திங்கள், 8 டிசம்பர், 2014

அவசர வழியும் .. .வழி மேல் விழியும்

அருமை அண்ணன் அல்பி   ( பரதேசி என்னும் பெயரில் எழுதும் பதிவாளர் )  அவர்கள் அழைப்பை ஏற்று சென்ற சனிக்கிழமை நியூயார்க் நகரம் செல்ல புறப்பட்டேன்.

மனதில் ஒரு சிறிய கேள்வி. இந்த பட்டிமன்றத்தில் பேச போவது 8 நிமிடம். இந்த எட்டு நிமிட பேச்சுக்காக 12 மணி நேர விமான (போக வர இரண்டையும் சேர்த்து தான்) எடுக்க வேண்டுமா? இருந்தாலும் அண்ணன் நடுவராக உள்ள பட்டிமன்றதில் பேச வந்த வாய்ப்பு என்றால் மங்கல்யானில் ஏறி செவ்வாய்க்கு கூட போகலாம் என்று நினைத்தேன்.



விமான நிலையத்தை அடைந்து வண்டியை "நெடு நேர பார்க்கிங்கில் விட்டு விட்டு ( 24 மணி நேரத்தில் வந்து விடுவேன் அல்லவா), விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.

என்னுடைய இருக்கை அவசர வழி இருக்கையில் இருந்து ஒரு வரிக்கும் பின்.அடியேன் 6 அடி ஒரு அங்குலமாயிற்றே. ஐயகோ, எனக்கு கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டே பொறாமையோடு  என் இருக்கையில் அமர்ந்தேன்.

இந்த அவசர வழியில் உள்ள இருக்கைகள் மற்ற இருக்கைகளோடு சிறிது அதிக வசதி கொண்டவை. மற்ற இருக்கைகளில் காலை மடக்கி வைத்து கொண்டு தான் அமர இயலும், ஆனால் இந்த இருக்கைகளில் காலை நன்றாக நீட்டி கொண்டு அமரலாம். அதனால் இந்த இருக்கைகளுக்கு பலரும் அடித்து பிடித்து கொள்வார்கள்.

காலை நீட்டி கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும் 

விமானம் மேலே போக தயாராகும் முன்பே, விமான பணி பெண் ஒருவர் இவர்களின் அருகில் வந்து..

"இந்த அவசர வழியில் அருகே அமர்ந்துள்ள நீங்கள்  ஆறு பேரும், இந்த விமானம் ஏதாவது நெருக்கடியை சந்தித்தால், இந்த கதவை உடனடியாக திறந்து மற்றவர்கள் எல்லாரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுகின்றீர்களா"

என்று  கேட்டார். அங்கே இருந்த அனைவரும் சரி என்று தலையாட்டினர்.

விமானம் புறப்பட்டது. என் நினைவுகளும் புறப்பட்டது..

6 அல்லது 7 வயது இருக்கும், தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த நாட்கள்.

"டேய் எல்லாரும் வகுப்பை விட்டு உடனே வெளியே வாங்க"
 என்று தலைமை ஆசிரியர் சத்தம் போட

என்ன .. என்ன ஆச்சி.. ?
என்று வெளிய ஓடி வந்தேன்.

ஊரில் இருந்த பாதி பேர்  வெளியே வந்து வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர்.

புகையினால் ஒரு வெள்ளை கோடு தன்னை தொடர ஒரு விமானம் சூரிய வெளிச்சத்தை தன் உடல் முழுவதும் பிரதிபலித்து கொண்டு மேகங்களை கிழித்து கொண்டு பறந்து கொண்டு இருந்தது.

மனிதனுக்கு தான் என்ன ஒரு அறிவு. ஒரு சிறு கல்லை தூக்கி எறிந்தாலே  புவி ஈர்ப்பினால் மீண்டும் கீழே வந்து விடுகின்றதே, இந்த விமானம் எப்படி பறக்கின்றது என்று வியந்து கொண்டே என்னையும் அறியாமல்.. " பறவையை கண்டான் விமானம் படைத்தான்" என்று பாட அருகில் இருந்த அறிவியல் வாத்தி..

