Thursday, December 4, 2014

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...

சென்ற பதிவில் எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது என்றும் அதை எப்படி எங்கே கற்று கொண்டேன் என்பதையும் தெளிவாக எழுதி இருந்தேன்.

அது என்ன கெட்ட பழக்கம்?

அந்த பதிவின் முடிவில் இந்த கெட்ட பழக்கத்தினால் எனக்கு வந்த கேடை பற்றி பிறகு எழுதுகின்றேன் என்று சொன்னேன். அந்த பிறகு தான் இந்த பதிவு.ஏங்க.. இன்றைக்கு மதியம் 12;30 க்கு தண்டபாணி வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் தெரியும் தானே.

ஆமா, நல்ல தெரியும், அதுக்கு என்ன இப்ப?

மணி 5:30 ஆக போகுது, படுக்கையில் இருந்து எழுங்க, தூங்கினது போதும்.

அம்மா தாயே.. நான் தூங்கினது போதும் என்பது எனக்கே தெரியல்ல, உனக்கு எப்படி தெரியும்? 12:30 மணி நிகழ்ச்சிக்கு 5:30 க்கு எழுப்புகின்றாயே, இது நியாயமா?

அப்படி இல்லங்க, எங்கே எந்த நிகழ்ச்சிக்கு போக வேண்டும் என்றாலும்  நேரத்திற்கு போக வேண்டும் என்று நீங்க டென்சன் ஆகி விடுவீர்கள், நேரத்திற்கு எழுந்து கிளம்பினால் தானே.

சரி, ஒரு அரை மணி நேரம் கொடு.

அரை மணி நேரம் கழித்து...

ஏங்க, தயவு பண்ணி எழுங்க. 6 மணிக்கு மேல் தூங்கினால் குடும்பம் விளங்காது.

அம்மாடி, நீ சொன்னது சரி தான், ஆனால் அந்த 6 மணி விஷயம் வேலைக்கு போகின்ற நாட்களில். இன்றைக்கு சனி, 8க்கும் முன்னால எழுந்தால் உடம்பு விளம்பாது.

சரி, நான் இன்னும் டீ குடிக்கவில்லை, சும்மா பேச்சுக்கு சொல்றேன்.

அதுதானே பார்த்தேன், சனி கிழமை டீ  போடும் டூட்டி என்னுடையது என்று சொல்லற.. இதோ வரேன்.

நான் எழுந்து சமையல் அரை செல்ல, மனைவியோ, ராசாதிக்களின் அறையை நோக்கி சென்றாள்.

எங்கள் இல்லத்தில் இருந்து தண்டபாணியின் இல்லம் சற்று அருகில் தான், ஒரு 15 நிமிடத்தில் போய் விடலாம். 12;30 மணி நிகழ்ச்சி என்றால் வீட்டை ஒரு 10:45 போல் விட வேண்டும். ஏன் இவ்வளவு சீக்கிரம் என்று சிலர் கேட்ப்பது புரிகின்றது. இதோ விளக்கம்.

நாம் இந்தியர்கள் ஆயிற்றே. யார் எந்த விழாவிற்கு எத்தனை நாள் முன்னால் அழைத்தாலும், விழா அன்று அவர்கள் இல்லத்திற்கு செல்லும் வழியில் தான் அவர்களுக்கான பரிசை (GIFT)  வாங்குவோம். எங்கள் இல்லமும் இதற்க்கு விதிவிலக்கு அல்ல.

போகின்ற வழியில் பிறந்த நாளுக்கான பரிசை வாங்கி கொண்டு கிளம்புகையில், மற்றொரு நண்பனாகிய பிள்ளையிடம் இருந்து ஒரு போன்.

சொல்லு பிள்ளை..

விசு, எப்படி சுகம்?

இருக்கேன் பிள்ளை? அங்கே..


எதோ போது..

என்ன விஷயம்....அத்தி பூத்த போல், உன்னிடம் இருந்து ஒரு போன்  கால்.?

ஒன்னும் இல்ல.. சும்மாதான், ஆமா இன்றைக்கு மதியம் என்ன பிளான்?

இங்கே நம்ப தண்டபாணி இருக்கார் இல்ல,அவர் வீட்டில் ஒரு பிறந்தநாள் விழா! அங்கே குடும்பத்தோடு போகிறோம்.

ஒ, உன்னையும் கூப்பிட்டாரா? அப்ப எனக்கு ஒரு உதவி பண்ணு.

சொல்லு பிள்ளை.

எனக்கு தண்டம் விலாசம் வேண்டும், கொஞ்சம் கொடு.

ஏன் நீயும் அங்கே வரியா?

ஆமா விசு.

அதை ஏன் பிள்ளை என்னிடம் முதலில் சொல்லாமல், "விசு மதியம் பிளான் என்ன என்று கேட்டாய்"?

