திங்கள், 16 நவம்பர், 2015

"இதுவும் கடந்து போகும்"

என்ன பாணி.. ரொம்ப பீலிங்கா  இருக்கே!

ஒன்னும் இல்ல வாத்தியாரே..

சரி சொல்ல விருப்பம் இல்லாட்டி பரவாயில்லை. வாட்டெவர் இட் மே  பி, டோன்ட் வொர்ரி அபௌட் இட் பாணி .. "இதுவும் கடந்து போகும்".

 வெந்த புண்ணில் வேலை பாச்சாத வாத்தியார்..

டேய் .. யு வான்ட் டு டாக், ஐ அம் ஆல் ஈயர்ஸ் .. மீண்டும் சொல்றேன்..அதிகமா கவலை படாதே .. "இதுவும் கடந்து போகும்".

சும்மா இரு வாத்தியாரே.. "இதுவும் கடந்து போகும்".. "இதுவும் கடந்து போகும்"னு ஒரு வாரத்துக்கு மேலே அதையே சொல்லிட்டு இருக்காங்க,. இது கடந்து போறமாதிரி தெரியில..


என்று தண்டபாணி சொல்லும் போது..அவன் அருமை மனைவி சுந்தரி குறுக்கிட்டு வந்தார்கள்.எவ்வளவோ சொன்னேன் அண்ணா.. இவர் கொஞ்சம்  கூட கேக்கலை..

எவ்வளவு சொன்னேன்னு என்பது முக்கியம் இல்ல சுந்தரி.. என்ன சொன்ன? அதை சொல்லு.

அண்ணே.. இவர் கிட்ட தட்ட 20 வருஷமா இங்கே தான் இருக்காரு.

சரி அதுக்கு என்ன இப்ப?

பிள்ளைகள் ரெண்டும் இன்னும் நாலு வருஷத்தில கல்லூரின்னு வீட்டை விட்டு கிளம்பிடுவாங்க..

நல்ல விஷயம் தானே..

நல்ல விஷயம் தான். பிள்ளைகள் ரெண்டுமே.. நாங்க இந்தியா வரமாட்டோம் .. இங்க தான் செட்டில் ஆகப்போரோம்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க..

இங்கே பிறந்து  வளர்ந்த பிள்ளைகள், மற்றும் இந்தியாவிற்கு விடுமுறைக்கு போகும் போது சில கஷ்டப்பட்டு இருப்பாங்க.. அதுக்கா தண்டபாணி .. இவ்வளவு பீலிங்கா இருக்கார்.

பொறுமையா கேளுங்க அண்ணா..

சொல்லு.

ஆண்டவன் புண்ணியத்தில் இங்கே எங்களுக்கு குடியிருக்க ஒரு நல்ல வீடு அப்புறம் இவர் ராசி, ஊரில் எங்க அப்பா ரெண்டு வீடு வைச்சி இருக்கார்.

அதுக்கு என்ன இப்ப?

போன வருஷம் யாரோ சொன்னாங்கன்னு மதராசில் ஒரு வீடு வாங்கனும்ன்னு சொன்னாரு...

ஒ .. கதை இப்படி போதா?

நான் தேவையே இல்லன்னு எவ்வளவோ சொன்னேன்.

சரி விடு சுந்தரி.. அது ஒரு முதலீடு தானே..

நல்லா சொன்னீங்க .. முதலீடுனு.. அது முதலுக்கே வேட்டு வச்சிடிச்சு.

புரியல.

அவரையே கேளுங்க,



வாத்தியாரே.. போன வருஷம் ஒரு பெரியவர் இங்கே திருமணம் ஆனவங்களுக்கு எல்லாம் அறிவுரை தரேன்னு வந்துட்டு போனாரே நினைவு  இருக்கா ?

மறக்க முடியுமா தண்டம், அந்த ஆளு வந்து போனவுடன் தான் இங்கே நமக்கு யாருக்குமே ரெண்டு வாரத்துக்கு சோறு கிடைக்கலையே..அதை வச்சி ரெண்டு பதிவே போட்டனே..

(அதை படிக்க இங்கே சொடுக்கவும் 

(மனைவியிடமே.... " I Love you" வா? பிச்சி புடுவேன் பிச்சி..)







அவர் ஊருக்கு திரும்பி போனவுடன் அவர் அலுவலகத்தில் இருந்து ஒரு போன் வந்துச்சி.

எனக்கும் தான் வந்துச்சி..ஏதோ மெட்ராசுக்கு அருகில் நல்ல வீட்டு மனைகள் விலைக்கு வந்திருக்கு, வாங்கி போடுங்க.. ரெண்டே வருஷத்தில்  விலை கூரைய பிச்சிக்கின்னு போகும்ன்னு சொன்னாங்க..

