செவ்வாய், 24 நவம்பர், 2015

பரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பாலும் தமிழனும் ... )

சில நாட்களுக்கு முன்  சக பதிவர் பரதேசி அவர்கள்...


என்ற பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதில் தெரிந்தோ தெரியாமலோ தன் பழைய காதலிகளின் பெயர்களை குருப்பிட்டும் இருந்தார். அதை வைத்து எழுத படும் தொடர் பதிவின் இரண்டாம் பாகம் இது. 
முதல் பாகத்தை படிக்க இங்கே சொடுக்குங்கள் 
பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )

இரண்டாம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.பரதேசியின் காதலிகள் - பகுதி  (பரதேசியும்பரட்டையும்)

நான்காம் பாகம் படிக்க கீழே தொடருங்கள்.
பரதேசியின் காதலிகள் - பகுதி 4 ( பகுதி 4 ( பாலும் தமிழனும் ...  ) 


ராதிகாவிடம் பிரியாவிடை பெற்று அல்பி தன வீட்டை நோக்கி ஓடினான். டைப்பிங் முதல் வகுப்பில் பொன்னுத்தாயிடம் பழகலாம் என்று வந்தவனுக்கு ராதிகாவின் அன்பு.


 தன் அதிஷ்டத்தை அவனால் நம்பவே முடியவில்லை.நோண்டி தின்ன வந்தவனுக்கு நொங்கு கிடைத்த கதை. 













அவன் எடுத்து வைக்கும் வொவ்வொரு அடியிலும் ராதிகாவின் முகம் தெரிந்தது. 

ஐயோ.. ஆண்டவனே ராதிகாவை பார்க்க இன்னும் இருபத்தி நாலு மணி நேரம் காக்க வேண்டுமா? இது என்ன சோதனை என்று எண்ணி கொண்டே பள்ளி கூடம் சென்றான்.

எதிரில் வந்த தமிழ் ஆசிரியரும் சரி அவரோடு வந்த பொன்னுதாயும் இவன் கண்ணில் படவில்லை.அவன் கண்ணில் பட்டது எல்லாம் ராதிகா மட்டுமே. 


வகுப்பில் இருந்த கடிகாரம் நின்று வருடங்கள் பல ஆகின. கூரை வழியாக  உள்ளே நுழைந்த சூரிய வெளிச்சத்தின் சின்ன வட்டம் இப்போது தான் கரும்பலகையில் அமர்ந்து இருந்தது. முதல் வகுப்பு முடியும் போது அது ஆசிரியரின் மேசையில்  அமரும், இரண்டாம் வகுப்பு முடியும் போது முதல் பெஞ்சில் உள்ள போன்னுதாயோடு கண்ணாமூச்சி ஆடும். 

மதிய இடைவேளையின் போது இரண்டாம் பெஞ்ச். மதியவுணவு முடித்து வந்த பின் அந்த வட்டம் அல்பியின் மேல் ஒரு பூனை தூக்கம் போடும், பின்னர் அடுத்த பெஞ்ச், கடைசி பெஞ்ச் என்று போய் வாசல் அருகே நெருங்கும் போது கடைசி மணி அடிக்கும்.. பிறகு வீடு.

வீட்டை அடைந்த அல்பி தன் கையாலே அடுத்த நாளுக்கானா ASDFGF  என்ற எழுத்துக்களை பழக முயன்றாலும் , அவனையே அறியாமல் அவன் மனது  R A D H I K A   என்று அடித்து பழக ஆரம்பித்தது.

தூக்கம் எங்கோ ஒரு காலை தவரவிட்டதினால் துக்கமாகி அல்பியை தவழ மறுத்து நொண்டி கொண்டே மெதுவாக வந்தது. இவள் வந்தால் தானே அவள் வருவாள். அல்பி "தூக்கத்தையும் கனவையும்" வர சொல்லி கெஞ்சினான். 4:45க்கு வைத்த அலாரம் அலறும் முன்பே தானாகவே எழுந்து டைப்பிங் வகுப்பிற்கு கிளம்பினான். 

