புதன், 31 ஆகஸ்ட், 2016

நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மணக்கும் தங்கம்...!

இந்த வாரத்திற்கான நாதாரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யவேண்டும் விருதை பெறுபவர்..

சுடிதார் புகழ்...... பாபா ராம்தேவ்.

இவரே ஆசிரமத்தில் தயாரிக்க படும் சில ஐட்டங்களை விற்க இவர் செய்யும் வியாபார தந்திரங்கள் .. ஏல் பல்கலைக்கழகத்தில் கூட சொல்லி தரப்படாது.

ஆண்  குழந்தை பெற வேண்டுமா? இந்த லேகியத்தை சாப்பிடுங்கள் என்று சென்ற வருடம் ஏதோ ஒரு கருமாந்திரத்தை தந்திரமாக விற்றார்.

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

பயணங்கள் முடிவதில்லை... ஆமாங்கோ...


டாடி.. சீக்கிரம் தூங்க போங்க.. நாளை காலை 4 மணிக்கு எழுனு ..!?

நாலு மணிக்கு நீ தானே எழுனும், அதுக்கு நான் ஏன் சீக்கிரம் தூங்க போகணும்?

என்று கேட்க பதிலோ அம்மணியிடம் இருந்து வந்தது.

யாராவது ஏதாவது சொன்னா அவங்க சொல்ல வந்தத ..

நான் முடிச்சிவைக்கிறேனா?

அதே தான்.. உங்களுக்கு கொஞ்சம்..

பொறுமை தேவையா?

ஏங்க.. நான் சொல்ல வந்ததே..

வேறயா?

ஐயோ... எனக்குன்னு வந்து...

வாச்சி இருக்கா?

என்று என் அம்மணி பேசி கொண்டே இருக்கையில்...

ஓய் டாடி.. ஒய் டூ யு கம்ப்ளீட் அதர் பீபெல்ஸ்...

செண்டன்ஸா..

கொஞ்சம் .. ஒரு நிமிஷம் அமைதியா...

இருக்கேன் .. சொல்லு..

நாளை காலையில் நாலு மணிக்கு எழுனும்.. சீக்கிரம் தூங்க போங்க..

எனக்கு வேலை 6 மணிக்கு மேலே தானே. ஏன் நாலு மணிக்கு..

டாடி.. கிண்டல் பண்ணாதிங்க.. நாளைக்கு நான் சீயாட்டில் (Seattle ) போறேன்..  மறந்துடிங்களா?

அது எப்படி மறப்பேன்..

நீங்க மறக்கலே...

இல்லையே..

சரி, நான் ஏன் போறேன் சொல்லுங்க..

பள்ளிகூட விஷயமா ..

அது சரி.. பள்ளிகூட விஷயமா .. எதுக்கு..

அது.. அது..

சுத்தமா மறந்துடிங்க...

வயசாச்சி மகள்.. கொஞ்சம் ஞாபகபடுத்து.

அம்மணி குறுக்கிட்டு.. இதையெல்லாம் மறந்துடுங்க.. மத்தவங்க பேசும் போது குறுக்க ...

குறுக்க பேசறனா?

ஐயோ.. நீங்க ஆச்சி உங்க பொண்ணு ஆச்சி..

என்று சொல்லிவிட்டு இடத்தை காலி பண்ண.

ஏன் மகள் .. Seattle ?

டாடி..எங்க பள்ளிகூடத்தில் இருந்து எங்களை பாட கூப்பிட்டு இருக்காங்க..

பள்ளிகூடத்தில் இருந்து பாட கூப்பிட்டாங்களா...

நினைவோ பல்லாயிர கணக்கான மைல் தாண்டி ஓடியது..

8வது வகுப்பு.. சீர்காழி..

விசு..நாளைக்கு காலையில் பாட்டு போட்டிக்கு தஞ்சாவூர் போகணும் நினைவு இருக்கு இல்ல..

கண்டிப்பா, ரிச்சர்ட்.. நினைவு இருக்கு.

சீக்கிரம் தூங்க போ..

டேய் .. தூங்குறது இருக்கட்டும்.. முதலில் வார்டனிடம் போய் ரயில் டிக்கட்டுக்கு காசு வாங்கி வரலாம் வா..

இருவரும் சென்று அவர் கொடுத்த 13 ருபாய் வாங்கி கொண்டு, ஒரு சிறு கணக்கை ஆரம்பித்தோம்..

போக ஆளுக்கு 2.50. வர 2.50. அதுலே 10 ருபாய் போயிடும். மீதி 3 ரூபாயில் எப்படி சமாளிக்கிறது ?

விசு.. அஞ்சும் மூனும் கூட்டினா எவ்வளவு..?

எட்டு.

அப்ப நம்ம கையில் எட்டு இருக்குனு வச்சிக்கோ. மீதிய நான் பாத்துக்குறேன்.

இரவு தூங்குகையில்.. 3 ருபாய் தானே மிச்சம் வரும். அது எப்படி எட்டு ஆச்சி..

என்று நினைத்து கொண்டே உறங்குகையில்...

விசு... நேரமாச்சி எழு..

அடித்து பிடித்து கிளம்பி ...அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு சென்றோம்.

அங்கே .

ரிச்சர்ட்.. வா போய் டிக்கட் வாங்கின்னு வரலாம்.

நீ இங்கேயே இந்த பைய பத்திரமா பாத்துன்னு இரு.. நான் போய் டிக்கட் வாங்கி வரேன்.

சில நிமிடங்கள் கழித்து வந்தான்...

ரிச்சர்ட்.. அந்த 3 ருபாய் எப்படி 8 ருபாய் ஆச்சி..?

