Wednesday, November 25, 2015

பரதேசியின் காதலிகள்.. பகுதி 5 (என்னத்த சொல்லுவேன்)

இந்த "பரதேசியின் காதலிகள்"  தொடரை எழுத ஆரம்பித்ததில் இருந்தே.. பல பின்னூட்டங்கள்.. கருத்துக்கள்.. அலை பேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் ...அனைத்துமே..

"விசு, பரதேசியின் கதை முடிந்த பின் உன் கதையை எழுது.."

வைத்துகொண்டா விளங்கம் பன்னுகிறேன். அதற்கு எல்லாம் ராசி வேண்டுமே. நமக்காவது காதலாவது .. கத்திரிக்காயாவது ..

பின்னர் எங்கே இருந்து வந்தது ரெண்டு ராசாதிக்கள்.. நல்ல கேள்வி தான். இதோ என் க(வி)தை ..இந்தியன் உனக்கு “தனி ஈழம்”  ஏன் என்றாள், உனக்காக என்றேன்.

எனக்கும்  உனக்கும் என்ன என்றாள், தமிழ் என்றேன்.


நமக்கும் தமிழுக்கும் என்ன என்றாள், குலம் என்றேன்.


குலம் என்றால் கோத்திரமும் ஒன்று தானே என்றாள், ஆம் என்றேன்.


பின், நான்”வீர நடை” போடுகையில், உனக்கு என்ன “புறமுதுகு” என்றாள்,

அவமானத்தில் சிரசை தாழ்த்தினேன்,  இனி இவள் வியர்வை, என் இரத்தம்.


“தனி ஈழம்”  பிச்சை கேட்க நான் ஒன்னும் ஈனதமிழன், அல்ல, தன்மான  தமிழன்,


“தனி ஈழம்” எங்களுக்கு  தர நீ யாரடா?


நெய்யை வைத்து கொண்டு  வெண்ணையை தேடி அலைந்து இருகின்றேனே....
 

கையை நீட்டினேன், கெட்டியாக பிடித்து கொண்டாள்.

அது அன்று… இன்றோ!

எனக்கு  ஓர் “தனி ஈழம்” , நானே அமைத்து கொண்டேன்.
 

காணி நிலம்  கூட அங்கே உனக்கு இல்லையே என்றா சொன்னாய்.
 

கழுத்தில் பாரடா என் தாலி.. எவனுக்கு வேணும் காணி?
 

கெட்டிமேளம்  சொல்லாமலே, கட்டினேன் தாலியையும்,அவளையும்.

இன்று, என் இல்லத்தில் இரண்டு "ராசாத்திகளுக்கு"  அவள்  தாய்,
 

என் “தனி ஈழத்தில்” அவள் தான்  பட்டத்துராணி.
 

ராசாத்திக்கள் சரி, ராணியும் சரி,!

நீ யார் என்றா கேட்டாய்...
 

“தனி ஈழம்” என்று பிச்சை கேட்க   நான் ஒன்னும் ஈன தமிழன் அல்ல, அதை உரிமையோடு அமைத்து கொண்டு கொண்டாடும் தன்மான தமிழன்.


பின் குறிப்பு :

பரதேசியின் காதல் கல்லூரி செல்லும் காலம். சிறிது அவகாசம் கொடுங்கள். நாளை தொடருகிறேன்.

உங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றி திரு நாள்.
8 comments:

 1. வணக்கம்
  அற்புதம்... இரசித்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. பின்னிப்புட்டீங்க விசு! க(வி)தை அருமை! எல்லா தளத்துலயும் புகுந்து விளையாடுகின்றீர்கள்! ரசித்தோம்...வாழ்த்துகள்!

  ReplyDelete
 3. ஈழத்துராணியென
  இதயத்தில்
  ஒட்டிய கவிதை..

  உன் மொழியில்
  கவிதை கண்டோம்..
  உள்ளமெல்லாம்
  உவப்பு கொண்டோம்.

  சொல்லா காதலா..
  இல்லை..
  அது சொர்க்கத்தின்
  காதல்.

  விழிமோதி
  வழிமாறும்
  காதலில்லை..

  இதயத்தின்
  அடி ஆழம்
  சொல்லும் காதல்..

  வார்த்தைகள்
  எப்படியாயின்
  என்ன?
  காதல் கண்டோம்..
  காதலே கண்டோம்..

  மாவீரன்
  பிறந்த நாளில்
  மறக்க முடியா
  வாழ்க்கை கவிதை..

  ஈழத்து வேந்தே!
  ராசாத்திகளின்
  இனிய தந்தையே!

  இன்னும் எழுது
  இதயத்திலிருந்து
  இணையத்தில்..

  இறுகிக்கிடக்கும்
  பல
  இதயங்கள்
  உருகட்டும்..

  உன் வாழ்வில்
  எந்நாளும்
  இன்பமே
  இறுகட்டும்.

  வாழ்த்துக்களும்..
  வணக்கங்களும்.

  ReplyDelete
  Replies
  1. செல்வா.. இது எனக்கு தேவையா? ஏழைக்கு ஏத்த எளுருண்டை போல் நான் எனக்கு தெரிந்த தமிழில் எழுத உன் செந்தமிழ் பின்னோட்டம். இனிமேல் யாரும் என் பதிவை படிக்க மாட்டார்கள். உன் பின்னூட்டத்தை படிப்பார்கள்.

   Delete
  2. செல்வா அருமை! அழகோ அழகு!!!! சொல்லா காதலா..
   இல்லை..
   அது சொர்க்கத்தின்
   காதல்.

   விழிமோதி
   வழிமாறும்
   காதலில்லை..//

   யப்பா இப்படி எல்லாம் நீங்க எழுதித் தள்ளினா....நாங்கல்லாம் எங்க போறதப்பு...

   Delete
 4. சுவையுடன் தங்கள் கதையைச்
  சொல்லிப்போனவிதம் அருமை

  ராஜாவை ராணி மற்றும் ராஜாத்திகளுடன்
  பார்க்க மிக்க மகிழ்வாய் இருக்கிறது

  இதே சந்தோஷத்துடன் தாங்கள் நீடுழி வாழ
  அன்னை மீனாட்சியை வேண்டிக் கொள்கிறேன்

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 5. நானும் இரண்டு ராஜாத்திகளுக்கு
  அப்பனாய் இருந்து அந்த சுகத்தை அனுபவிப்பவன் என்பதால்
  நானும் உங்கள் கட்சி

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...