நேற்று போல் இன்று பொன்னுதாய்க்காக காத்து கொண்டு இருக்க தேவையில்லை. இன்று முதல் எனக்காக ஒருத்தி காத்து கொண்டு இருப்பாள்.  என்று எண்ணிய படியே .. டைப்பிங் வகுப்பை அடைந்தான். அங்கே ராதிகாவின் பக்கத்துக்கு சீட் இவனுக்காக காத்து கொண்டு இருந்தது.

ஹாய்..அறிஞர் அண்ணா... 

என்னை அல்பினே கூபிடுங்க..

ஓகே.. ஹாய் அல்பி, எங்கே வரமாடீங்கலோன்னு நினைச்சேன்.

ஏன்..

பொதுவாகவே சில பேர் முதல் வகுப்பு வந்தவுடன் பிடிக்காமால் நின்றுவிடுவார்கள்.

அப்படியா.. 

என்று சொல்லும் போதே.. அங்கே வந்த டீச்சர்..

ராசா.. இன்றைக்கு வலது கை....

என் பெயர் அல்பி..

ஒ சாரி.. அல்பி, இன்றைக்கு வலது கையில் LKJHJ..அடித்து பழகுங்க.. என்று சொல்ல...அல்பியோ விரலில் LKJHJ  வும் மனதில் R A D H I K A என்ற பெயரையும் அடித்து கொண்டு இருந்தான்.

நொடிகள் மணியாக மணியோ நாளாக, நாளோ வாரமாக, வாரமோ மாதம் ஆனது.

அறிஞர் அண்ணா உங்களிடம் ஒரு முக்கியமான ஒரு விஷயத்த மனம் திறந்து பேசணும், நாளை காலை கொஞ்சம் சீக்கிரமா டைப்பிங் வகுப்பிற்கு வரமுடியுமா? 

என்னிடம் முக்கியமான விஷயமா? காலையில் சீக்கிரம் வரணுமா? கரும்பு தின்ன கூலியா? கண்டிப்பாக .. காலையில் 4:45க்கு சந்திபோம் என்று சொல்லி.. அடுத்தநாள் சூரியன் உதிப்பதற்காக காத்து கிடந்தான் அல்பி.

ஐயகோ... அவள் என்னிடம் பேசியவுடன்.. என்ன பதில் சொல்வது..?

ஏங்க.. உங்க வீட்டில் இதுக்கு சம்மதிப்பாங்களா? 

இல்லாட்டி..

ஐ லவ் யு டூ...

இல்லாட்டி..

என் மேல் உங்களுக்கு இவ்வளவு ஆசை வர காரணம்?

இல்லாட்டி..

ஓடி போய்டலாமா?


என்ன சொல்வேன் .. எப்படி சொல்வேன்?

மழை காலத்தில் கூட உதய சூரியனுக்காக மக்கள் யாரும் அப்படி ஏங்கி இருக்க மாட்டார்கள். அல்பியோ அப்படி ஏங்கி கிடந்தான்..காலை 4:45.

 சீக்கிரம் வந்ததுக்கு ரொம்ப நன்றி.

என்ன விஷயம் சொல்லுங்க.

இது என் வாழ்க்கை பிரச்சனை அல்பி. நீங்க மட்டும் முடியாதுன்னு சொல்லிடாதிங்க.

பிரச்சனைய சொல்லுங்க. நான் உங்களுக்குக்காக என் உயிரை கூட தருவேன்.

உங்களுக்கே தெரியும் . எங்கப்பா.. ஒரு போஸ்ட் மாஸ்டர்..ஊரில் கொஞ்சம் மரியாதை உள்ள ஆள்.

எங்க அப்பா கூட வாத்தியார் தான், மரியாதை உள்ள ஆள் தான் என்று அல்பி சொன்ன பதில் 

அவளை ..கொஞ்சம் தடுமாற செய்தது.

