்க சிரிக்குறதை பார்த்து அவளும் தன்னோட கோவத்தை மறந்திடுவா.
பதிலளிநீக்குஅட பாவி.. என்ன அநியாயம் இது? பொண்டாட்டி கோவமா இருக்கும் போது.. கொஞ்சம் சிரிச்சி தான் பாருங்களேன். அதுதான் நீங்க வாழ்க்கையில் கடைசியா சிரிச்ச சிரிப்பா இருக்கும். மேலும்... இவங்க சொல்றாங்கன்னு சொல்லி சும்மா சிரிக்காதீங்க. மனசுல எவளை நினைச்சிக்கினு இந்த சிரிப்புன்னு இன்னொரு கேள்வி வரும்.//
அடடா மொமெண்ட் :)