Friday, July 10, 2015

பட்டை-பட்டா-பட்டி

சில மாதங்களாக நான் என்னுடைய மற்ற தளத்தில் எழுதிய பதிவுகளில் ஒன்று.

என்னா வாத்தியாரே … பட்டை கிட்டை போட்டியா ? ஒரு மாதிரி வாசனை வருது …

சொல்லி கொண்டே நுழைந்தான் அருமை நண்பன் தண்டபாணி. இந்த வாரம் நண்பர்கள் சிலர் அடியேனின் இல்லத்திற்கு வர ஒரு சந்தர்ப்பம். அப்படி ஒன்று வாய்த்தால் ஒரே ஆட்டமும் பாட்டமும் சிரிப்பும் தான்..

எப்படி தண்டம் உள்ள நுழையும் போதே இவ்வளவு அழகா வாசனை வைத்தே கண்டுபிடித்த?


இதெல்லாம் ஒரு விஷயமா வாத்தியாரே.. எதோ நான் செய்யாத எதையோ கண்டிபிடிச்ச மாதிரி சொல்ற ? சரி பட்டை எங்கே இருந்து புடிச்ச?

அது ரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை இந்தியா போகும் போயிட்டு வரும் போது எங்க வீட்டு அம்மணி வாங்கி வருவாங்க..

கொடுத்து வைச்சவன் வாத்தியாரே நீ.. ஒருமுறை வாங்கி வந்தா ரெண்டு வருஷம் வருதா?

டேய், நடுவில் தீந்து போச்சின்னா, இங்கே இருக்கிற இந்தியன் கடையில் வாங்கிக்கலாம் .

இந்தியன் கடையிலையா? என்னா வாத்தியாரே சொல்ற ? இது எல்லாம் நாட்டு சரக்காச்சே .. இதுக்கு லைசன்ஸ் தர மாட்டானே …

டேய் நீ எந்த பட்டையை சொல்ற ?

நீ எந்த வாசனைய சொல்ற வாத்தியாரே..

பாயாசத்தில் பட்டை இலவங்கம் வாசனைய தான் நான் சொன்னேன்..

ஒ .. எனக்கு என்னமோ பட்டை சாரயம் வாசனை போல இருந்துச்சி…

பேசி கொண்டே இருக்கும் போதே வாசல் மணி அடிக்க இருவரும் சென்று
கதவை திறந்தால், வெளியே என் ஆருயிர் தோழன் பிள்ளை ..

சித்தப்பூ.. சௌக்கியமா ?

இருக்கேன் பிள்ளை .. எங்கே அம்மணியும் கண்மணிகளும்?

கடை குட்டி வண்டியில் தூங்கிட்டா .. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கடும்ன்னு அம்மணி அங்கே இருக்கா.

 உன் கடைக்குட்டி ஒரு துருதுரு சிங்கம் ஆச்சே.. எப்படி தூங்க போச்சி..
கீழ   விழுந்து தோள் பட்டையில்சின்ன அடி.. அழுதுனே தூங்கிடிச்சு.எல்லாரும்வந்தாச்சா ?

இல்ல, தண்டம் வந்தான்.. நீ ரெண்டாவது..

என்ன தண்டம் ஏதாவது விசேஷமா … பட்டை போட்டு இருக்க போல தெரியுது ..

பிள்ளை , நான் கூட வாத்தியார முத கேள்வியா அது தான் கேட்டேன் ..

உனக்கும் வாசனை வருதா ? சும்மா மழுப்பி பாயசம்ன்னு ஆயாசமா சொல்றார்?

தண்டபாணி. நான் சொல்ல வந்தது.. கோயில் குலம்ம்னு ஏதாவது விசேஷமா? நெத்தியில் பட்டை போட்டு இருக்கிற மாதிரி தெரியுது …

வர வழியில் கோயில் போயிட்டு வந்தேன் …

பேசிக்கொண்டே இருக்கும் போது..

தண்டபாணியின் மனைவி சுந்தரி அங்கே வந்தார்கள்…

ஏங்க … பட்டை போடும் போது இந்த மாதிரி கண்ட இடத்தில
உக்காராதீங்கோன்னு எத்தனை முறை சொல்றது ..?