அண்ணா.. நான் சொல்றத கேளுங்க..

ராதிகா, என்னை அறிஞர் அண்ணான்னு கூப்பிடுங்க. ஆர்டினரி அண்ணான்னு கூப்பிடாந்தீங்க.

எப்பவுமே உங்களுக்கு ஜோக் தான், எனக்கு ஒரு உதவி செய்யணும்.

சொல்லுங்க..

எங்க அப்பா இந்த ஊருக்கு மாறி வரதுக்கு முன்னால திண்டுகலில் தான் இருந்தார். 

அதுக்கு இப்ப என்ன? நல்ல பூட்டு ஏதாவது வேணுமா?

மீண்டும் கிண்டல் அண்ணே. கவனமா கேளுங்க.

சொல்லு..

அங்கே எனக்கு "பால்" மேலே ரொம்ப விருப்பம்.

எங்க ஊரிலும் பால் இருக்கே..பால் என்ன.. உங்களுக்காக பால்கோவாவே வாங்கி தரேன். எவ்வளவு வேணும் சொல்லுங்க.

ஐயோ .. ஐயோ.. நான் சொன்னது "தனபாலை".

யாரு அது திண்டுகல் தனபால்?

அவர் இல்லாமல் என்னால் வாழ முடியாது.

சரி.. அதை ஏன் என்னிடம் சொல்லுற..

அண்ணே... அங்கே இருக்கும் போது எனக்கு தினமும் லவ் லெட்டெர் தருவார், இங்கே வந்தவுடன் அது முடியல.

ரொம்ப கஞ்சமோ.. தபாலுக்கு தனபாலை தெரியா..சாரி.. தனபாலுக்கு தபால் கார்டை தெரியாதோ.

ஐயோ.. மக்கு .. மக்கு.. தபால் கார்ட் போட்டா .. போஸ்ட் மாஸ்டர் எங்க அப்பாவிற்கு தெரிஞ்சுடுமே..

ஆமா.. உங்க அப்பா தான் போஸ்ட் மாஸ்டர் ஆச்சே..

நீங்க உங்க விலாசத்த தரீங்களா? அதுக்கு போட  சொல்றேன். இந்த உதவி செஞ்சீங்கனா என் வாழ்க்கையில் உங்களை மறக்கமாட்டேன் அண்ணா.. 





நெஞ்சில் விழுந்த அணுகுண்டை மறைத்து நொடியில் அண்ணணாகி போன அல்பி..
 

சரி. அப்படியே நான் விலாசம் தந்தாலும், இது எப்படி,, எவ்வளவு நாள் என் விலாசத்துக்கு எழுதுவார்?
 

அவர் ரொம்ப சமத்து. இப்ப கூட.. ஏதோ .. கம்யுட்டர் கதுக்குறேன்னு பகல் எல்லாம் புத்தகம் படிக்கிறார். இன்னும் கொஞ்சம் வருடத்தில் இந்த தபால் எல்லாம் போய் புதுசா ஏதோ மின்னஞ்சல் .. அது இதுன்னு உளறுவாரு..  
என்று ஒரு குண்டை தூக்கி போட்டாள் ராதிகா..

அல்பியோ மனதில்.. என்னடா இது.. என் வீட்டிற்கு வரும் காதல் கடிதம் அதுவும் எனக்கு இல்லையா? என்று நொந்து கொண்டே ஆம் என்று சொல்ல. அவளும் சிரித்துகொண்டே செல்ல.. 

அந்த வருடத்தை முடித்து கொண்டு   அல்பி +2 மதுரையில் உள்ள பள்ளி ஒன்றுக்கு சென்றான்.

