பல வருடங்களுக்கு முன் என் கல்லூரி தோழன் "முத்து" வை போலிஸ் கைது செய்த விஷயம் எனக்கு இன்றும் நன்றாக நினைவில் உள்ளது.
வேலூர் அருகே காந்திநகரில் வாழ்ந்த நாட்கள். ஒவ்வொரு வீடும் "சீட்டு கட்டு கணக்காக" அருகே அருகே கட்டப்பட்டு இருக்கும்.நண்பன் முத்து நமக்கு மிகவும் வேண்டியவன்.
சில நாட்களாகவே நண்பன் முத்து காலை வேளையில் கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து குளித்து நண்பர்கள் அனைவரையும் " என்னதான் நடக்கும் நடக்கட்டுமே" என்று நினைக்க வைத்தது மனதில் இன்றும் பசுமரத்து ஆணி போல் உள்ளது.
என்ன முத்து ? இப்பெல்லாம் காலையில் சீக்கிரமா ரெடி..
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல விசு..
டேய்.. .முயல் புடிக்கிற நாயை ... பழமொழி தெரியும் இல்ல..
அப்படி என் மூஞ்சில் என்ன தெரிஞ்சது ?
ஒரே புன்னகையா இருக்கியே..
அப்படி ஒன்னும் இல்ல..
காதல் ஏதாவது...