ஞாயிறு, 1 நவம்பர், 2015

ஆறு மனமே ஆறு.. அந்த ஆறுதல் பரிசு வரும் ஆறு...


பதிவுலகில் எழுத ஆரம்பித்து எவ்வளவோ எழுதியாகிவிட்டது. அதில் ஒன்று தான் இந்த படைப்பு. இதை புதுகை போட்டிக்காக அனுப்பி இருந்தேன். கூடவே குறைகளுக்கான தொகையை கழித்து விட்டு மீதியை அனுப்புமாறு அன்போடு கேட்டுகொண்டேன்.. ஒரு ஆறுதல் பரிசுக்கு அலைந்து கொண்டு மீண்டும் தருகின்றேன்...


என் பதிவில் எனக்கு பிடித்தது ...





படம் உபயம் : தமிழ் 

விசுAwesomeமின் "புதுமை பெண்"

கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா, அயர்ந்தால் கள்ளி பால் ஊத்துவான் பாப்பா
துவக்கமே துயரமடி பாப்பா, நீ துவண்டு விடாதே என் செல்ல பாப்பா ..

ஆறு வயதினிலே பாப்பா .. மடை ஆறு போல் புரண்டோடு பாப்பா...
அடக்க நினைப்பான் பாப்பா..நீ ஆர்ப்பரித்து ஆட்டம் போடு பாப்பா

விவரம் தெரியா  வயதில்   பாப்பா, விவேகமற்ற விவாகம் என்பான் பாப்பா..
விதி என்று சதி செய்வான் பாப்பா, நீ மதியால் மிதித்து விடு பாப்பா...


கன்னி வயதினிலே பாப்பா ,கண்ணி வைக்கவும் தயங்க மாட்டான் பாப்பா .
கற்க கசடற பாப்பா. கற்றபின், நிலையாய் நிற்கவும் கற்று கொள் பாப்பா .

பள்ளி உனக்கேன் என்பான் பாப்பா, உதறி தள்ளி நீ படித்து விடு பாப்பா.
கொள்ளிவாய் பிசாசு என்பான் பாப்பா, சொல்லி அவனை அடித்து வை பாப்பா..

"தரித்திரம்" ஏசுவான் பாப்பா, பொய்யாக்க சரித்திரம் நீ படைத்து விடு   பாப்பா,
"தருதலை" தூற்றுவான் பாப்பா, தாரகத்தின் தலையாகி வென்று விடு  பாப்பா.

திருமணம் என்றுரைப்பான் பாப்பா,  விரும்பினால் ஏற்று கொள் பாப்பா..
தட்சணை சொல் கேட்டால் பாப்பா, செருப்பால் அர்ச்சனை செய்து விடு பாப்பா.

தொழில் கற்று நீ செய்தால் பாப்பா, மற்றவர் உயில் உனக்கெதற்கு பாப்பா.
வயல் ஒன்று வாங்கி போடு பாப்பா, அயல் நாடும் போய் அசத்தி வா பாப்பா..

பெற்றோரின் துதி நாடு பாப்பா, கற்றோரின் மதி நாடு பாப்பா..
ஆன்றோரின் அருள் நாடு பாப்பா, அருமை சான்றோரின் பொருள் நாடு பாப்பா.

கணவனுக்கு கண்ணாயிரு பாப்பா, கள்ளனுக்கு புண்ணாயிறு பாப்பா
கவிஞனுக்கும்  பொய் ஆகாதே பாப்பா, காலத்திற்கும் மெய்யாய் இரு பாப்பா..

ஆசைக்கு பெற்றெடு பாப்பா, அவளையே ஆஸ்திக்கும் ஆக்கிவிடு பாப்பா..
கண்ணாயிரம் போல் காத்து வா பாப்பா, நீ அயர்ந்தால் கள்ளி என்று கொஞ்சுவான் பாப்பா!

இந்த சக்கரம் சுற்றி கொண்டே இருக்கட்டும்..