அங்கே.. "சதி செய்த கதிஜாவை" மறந்து... "ஒண்ணுக்கும் உதவாத பொன்னுதாயி" மறந்து, "அண்ணா என்று அலற வைத்த ராதிகாவை" மறந்து, . 
தான் உண்டு தான் படிப்பு உண்டு என்று இருக்க வேண்டும் என்று முடிவு செய்தான்
 
பள்ளி ஆரம்பித்த முதல் நாள். அல்பி குனிந்த தலையோடு பள்ளியில் நுழைய, ஒரு குரல் கேட்டது..

ஹலோ.. அம்பி.. "இக்கட சூடு.."

எனக்கு தெலுகு தெரியாது.

இதோடா.. தெலுகு தெரியாதாம் .. ஆனா இக்கட சூடுன்னா தெரியுமாம்.. கூட்டின்னு வாங்க ... இவரை.. 

என்று ஒருவன் ஆணையிட..

அல்பிக்கு அப்போது தான் புரிந்தது.. அடே டே மதுரை ரொம்ப மோசம், கல்லூரியில் நடக்க வேண்டிய ராகிங் பள்ளியிலேயே..

அங்கே சென்ற அவனிடம், அந்த க்ரூப்பின் தலைவன், அவன் அருகில் வந்து...

அம்பி பேர் என்ன?

அல்பி..

என்னாது.. அல்பம்மா?

இல்ல .. அல்பி..

வித்தியாசமா இருக்கே.. 

சரி... அல்பி.. எனக்கு ஒரு உதவி பண்ணனுமே.

மச்சானை பாத்தீங்களா .. பாட்டு கேட்டு இருக்கியா?

கேட்டு இருக்கேன்..அன்னக்கிளி படம்.. இளையராஜனு ஒரு புது இசை அமைப்பாளர்..

ஆமா, இப்ப உன்னை"இடஞ்ச்சூட்டி பொருள் விளக்கவா" சொன்னேன். கேட்ட கேள்விக்கு பதில் சொன்னா போதும் . எங்கே அந்த பாட்ட... நினைத்தாலே இனிக்கும் படத்துல வர .. "சிவசம்போ"  ராகத்தில் பாடு...

அண்ணே, 

எனக்கு என்ன அவ்வளவு பெரிய வயசா? அண்ணே எல்லாம் வேணாம். பேரு சொல்லியே கூப்பிடு.

உங்க பேரு.. 

தமிழன்.. மதுரை தமிழன்...சரி பாடு என்று சொல்ல.. 

அல்பியோ.. தமிழனை நொந்து கொண்டே.. மச்சான பாத்தீங்களா.. மலைவாழ தோட்டத்துலே .. சிவசம்போ.. என்று பாட ஆரம்பித்தான்.

அல்பிக்கு தான் நல்ல குரல் வளம் பாடும் திறன் ஆயிற்றே..வார்த்தைகளையும் ராகத்தையும் மாற்றி சுருதி பிசகாமல் இவன் பாடியதை பாடலை கேட்டவுடன்.. அவர்களை தாண்டி சென்று கொண்டு இருந்த மாணவிகள் ஆச்சரியத்தோடு திரும்பி பார்க்க..

மதுரை தமிழனோ..

என்னடா இது, திசை மாறிய பறவைகள் போல வந்தவங்க, இப்ப உல்லாச பறவைகள் போல குலுங்கி குலுங்கி சிரித்து கொண்டு..

அம்பி.. 

சொல்லுங்க "எம்ப்டி.."

அது என்ன "எம்ப்டி"?

மதுரை தமிழனுக்கு சுருக்கமா சொன்னேன்..

நீ ஒன்னும் சுருக்க வேண்டாம்.. தமிழானே கூப்பிடு..

சொல்லு தமிழா..

நீ இப்ப நேரா அங்கே போற.. அங்கே போய்.. அந்த ... "பூ பூவா பூத்து இருக்கும் பட்டு பூச்சி அக்கா". அதுதான்.. நடுவுல இருக்குறாங்களே.. அவங்களிடம் .. போய்.. ஐ லவ் யு சொல்ற..