நீயும் வாங்கினியா வாத்தியாரே?

நா...டேய்.. அட பாவி.. நீ வாங்கினியா?

அந்த அநியாயத்த எப்படி சொல்றது ..

சொல்லவே இல்லையே பாணி..

இல்ல வாத்தியாரே.. அந்த நேரத்தில் கையில் கொஞ்சம் பணம் இருந்தது..

நமக்கு தவணை எல்லாம் ஒத்துவராதுன்னு சொல்லி முழுசா கொடுத்து ரெண்டு மனை வாங்கி அதில் வீடு கட்ட ஏற்பாடு பண்ணேன்..

 ஆமா பாணி, என்னிடம் கூட அது என்னமோ மெட்ராஸ்சில் வேறு எங்கேயுமே இல்லாதமாதிரி 24 மணி நேரம் தண்ணீர் வசதி.. மற்றும் .. "லேக் வீயு " அப்படி நிறைய "பில்டப்" கொடுத்தாங்க. நான் நம்ம தான் வாழ்கையில் இங்கேயே குப்பை கொட்ட போறோம்மே...இது நமக்கு எதுக்குன்னு வேணான்னு சொல்லிட்டேன்..

ஏன் வாத்தியாரே.. இதை ஒரு முதலீடா நினைக்க கூடாதா?

பாணி.. இது தலைவலி தான்.. நான் இருக்க போறது இங்கே. பிள்ளைகளும் இங்கே தான் இருப்பேன்னு சொல்லிடாங்க, இப்ப அங்கே போய் வாங்கி போட்டா. பிரச்சனை தான் பாணி. முதலில் அத பார்த்துக்க ஆளு வேணும்.
அப்புறம் வாடகைக்கு விட்டா .. அது வேற பிரச்சனை.. இது " ஏறி மேலே போற ஆத்தா என் மேலே ஏறு ஆத்தா" ன்ற மாதிரி கதை. அதுதான். சரி விஷயத்த சொல்லு ..

"ஏறி மேலே போற ஆத்தா"ன்னு நீ தமாசா சொல்ற.. இவங்க இந்த மனைய
 ஏறி மேலேதான் போட்டு கொடுத்து இருக்காங்க. ரெண்டு வாரமா மழையில் வீடெல்லாம் தண்ணி..வீடை சுத்தி தண்ணி..

ஒ.. அந்த 24 மணி நேரம் நீர் வசதி மற்றும் .. "லேக் வீயு " ?

வாத்தியாரே .. இந்த நேரத்தில் நக்கல் தேவையா?

இல்ல தான்.. இருந்தாலும் உன் பேராசையை என்ன சொல்றது..?

எல்லாம் போச்சு வாத்தியாரே.. மொத்த பணமும் போச்சு.

ஒன்னும் போக கிடையாது.. அருமையா நீ சம்பாரித்த வீடு .. இங்கே. சுந்தரி வீட்டுக்கு ஒரே பொண்ணு.. அவங்கப்பா சேத்து  வைச்ச எல்லாம் உனக்கு தான்..

இந்த சின்ன நஷ்டத்தை இதுவும் கடந்து போகும்ன்னு மறந்துடு..

கடந்து போக மாட்டுதே,வாத்தியரே.. தேங்கி இல்ல நிக்கிது.

பாணி.. இனிமேல் மெட்ராஸ் நிலைமை இப்படி தான். வருஷத்தில் முக்காவாசி தாங்க  முடியாத வெயில் .. அப்புறம் ரெண்டுவாரத்துக்கு கனமழை.

அதுசரி வாத்தியாரே.. காஞ்சி போன நிலம் தானே.. அப்புறம் தண்ணி ஏன் தேங்கி நிக்குது.


பாணி.. ஆத்தையும் ஏரியையும் கூறு போட்டு வித்துடாங்க.. மழை தண்ணி எங்கே போகும்..?

கடலுக்கு போக வேண்டியது தானே..

டேய்.. அந்த  வழியெல்லாம் தான் பிளாஸ்டிக் பை போட்டு அடைச்சிட்டோமே ..

இப்ப இதுக்கு என்ன தான் வழி?

இந்த தண்ணீர் இப்பத்திக்கு வத்தாது..

 அப்ப இந்த ரெண்டு வீட்டையும் என்ன பண்ண சொல்ற?

கவலையே படாதே, உன்னை மாதிரி இன்னொருத்தன் மாட்டாமலா போவான்.. "பை ஒன் கெட் ஒன் ப்ரீ"ன்னு சொல்லு.. விலை என்னனு கூட கேக்க மாட்டான். வாங்கிக்குவான்.

