Monday, November 23, 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...


"கிளாஸ்மேட்டை லவ் பண்ணாதீங்க !!!!!!!!!!!!!!!"


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 

முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 


இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.

மூன்றாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.
பரதேசியின் காதலிகள் - பகுதி 3 ( ராதிகாவும் அறிஞர் அண்ணாவும் )

பேய் அறைந்ததை போல் ஆனா பரதேசி சில நொடிகளில் சுதாரித்து ...

இந்த பெயர் வித்தியாசமா இருக்கே.. எங்கேயோ கேட்டு இருக்கோமே.. எங்கேயோ கேட்டு இருக்கோமே.. என்று நினைக்கையிலே ..

"பூவரசம் பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு.." என்று கிராமத்து மின்னல் "ராதிகா" கிழக்கே போகும் ரயிலில் பாடி கொண்டே வந்தார்கள்.

இந்த ராதிகாவிற்கும் அந்த ராதிகாவிற்கும் ஒரே ஒரு வித்தியாசம். அந்த ராதிகா "அப்பா வேட்டி -அம்மா சேலை" பாணியில் கிராமத்து பெண்ணாக இருந்தார்கள். இந்த ராதிகா " அப்பா  டை -அம்மா கௌன்" பாணியில் .. ஜீன்சும் பனியனுமாய் இருந்தார்கள்.


அருகில் அமர்ந்த ராசாவிடம் ராதிகா..

ஹை .. ஐ அம் ராதிகா !

ராதிகாவின் வாயில் வெளிய வந்த ஒவ்வொரு வார்த்தையும் சுத்தமான நெய்யினால் செய்யப்பட்ட கேசரி போல்.. நெளிந்து குழைந்து வழுக்கி விழுந்தது. ஒவ்வொரு வார்த்தையும் பழம் நழுவி பாலில் விழுந்து அதில் இருந்தும் நழுவி இவள் வாயில் விழுந்ததை போல் அல்லவா இருகின்றது.

ஒரு வேளை வெளிநாட்டில் படித்து இருப்பாளோ ? நன்றி ஆண்டாவா. என் அமெரிக்காவின் கனவை தெரிந்து  எனக்கு அமெரிக்காவில் இருந்தே ஒரு பெண்ணை அனுப்பி இருக்காயே ..

"ஹலோ.. ஐ அம் ராதிகா"ன்னு சொன்னேன்.

ராசாவோ மனதில்.. டேய் ராசா.. கதிஜாவை தேர்தலில் கோட்டை விட்ட . பொண்ணு தாயை அந்த சுருட்டையான பரட்டை "சுவி"யிடம் பறி கொடுத்த. 

இது உனக்கு ஆண்டவனா கொடுத்த வாய்ப்பு.. ஜாக்ரதையா டீல் பண்ணு என்று மனதில் சொல்லி கொண்டே.. இது, பட்டிணத்து பொண்ணு. இந்த ராசா என்ற கிராமத்து பெயர் "பட்டினத்தார்" போல் இருக்கு  என்று எண்ணி ...ஸ்டைலா "அல்பி"ன்னு  (ஆல்ப்ரெடின் சுருக்கம் தான்)  எடுத்து விடு, என்று எண்ணுகையில்.. ராதிகா , சிரித்து  கொண்டே..

ஹலோ.. நீங்க என்ன மௌனவிரதமா.. பேச மாட்ரிங்க? என்று கூற..ராசாவோ..தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில்

ஹாய் ராதிகா.. நைஸ் டு மீட் யு, ஐ அம் "குல்பி" என்று  ஆர்வ கோளாறில் உளறி வைக்க ..ராதிகா

வாவ் .. வாட் எ ஸ்வீட்  நேம்.. 

என்று குலுங்கி குலுங்கி சிரிக்க ஆரம்பித்தாள்.

பேசுகையில் வெண்ணையில் வறுத்த வார்த்தைகள் போல இருந்த வாயில் இருந்து வந்த சிரிப்போ..வெண்கல காசை கண்ணாடி பானையில்  போட்டு குலுக்கியது போல் ஒரு சப்தம்.