தமிழா... உன் காதலை நீயே சொல்லு.. நான் ஏற்கனவே இந்த காதல் விஷயத்தில் நொந்து போய் இருக்கேன்.. இது நமக்கு வேலைக்கு ஆகாது..

ன் காதலை இல்ல. உன் காதலை சொல்ற ..,

தமிழா...

நீ இப்ப போறியா? இல்லாட்டி.. "ஏன் பிறந்தாய் மகனே" பாட்ட, "போனால் போகட்டும் போடா" ராகத்தில் பாடுறியா?

இல்ல.. நான் போய் சொல்றேன்.

ஹலோ.. என் பெயர்.. அல்பி..நீங்க..

நான் சரோஜா, இப்ப தான் உங்க பாட்டை கேட்டேன். ரொம்ப அம்சமா இருந்தது.

இந்த முறை அல்பி சரோஜாவின் முகத்தை கூட பார்க்கவில்லை. நல்ல மாட்டிற்கு ஒரு சூடு. ஏற்கனவே நிறைய சூடு வாங்கியாயிற்று, என்று நினைத்து கொண்டு.. உங்களிடம் ஒரு விஷயம் சொல்லணுமே..

சொல்லுங்க..

பின்னால் திரும்பி தமிழனை பார்க்க.. தமிழனோ.. கண்ணாலே,.. கேளு என்று மிரட்ட...

டைம் என்ன ஆச்சி?

அல்பி.. அந்த ரவுடி பசங்க.. "ஐ லவ் யு"ன்னு சொல்ல சொல்லி இருப்பாங்க.. நீங்க வெக்க பட்டுன்னு நேரம் கேக்குறிங்க, இப்ப பாருங்க... 

ஐ லவ் யு டூ... 

என்று அவள் அலற.. 

அல்பியோ... ஏழரை சனி மீண்டும் தொடருது என்று மனதில் பதற  

தமிழனோ... இவனுக்கு வந்த வாழ்வை பாருன்னு உளற..

சரோஜா அந்த இடத்தை விட்டு நகர...

அம்பி.. அல்பி .இங்கே வா..

சொல்லுங்க தமிழா!

வந்த முதல் நாளே எங்க எல்லாருக்கும் ஆப்பா?

என்ன சொல்றீங்க..

பேசும் போது மட்டும் இந்த பூனையும் பால் குடிக்குமான்னு பேசுர .. ஆனா கொஞ்சம் ஏமாந்தா கருவாடே சாப்பிடுவ போல இருக்கே..

என்ன சொல்ல வரீங்க..

நாளையில் இருந்து ஒருவாரம் என் அன்புக்கு நீ அடிமை.

புரியல.

இங்கே.. நம்ம பள்ளியில் புதுசா வந்த மாணவர்கள் எல்லாரும் பழைய மாணவர் ஒருத்தருக்கு அடிமை. நாளையில் இருந்து எனக்கு நாஸ்ட்டாவில் இருந்து எல்லாமே நீ தான் வாங்கி தரனும்.

காசு..?

பக்கத்துல ஸ்டேட் பேங்க் இருக்கு...அங்கே போய் தமிழன் சொன்னாரு கேளு  தருவாங்க..

உண்மையாவா?

அம்பி.. ரொம்ப சாதுவ இருக்கியே.. உன்னை வைச்சி இன்னும் ரெண்டு வருஷத்த நான் பேஷா ஒட்டிக்கிறேன்.. என்று சொல்கையில்..

அல்பியோ.. மவனே.. என்னை வச்சி நீ ஒட்டிக்கிரியா? இருடி உன்னை.. எனக்கு நேரம் வரும் போது பாத்துக்குறேன். என்று மனதில் சொல்லி கொண்டே வகுப்பை நோக்கி ஓடினான்.

அங்கே இவன் வகுப்பில் தான் சரோஜா..

அல்பி.. நான் "ஐ லவ் யு டூ" ன்னு சொன்னது சும்மா தமாசுக்கு, அந்த பசங்கள கொஞ்சம் "டீல்"விடலாம்னு தான்.