அது ஒன்னும் இல்ல விசு, ஒரு வேலை தண்டம் என்னை கூப்பிட்டு விட்டு  உன்னை கூப்பிடாமல் இருந்தால் நீ அவர் மேல் கோவித்து கொள்வாய் அல்லவா? அது தான் "டீசெண்டா" நீ முதலில் போகின்றாயா என்று கண்டு பிடித்து விட்டு பிறகு உன்னிடம் விலாசம் கேட்டேன்.

நல்லா சொன்ன பிள்ளை, என் மேலே தான் என்ன ஒரு அக்கறை.அது சரி, தண்டம் இந்த பிறந்த நாள் அழைப்பை ஒரு மாசத்துக்கு முன்னாலே அனுப்பிட்டானே, அதில் தான் விலாசம் இருக்கே, நீ கடைசி நேரத்தில் என்னை கூப்பிட்டு ஏன் டார்ச்சர் பண்ற? அழைப்பு வந்த உடனே அதை போனில் இல்லாவிடில் வண்டியில்  GPS ல் போட்டு இருக்கலாமே..

வாத்தியாரே.. இவ்வளவு நேரம் பேசியதற்கு நீ எனக்கு விலாசத்தை கொடுத்து இருக்கலாம், சரி, பின்னாலே போலிஸ் வரான், நீ எனக்கு "டெக்ஸ்ட் " பண்ணு.

அட பாவி, இவ்வளவு நேரம் வண்டியை ஒட்டிக்கொண்டு ஒரு கையில் போனை வைச்சியா பேசினாய்.. நீ தேருவன்னு நினைக்கிற?

அப்புறம் பார்க்கலாம் விசு, பை!

போனை அவன் வைத்தவுடன்... ஓர் நினைப்பு..

ஒவ்வொரு முறையும் எங்கேயாவது விழாவிற்கு செல்லும் போது இந்தியா நண்பர்கள், வீட்டை விட்டு கிளம்பி விட்டு அதன் பின் விழா நடக்கும் இடத்தின் விலாசத்தை கேட்பது ஏன்?

என்று நினைத்து கொண்டே.. நண்பனின் இல்லத்தை நோக்கி வண்டியை விட்டேன்.

கதவை தண்டத்தின் 12 வயது மகள் திறக்க..

அப்பா, அம்மா எங்கேமா?

அம்மா சமையல் அறையில், அப்பா வீட்டின் பின்புற தோட்டத்தில்...

மெதுவாக என் மனைவியிடம்..

என்ன யாரும் காணவில்லை?, பிறந்த நாள் விழா இன்றைக்குத்தானா? நல்லா தெரியுமா?

ஆமாங்க...கொஞ்ச நேரம் சும்மா இருங்க..

வா வாத்தியாரே.. என்ன இவ்வளவு சீக்கிரம்?

என்னாது சீக்கிரமா?

மணி 12:25 தண்டம். நீ 12:30க்கு தானே போட்டு இருந்த..

 வாத்தியரே...12:30 ன்னு போட்டா, நீ அதுக்குன்னு கரக்டா 12:30 வந்து நிப்பியா?

என்னாடா சொல்ற?

வாத்தியாரே, நம்ம இந்திய வழக்க பழக்கம் மறந்துட்டியா?

டேய், அது பழக்க வழக்கம்..

ஆமா, ரொம்ப முக்கியம், போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா என்னா? இல்ல ஊதிக்கிட்டு கடிசிக்கிட்டா என்னா?

டேய்.. அது.. போத்திக்கிட்டு படுத்துக்கிட்டா  இல்ல... சரி விடு... அதை சொன்னா  அதற்கும் அதுவா முக்கியம்ன்னு கேப்ப? இப்ப நீ என்ன சொல்ல வர?

வாத்தியாரே, நம்ம இந்திய நண்பர்களுக்கு பிறந்த நாள் அழைப்பு அனுப்புவது என்றால், ஓர் ரெண்டு மணிநேரம் முன்னாலே போட்டு அனுப்ப வேண்டும்,

அப்ப தான் அவங்க விழா நேரத்திற்கு கரக்ட்டா வந்து சேருவாங்க.

புரியல தண்டம்.

வாத்தியாரே, இன்றைக்கு நிகழ்ச்சி 2:30 க்கு தான். அதனால் தான் உசாரா 12:30ன்னு போட்டு அனுப்பினேன்.நீ வேணும்னா பாரு, எல்லாரும் சரியா 2:30 மணிக்கு வந்து நிப்பாங்க.

டேய், அப்ப இந்த ஊர் காரங்க..