பின் குறிப்பு : இதை படிக்கும் பதிவுலக சகோதரிகள், இந்த பதிவுலேயே தமக்கு பிடித்த வரி என்ன என்பதை பின்னோட்டத்தில் இடும்படி கேட்டு  கொள்கிறேன். அவர்களின் பதிலை வைத்து மேலும் சில பதிவுகள் எழுதும் நோக்கத்தோடு..


சக பதிவர்களே , இந்த பதிவை படித்த சுப்பு தாத்தா அவருக்கே உரிய பாணியில் ஒரு மெட்டை அமைத்து இதை பாடி இருக்கின்றார். அதை கேட்ட்க இங்கே சொடுக்கவும்.
நன்றி சுப்பு தாத்தா அவர்களே..

18 கருத்துகள்:

  1. //அடக்க நினைப்பான் பாப்பா...//
    // தட்சணை சொல் கேட்டால் பாப்பா..//
    என்று துவங்கும் இருவரிகளும் மிகப் பிடித்தது. அதிலும் இரண்டாவது, செருப்பால் அர்ச்சனை மிக மிகப் பிடித்தது

    பதிலளிநீக்கு
  2. ///இதை படிக்கும் பதிவுலக சகோதரிகள், இந்த பதிவுலேயே தமக்கு பிடித்த வரி என்ன என்பதை பின்னோட்டத்தில் இடும்படி கேட்டு கொள்கிறேன்....///

    எங்களிடம் கருத்துக்கள் கேட்காததால் எங்களது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம். மேலும் உங்களுக்கு ஆறுதல் பரிசும் கிடைக்க கூடாது அப்படியும் மீறி கொடுப்பவர்களுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தப்படும்

    பதிலளிநீக்கு
  3. ///இந்த படைப்பு. இதை புதுகை போட்டிக்காக அனுப்பி இருந்தேன். கூடவே குறைகளுக்கான தொகையை கழித்து விட்டு மீதியை அனுப்புமாறு அன்போடு கேட்டுகொண்டேன்//

    இதுதான் இந்த பதிவிலே எனக்கு பிடித்த வரிகள் இவைகள்தான் ஹீஹீ

    பதிலளிநீக்கு
  4. பெற்றோரின் துதி நாடு பாப்பா, கற்றோரின் மதி நாடு பாப்பா..
    ஆன்றோரின் அருள் நாடு பாப்பா, அருமை சான்றோரின் பொருள் நாடு பாப்பா

    பதிலளிநீக்கு
  5. எனக்கு எல்லா வரிகளும் பிடித்திருக்கிறது.
    இரண்டு வருடங்களாகத்தான் தமிழை எழுதுகிறேன் என்று தாங்கள் சொல்வதை நம்பமுடியாத அளவிற்கு தங்களின் தமிழ் விளையாடுகிறது.
    தொடருங்கள், தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  6. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் யதார்த்தத்தை அப்படியே படமாக வரையாமல், கவிதையாக எழுதியிருக்கிறீர்கள் .

    வாழ்த்துக்கள்.

    உங்கள் பாடலை நான் இப்போது பாடுகிறேன் கேளுங்கள். லிங்க் அனுப்புகிறேன் யூ ட்யூபில்.
    ஒரு வேளை உங்கள் அனுமதி இல்லை எனில் டெலிட் செய்து விடுகிறேன்.

    முதியவனான எனக்கு வலையில் காணும் கவிதைகளை பாரம்பரிய சங்கீத மெட்டு போட்டு பாடுவது ஹாபி . இதில் வணிக நோக்கு எதுவும் இல்லை. இதுவரை சுமார் 50 பதிவர்களின் 1500 பாடல்களைப் பாடி இருக்கிறேன். இருக்கிறேன்.

    தங்களின் தமிழ் பதிவு உலக ஈடுபாடு எனக்கு புதுகை பதிவர் உலக பதிவு மூலம் தெரிய வந்தது.

    இதற்கு முன்னம் உங்கள் வலைக்கு வந்திருக்கிறேனா என்ற நினைவு இல்லை.