அது பரவாயிலிங்க.. நீங்க உண்மையாவே சொல்லி இருந்தாலும்.. நான் நம்பி இருக்க மாட்டேன்.

ஏன்..

என் ராசி அப்படி?

நீங்க சாயங்காலம் போகும் போது .. தனியா வெளியே போகாதீங்க.. ஏன் கூட பேசினே வாங்க. அப்ப உங்களை யாரும் கூப்பிடு கலாட்டா பண்ண மாட்டாங்க.

ஏன்.. 

எங்க அப்பா தான் இந்த ஊர் இன்ஸ்பெக்டர் .

ஒ.. நீங்க ஒரு போலீஸ்காரன் மகளா.?

ஆமா.. என்று சொல்ல.. சரோஜாவோடு அல்பி பள்ளியை விட்டு வெளியேறுகையில்... தமிழனோ தம் நண்பர்களோடு சேர்ந்து.. 

"ஹலோ மிஸ்டர்.. ஹலோ மிஸ்டர் எங்கே போரீங்கோனு" அல்பியை பார்த்து சிரித்து கொண்டே பாடினான்.

வெளியே வந்த அல்பியை.. சரோஜா.. எங்க வீடு இங்கே தான். வந்து டீ சமோசா சாப்பிட்டு போங்க..

டீ - சமொசாவா.. இது எல்லாம் எங்கே வீட்டில் பொங்கல் தீபாவளிக்கு தானே.. உங்க வீட்டில் எப்படி?

அல்பி.. நான் தான் சொன்னேனே.. எங்க அப்பா இன்ஸ்பெகடர்... பக்கத்துக்கு ஹோட்டேலில் செய்யுற எல்லா ஐட்டமும் எங்க வீட்டுக்கு வந்த பின் தான் மத்தவுங்களுக்கு.

சரி.. வாங்க.. 

என்று சரோஜாவோடு பேசி கொண்டே இல்லத்தை அடைந்தான். அங்கே அவன் கண்ட காட்சி.. அல்பியை பேய் அறைந்ததை போல் மாற்றியது (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக இன்னொரு நாள் சொல்கிறேன்).

வீட்டின் உள்ளே ..

என்னை மன்னிச்சிடு மன்னிச்சிடு ...

என்று இன்ஸ்பெக்டர் கதற .. அங்கே இருந்த பெண் மணியோ .. அவரை பூரி கட்டையால் அடித்து கொண்டு இருந்தார்கள்.

அதை பார்த்து பயந்த அல்பி..

என்ன சரோஜா.. ? யார் இது..?

அது எங்க அப்பா. ஏதாவது சொதப்பி வைச்சி இருப்பாரு.. அதனால் எங்க அம்மா அவரை பூரி கட்டையில் அடிப்பாங்க..

இது ரொம்ப தப்பு...ஒரு ஆம்பிளைய போய்..

அல்பி.. இதுக்கே பயந்தா எப்படி.. எங்க அம்மா எவளவோ தேவல.. எங்க பாட்டி தாத்தாவ உலுக்கையில் தான் அடிப்பாங்க. இது எங்க குடும்பத்தில் எல்லா பொம்பளைகளுக்கும் கை வந்த கலை..

சரி.. நான் கிளம்புறேன்..

டீ.. சமோசா..

எனக்கு வேண்டாம்.. இன்னொரு நாள் பார்போம்.

வெளியே வந்த அல்பியை துரத்தி வந்த தமிழன்.. 

ஏன் அல்பி.. போலிஸ்காரன் பொண்ணோடு போனா, என்னை மறந்துடுவியா? சீக்கிரம் போய் டீ வாங்கினு வா என்று அதட்ட..