உங்க பெயர் வித்தியாசமா இருக்கு "குல்பி"..!?

ஐ அம் சாரி ராதிகா.. வாய் தவரிடிச்சு. மை நேம் இஸ் "அல்பி".

ஒ.. லைக் இட் டூ. ஆனா பாருங்க.. நீங்க பேசும்போதும் சரி.. பார்க்கும் போதும் சரி.. உங்க நடத்தையிலும் சரி ..ரொம்ப இனிப்பா.. சில்லுன்னு  குல்பி மாதிரி தான் இருக்கீங்க. நான் ஹையர் லெவல் படிக்குறேன், நீங்க ?

அல்பியோ (இனிமேல் நமக்கும் இவர் அல்பி தான்) நான் இன்னைக்கு தான் முதல் வகுப்பு. எனக்கு இஷ்டமே இல்ல,எங்க அம்மாக்காக தான், எனக்கு பிற்காலத்தில் அமெரிக்காவில் ஒரு நல்ல நிறுவனத்தில் துணை தலைவரா  (Vice President)  ஆகணும்ன்னு தான் விருப்பம்.

வாவ். இந்த வயசுலே.. நீங்க ... இவ்வளவு அறிவா பேசுறிங்க.. இனிமேல் நான் உங்களை "அறிஞர் அண்ணா"ன்னு தான் கூப்பிட போறேன்.

வேண்டாம் .. வேண்டாம்.. குல்.. சாரி "அல்பி"னே கூப்பிடுங்க.

என்று சொல்லுகையில்....பரட்டையான சுருட்டை.. அல்பியின் நினைவில் வந்தான்.

ராதிகா.. நீங்க ஊருக்கு புதுசா? இங்கே பார்த்ததே இல்லை.

ஆமா. எங்க அப்பா. இங்கே புதுசா போஸ்ட் மாஸ்டர் வேலைக்கு வந்து இருக்கார்.

போஸ்ட் மாஸ்டரா .. ரொம்ப சந்தோசம், என்று நினைத்த அல்பியின் மனதில்..

அடே டே.. அப்ப   நம்ம "லவ் லெட்டரை " கையில் தான் கொடுக்கணும். மறந்து தபாலில் அனுப்பிட கூடாது, என்று நினைக்கையில் ,

அங்கே வந்த டீச்சர்..

ராசா..

டீச்சர் .. என் பெயர் அல்பி..

சரி.. அல்பி.. எங்க அடிங்க ..AFDFGF, என்று சொல்ல .. அல்பியும் அடிக்க ஆரம்பித்தான்.

பாதி வகுப்பில் பாத்ரூம் சென்ற அல்பியை துரத்தி கொண்டே வந்த சுவி..

என்ன ராசா? திடீர்ன்னு பேர "அல்பி"ன்னு மாத்திக்கிட்ட.. அது பட்டணத்து பெண் .. அதுக்கு பனியன் ஜீன்ஸ்.. தான் பிடிக்கும். கொஞ்சம் என்னை அறிமுக படுத்தேன், என்று அதட்ட..

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில்  அல்பியோ.. ராதிகாவிடம்..

ஏங்க, நான் ஒரு விஷயம் சொல்றேன் கவனமா கேட்டுக்குங்க..


அங்க இருக்கான் பாருங்க...

யார் அந்த பரட்டையா?

அதே பரட்டை தான். 16 வயதிலே பாத்தீங்களா??

பாத்தேன், அதுல கூட .. ரஜினிகாந்த்ன்னு ஒரு புது நடிகர்.. பரட்டைன்னு பேருல வில்லனா வருவார்.. சூப்பர் அக்டிங். ரொம்ப கொடூரமான வில்லன்.

இந்த சுருட்டைக்கு  ஒப்பிட்டு பார்த்தா அந்த பரட்டை ஒண்ணுமே இல்லங்க.. இவனிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.. என்று பரட்டைக்கே பற்ற வைத்தான் அல்பி...

ரொம்ப தேங்க்ஸ் அல்பி. இதுக்கு தான் உங்களை "அறிஞர் அண்ணான்னு"  கூப்பிட்டேன். நீங்க ரொம்ப ஸ்மார்ட்.