அது என் பிரச்சனை.. நீ ஏன் டென்சன் ஆகுற..

வண்டியும் வந்தது.. நிறைய கூட்டம் இல்லை..ஜன்னல் அருகே எதிர் எதிரில் அமர்ந்து போட்டியில் பாடபோகும் பாடலை பழகி பார்த்தோம்.

சமோசா... சமோசா.

ரிச்சர்ட்.. இந்த சமோசா சாப்பிட்டு தான் எவ்வளவு நாள் ஆச்சி.

எவ்வளவு அது.. ?

10 பைசா.. கவலைய விடு.

என்று சொல்லி ஆளுக்கு ஐந்து வாங்க..

டேய்.. மீதி இருந்த 3 ரூபாயில் ஒரு ருபாய் இங்கேயே காலி..

நீ என்ன கணக்கில் வீக்கா.. எட்டு ரூபாயில் ஒரு ருபாய் காலி...

அது எப்படி ரிச்சர்ட் 3 ருபாய் எட்டு ஆச்சி..

அது என் பிரச்சனை..ஒரு நிமிஷம் இரு, பாத்ரூம் போயிட்டு வரேன்..

ரயிலோ.. பிரகதீச்வரன் கோயிலை தாண்டி மாயவரத்தை நோக்கி ஓடி கொண்டு இருந்தது.

 அடுத்த சில நொடிகளில் ரிச்சர்ட் மூச்சு வாங்க  அடித்து பிடித்து ஓடி வந்தான்.

விசு,சீக்கிரம் கிளம்பி பாத்ரூமுக்கு ஓடு..

எனக்கு அவசரம் இல்ல..

அட பாவி.. TTR வராரு.. சீக்கிரம் ஓடு..

டேய் ..நம்ம தான் டிக்கட் வாங்கினோம் இல்ல.

நம்ம ஒரு டிக்கட் தான் வாங்கினோம்.

ஒரு டிக்கட்டா .. ஏன்?

ரொம்ப அவசியம்.. 3 ருபாய் எப்படி 8 ருபாய் ஆச்சின்னு கேட்ட இல்ல .. இப்படி தான்.

அட பாவி.. சரி, அந்த டிக்கட்ட என்னிடம் கொடுத்துட்டு நீ போய் ஒளிஞ்சிகோ..

பயப்படாத விசு.. இது ஒரு விஷயமே இல்ல.. என்னோட வா..

என்று தர தர  வென்று இழுத்து சென்றான்.

இருவரும் பாத்ரூம் உள்ளே சென்று கதவை அடைத்து, கொண்டு அமைதியாக இருக்கையில்..

கதவு தட்டும் சத்தம்..

டிக்கட்..

என்னை கதவின் பின்புறம் நிற்க கைகாட்டிவிட்டு.. ரிச்சர்ட்.. கால்சட்டையை முட்டி வரை இறக்கி விட்டு அந்த இருக்கையில் அமர்ந்து கொண்டே.. வலது கையில் அங்கே சங்கிலியில் கட்டி இருந்த சிறிய பிளாஸ்ட்டிக் டாப்பாவில் பாதி அளவு நீர் நிரப்பி கொண்டு , இடது கையில் டிக்கட்டை எடுத்து கொண்டு,  கதவை திறந்து...

இதோ..

 என்று டிக்கட்டை கொடுக்க..

அவரோ..சனியனே..அவுத்து போட்டு ஆய் போகும் போது அதே கையிலா கொடுப்ப.. கதவை மூடு, என்று சொல்லி விட்டு அங்கே இருந்து கிளம்பினார்.

ரிச்சர்டு.. MGR  படத்துள்ள வர வில்லன் பேரை போல  உங்க அப்பா உனக்கு சரியான பெயர் தான் வைச்சி இருக்காரு..

என்று பெறு  மூச்சு விட மாயவரம் வந்தது.. TTR எங்கள் பெட்டியை விட்டு இறங்குவதை ஜன்னல் வழியாக பார்த்து...

ரிச்சர்ட்.. தஞ்சாவூர் வரை இங்கேயே இருந்துடலாமா?

டென்சன் ஆகாத விசு.. இனிமேல் TTR நம்ம பெட்டிக்கு வரமாட்டார்..

என்று ஆறுதல் சொல்ல...

தோளின் மேல் யார் கையோ பட..

நான் இல்ல .. நான் இல்ல..

டாடி.. நான் தான்..  என்ன ஆச்சி உங்களுக்கு.. என்னமோ திருடின மாதிரி முழிக்கிறிங்க .. சீக்கிரம் தூங்க போங்க... நாளைக்கு காலை அஞ்சு மணிக்கெல்லாம் விமான நிலையத்தில் இருக்கணும்.

எத்தனை பேரு போறீங்க ராசாத்தி..

கிட்டத்தட்ட.. 40 பேரு..

40 பேருக்கும் டிக்கட் வாங்கிட்டிங்க தானே..?

ஆமா,அதுல என்ன சந்தேகம்.

இல்ல சும்மா கேட்டேன்.

சரி தூங்க போங்க..

ரிச்சர்டை மறந்துவிட்டு தூங்க போனேன். என்னதான் படிப்பில் கெட்டியாக இருந்தாலும்.. பாடல்களை இசையை கற்று பாடுவதில் தான் என்ன ஒரு சுகம். அடியேனுக்கு பாடுவது மிகவும் பிடிக்கும், அது என்னமோ விட்ட குறையோ தொட்ட குறையோ.. ராசாத்திகளுக்கும் பாடுவது மிகவும் பிடிக்கும். இங்கே இந்த பள்ளி கூடத்து மாணவர்கள் பாடுவது மிகவும் ரசிக்கும் படி இருக்கும்.. இவர்கள் பாடுவதை நினைத்து கொண்டே தூங்க சென்றேன்..