அல்பியின் மனதிலோ.. தமிழா.. நான் உனக்கு இன்னும் ரெண்டு வருஷம் தான் அடிமை.. மவனே.. உன்னை பாரு.. வாழ்நாள் முழுக்க பூரிக்கட்டையில் அடி வாங்குற மாதிரி செய்யுறன் பாரு.. என்று மனதிலே தமிழன் வாங்கும் அடியை நினைத்து கொண்டு டீ வாங்க சென்றான்.

அல்பி அப்படி என்ன செய்ய போகிறான்.. பொருத்து   இருந்து பார்ப்போமே..

தொடரும் .....

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இந்த பதிவை படித்ததும் தனபாலன் பாடக் கூடிய பாடல் இதுவாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்

      அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே
      இந்த நாள் அன்று போல் இல்லியே அது ஏன் நண்பனே

      நீக்கு
    2. திண்டுக்கல் தனபாலன்னு ராதிகா சொன்னவுடனே, நான் அப்பவே என் மனசை மாத்திக்கிட்டேன் ,ஹீரோ மாதிரி இருக்கிற அவர் எங்கே ஜீரோ மாறி இருக்கிற நான் எங்கே .

      நீக்கு

  2. என்னாது ஒரு நாள் ராகிங்க் பண்ணினதற்கு இப்படி வாழ்நால் முழுவதும் அந்த சரோஜாகிட்ட மாட்டிவிட்டது அந்த சின்னபையன் அல்பிதானா? அரே அல்பி உன்னை பழிவாங்க நீயூயார்க்கிற்கு வந்து திரும்பவும் ராகீங்க் பண்ணுறேன்( மைண்ட வாய்ஸ் சரோஜாவை நமக்கு செட்டப் பண்ணினது மாதிரி ஒரு வெள்ளைக்காரி நிக்கோலையோ அல்லது ஒரு ஜெனிபரையோ செட்டப்பண்ணிடுவார் அதற்கு அப்புறம் நல்ல ஜாலிதான். ஒரு வேளை நம்ம சரோஜா கண்டுபிடித்தா எல்லாம் இந்த அல்பி பண்ணினே வேளை என்று சொல்லி தப்பிட்டுவிடலாம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ****அல்பி பண்ணின வேலை"
      என்று திருத்தி படித்து கொள்ளவும் அப்ப அப்ப டைப்போ மிஸ்டேக் வரும். காரணம் மனைவிக்கு பயந்து கட்டில் அடியில் படுத்து கொண்டு இரவு வேளையில் டைப்பண்ணுவதால்

      நீக்கு
    2. இந்த மதுரைத் தமிழன் எங்கே போனாலும் ராகிங் பண்ராறேன்னு நினைச்சு அமெரிக்காவுக்கு ஓடி வந்தா , இங்கேயும் வந்துட்டாரு .நல்லவேளை நியூ ஜெர்சில இருக்காரு .

      நீக்கு
    3. நியூயார்க் வந்தா மாட்டிவிடுரதர்க்கு நான் இங்க WWF பொண்ணு ஒன்னை பிடுச்சு வச்சிருக்கேன் வாங்க வாங்க .

      நீக்கு
  3. எப்படி நண்பரே?ஒரு திரைப்படம் போல் நகர்த்துகிறீர்கள்... அப்பாவி திண்டுக்கல் தனபாலும், மதுரைத்தமிழனும் மிக இயல்பாக வந்துவிட்டார்கள் கதைக்குள்...கதைக்குள் இவர்கள் நுழைவதை பார்க்கையில் எவ்வளவு குதூகலமாய் இருக்கிறது?
    சரோஜா.....?இன்னும் எத்தனை ரோஜாக்கள்?பூரிக்கட்டை,,உலக்கை,அடடா...

    உங்கள் எழுத்துக்கு இந்த பாண்டிய நாடே அடிமை அய்யா...அடிமை....

