வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

விசு ...எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"


விசு ...எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"

"இ ற ழ வ ள ல"

இரவல் இல்ல விசு....  " ய ர ல வ ழ ள"

"ற ழ ல இ    ள  வ "

"இலவு"  இல்ல விசு "ய ர ல வ ழ ள"...

"வ ற ல ர வ ல"

இரா வறுவல் இல்ல விசு.. படிக்கும் பொது, கொஞ்சம் சாப்பாட்ட மற.
அப்பத்தான் படிப்பு வரும்.

சறி ஐயா .

எங்க சொல்லு " ய ர ல வ ழ ள"

"ர ய ழ  ல வ ர ள"

ரயில் வந்தா ஏன்னா வராட்டி ஏன்னா? நீ நாக்கை கொஞ்சம் அழகா மடிச்சு சொல்லு " ய ர ல வ ழ ள"

"ப ழ ர வ ள ல ய "

முதலில் வார்த்தை ஒழுங்கா வரட்டும் அப்புறம் பழம் வரும்.. எங்க சொல்லு '

"வாழை பழம் கொழ கொழன்னு இருக்கு"

வேநா.. ஐயா, பிறச்சினை   ஆயிடும்.

பரவாயில்லை, சொல்லு.

"வாய பயம் கொய கொயன்னு கீது"
.
அட பாவி, நல்ல பழத்தை அசிங்கம் பண்ணிட்டியே..

மண்ணிக்கணும் ஐயா..

சரி, கொஞ்சம் சுலபமா கேட்க்கிறேன். முயற்சி பண்ணு.. "இது யார் தைச்ச சட்டை, எங்க தாத்தா தைச்ச சட்டை"

"தாத்த செத்த எங்க சட்டை? இது யார் சட்டை..."

அட பாவி, நல்லா இருந்த தாத்தாவ கொன்னுட்டியே?சரி கடைசியா ஒரு முறை... " கட்டு குச்சியில் ரெண்டு குச்சி கோனை குச்சி"

"ரெண்டு கட்டு பீடி கட்டு குடிச்சி"

வேணாம் விசு, நீ போய் உட்கார்...

"னன்ரி ஐயா"

சரி விசு, தமிழில் இப்படி தடுமாறியே .... எதிர் காலத்தில் என்ன பண்ணுறதா உத்தேசம்?

தமிழ் எல்லுத்தாளர் தாண்.. வேர என்ன?

இதை கேட்டவுடன் எங்கள் தமிழ் ஐய்யா மயங்கி விழுந்து, மயக்கம் தெளிந்தவுடன் கேட்ட முதல் கேள்வி... கேள்வி...
"மெஹ்  கஹா ஹு...?

பின் குறிப்பு :  சக இடுகையோரே . மேலே சொன்னது கற்பனை போல் இருந்தாலும், ஏறக்குறைய, கிட்ட தட்ட நடந்தது தான். அது மட்டும் இல்லாமால், தமிழ்நாட்டை விட்டு வெளியேறி பல வருடங்கள் ஆகி விட்டதால், நிலைமை இன்னும் மோசம். என் எழுத்தில் பிழை இருந்தால்
(கண்டிப்பாக இருக்கும்), தயவு பண்ணி மன்னிக்கவும்.

http://www.visuawesome.com/

7 கருத்துகள்:

  1. வணக்கம்
    தாய் நாட்டை விட்டு கடந்தாலும் தங்களிடம் உள்ள தமிழ்ப்பற்றை நினைத்து மகிழ்கிறேன்....த.ம 1வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. தமிழில் இப்படி தடுமாறியே....
    எதிர் காலத்தில்
    தமிழ் எல்லுத்தாளர் தாண்..
    ?????

    படியுங்கள் இணையுங்கள்
    தீபாவளி (2014) நாளில் மாபெரும் கவிதைப் போர்!
    http://eluththugal.blogspot.com/2014/08/2014.html

    பதிலளிநீக்கு
  3. ரசிக்க வைத்தது பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  4. முக்கியமான ஒண்ண விட்டுட்டீங்க சார். "ஏழைக்கும் பாழைக்கும் வாழைக்கும் கோழைக்கும் எவ்வேளைக்கும் கிடைப்பது வாழைப்பழமே". உங்க வாத்தியார் ஐயா இதையும் சொல்ல சொல்லி இருப்பாங்களே....?

    பதிலளிநீக்கு
  5. ஒரு காலத்தில அப்படி இருந்தாலும் இன்னமும் ஆசைய தமிழை நேசிக்கறீங்களே வாழ்த்துக்கள் விசு..

    பதிலளிநீக்கு
  6. நானும் ஒரு தவறு செய்திட்டேன் .... "ஆசையா"

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...