    சுப்பு தாத்தா.
    meenasury@gmail.com
    www.subbuthatha72.blogspot.com
    www.subbuthatha.blogspot.com
    www.movieraghas.blogspot.com
    www.Sury-healthiswealth.blogspot.com
    www.vazhvuneri.blogspot.com
    www.subbuthathacomments.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. https://www.youtube.com/watch?v=1kzqSynrQ8g&feature=youtu.be

      நீக்கு
    2. ஐயா அவர்களுக்கு வணக்கம். தாம் என் பதிவை படித்து மட்டும் அல்லாமல் பாடியும் உள்ளீர்கள் என்பதை நினைக்கையில் மிக்க சந்தோசம். தங்கள் பாடலையும் கேட்டேன். அந்த பாடலுக்கான தொடர்பை இந்த பதிவுலேயே இணைத்து விடுகிறேன்.

      நன்றி சுப்பு தாத்தா அவர்களே..

      நீக்கு
  7. தொழில் கற்று நீ செய்தால் பாப்பா, மற்றவர் உயில் உனக்கெதற்கு பாப்பா.
    வயல் ஒன்று வாங்கி போடு பாப்பா, அயல் நாடும் போய் அசத்தி வா பாப்பா..#மொத்தத்தில் எடுத்த ஒரு முத்து....

    பதிலளிநீக்கு
  8. அனைத்து வரிகளுமே அட்டகாசம் ..யாரங்கே இக்கவிதைக்கு பரிசு கொடுக்காமல் விட்டது யார்...?பாரதியின் சாயல் தெரிகிறது...வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  9. அருமையான வரிகள்! அனைத்துமே சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. எங்களுக்கு வாய்ப்பில்லையா நண்பரே ரசித்ததைப் பகிர???!!!

    எளிமைத் தமிழ் மொழி எமது
    இனிமைத் தமிழ் மொழி எமது

    என இந்தப் பாடல் படித்ததும் சொல்லத் தோன்றியது.

    இது போன்ற பதிவுகளும் வரட்டும்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  11. திருமணம் என்றுரைப்பான் பாப்பா, விரும்பினால் ஏற்று கொள் பாப்பா..
    தட்சணை சொல் கேட்டால் பாப்பா, செருப்பால் அர்ச்சனை செய்து விடு பாப்பா.

    தொழில் கற்று நீ செய்தால் பாப்பா, மற்றவர் உயில் உனக்கெதற்கு பாப்பா.
    வயல் ஒன்று வாங்கி போடு பாப்பா, அயல் நாடும் போய் அசத்தி வா பாப்பா..

    இதுவே எனக்குப் பிடித்த வரிகள். பெண் என்றாலே திருமணம்தான் திருமணம் என்பது மட்டுமே என்று வளர்க்கப்படக்கூடாது. அதனால்...

    கீதா

    பதிலளிநீக்கு
  12. கன்னி வயதினிலே பாப்பா ,கண்ணி வைக்கவும் தயங்க மாட்டான் பாப்பா .
    கற்க கசடற பாப்பா. கற்றபின், நிலையாய் நிற்கவும் கற்று கொள் பாப்பா .

    பள்ளி உனக்கேன் என்பான் பாப்பா, உதறி தள்ளி நீ படித்து விடு பாப்பா.
    கொள்ளிவாய் பிசாசு என்பான் பாப்பா, சொல்லி அவனை அடித்து வை பாப்பா..
    இது தான் எனக்குப் பிடித்த வரிகள்...பிடித்த வரிகளைச் சொன்னவுகளுக்கு பரிசு உண்டா?????

    பதிலளிநீக்கு
  13. Avargal Unmaigal....சொல்லிட்டோம்...பரிசு?

    பதிலளிநீக்கு
  14. தொழில் கற்று நீ செய்தால் பாப்பா, மற்றவர் உயில் உனக்கெதற்கு பாப்பா.
    வயல் ஒன்று வாங்கி போடு பாப்பா, அயல் நாடும் போய் அசத்தி வா பாப்பா..


    ஆறு வயதினிலே பாப்பா .. மடை ஆறு போல் புரண்டோடு பாப்பா...
    அடக்க நினைப்பான் பாப்பா..நீ ஆர்ப்பரித்து ஆட்டம் போடு பாப்பா...அருமையான வரிகள் அங்கிள்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...