நீ இந்த  மாதிரி சினிமா பாட்டை பாடி கொண்டு இருந்தால் வாழ்நாள் முழுவதும், இங்கேயே நின்று தான் விமானாத்தை பார்க்கவேண்டும். அதில்  ஏறி மேலே போய் கீழே பார்க்கவேண்டும் என்றால், ஒழுங்கா போய் படி என்று சொல்ல..

வாத்தி, ஒரு நாள் நான் கண்டிப்பாக இதில் ஏறுவேன் என்று மனதில் சொன்னேன்.

விமானம் உயர உயர பறந்தது.. என்னையும் அறியாமல் மலரும் நினைவு ஒன்று மனதில் வர சிரித்தேன்.

அடேங்கப்பா... இம்புட்டு பெரிய விமானத்துக்கு எப்படி பெயிண்ட் அடிப்பாங்க..?

அதுவா, ரொம்ப சுலபம்.. அது மேலே போனவுடன் சின்னாதாகி விடும் தானே, அப்ப அடிப்பாங்க..

சிறு வயதில் கேட்ட நகைச்சுவை நினைவுக்கு வந்தது.. அருமையான அந்த நினைவுகளில் இருக்கும் போது, எனக்கும் முன்னால் இருந்த இருக்கையில் இருந்து குறட்டை சத்தம் வந்தது.

என்னடா இது.. விமானம் ஆரம்பித்து இன்னும் 20 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் குறட்டையா என்று அந்த இருக்கையில் அமர்ந்து  இருந்தவர்களை பார்த்த நான் பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்)  ஆனேன்.

அப்படி அங்கே யார் அமர்ந்து இருந்தார்கள்..நாளை தொடரலாமே..

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் !
அவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 1)

www.visuawesome.com

15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. துளசி அவர்களே..

      அதேதான்.. உங்களுக்கு நடந்த அதே....

      ஆச்சரியமும் ... கேள்விக்குறியும் தான் .. எனக்கும்...

      நீக்கு
  2. யாரது...?

    பேய் அறிந்த கதை என்று தான் வரும்....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திண்டுகல் ஐயா.. தாம் அறியாதது இல்லை. அந்த பேய் அறைந்த கதை கண்டிப்பாக ஒரு நாள் வெளி வரும்.

      நீக்கு
  3. தமிழுக்காக இவ்வளவு சிரமம் எடுக்கும் உங்களுக்கும், அல்பி அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே. சிரமம் எடுத்தது எல்லாம் நண்பர் அல்பி தான். நான் ஒன்றும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.

      நீக்கு
  4. நாளை வந்து கருத்து சொல்லுறேன்

    பதிலளிநீக்கு
  5. மன்னிக்கவும்..என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை..
    உங்களுக்கு விமானத்தில் 12 மணி நேரம்.. எனக்கு காரில்12 மணி நேரம் என்று இருந்தது.. சில முக்கிய weekend வேலை காரணமாகவும் வர முடியவில்லை.. நிகழ்ச்சி களை கட்டி இருக்கும் என்று தெரியும்..
    விரைவில் அதை குறித்து பதிவுகள் (photos/videos) உடன் அனைவரும் எதிர் பார்க்கிறோம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரிகின்றது நண்பரே. நிகழ்ச்சி நன்றாக போனது. நடுவர் அல்பி அருமையாக நடத்தி சென்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். நான் என்னால் முடிந்தவற்றை " ஏழைக்கேற்ற எள்ளுருண்டை " போல் திடித்து வைத்தேன். காணொளி கிடைத்ததும் தங்களுக்கு தொடர்பினை தருகின்றேன்.

      நீக்கு
  6. மலரும் நினைவுகளுடன்
    மலர்ந்த விமானப்பயணம் அருமை.

    பதிலளிநீக்கு
  7. பறந்து பறந்து தூள் கிளப்பிருக்கீங்க போல!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...