என்னங்க?

சொல்லு..

நாலு மணி ஆச்சி.. அவ  ரெடி .. சீக்கிரம் கிளம்புங்கோ..

எங்கே...?

ம்... ரைஸ் மில் போய் மிளகாய் பொடி அரைக்க..

இப்ப எல்லாம் தான் அரைச்ச பொடியே.. என்ன சொல்ற.. புரியல..

உங்களுக்கு வேண்டிய விஷயம்னா என்னை பாதியில்  நிறுத்திட்டு பேசுவிங்க.. வேண்டாத விஷயம்னா..

புரியாத மாதிரி நடிக்கிறானா?

அதே தான்.. சீக்கிரம் கிளம்பி அவளை விமான நிலையத்தில் விட்டுட்டு வாங்க..

ரொம்ப தூக்கம் வருது..

அதனால் என்ன போக சொல்றீங்களா..

அது எப்படி.. நான் சொல்ல வந்தத அப்படியே கரெக்டா சொல்ற?

18 வருஷம் குப்பை , அது தான்..

சரி.. கொஞ்சம் உதவி செய்யேன்.. ரொம்ப தூக்கம் வருது..

நீங்க என்னைக்கு மத்தவங்க பேசும் போது குறுக்க பேசாம இருப்பீங்களோ..

அன்னிக்கு தான் எனக்கு உதவியா?

அதே தான்.

அழுது கொண்டே வண்டியை எடுத்தேன்..

மகள்.. எப்ப திரும்பி வரீங்க..?

4 நாள் கழித்து.

திரும்பி வர 40 பேருக்கும் டிக்கட் எடுத்துடிங்களா ?

ஏன்.. டாடி.. இந்த டிக்கட்டை பத்தியே பேசுறிங்க.. எனி ப்ராப்ளம்?

தஞ்சாவூரில் இருந்து சீர்காழிக்கு திரும்ப வருகையில் ரயிலில் நடந்த அசம்பாவிதத்தை அவளிடம் சொல்லவா முடியும் ?

ராசாத்தியின் பள்ளிகூட பிள்ளைகள் பாடும் ஒரு பாடலை நீங்களே பாருங்களேன்..




பின் குறிப்பு :

திரும்ப வரும் போது என்ன ஆனது என்ற கேள்வி பின்னூட்டத்தில் வந்தது.. என்ன ஆனது என்பதை படிக்க இங்கே சொடுக்குங்கள்.'

ஆம்லெட்டும் அப்பளமும்...



நான்கு ஐந்து நாட்கள் பயணத்தில் இருப்பதால் பயணத்தை பற்றிய மீள் பதிவு. படிக்காதவர்களுக்காக.. 

வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

பரதேசியின் காதலிகள்....( கதிஜாவும் "சதி"ஜாவும்)



 கதிஜாவும்   "சதி"ஜாவும்

"ராசா.. வா.. வந்து சாப்பிடு..."!!

"இதோ வரேன்.."
என்று சொன்ன பரதேசி ... அரை மணி நேரம் கழித்தும் சாப்பாடிற்கு வரவில்லை.
"வா ராசா.."

அன்றொரு ஒரு நாள் இதே நிலவில் ...


காலையில் அலாரம் அடித்தவுடன்.. அடிச்சி பிடிச்சி எழுந்து போய்.. அன்பான அதட்டலோடு பிள்ளைகளை  எழுப்ப...

அவர்களோ..

"அஞ்சு நிமிசம்"

ன்னு கெஞ்ச..

அம்மணி சமையலறை போய் .. காபியோ டீயோ போட...

நாமும் ஓடி போய் எல்லாருடைய மத்திய உணவை கட்டி அவங்க வாங்க பையில் போட்டுட்டு..கையில் கிடைத்த இட்லி தோசையை.. .அவசரமா முழுங்கிட்டு..

வீட்டில் இருக்கும் அம்மாவிற்கு காலை உணவு மத்திய உணவை தயார் செய்து மேசையில் வைத்து விட்டு...

அம்மணி ஒரு புறம்.. மூத்தவள் ஒரு புறம்.. அடியேன் ஒரு புறம் இளையவளோடு கிளம்பும்  போது...

அலை பேசி..

"இன்னைக்கு அவ பள்ளிக்கூட மீட்டிங் .. நீங்க போறீங்களா..?"

"அடுத்த வாரம் மூத்தவளை கூட்டினு வேற ஊருக்கு ஒரு விளையாட்டு போட்டி.. டிக்கட் வாங்கிட்டிங்களா?"

"உங்க அம்மாவுக்கு மாத மருத்துவ சோதனை.. டாக்டரிடம் கூட்டினு போகணும்"

இளையவள பள்ளியில் விட்டுட்டு நம்ம அலுவலகம் போகும் போது, அலை பேசி அலற..

மூத்தவள்..

"டாடி.."

"சொல்லு.."

வியாழன், 25 ஆகஸ்ட், 2016

பனிரெண்டு வயது பெண்ணுக்கு என்ன பதில் ....?

பனிரெண்டு வயது.. என் இல்லத்திலும் இரு ராசாத்திக்கள் சில வருடங்களுக்கு முன் பனிரெண்டு வயதில் இருந்தார்கள்..

அந்த நாட்களை எண்ணி பார்க்கின்றேன்.

உலகமே அவர்களின் அம்மா... அப்பாவோ சூப்பர் மென்.

எங்க அப்பாவினால் முடியாதது எதுவும் இல்லை என்ற நினைப்பு.