என்ன வாத்தியாரே. இந்த ஊருகாருக்கு நிகழ்ச்சி 2;30க்கு வேற ஒரு அழைப்பு தயார் பண்ணி அனுப்பிட்டேன். அவங்களும் சரியா 2;30க்கு வந்துடுவாங்க.

நல்ல பிளான் தண்டம்..இப்ப 2:30 வரைக்கும் நான் என்ன பண்றது.

ஒரு நிமிஷம் இரு.

சுந்தரி.. சுந்தரி...

என்ன தண்டம் ?

காலையில் இருந்து அந்த வேலை இந்த வேலைன்னு என்ன "டார்ச்சர்" பண்ணியே, இங்கே பார், ஆண்டவனே பார்த்து வாத்தியார சீக்கிரமா அனுப்பி இருக்கார். அவரை வெச்சி எல்லா வேலையும் சட்டு புட்னு முடி. முடின்னு சொன்னவுடன் தான் நினைவிற்கு வருது நான் வெளியே போய் ஒரு பத்து நிமிஷத்தில் வெட்டி முடி வெட்டி வந்துட்றன்.

சரிங்க..

அண்ணா, சீக்கிரம் வந்ததற்கு ரொம்ப நன்றி. அக்கா சமையல் அறையில் எனக்கு கொஞ்சம் உதவி செய்யட்டும், நீங்கள் பின்னாலே தோட்டத்தில் அந்த அறுபது நாற்காலியை வரிசையா அடுக்கி வைங்க..

நான் மெதுவாக தண்டத்திடம் சென்று..

டேய் பாவி.. அழைப்பில் 12;30 போட்டு இப்ப இந்த மாதிரி வேலையை பண்ணிட்டியே..

வாத்தியாரே.. நான் 12;30 தான் போட்டேன்.உன்னை யாரு நேரத்துக்கு வர சொன்னா? கொஞ்சம் கூட "காமன் சென்சே" உனக்கு இல்லையா. நீ பாட்டு குடும்பத்தோடு புறப்பட்டு இவ்வளவு சீக்கிரம் வந்திடேயே, நான் இப்ப விழாவிற்கு தேவையான காரியத்தை பண்ணுவனா இல்லை உன்னை உபசரிப்பனா?

அப்ப ஏன் தண்டம், வெள்ளை காரனுக்கு சொன்ன மாதிரி எனக்கும் 2:30 என்று சொல்லல?

நல்ல கேள்வி.. சொல்லி இருக்கலாம், ஆனால் நீ வெள்ளைக்காரன் இல்லையே..

டேய் பாவி.. 60 நாற்காலிய நான் போடுவதற்குள்.. நான் நால்கால் பிராணி போல் ஆயிடுவேனடா?

வாத்தியாரே.. வந்துட்ட, முடிந்த உதவி செய்து விட்டு போ.

சுந்தரி நான் வரேன்..

சரிங்க..

வாத்தியாரே.. கொஞ்சம் நேரத்தில் பார்க்கலாம்,

அடுத்த அரை மணி நேரம் தண்டத்தை காணவில்லை.. நாற்காலியை அடுக்கி முடிக்கும் வேளையில்.. பாணியிடம் இருந்து ஒரு தொலை பேசி..

வாத்தியாரே.. இங்கே கொஞ்சம் கூட்டம் அதிகமா இருக்கு. இன்னும் கொஞ்சம் நேரம் ஆகும் போல இருக்கு.நீ ஒரு உதவி பண்ணேன்.

பண்ணிட்டேன் தண்டம்.. நாற்காலி எல்லாம் போட்டு ஆகிவிட்டது.

அதை விடு வாத்தியாரே. பக்கத்தில் ஹோடேலில் சாப்பாடு தாயார் வந்து "பிக் அப்" பண்ணி கொள்ளாலாம்னு இப்ப தான் போன் போட்டாங்க, கொஞ்சம் போய் வாங்கி வந்துடு.. ப்ளீஸ்..

தண்டம்.. டேய்..

தேங்க் யு வாத்தியாரே..

சரி..அதையும் வாங்கி வந்து அதற்கும் பின் மற்றும் பல வேலைகள் செய்து முடிக்கும் போது மணி 2:20. குடும்பம் குடும்பமாக எல்லாரும் தண்டம் சொன்னது போல் சரியாக 2;30 போல் வந்து சேர்ந்தார்கள்.

சரி.. இந்த பிள்ளைக்கு விலாசம் அனுப்பினேனே? அவன் இன்னும் ஆளை காணவில்லையே.. என்று எண்ணி ...

ஹலோ .. பிள்ளை..

சொல்லு விசு..விழா ஆரம்பித்துவிட்டதா?

ஆமா பிள்ளை. நீ எங்கே ஆளை காணோம்.