சரி.. அடுத்த வாரம் மெட்ராசுக்கே போய் என்னதான் நடக்குதுன்னு பார்த்துட்டு வரேன்..

அட பாவி தண்டம்.. நீ உண்மையாவே புரிஞ்சிதான் பேசுறியா?

என்ன சொல்ற?

மழை பெஞ்சா மதராசில் என்ன ஆகும்?

தேங்கி நிக்கும்.

தேங்கி நின்னா ?

கொசு வரும்.

கொசு வந்தா?

மலேரியா .. காய்ச்சல் .. டெங்கு.. சிக்குநியா?

இது உனக்கு தேவையா?

அப்ப அங்கே எப்படி தான் சமாளிக்கிறாங்க, வாத்தியாரே..

பாணி.. அங்கே அவங்க தேர்ந்து எடுக்குற தலைகள் அப்படி.. தலைவிதின்னு அவங்க அவங்க வேலைய பார்ப்பாங்க.

அப்ப இந்த வீட்டை பறி கொடுத்தவங்களுக்கு ..?

அவங்களுக்கு  தான் அரசாங்கம் 500 கோடி ஒதுக்கி இருக்கே..

500 கோடி எப்ப ஒதுக்கினாங்க..?

இப்ப தான் , மழை வந்த பின்..

அதை முந்தியே ஒதுக்கி.. இந்த தூர்வாருறது.. மணல் கொள்ளைய தடுக்கிறது..மழை தண்ணீர் சேமிக்க தொட்டி .. மற்றும் விழிப்புணர்வு..ஏதாவது.

டேய்.. நீ அங்கே ஒட்டு போட்டியா?

இல்ல..

அப்ப உனக்கு எதுக்கு இவ்வளவு அக்கறை...?ஒட்டு போட்டவங்களே .. "இதுவும் கடந்து போகும்"ன்னு இருக்காங்க...

இந்த "இதுவும் கடந்து போகும்" ன்னு சொல்றத நிறுத்து, ரொம்ப பீலிங்கா இருக்கு.

சரி.. "இது கடந்து போகாது"..

இதுக்கு விடிவே இல்லையா?

பாணி.. "சீரானா - அழகனா - சுத்தமான வாழும் சூழ்நிலை" என்பது ஒரு உணர்ச்சி பாணி. அது அரசாங்கத்திடம் கெஞ்சி கேட்டு வாங்க பிச்சை இல்லை. உரிமையா அதட்டி வாங்கணும். நம்ம மக்களிடம் இந்த உணர்ச்சி இல்ல.. இந்த உணர்ச்சி தானா வரணும் ...

அது வரவரைக்கும்..?

"நமக்கு நாமே"ன்னு நாமம் போட்டுக்குனு "இதுவும் கடந்து போகும்" ன்னு இருக்கனும்!



பின்குறிப்பு:
இந்தியாவில் வசிக்கும் என் சகோக்கள்.. தயவு செய்து தண்ணீரை சுட வைத்து குடியுங்கள். இவ்வளவு நாட்களாக தண்ணீர் தேங்கி நிற்பது கூடிய சீக்கிரம் ஒரு "சுகாதார பிரச்சனை"யாக மாறும். கவனமாய் இருங்கள்.

14 கருத்துகள்:

  1. ///இந்தியாவில் வசிக்கும் என் சகோக்கள்.. தயவு செய்து தண்ணீரை சுட வைத்து குடியுங்கள்/

    அப்படி சுட வைக்க உங்களால் முடியாது என்றால் அட்லீஸ்ட் பீர்வது வாங்கி சாப்பிடுங்கள் பீர்ரால் உடனடியாக பாதிப்பு இருக்காது கலாரா போன்ற கொடிய நோய்கள் உங்களை தாக்காது

    பதிலளிநீக்கு
  2. ///அரசாங்கம் 500 கோடி ஒதுக்கி இருக்கே.//

    அரசாங்கம் ஒதுக்கிய பணம் வீடு பாதிப்பு அடைந்தவர்களுக்காக அல்ல.....அந்த பணம் அம்மா அமைச்சர்கள் எம்.எல்.ஏக்ககள்,மேயர், மற்றும் கவுன்சிலருக்கு லேட்டாக கொடுத்த தீபாவளி போனாஸுங்க.... தேர்தல் வருதுல அதனால்தான் இந்த 500 கோடி பட்டுவாடா

    பதிலளிநீக்கு
  3. super advice.

    அது இருக்கட்டும். இரண்டு விஷயம் சொல்லுங்க.

    ஒண்ணு . வந்த பெரியவரு யாரு ?

    எங்கன பிளாட் வாங்கினீக ?