ஐந்து மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு எதிரில் வண்டியை நிறுத்தியதும் .. ஓடி வந்து. அரவணைப்பு.. அம்மாவிற்கும் சரி.. அப்பாவிற்கும் சரி. உலகமே... இதுதான்.

ஒரு நாள் இரவு .. கனவில் நான் இறந்தேன் என்று அழுது கொண்டே ஓடி வந்தவள்.. அடுத்த ஒரு வாரம் என் அறையை விட்டு விலகவே இல்லை.

திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தவிக்கிற வாய்க்கு தண்ணி...

தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லை. கொதிக்கும் வெயிலில் ஓடிய நான் அங்கே இறந்தே இருக்கலாம் ! -

இந்திய மாரத்தான் வீராங்கனை ஜாயிஸா  குமுறல்!

இது சின்ன விஷயம், விளையாட்டு துறை இதற்கு பொறுப்பு ஏற்க முடியாது - "விஜய் ங்கோயாலு", மத்திய விளையாட்டு  துறை அமைச்சர்!

அட பாவி! ஒரு வீராங்கனை அதுவும் உயிரே போய் இருக்கும்ன்னு சொல்றாங்க, இது ஒரு சின்ன விஷயமா?

குடிக்க தண்ணி கொடுக்க வக்கு இல்லை.. கோமியத்தில தங்கம் எடுக்குறாங்களாம் ?

சனியன் புடிச்சவங்களே.. சிறுநீரை  வாளியில் பிடித்து வீட்டில் பணிபுரிவரிடம் கொடுத்து  ஆரஞ்சு மரத்துக்கு ஊத்த சொல்லி அந்த பழத்தை விருந்தாளிகளுக்கு கொடுக்குற உங்களை கூட்டினு வந்து மெஜாரிட்டியோட உக்கார வைச்சோம் பாரு.. எங்களை..

இன்னொரு விஷயம்.. ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் KT  ராகவன்னு ஒரு ஆளு. அவரிடம்.. இந்தியா ஏன் ஒலிம்பிக் போட்டியில் இப்படி தடுமாறுதுன்னு  கேட்டா..
இதோ அவர் பதில்...

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

கொடி காத்த குமரன்...

1982 ம் ஆண்டு லாஸ் அஞ்சல் நகரில் நடந்த ஒலிம்பிக்சில் இருந்து நான்கு வருடத்திற்கு  ஒரு முறை இந்த போட்டியை கண்டு களித்து  வருபவன் நான்.

இந்த போட்டிகளில் என்னை பெற்ற அன்னை எதுவும் பெரிதாக சாதிக்காவிட்டாலும் என்னை பராமரிக்கும் அன்னை முதல் தரத்தில் இருக்கின்றாள்.

விளையாட்டை ரசித்து பார்க்கும் அனைத்து ஆர்வலருக்கும் ஏதாவது ஒரு அணியை ஆதரிக்கும் போது தான் அதை பார்க்கும் போது ஒரு திகில் உணர்வு கிடைக்கும்.

அப்படி பார்க்கும் போது, இந்தியர்களாகிய நமக்கு அவ்வளவு பாக்கியம் இல்லை. நம் வீரர்கள் போட்டியிடுவது மிக குறைந்த அளவு போட்டிகள். அதிலும் அவர்கள் வெற்றி பெறுவது இன்னும் குறைவு.

நாம் கொடுத்துவைத்தது அம்புட்டு தான் என்று இந்தியாவில் வாழும் இந்தியர்கள் நினைக்கையில், என்னை போன்றோருக்கு இரண்டு வாய்ப்பு. முதலில் இந்தியாவிற்கான ஆதரவு. இரண்டாவது நான் வாழும் அமெரிக்காவிற்கு.

சனி, 20 ஆகஸ்ட், 2016

ரியோ டு டோக்கியோ .....! எனக்கு வர கோவத்துக்கு .....!

இந்த முட்டாள்களை திருத்தவே முடியாதா?


இன்று காலையில் படித்த செய்தி ...

//பி.வி.சிந்துக்கு 5 கோடி பரிசு - தெலுங்கானா அரசு அறிவிப்பு .
ரூ.2 கோடி பரிசு : டில்லி அரசு அறிவிப்பு .
சிந்துவுக்கு ரூ3 கோடி பரிசு, வீடு, அரசு பணி-ஆந்திரா அரசு அறிவிப்பு //


இந்தியாவிற்கு வெள்ளி பெற்று தந்த சிந்துவும் சரி அல்ல வெண்கலம் பெற்ற சாக்ஷியும் சரி.... அவர்களின் விடா முயற்சியினால் பதக்கத்தை அடைந்தார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

இவர்கள் இருவரும் பதக்கத்தை பெற்றவுடன் நாம் அரசாங்கம் மற்றும் பல துறையினர் போட்டி போட்டு கொண்டு பரிசு அளிக்கின்றனர்.

டேய்.. ஆஃப்ரண்டிஸ்களா ..

உங்களை திருத்தவே முடியாதா ?

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

பட்டு வரவும்.. சாரி! பற்றும் வரவும் ....

எதை படித்தாலும் முதல்  சில வரிகளில் ஒரு புன்னகையாவது வராவிடில் என்னால் அதை தொடர்ந்து படிப்பது கஷ்டம்.

மனிதனுக்குள் அடங்கியுள்ள அதனை உணர்வுகளிலும் எனக்கு மிகவும் பிடித்தது நகைச்சுவையே! பசி  - தாகம்- கோபம்- சோகம் - காமம்  என்ற உணர்வுகள் எல்லா உயிரினங்களுக்கும் இருந்தாலும் இந்த நகைச்சுவை என்பது "Unique to Human Beings"

இந்த பதிவுலகத்தில் கூட என்னை நான் அறியாமலே புழுதி போல் தலையில் வாரி போட்டு கொண்டது  "நகைச்சுவை பதிவர்" என்ற அளிக்கபடாத பட்டம்.