என்று சொல்லுகையில் .. முதல் நாள் டைபிங் முடிந்தது.

வெளியில் வந்த அல்பியிடம் சுருட்டை ..
 

என்ன பத்தி சொன்னியா ?
 

சொன்னேன்.. ஆனா பாரு சுவி.. அவளுக்கு சின்ன வயசிலே.. மாமா மகனோடு நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்களாம்  என்று காதை கடித்து வைத்தான்.
 

பின்னர் ங்க வந்த ராதிகா, ஏங்க.. நீங்க நடந்தா வந்தீங்க.

மனதில்.. ஐயோ.. இவளுக்கும் சைக்கிள் ஓட்ட தெரியும் போல இருக்கே!

ஆமா..

வாங்க என் சைக்கிள்ள டபுள்ஸ் போகலாம்..

இல்ல, எனக்கு இடது காலில் சுளுக்கு.. அதனால் சைக்கிள் ..

அதுல என்ன.. நீங்க பின்னால உக்காருங்க.. நான் ஓட்டுறேன். என்று அன்பு கட்டளையிட..

அல்பி என்னும் பரதேசி அமர..

சுருட்டையான பரட்டை பொறாமையோடு பார்க்க..

பொண்ணுதாயோ சுருட்டையிடம். நல்ல வேளை , ராசா போய்ட்டான் அவன் இருந்தா  நம்மனாலே ஒண்ணுமே பேச முடியல...என்று கூற ...

அல்பியோ.. எப்படியாவது.. இந்த தீபாவளிக்கு ஜீன்ஸ் மற்றும் ஒரு பனியன் வாங்க வேண்டும் 

என்று தனக்கு தானே சொல்லி கொள்ளுகையில்..

போஸ்ட் மாஸ்டர் இல்லம் வந்தது.

அப்பா..

வா ராதிகா..இந்த தம்பி யார்?

இவரு.. குல் ...சாரி.. அல்பி.. ஆனா இவரை நான் அறிஞர் அண்ணான்னு தான் கூப்பிட போறேன்.

ஏன்..அல்பி வித்தியாசமா இருந்தாலும் நல்ல பேரு தானே..

இல்ல அப்பா..இவர் ரொம்ப ஸ்மார்ட். இவரை அறிஞர் அண்ணன்னு தான் கூப்பிடுவேன்.

என்று ராதிகா அடம்பிடிக்கையில்..

இந்த "அறிஞர் அண்ணா " என்ற பெயரால் அடுத்த பாகத்தில் வரும் வில்லங்கத்தை அறியாமல் சிரித்து கொண்டு இருந்தான்..

ராசா என்னும் அல்பி என்னும் பரதேசி.

தொடரும். ...

தொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் 


பரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பாலும் தமிழனும் ... )


8 comments:

 1. வர்ணனை... ஓஹோ...!

  அடுத்து... அண்ணனாகி... அம்போவாகி...?

  ReplyDelete
 2. சுத்தமான நெய்யில் செய்த கேசரி......உங்கள் எழுத்தும்.....

  ReplyDelete
 3. ஒரு சின்ன ஆசை ........ தொடரை நீளமா வளர்த்துக் கொண்டே........ போங்களேன்.

  ReplyDelete
 4. யோவ் தம்பி என்னை வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?

  ReplyDelete
  Replies
  1. சத்தியமா உங்கொப்பராணை அதான் பண்ணுறாரு ..அஹ்ஹஹஹஹ்

   Delete
  2. சத்தியமா உங்கொப்பராணை அதான் பண்ணுறாரு...அஹஹ்ஹஹ்

   Delete
 5. விசு, பரதேசியின் (காதல்) கதைகள் ...செம காமெடி ...இல்ல?

  ReplyDelete
 6. ஹஹஹ் செம ...காமெடி...நண்பர் பரதேசியின் காதல்கள் சேரனுக்குத் தெரியாம போச்சே...இல்லைனா ஆட்டோகிராஃப் பார்ட் 2 எடுத்துருப்பாரோ ...

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...