உனக்கும் பட்டை வாசனை வந்ததா?

அக்கா இந்தியாவில் இருந்து வாங்கி வந்த பட்டை, பாயசத்தில் போட்டா கண்டிப்பா வாசனை வரும் தான்..

இப்ப என்னை ஏன் பட்டை போட்டா கண்ட இடத்தில உக்காராதேன்னு சொல்ற …நான் தான் பட்டை எல்லாம் போட்டு வருஷ கணக்கு ஆச்சே ..

நினைப்பு தான் பொழப்பை கெடுத்திச்சான், நான் சொல்றது பட்டு வேட்டி போடும் போது கண்ட இடத்தில உக்காராதீங்கோன்னு …

ஒ நீ அந்த பட்டை சொல்றியா ? நான் வேற பட்டை பத்தி பேசுரியோன்னு நினைத்தேன் …

மீண்டும் மணி அடித்தது..

கதவை திறந்தால்.. சாரதி …

மாப்பு… என்னா இந்த ரோட்டையே பட்ட போட்டு வாங்கிட்டியா ?

சாரதி.. எங்க வீட்டு ராசாதிகளுக்கு கூடிய சீக்கிரம் மாப்ளை பார்க்க வேண்டும்,
இந்த வயசில் நீ என்னை மாப்புன்னு கூப்பிட்ரீயே..

மாப்பு..15 வருஷத்துக்கு முன்னால் உன்னை முதல் முதலா சந்தித்த போது என்னான்னு கூப்பிட்டேன் ..

மாப்புன்னு கூப்பிட..

தொட்டில் பழக்கம், மாப்பு.. நீ பேரன் பேத்தி எடுத்தா கூட எனக்கு மாப்பு தான்,
சரி விஷயத்துக்கு வா.. என்ன இந்த ரோட்டை பட்ட போட்டு வாங்கிட்டியா ?

டேய் வரவன் எல்லாரும் இன்றைக்கு பட்டை பட்டைன்னு ரொம்ப லொல்லா போச்சி..

இல்ல மாப்பு.. ரோட்டின் ரெண்டு பக்கமும் எல்லாம் நம்ம வண்டிங்க .. அதுதான் ,,

அது பட்ட இல்ல சாரதி.. பட்டா ….

என்ன தான் சொல்லு மாப்பு . நீ என்ன சொன்னாலும் பட்டி பிடித்த மாதிரி அழகா சொல்ற…

டேய் பட்டையில் ஆரம்பித்து பட்டாக்கு போய் இப்ப பட்டிக்கு வந்துடிச்சி …’

படால் என்று கதவு திறக்கும் சத்தம் வந்தது…எங்க வீட்டு அம்மணியும்

சுந்தரியும் பட்டாசை போல் வெடித்து கொண்டே நுழைந்து..

எங்க ரெண்டு பேருக்கும் பக்கா முட்டாள்கள் என்று பட்டம் வாங்கி கொடுத்துடுவிங்க போல இருக்கே…

என்ற கேட்க்க…

நான் தண்டபாணியை பார்க்க…அவனோ.. வாத்தியாரே..

பட்ட காலில் படும்னு சொல்வாங்களே .. அது போல் .. நம்ம மீண்டும் மாட்டிக்கிட்டோம் போல இருக்கு … என்று சொல்வ…

நானோ.. மாட்டிகொண்டோமா ?எந்த விஷயமா இருக்கும் என்று சொல்ல …

சுந்தரி .. ரெண்டு அழகான பட்டு புடவையை ஒரு பையில் இருந்து எடுத்து…


எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் …
என்று சொல்ல… நானோ.. அந்த புடவை-அழகா-இருக்கே பதிவிற்கு போனேன் …
www.visuawesome.com

3 comments:

  1. நான் டெய்லி பட்டை போட்டுட்டுதான் வேலைக்கு போவேன்! ஊகும் நீங்க நினைக்கற பட்டை இல்லைங்க விபூதி பட்டை!

    ReplyDelete
  2. பட்டைய வச்சு பட்டைய கிளப்பிட்டீங்க

    ReplyDelete
  3. பட்டையக் கிளப்பிட்டீங்க நண்பரே! அதான் இங்க வரை மணக்குது!

    ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...