சென்ற வாரம், கோபமாக உணர்ச்சி பொங்க ஒரு பதிவை போட்டேன். முதல் பின்னூட்டத்தில் நெல்லை தமிழன்..



எங்களுக்கு இரத்த  அழுத்தத்தை  தருவதில் உமக்கு என்ன சந்தோசம்?மீண்டும் நகைச்சுவை பக்கம் போங்க...

என்று அன்பு கட்டளையிட்டார்.



நகைச்சுவையை  எழுதுவதை விட படிப்பதை விரும்புபவன் அடியேன். இப்படி தேடி தேடி படித்து கொண்டு இருக்கும் போது முகநூல் நண்பர் பிரகாஷ் ராமசாமி அவர்களின் ஸ்டேட்டஸில்

புதன், 17 ஆகஸ்ட், 2016

பதினாலு நொடியும் அடியேனின் கடியும்

கேரள மாநிலத்தில் பெண்களை பதினாலு நொடிகள் தொடர்ந்து பார்த்தால் கைது செய்ய படுவார்கள் என்று ஒரு செய்தி வந்தது.

அந்த நொடியினால் எனக்கு உதித்த கடி.



மன்னிக்கணும் யுவர் ஹானர் .. 
தூரத்தில் இருந்து பார்க்கும் போது என் மனைவி மாதிரி தெரிஞ்சா.. அதனால் தான் பதினாலு நொடிக்கு மேலே பார்த்தேன்.
பொய்.. உனக்கு ஆறு மாசம் சிறைத்தண்டனை.
யுவர் ஹானர் .. பொய்யுன்னு எப்படி சொல்றிங்க?
எந்த முட்டா பையன் அவன் பொண்டாட்டியை தொடர்ந்து பதினாலு நொடி பாத்து இருக்கான்?


அந்த பொண்ணையே பார்த்து இருக்கியே.. பதினாலு நொடிக்கு மேலே பாக்க கூடாதுன்னு சட்டம் இருக்கே . .. எம்புட்டு தைரியம் உனக்கு... உன் பெரு என்னடா?
கண்ணாயிரம்...
யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்.


“கெட்டிமேளம்-கெட்டிமேளம்,எங்கடா தாலி”

நான்காவது படிக்கையிலே நாள் பார்த்து என் எதிர்  வீட்டிற்கு  குடி வந்தாள், பெற்றோருடன் ஒரு சிறுமி.  அடுத்த நாள், என் பள்ளியில், என் வகுப்பில் என் அருகில் அவள் அமர
 (அவள் பெயரின் முதல் எழுத்தும் என்னை போலவே ,எங்கள் வகுப்பில் பெயர் வரிசையில் தான் அமரவைப்பார்கள், வள்ளுவனுக்கு வாசுகி போல, எனக்கும் ஒன்று. அவள் அப்பாவிற்கு நன்றி கூறினேன்),
கண்டவுடன் கண்டுகொண்டேன் கன உலகில் சென்று விட்டேன்,காசு கொடுத்து வாங்கிய கமர்கட்டும் கசப்பாகியது.

இது காதலா?

எட்டாவது படிக்கையில் இதே சிறுமி பாவாடை சட்டையை எறிந்துவிட்டு, அரை தாவணியில் நின்ற போது , மெய்மறந்து, அந்நாள் வரை இப்பெண்ணை விட அதிக மதிப்பெண் பெற்ற நான்,அவளிடமே சென்று கணக்கு பாடத்தில் சந்தேகம் என்று சந்தடி சாக்கில் சில வினாடிகள் திருடினேனே …

அது காதலா?

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

அ(ர்)ப்பனுக்கு வாழ்வு வந்தால்...

அப்பா...
என்றாள்...

அடித்து பிடித்து ஓடினேன்...
பல படி தாண்டி மேலே வந்தேன் ...
மூச்சு வாங்க..


வழியில் அவள் அம்மா கேட்டாள்..
ஊரிலேயே உனக்கு மட்டும் தான் பிள்ளையா?

நல்ல கேள்வி...

நினைவரியாத நாளில் அடுத்தவன் போல்..
அவன் தோளில் நிற்காத பாக்கியம் ...

முதல் வகுப்பிற்கு அவனவன்
அவரின் அரவணைப்பில் வரும் போது...
அனாதை   போல் நின்ற துர்பாக்கியம்...



பின்புறத்தை அவன் பிடித்து கொண்டே தள்ள..
கீழேவிழாமல் இவன் கற்றுக்கொண்டான் சைக்கிள்..
எனக்கோ... பிடிக்க யாரும் இல்லாததால்..
மங்கி பெடல் அடித்து முட்டியெல்லாம் காயம்.

புதன், 10 ஆகஸ்ட், 2016

சும்மா கிடந்த சங்கை....

அலை பேசி அலறியது...

ஹலோ..

வாத்தியாரே.. சீக்கிரம் கிளம்பு...

தண்டம்... கண்ணாலாமான புள்ள குட்டிக்காரன் நான்.. இந்த மாதிரி சனிக்கிழமை மதியம் தூங்குறது, குறிஞ்சி  பூ பூத்தமாதிரி பனிரெண்டு வருஷத்துக்கு ஒரு முறை தான்  வரும்... அப்புறம் பார்க்கலாம்...

 வாத்தியாரே... தூக்கம் எல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்... இன்னும் ரெண்டே நிமிசத்தில் அம்மணி உன்னை எழுப்பி அவசரமா கடைக்கு போக சொல்வாங்க .. சீக்கிரம் கிளம்பு...