ஒன்னும் இல்லை விசு, இங்கே தான் தண்டம் குடும்பத்திற்கு பரிசு வாங்க வந்து இருக்கேன். இன்னும் 10 நிமிடத்தில் வந்து விடுவேன்.

பிள்ளை ஒன்னு கேட்ப்பேன், உண்மையான பதில் வேண்டும்.

சொல்லு விசு.

நிகழ்ச்சி 12:30 என்று அழைப்பில் போட்டு இருக்கு, நீ என்னவென்றால் 2:30 மணிக்கு வரேன்னு சொல்றீயே, இது கொஞ்சம் கூட நல்லா இல்லை.

விசு.. உனக்கு தெரியாதது இல்லை. இந்த தண்டம் இதே மாதிரி தான் போன வருஷம் ஒரு அழைப்பு போட்டார். நானும் அவர் சொன்ன மாதிரியே 12:30 க்கு போயிட்டேன். பாவி மவன், நான் போய் சேந்தவுடனே  முடி வெட்றேன்னு வெளிய கிளம்பிட்டான். பின்னர் கிட்ட தட்ட 70 நாற்காலி நான் தான் போட்டேன்.

டேய் , பொய் சொல்லாத ! 70வது இருக்காது, நல்லா யோசித்து பாரு.. 60தான் இருக்கும்.

ரொம்ப முக்கியம் விசு.. அது மட்டும் இல்ல..

ஒரு நிமிஷம் இரு பிள்ளை, அதற்கும் மேல என்ன நடந்தது என்று நான் சொல்லவா?

சொல்லு பார்க்கலாம்.

இங்கே கடையில் கொஞ்சம் கூட்டம் அதிகம்ன்னு போன போட்டு, தயவு செய்து அந்த ஹோட்டேலில் போய் சாப்பாட எடுத்து கொண்டு வான்னு சொல்லி இருப்பானே...

எப்படி விசு.. கூட இருந்த மாதிரி சொல்ற..

எல்லாம் ஒரு யூகம் தான் பிள்ளை.. யூகம்..

www.visuawesome.com

10 comments:

 1. நீங்களும் உங்க நண்பர்களும் இன்னும் திருந்தவே இல்லை... நாங்கள் எல்லாம் பார்ட்டி முடிந்த பின் தான் போகும் வழியில் கிப்ட் கார்டு வாங்கிகிட்டு அதுக்கு அப்புறம் அவர்கள் வீட்டிற்கு சென்று பரிசை தருவோம். மாறுங்கப்பு மாறுங்க... ( நான் எந்த விருந்துக்கு போனாலும் முடிந்த வரையில் சீக்கிரம் சென்று கடைசியாகதான் கிளம்புவேன் காரணம் அவர்களுக்கு உதவுவதற்காகதான் ஆனால் எங்க வீட்டு அம்மா அதற்கு நேர்மாறு )

  ReplyDelete
  Replies
  1. தமிழா ! போகும் வழியில் தான் பரிசு வாங்குவேன் என்று சொன்னதுமறுக்க முடியாத உண்மை. ஆனால் அதற்காக மிகவும் சீக்கிரமே கிளம்பிவிடுவோம் . எந்த விழாவிற்கு என் குடும்பம் சென்றாலும் அங்கே நிறைய உதவி செய்தது என் மனைவியாக தான் இருக்கும் என்பதை நான் நான் இங்கே பெருமையாக சொல்லி கொள்கிறேன்வருகைக்கு நன்றி ஐய்யா !

   Delete
 2. நகைச்சுவையாக நீங்கள் சொல்லி சென்ற விதம் அருமையாக இருக்கிறது. பாராட்டுக்கள்

  ReplyDelete
  Replies
  1. தமிழா, என் எழுத்தையெல்லாம் தவறாமல் படித்து தம் கருத்தோடு என்னை பாராட்டியும் செல்கின்றாயே .. உன் வழி.. தனி வழி !

   Delete
 3. அடடா...! வெவரமான பிள்ளையிடம் இன்னும் கொஞ்சம் விவரம் சேகரித்து இருக்கலாம்...!

  ReplyDelete
 4. சொன்னது சரியே..
  why blood..same blood... :)

  ReplyDelete
 5. வணக்கம்
  சொல்லிச் சென்ற விதம் சிறப்பாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி த.ம3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. Replies
  1. கஜா அவர்களே,
   தங்களை முதல் முறையாக இங்கே காண்கிறேன். வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி . தொடர்ந்து வரவும் .

   Delete
 7. ஹப்பா! நண்பரே! தாங்கலைப்பா சிரிச்சு சிரிச்சு.....முடிலைப்பா....ஹஹ்ஹ்ஹஹருமை அருமை! சரி..கடைசில பிள்ளை வந்தாரா இல்லை..

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...