Monday, November 2, 2015

இறைவன் அமைவதெல்லாம் ...

ஒரு பங்குனி மாதம், எங்கும் பனி கொட்டி கொண்டுஇருக்கும் வேளை. குளிர் காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே விடை பெற இருட்டு எங்கேயும் சூழ்ந்து கொண்டு இருக்கும் படியான மாலை நேரம்.

 அருகில் இருந்த தொழிற்சாலையில் வெலை முடித்து விட்டு,வெள்ளி கிழமை என்பதால் அந்த வார கூலியையும் பெற்று கொண்டு தன் இல்லத்தை நோக்கி நடந்து சென்றார் அந்த ஐம்பது வயது தகப்பன்.

வீட்டில் வயதான தாயார். தனக்காகவும் தன் கூலிக்காகவும் காத்து கொண்டு இருக்கும் அருமை மனைவி, கல்லூரிக்கு செல்லும் மூத்த ராசாத்தி, மற்றும் ஆறாவது படிக்கும் இளைய ராசாத்தி, இவர்களின் நடுவில் இல்லாத ஆஸ்திக்கு மூன்று  இளவரசர்கள் வேறு.


குளிரில் தன் கம்பிளி துணியை சரிசெய்து கொண்டு இல்லத்தைநோக்கி நடந்தார் அந்த மனிதர். வெள்ளைகாரார்கள் கருப்பு இனத்தவர்களை விட மேலானவர்கள் என்றும் , கருப்பு இனத்தார் அடிமைகள் என்றும், மேலும் இவர்கள் எந்த பொது இடத்திலும் வெள்ளைகார்கள் இருக்கும் இடத்திலும் இருக்க கூடாது என்ற ஒரு சட்டம் இருந்த நாட்கள்.

மலை சார்ந்த பகுதி, பனியில் சருக்காதவாறு வழி மேல் விழி வைத்து கவனமாக நடந்து கொண்டு இருந்தவருக்கு திடீரென்று நினைவு வந்தது.

அடே .. டே, இன்று கூலி நாள். இல்லத்திற்கு கை வீசி கொண்டு போக முடியாதே. அனைவரும் ஆவலாக காத்து கொண்டு இருப்பார்களே என்று எண்ணி அருகில் இருந்த உணவகத்திற்கு சென்று, அந்த  வாயிலில் நுழைய முயல்கையில் அந்த பலகையை கண்டார்...

"வெள்ளைகார்கள் மட்டும்"   

பெருமூச்சு விட்டு அந்த உணவகத்தின் பின் புறம் சென்று அங்கே அமைந்து இருந்த கருப்பர்கள் பகுதிக்கு சென்று தனக்கு வேண்டிய உணவை கேட்க்கையில்..

இதற்கு 15-20 நிமிடம் பிடிக்கும்...

பரவாயில்லை , தாயார் செய்யுங்கள் .. நான் இங்கேயே காத்து கொண்டு இருக்கின்றேன் ..

என்று சொல்லி காத்து கொண்டு இருக்கையில்.. தான் அந்த பாடல் சத்தம் கேட்டது.

என்ன ஒரு அருமையான பாடல்..

"Amazing Grace, How Sweet Thy Sound"இந்த பாடலை கேட்க இங்கே சொடுக்குங்கள். (நண்பர் காரிகன் அவர்களுக்கு, இந்த பாடலை இவர்கள் பாடும் விதத்தை பாருங்கள். Ultimate)

எங்கே இருந்து இந்த பாடல் வருகின்றது என்று சுற்றும் முற்றும் பார்க்க அருகில் இருந்த தேவாலயத்தில் இருந்து வருவதை கவனித்தான். உணவிற்கு இன்னும் 15 நிமிடம் உள்ளதே. அந்த ஆலயத்தில் சென்று அந்த பாடலை கேட்ப்போம் அன்று எண்ணி , ஆலயத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கையிலும் அந்த பாடலின் சத்தம் அதிகரித்து கொண்டே இருந்தது.

ஆலயத்தின் பெரிய வாசலை கண்டு.. "ஆண்டவனே .... அனைவரையும் காப்பாற்று" என்று முணுமுணுத்து கொண்டு உள்ளே சென்ற அவன், கடைசி வரிசையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த பாடலில் மூழ்கி போனான்.

சில நொடிகளில், அருகே வந்த ஒரு வெள்ளை மனிதர்...

நீங்கள் இங்கே வர கூடாது.

இது ஆலயம் தானே..

ஆலயம் தான், இருந்தாலும் சில விதிமுறைகள் உள்ளது.. நீங்கள் வெளியே செல்ல வேண்டும்.

ஒரு ஐந்து நிமிடம் கொடுங்கள்.. இந்த பாடலை கேட்டு விட்டு ஒரு பிரார்த்தனையும் செய்து விட்டு நான் சென்று விடுகின்றேன்.

முடியாது, நீங்கள் உடனே இங்கு இருந்து செல்லாவிடில் நாங்கள் காவல் துறையினரை அழைக்கவேண்டி வரும்.

வேண்டாம் .. வேண்டாம் .. நான் போகிறேன்..

என்று சொல்லி, வெளியே வந்து அருகில் இருந்த ஒரு மரத்தின் கீழ் பனி தன் மேல் படாதவாறு  நின்று கொண்டு தன் கண்களை மூடி கொண்டு ...

"ஆண்டவனே" ... என்று அழ ஆரம்பித்தான்.

அப்போது அவன் தோளின் மேல் ஒரு கரம் இறுக விழுந்தது. திரும்பி பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அவன் எதிரே அவன் விரும்பி வணங்கும் அவன் இறைவன் "இயேசுபிரான்"..

ஏன்னப்பா அழுகின்றாய்?

