திங்கள், 6 அக்டோபர், 2014

கடலோர கவிதையில் "ரஜினி காந்தா"?



விசு, பாரதிராஜா மீண்டும் கடலுக்கு போறார்.

என்ன சொல்ல வர கோபால்.



இல்ல விசு, கைதியின் டைரியில் பட்டணம் போனாரு, அதுக்கு அப்புறம் முதல் மரியாதையில் கிராமத்திற்கு திரும்பினார். இப்ப அலைகள் ஓய்வதில்லை பாணியில் இன்னொன்னு பண்ண கடல் பக்கம் மீண்டும் பயணம்.

சூப்பர் அப்பு, கடல், பாரதி ராஜா, இளைய ராஜா... சூப்பர் காம்பினசன். எப்ப ரிலீஸ்...?

ஷூட்டிங் எல்லாம் ஆரம்பித்து விட்டது. இன்னும் ரெண்டு மாதத்தில் ரீலிஸ் ஆகிவிடும்.

அது சரி, யாரு கதாநாயகி, மீண்டும் அறிமுகம்  தானா?

அம்மா விசு. ரெட்டை நாயகிகளாம். ஒன்னு லோக்கல் இன்னொன்னு சிங்கப்பூரில் இருந்து இறக்குமதி. என்ன விசு, எப்போதும் கதாநாயகன் தான் யாருன்னு கேட்போம், நீ என்னடானா கதாநாயகி யாருன்னு கேக்குற?

பாரதிராஜா அறிமுக படுத்தின கதாநாயர்கள் எல்லாம் சொதப்பல் தானே. கதாநாயகிகள் ஒரு வலம் வருவாங்க...அது தான்.

சரி, இசை எப்ப ரிலிஸ் ஆகுதாம்? நினைத்தாலே இனிக்குது கோபால், சூப்பெரா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.சரி, போனா போதுன்னு கேக்குறேன், யாரு கதாநாயகன்?

சத்தியராஜ்! விசு,

டேய் அவர் பயங்கர லொள்ளு பார்ட்டி ஆச்சே? அதுவும் இல்லாம இந்த காலத்து நம்பியார் போல வில்லன் தானே, இது என்ன கொஞ்சம் நெகடிவ் ஹீரோ மாதிரி, சிகப்பு ரோஜாக்கள் மாதிரி இருக்குமோ?

கதை என்னான்னு தெரியல, ஆனால் மனதில் ஒரு பீலிங், இது நல்லா வரும்னு.

கண்டிப்பா கோபால். "பாரதி ராஜா - இளையராஜா-கடல்", சூப்பர். அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகம் போல இருக்கு. ஆனால் சத்தியராஜ் நாயகன் என்பது தான் கொஞ்சம் இடிக்குது.

முதலில் ரஜினிகாந்தை தான் கேட்டார்கள் விசு. அங்கே கால் சீட்டில் எதோ பிரச்சனை.

ஏன் கோபால்? பரட்டை என்ற ஒரு பாத்திரத்த உருவாக்கி ரஜினியை புகழின் உச்ச்சகட்டதிர்க்கே ஏற்றி விட்டாரே பாரதி ராஜா, அவருக்கே கால் சீட் இல்லையா? என்னய்யா உலகம் இது.

2 மாதங்கள் கழித்து ஜூலை 5, 1986 அன்று..

கோபால், டிக்கெட் வாங்கிட்டியா?

அதை மறப்பனா விசு.? முதல் நாள் முதல் காட்சி.

படம் ஆரம்பித்தது.

காட்சிக்கு காட்சி ரசித்தோம்.

"ஒருகாலை தூக்கி தவசம் செய்யும் தாசா" என்று இளையராஜா பாட ஆரம்பித்ததும்... அந்த இசையில் மயங்கினோம். அதை தவிர மற்றும் சில அருமையான பாடல்கள்.

அடி ராசாத்தி...
கொடியிலே மல்லிய பூ
போகுதே...

கோபால்.. இந்த படத்த பார்த்தால், சத்தியராஜ் ஒரு ரவுண்டு வருவார் போல இருக்கே.?

ஆமா விசு, எனக்கு என்னமோ, இந்த பாத்திரத்திக்கு ரஜினியோட, சத்தியராஜ் நல்ல பொருத்தம்ன்னு தோன்னுது.

அதுதான் கோபால் அந்த டைரக்டருக்கு வெற்றி. ஒரு கதாநாயகுனுகேற்ற திரை கதையை அமைப்பது. நல்ல படம் கோபால். ரொம்ப  ரசித்தேன்.

அடுத்த நாள் மியூசிக் கடையில்:

கடலோர கவிதைகள் ஆடியோ இருக்கா?

இதோ..

எங்கே சார், "ஒரு காலை தூக்கி தவம் செய்யும் தாசா" பாட்டு இதில் இல்லை.

அந்த படத்தில் அந்த மாதிரி பாட்டு இல்லையே...

சார், நான் நேத்து தான் அந்த படம் பார்த்தேன், அதில் வந்ததே, நீங்க படம் பார்த்தீர்களா?

நான் பார்க்கவில்லை,

நான் பார்த்தேன், கண்டிப்பாக அந்த பாட்டு படத்தில் வந்தது.

தெரியில சார்,

சரி கொடுங்க ஒரு கேசட்.

அன்று மாலை:

கோபால், இரண்டாவது ஆட்டம் கடலோர கவிதைகள் போறேன், வரியா?

நேத்து தானே பார்த்தே விசு. இவ்வளவு சீக்கிரமா?

ஆமா கோபால், அந்த "ஒரு காலை தூக்கி" பாட்டை இன்னொரு முறை கேட்க வேண்டும்.

நானும் வரேன் விசு.

தியேட்டரில்:

என்ன விசு.. தியேட்டரில் டேப் ரெகார்டர் எடுத்து கொண்டு,..

இல்லை கோபால், அந்த பாட்டு எதோ ஒரு காரணத்தினால் கேசட்டில் இல்லை. அதுதான், இங்கேயே ரெகார்ட் செய்யலாம்ன்னு ..

விசு.. .உன் ரேஞ்சே வேற..

www.visuawesome.com


1 கருத்து:

  1. கடலோரக் கவிதைகள் ரஜினி நடிக்க வேண்டிய படமா, அறியாத தகவல், படமும் நல்ல படம் தான், பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...