பாணி.. எங்க வீட்டில நடக்குறது... உனக்கு... எப்படி?

என்று கேட்டு முடிக்கும் முன்...

ஏங்க...

சொல்லு...

கொஞ்சம்...

அவசரமா கடைக்கு போகணுமா?

எப்படி ... இவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க...?

கிட்டத்தட்ட இருபது வருஷ பழக்கம்... அதுதான்...சொல்லு என்ன விஷயம்?

பக்கத்துல இருக்க அரபி சூப்பர் மார்க்கெட்டில் அருமையான கீரை வந்து இருக்காம்... கொஞ்சம்....

அது எப்படி உனக்கு தெரியும்?

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

மாமாவுக்கு குடுமா ... குடுமா...

விடுமுறை முடிந்து இல்லம் வந்த முதல் வார இறுதி. குளிர் சாதன பெட்டியில் "வெட்டு குத்தும் "இல்லை.. "புள் பூண்டும்" இல்லை. சனிகிழமை காலை 5  மணிக்கு அலாரம் வைத்து எழுந்து நேராக கடற்கரையை நோக்கி வண்டியை விட்டேன்.  என் இல்லத்தில் இருந்து ஒரு 20 மைல் தொலைவில் உள்ள ஒரு மீன் சந்தை (எங்க ஊர் காசிமேடு) என்று கூட சொல்லலாம்.

சுட சுட ஒரு காப்பியை போட்டு கொண்டு .. எனக்கு பிடித்த பாடலையும் தட்டிவிட்டு .. வண்டியை உருட்டினேன்.... மனதும் உருண்டது... ஒவ்வொரு நாளும் ஆண்டவன் போட்ட பிச்சை என்று வாழ்பவன் நான். அவன் புண்ணியத்தில் ஐம்பது வருடங்கள் ஓடிவிட்டன.


வாழ்க்கையும் சரி வாழும் விதமும் சரி, நமது வயதுகேர்ப்ப மாறுவதை  சற்று யோசித்தேன்... எண்ணமோ எனக்கு 25 இருக்கும் போது நான் சந்தித்த ஒரு 60 வயது நபரை நோக்கி சென்றது.

பல வருடங்களுக்கு முன்... இந்தியாவை விட்டு வெளியேறி வெளிநாட்டு வாழ்க்கை ஆரம்பம். அந்நாட்கள் இந்நாட்கள் போல அல்ல. இப்போது எல்லா நாடுகளிலும் தடுக்கி விழுந்தால் இந்திய கடை,இந்திய சினிமாக்கள் எங்கே பார்த்தாலும் இந்தியர்கள் .. இந்திய தமிழக உணவகங்கள்.. ஆனால் 80'களில் அவ்வாறு இல்லை.  என்றைக்காவது ஒருமுறை அத்திப்பூத்தாற்போல் ஒரு இந்தியர்  கண்ணுக்கு மாட்டுவார்கள் .

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2016

சபாஷ் சரியான போட்டி....

மூன்று மாதத்திற்கு முன் ஒரு நாள்....

அலை பேசி அலறியது...

வாத்தியாரே .. என்ன பண்ற?

என்ன பண்ணுவேன்.. செவ்வாயும்  அதுவுமா, மதியம் சாப்பிட உக்காந்தேன். நான் நிம்மதியா சாப்பிட்டா உனக்கு பிடிக்காதே.. சொல்லு...

இல்ல, நீ கொட்டிக்கோ.. அப்புறம் பேசலாம்.

தமாஸ் பண்ணேன் பாணி.. சொல்லு..

வாத்தியாரே... ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் வாரம் என்ன பிளான் ?

டேய்...இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறது..

உன் பிளான் எல்லாம் அம்மணி தான் முடிவு பண்ணுவாங்கன்னு எனக்கும் தெரியும். காலெண்டரை பார்த்து சொல்லு..

அதுக்கு முன்னாடி ஆகஸ்ட் மாசம் ரெண்டாம் வாரம்நீ, என்ன பிளான் வைச்சின்னு இருக்க சொல்லு.

இல்ல, வாத்தியாரே.. இங்க எங்க ஆபிசில் சுற்றுலா கப்பலில் ரெண்டு குடும்பம் போற டிக்கட் கிடச்சி   இருக்கு. மொத்தம் எட்டு பேருக்கு .நாங்க  நாலு பேர் .. நீங்க நாலு பேர்...வா வாத்தியரே போலாம்..

தண்டம்.. காலெண்டரை பார்த்தேன்..அந்த வாரம் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு..அது நடக்குமா நடக்காதான்னு தெரியாது... அதனால என்னால கண்டிப்பா சொல்ல முடியாது.வேணும்னா.. இப்படி செய்யலாமே..

எப்படி..?

என் குடும்பமே வருவதா வச்சிக்கோ.. கடைசியில் வர முடியாம போனா வேற யாருக்காவது கொடுத்துடு..

வாத்தியாரே.. இந்த பயணம் ... இங்கே இருந்து மெக்சிகோ வரை. சர்வதேச எல்லையை கடக்கணும். அதனாலே முந்தியே பெயரை தரனும். கடைசி நேரத்தில் மாத்த முடியாது.

அப்படி என்ன விசேஷம்..?

ஆகஸ்ட் 15 ம் தேதி சொல்றேன்...

இந்த வாய்ப்பை எப்படி நீ வேணான்னு சொல்ற? அப்படி என்ன விசேஷம் ....