ஆண்டவனே, உமக்கு அறியாதது ஏதும் இல்லை.. உம்மை தரிசிக்க சென்ற
 என்னை இந்த ஆலயத்தில் அனுமதிக்கவில்லையே..

இது ஒரு சின்ன விஷயம் இதற்கு போய் அழலாமா ?

என்று இறைவன் கேட்க.. ஆறுதலோடு இவன் பார்க்க..இயேசுபிரானோ

அவர்கள் இந்த ஆலயத்தில் இன்னும் என்னையே அனுமதிக்கவில்லை. உன்னை எப்படி அனுமதிப்பார்கள்?

என்று சொல்கையில்...

தூரத்தில் இருந்து சத்தம் கேட்டது..

உன் குடும்பத்திற்கான உணவு தயார், என்று.

பின் குறிப்பு ; இந்த கதை "Welcome to Paradise "  என்ற ஒரு ஆங்கில படத்தில் நான் பார்த்து ரசித்த ஓர் காட்சி. என்னை மிகவும் பாதித்த ஒரு காட்சி. 

10 comments:

 1. ஒரு பங்குனி மாத மாலை நேரம், எங்கும் பனி கொட்டி கொண்டுஇருக்கும் வேளை. குளிர் காலம் என்பதால் சூரியன் சீக்கிரமே விடை பெற இருட்டு எங்கேயும் சூழ்ந்து கொண்டு இருக்கும் படியான மாலை நேரம்.
  அவர்கள் இந்த ஆலயத்தில் இன்னும் என்னையே அனுமதிக்கவில்லை. உன்னை எப்படி அனுமதிப்பார்கள்..//நகைச்சுவையுடன் ஆரம்பிக்கும் பதிவு ஒரு மென் சோகத்துடன் முடியும் போது கனக்கிறது....

  தின்றுதான் தொலைக்கவேண்டியிருக்கிறது நாட்களை......

  அருமை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்வா. நீங்கள் சொல்வதும் உண்மை தான்.
   //தின்றுதான் தொலைக்கவேண்டியிருக்கிறது நாட்களை......//

   Delete
 2. இன்னும் என்னையே அனுமதிக்க வில்லையே! ஏசு பிரான் சொல்கையில் இதயம் நொறுங்கி போகிறது! எல்லா மதங்களிலும் எல்லா நாடுகளிலும் இது இருக்கிறது என்னும்போது வேதனை மேலிடுகிறது!

  ReplyDelete
  Replies
  1. இது எல்லா இடத்திலேயும் உள்ள ஓர் கசப்பான உண்மை தானே தளிர். வருகைக்கு நன்றி.

   Delete
 3. அருமையான கதை நண்பரே! ஆலயத்தில் நுழைய ஒருவருக்கு அனுமதி இல்லை என்றபோது அங்கு இறைவனும் இல்லை எனபதை அற்புதமாக உணரவைத்த பதிவு!
  த ம 1

  ReplyDelete
  Replies
  1. கண்ணுக்கு எதிரே உள்ளவனிடம் அன்பு செலுத்த முடியாதவன் காணாத இறைவனிடம் எப்படி அன்பு செலுத்த முடியும்.

   Delete
 4. வருகின்றோம் பின்னர். துளசி வாசித்துவிட்டு....

  ReplyDelete
 5. ஒரே பதிவில்...இன்று சம்பளநாள் வீட்டிற்கு வெறுஙகையுடன் போகக் கூடாது என்ற தையும் சொல்லி, கருப்பின வெள்ளையின போராட்டங்களையும் சொல்லியிருப்பது நன்று. நேர்த்தி....வணக்கம்...நான் சுவாதி...உங்கள் விசுவாசமின் சகவாசம்...படித்தேன்...அற்புதமான எழுத்துக்கள்...என் மகள் படித்துக் கொண்டே இருக்கிறால். மூன்று முரை படித்ததோடு அவள் தோழிகளுக்கும் ஷிப்டு போட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறாள்...அவள் ராகசூர்யா..அவள் வலைதளத்தில் உங்கள் கருத்துக்களைக் கண்டேன்..நன்றி)வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப மகிழ்ச்சி சுவாதி அவர்களே. குடும்பமாக அனைவரும் எழுதுவது ஒரு சுகம் தான். தங்கள் ராசாத்தியின் எழுத்தை படித்த பின் மதுரை தமிழனோடு என் மூட்டையும் கட்ட பாடு வெளியேற தயாராகிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும்.
   வாழ்த்துக்கள்.

   Delete
 6. //அவர்கள் இந்த ஆலயத்தில் இன்னும் என்னையே அனுமதிக்கவில்லை. உன்னை எப்படி அனுமதிப்பார்கள்?// ஆலயம் ஏன் செல்கிறோம் என்றே தெரியாமல் இருக்கும் பலருக்கும் இது சாட்டையடி.
  பாடல் மிக்க அருமை சகோ..படம் பிடித்திருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. கடவுளின் கருணை பற்றி உணர்வுப்பூர்வமாகப் பாடி அதிலும் , மூன்று நிமிடங்களுக்குப் பின் நச்சென்று எடுத்துச் செல்கிறார்கள். கடவுளைப் பாட நாட்களா குறைந்துபோகிறது?
  குருடராய் இருக்கும் பலருக்கும் பார்வை வரவேண்டி இருக்கிறது..வந்தால் மனிதம் மகிழும். கேட்கும் அனைவருக்கும் தைரியம் கொடுக்கும் அர்த்தமுள்ள பாடல்..தெரிந்த பாடல் என்றாலும் இக்காணொளி வித்தியாசமாக இருந்தது, பலமுறை கேட்டு ரசித்தேன். பகிர்விற்கு நன்றி விசு.

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...