    பதிலளிநீக்கு
  4. அல்பியின் காதல் கதை முடிந்த பின் திண்டுக்கல் தனபாலனின் காதல் கதையை படிக்க மிக ஆவலோடு இருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. http://avargal-unmaigal.blogspot.com/2013/04/blog-post_3394.html எனது உண்மையான காதல் கதையை இங்கே பதிவாக வெளியிட்டு இருக்கிறேன் நேரம் இருந்தால் படிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழா... படித்தேன்.. ருசித்தேன்.. ரசித்தேன்..
      அருமையான கதை.. அவர்கள் உம்மை ஏமாற்றவில்லை.. மாற்றி உள்ளார்கள். அருமை .. அருமை.. இதை படித்தவுடன்.. என் சொந்த கதை சோக கதையையும் ஒரு க(வி)தையாட எடுத்து விட்டுள்ளேன்.
      படிக்க விருப்பம் இருந்தால் சொல்லுங்கள்.
      விசுவாசமின் வனவாசம் என்று ஒரு பதிவாக போடுகிறேன்,

      நீக்கு
    2. தமிழா நாங்களும் படிச்சோம்ல...ரசித்து ஏதோ எதிர்பார்த்துப் படித்து வந்தால்...ஆனா ஹும் நிறைய மிஸ்ஸிங்க்..ஹஹஹ் சரி பரவால்ல நீங்கள் இருவரும் வாழ்க்கையில் உறுதியுடன் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு தமிழா...(இதுக்கு நீங்க உங்க பாணில என்ன சொல்லுவீங்கனு தெரியும்....ஹஹ)

      நீக்கு
  6. தொ..... கதை அப்படியே,
    ஜ(பி)ன்னல் போல் போய்க் கொண்டேயிருக்கின்றது...
    தொடரட்டும்!!!

    பதிலளிநீக்கு
  7. நல்ல வேளை ... எனக்கு விசுAWESOME யார்னே தெரியாது.பொழச்சேன். அவருபாட்ல அவருக்குத் தெரிஞ்ச ஆளுக எல்லாத்தையும் கதைக்குள் இழுத்து உட்டுர்ராரு. நல்ல வேளை ... நான் பொழச்சேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தம்பி விசு தயவு செய்து , என்னோட காலேஜ் காதல் பக்கம் போக வேண்டாம் , அப்புறம் தருமி பேர் அனாவசியமாய் வந்துரும் .

      நீக்கு

    2. தருமியின் காதலை சொல்லும் போது அதற்கு அமெரிக்கன் கல்லூரி பேராசிரியரின் காதல் லீலைகள் என்று மட்டும் மறக்காமல் தலைப்பு வைச்சிடுங்க ..அந்த பதிவிற்கும் மட்டும் ஹிட்டு சும்மா ஜிவ்வுன்னு ஏறிடும்

      நீக்கு
    3. செம ரவுண்டு கட்டி அடிக்கிறீங்கப்பா,...

      நீக்கு
  8. தம்பி விசு கடைசியா உன்னை இலங்கைப் பொண்ணு
    கிட்டே மாட்டி விட்டதையும் சேர்த்து எழுதிரு .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ இப்படி வேற ஒரு கதை இருக்கா.....ஹஹஹ் அப்ப விசு பாணியிலேயே நிறைய திடுக்கிடும் சம்பவங்கள் இருக்குனு சொல்லுங்க....

      நீக்கு
  9. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  10. பயந்துகிட்டே வந்தோம்....ஹ்ஹஹஹ் நல்ல காலம்....

    என்னது நல்ல காலம்? ஆல்ஃபிக்கா...? அட? அப்ப செட்டாகிடுச்சா? அடுத்தது சுபம்???!!!!!!

    இல்ல இந்த நல்ல காலம் நாம இந்தக் கதைல வரலை அதான் ஹப்பாடா..

    சரி சரி விசு சுபமா முடிங்கப்பா...

    பதிலளிநீக்கு
  11. ஹஹ்ஹ் அல்ஃபி பாவம்....இதுக்குத்தான் அவங்க அறிஞர் அண்ணானு சொல்லிச்சுனு தெரியாத பச்சப்புள்ளையா இருந்துருக்காரே....!!!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...