இளைய ராசாத்தி நடுநிலை பள்ளியை முடித்து விட்டு உயர் நிலை பள்ளிக்கு செல்கின்றாள். இவள் போக போகும் பள்ளியில் தான் மூத்த ராசாத்தி இந்த வருடம் இறுதி ஆண்டு படிக்கிறாள்.

இவர்கள் செல்லும் இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 3000 பிள்ளைகள். அதில் 1600க்கும்  மேலானோர் பெண் பிள்ளைகள்.  இந்த பள்ளி விளையாட்டு துறையில் பெயர் பெற்ற பள்ளி.  குறிப்பாக கோல்ப் மிகவும் பிரபலம்.

ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் திறமைகேற்ப Varsity - Junior Varsity - Freshman  என்ற மூன்று அணிகள் உள்ளது. விளையாட்டு துறையில் இருக்கும் ஒவ்வொரு மாணவ மாணவிக்கும் 9 ம்  வகுப்பில் பள்ளியில் சேர்ந்தவுடன்  Varsity  அணியில் சேர வேண்டும் என்பதே குறிக்கோள்.

மூத்த ராசாத்தி தான் 9 ம்  வகுப்பில் சேரும் போது கடின உழைப்பினாலும் ஆண்டவனின் அருளினாலும் இந்த அணிக்கு தகுதி பெற்றாள். இந்த வருடம் அவள் தான் இந்த அணிக்கு தலைவி.

சென்ற வருடத்தின் அணி.....

இந்த Varsity  அணிக்கு மொத்தம் 9 பேர் இருப்பார்கள். இந்த வருடம் ஏற்கனவே (இந்த வருடம் 10,11,12 படிக்கும் மாணவிகள் ) 7 மாணவிகள் இருக்க, இரண்டு இடம் காலியாக உள்ளது. இந்த இரண்டு இடத்திற்கு கிட்ட தட்ட 60 மாணவிகள் போட்டி இடுகின்றனர். இதற்கான தகுதி போட்டி ஆகஸ்ட் ரெண்டாம் வாரம் நடக்க இருக்கின்றது. இதில் போட்டியிட இளைய ராசாத்தி தயாராகி கொண்டு இருக்கின்றாள்.

கடந்த 5 வருடமாக ... ஒவ்வொரு முறை கோல்ப் ஆடும் போதும் பயிற்சி பெரும் போதும் இந்த ஒன்றையே குறிக்கோளாக வைத்து தயாராகி வருகின்றாள்.

இரண்டே இடம்.. 60 மாணவிகள் போட்டி.. அவள் என்னமோ, சிரித்து கொண்டு தான் இருக்கின்றாள். எனக்கு என்னமோ வயிற்றில் நெருப்பு கட்டியதை போல் ஒரு உணர்வு.

இவள் கூட போட்டி போட போகும் மற்ற மாணவியர்கள் சிலரின் ஆட்டத்தை  நோட்டமிட்டேன்.. அருமையான ஆட்டம். அடுத்த வாரம் "சபாஷ் சரியான போட்டி" என்று தான் நினைக்கின்றேன்.

இந்த போட்டியை பெற்றோர்கள் காண அனுமதிக்க படுவார்கள். அதனால் அடுத்த வாரம். வேலையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு இதற்காக தயாராகி கொண்டு இருக்கின்றேன்..

இந்த நேரத்தில்.. தண்டபாணியின் அன்பு தொல்லை வேறு....

நேற்று மூத்த ராசாத்தியிடம்....

அம்மாடி.. நீ தான் கேப்டன் ஆச்சே...ரெண்டே இடம் அதுக்கு 60 பேர் போட்டியா ?

யு காட் இட் வ்ராங் டாடி..

எப்படி...?

ஒரே இடம்.. 59 பேர் போட்டி...

இல்லையே.. ரெண்டு இடம் 60 பேருன்னு தான் உங்க கோச் சொன்னாரே...

அவர் சொன்னது என்னமோ சரிதான்..ரெண்டு இடம் 60 பேரு தான்.. ஆனா அதுல  உங்க ரெண்டாவது பொண்ணுக்கு ஒரு இடம் கண்டிப்பா இருக்கு.. மீதி இருக்க ஒரு இடத்துக்கு  59 பேர் போட்டி.... ரிலாக்ஸ்....

ஐந்து வருடத்திற்கு முன் .... கனவோடு....

அட பாவி மகளே.. உன் தங்கச்சி மேலே இவ்வளவு பெரிய நம்பிக்கை வைச்சி இருக்கியே ...இது எனக்கு இல்லாம போச்சே...

என்று நினைத்து கொண்டு, இன்னும் டென்ஷனோடு இருக்கின்றேன்....

பின் குறிப்பு :

தண்டம்.. மூணு மாசத்துக்கு முன்னால ஆகஸ்ட் ரெண்டாம் வாரம் என்னமோ கப்பலில் மெக்ஸிகோ போறேன்னு சொன்னீயே.. எல்லாம் தயாரா?

நல்லா சொன்ன போ.....

என்ன ஆச்சி..

வாத்தியாரே.. அடுத்த வாரம் இவளுக்கு பள்ளியில் டென்னிஸ் தேர்வு போட்டியாம்... இவ இப்ப தானே 9 வது போறா.... எப்படியாவது கஷ்டப்பட்டு  Varsity  அணியில் சேரணும்ன்னு வருஷ கணக்கில் சொல்லினு இருக்கா...அதனால் எல்லாம் கான்செல்ட்

கண்டிப்பா Varsity  அணியில் சேருவா.... கவலை படாதே...

இல்ல வாத்தியாரே.. 3 இடத்துக்கு 75 பேர் போட்டி போடுறாங்களாம்..

தப்பு... 2 இடத்துக்கு 74 பேர் ...