    நான் அது மாதிரி தான் நாகை க்கு கிழக்கே நாலு கி.மி. தூரத்திலே ஒரு பிளாட் வாங்கி இருந்தேன். ஒரு பத்து வருஷம் கழிச்சு, ரிடையர் ஆனப்பறம் வீடு காட்டுவோம் அப்படின்னு முடிவு பண்ணி, , இப்ப எங்கே இருக்கு அப்படின்னு பார்க்கப்போன போது, சுனாமி லே எல்லாம் கடல் கொண்டு போச்சு சாமி அப்படிங்கராக.

    ஒங்க ஊர்லே ப்ளாட் எல்லாம் போடுராகளா ? ச.அடி. என்ன விலை?
    எம்.எம்.டி.எ. அப்ப்ரூவல் இருக்கா? பக்கத்துலே ஆஸ்பத்திரி, மால் இருக்குதா?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  4. பாணி.. "சீரானா - அழகனா - சுத்தமான வாழும் சூழ்நிலை" என்பது ஒரு உணர்ச்சி பாணி. அது அரசாங்கத்திடம் கேட்டு வாங்க பிச்சை இல்லை. உரிமையா அதட்டி வாங்கணும். நம்ம மக்களிடம் இந்த உணர்ச்சி இல்ல.. இந்த உணர்ச்சி தானா வரணும் ...///

    ஆமா அது எப்போ வருமோ?
    காத்திருப்போடு...

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..! இன்றைய நடப்பை நகைச்சுவையோடு எழுதியிருப்பது அருமை. எப்போதும் எங்கள் மக்கள் ஓட்டுக்கு விலை போவதை அறிந்துதான். எம் முன்னோர்கள் இந்த மந்திரங்களை சொல்லிக் கொடுத்தார்கள். 'இதுவும் கடந்து போகும்', 'இந்த நிலையும் மாறும்' இந்த மந்திரங்கள்தான் எங்களை அடுத்த தேர்தல் வரை கடந்துபோக வைக்கிறது. நல்ல பதிவை தந்ததற்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. அருமை விசு சார்...ஒரே கல்லில் எத்தனை மாங்காய்கள்...தெறிக்கிறது...அருமை

    பதிலளிநீக்கு
  7. விசு சென்னை மட்டுமா? தமிழகமே ரெண்டு தண்ணியிலயும் தத்தளிக்குது.

    பதிவைப் படித்து சிரித்து ரசித்தாலும் இடையே மனம் வேதனையுற்றதைத் தவிர்க்க முடியவில்லை...
    முன்னேற்பாடுகள் இல்லாததால்....எல்லாமே ஊழல்தான். இதுவும் கடந்து போகும் என்பது நமது பெர்சனல் பிரச்சனைகளுக்கு மட்டுமே.. அதையும் நாம் பொதுப்பிரச்சனைகளுக்கு மக்கள் எடுத்துக் கொண்டுவிட்டார்களோ அதனால் தான் நம் மக்கள் அமைதி காப்பதால் அரசும் வேடிக்கை பார்க்கின்றது. ஒரு பதிவு ரெடியாகி வருவதால் இங்கு அதிகம் பேசவில்லை.

    பதிலளிநீக்கு
  8. சரியாச் சொன்னீங்க விசு, இதுவும் கடந்து போகும் என்று நினைத்துத்தான் அரசும் மக்களும் :-(
    சுகாதார பிரச்சினை வரும், பயமாகத்தான் இருக்கிறது ..

    பதிலளிநீக்கு
  9. சரியா சொன்னீங்க அங்கிள்...ரொம்பவும் பயந்துட்டோம்..இனி இந்தத் தேங்கிய நீர் என்ன செய்யப் போகுதோ? என் பதிவைப் பாருங்க .நாங்கள் பட்ட அவஸ்தையைச் சொல்லிருக்கேன்...
    ஆனா அங்கிள் இதுவும் கடந்து போகாது என்பது தான் உண்மைனு தோணுது..

    பதிலளிநீக்கு
  10. இன்றைய தமிழகத்திற்கு தேவையான பதிவு! எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது! என்று அழகாக உணர்த்திவிட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  11. எதுவும் கடந்து போகவேணாம்
    இப்போதைக்கு இந்தத் தண்ணி மட்டும் கடந்து போனா
    போதும் என்கிற நிலையில பாவம் சென்னை மக்கள்

    ஒண்ணு இது வந்து கெடுக்குது
    இல்லாட்டி வராது கெடுக்குது
    என்னத்த சொல்ல ?

    சுகமான இடத்தில் இருந்தாலும்
    கஷ்டப்படும் எங்களை நினைத்து இருக்கிற
    விசுவுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...