இல்ல வாத்தியாரே... நான் கோச்சிடம் பேசினேன்... 3 இடம் 75 பேர்...

தண்டம்.. கோச் சொன்னது சரிதான்.. அந்த மூணு இடத்தில தான் உன் ராசாத்திக்கு ஒரு இடம் கண்டிப்பா இருக்கு இல்ல.. அதனால தான் அது 2 இடம் 74 பேர் ஆச்சி...

சூப்பர் வாத்தியாரே..... சோக்கா சொன்ன ...எங்கே இருந்து தான் இப்படி பேச கத்துக்குரியோ..

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்

சென்ற வாரம் நண்பர் மதுரை தமிழனின் "அவர்கள்  உண்மைகள் " என்ற வலைத்தளத்தில் ...

                        " பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்"

என்ற தலைப்பில் ஒரு பதிவை படித்தேன். அதில் சகோ ராஜி எழுதிய பதிவை தழுவி தம் கருத்தை வெளியிட்டு இருந்தார். 

மதுரை தமிழன் ... பயமரியா கன்று... அவர் பதிவில் சொல் குற்றம் இல்லாவிடிலும் பொருள் குற்றம் சில காண முடிந்தது. அவரை மன்னித்து விடலாம். 

ஆனால், ராஜி அவர்கள் எழுதிய பதிவை படித்தவுடன்.. .இவர்கள் இந்த பதிவை ஆண்வர்கத்திற்கு எதிராக எழுதி இருக்கின்றார்கள் என்றே பட்டது. 

வேண்டுமென்றே தவறுதலாக நமக்கு அறிவுரையை வழங்கி உள்ளார்கள். இதை படிக்கும் ஆண்  மக்கள் ராஜி  அவர்களின் பதிவை படிக்க நேர்ந்தால் இந்த உண்மை புரியும்.

ராஜியையும் விடுங்க... தமிழனையும் விடுங்க.. இந்த விஷயத்தில் நான் முனைவர் பட்டம் வாங்கியவன், நான் சொல்வதை கேட்டு சந்தோசமா இருங்க.

கீழே.. சிவப்பு நிறத்தில் இருப்பது ராஜி அவர்களின் டிப்ஸ்.. கருப்பில் இருப்பது அடியேனின் அறிவுரைஸ்.. 

"பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்"

செவ்வாய், 2 ஆகஸ்ட், 2016

காலங்களில் அவள்.....

வயது ஐம்பது ஆனாலும்  வாழ்ந்தது பதினேழே வருடங்கள்.

வாழ்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் வாழ்க்கையை படித்தது  பதினேழே வருடங்கள்..

படித்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் மகிழ்ந்தது பதினேழே வருடங்கள்..

மகிழ்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் ரசித்தது பதினேழே  வருடங்கள்...

ரசித்தது  ஐம்பது வருடங்கள் ஆனாலும் சிரித்தது பதினேழே வருடங்கள்...

சிரித்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும்  உணர்ந்தது பதினேழே வருடங்கள்...

உணர்ந்தது ஐம்பது வருடங்கள் ஆனாலும் ... வாழ்ந்தது பதினேழே வருடங்கள்...

திங்கள், 1 ஆகஸ்ட், 2016

ஒரு அறை கொடுத்தா இன்னொரு அறை Free ....

வாத்தியாரே.....

தண்டம்... எப்ப வந்த?

அது இருக்கட்டும்... எனக்கு வர கோவத்துக்கு....

நிதானம் தண்டம்... என்ன ஆச்சி...?

என்ன ஒரு அநியாயம் வாத்தியாரே..

பாணி... விஷயத்தை சொல்லு...

இதுவே எனக்கு நடந்து இருந்தா...


தண்டம்.. திங்கள் கிழமை சாயங்காலம்... இப்ப தான் வேலை முடிஞ்சு வீட்டுக்கு போய்ன்னு இருக்கேன். விஷயத்தை ஜல்தி சொல்லு.. இல்லாட்டி இந்த சனிக்கிழமை பார்க்கலாம்..

சனி கிழமை.. சனி கிழமை என்ன பிளான்.. எங்கே பாக்குறோம்.

தண்டம்.. யாரு இந்தியாவில் இருந்து வந்தாலும் அந்த வார இறுதியில் அவன் வீட்டுக்கு தற்செயலா போனா இந்தியாவில் இருந்து வந்த " இனிப்பு - காரம்" வகையறாக்கள் கிடைக்கும்னு நீ தானே சொல்லி கொடுத்த.. இன்னைக்கு தான் நீ இந்தியாவில் இருந்து வந்து இருக்கே... அதுதான்.. சனி வந்து பாக்குறேன்.

உன் பிரச்சனை உனக்கு வாத்தியாரே.. நான் சொல்ல வந்தது...

நீ  சொல்ல வந்தத தான் சொல்லவே மாட்டுறியே.... என்ன பிரச்சனை...?

வாத்தியாரே.. போனவாரம் டெல்லி விமான நிலையத்தில் காத்துனு இருந்தேன்.

அட பாவி.. இந்தியா போனா டெல்லி மட்டும் போகாதே. அங்கே எந்த புத்துல எந்த பாம்போன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன்.. உன்னை  யார் அங்கே போக சொன்னது.. சரி.. யாராவது "அரசியல்வாந்தியிடம்" வாங்கி கட்டிக்கினியா ?

இல்ல வாத்தியாரே.. நான் கவனமாதான் இருந்தேன்...

அப்புறம் என்னை பிரச்சனை..

எனக்கு எதிரில் என் கண் எதிரில் ஒரு ஆம்பிளைக்கு நடந்த அநியாயம்...

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...