ஞாயிறு, 4 ஜனவரி, 2015

புடவைக்கு ஒரு பூவா - தலையா ...!

சென்ற பதிவில் "புடவை அழகா இருக்கே?!" என்ற தலைப்பில் நண்பன் தண்டபாணியும் அடியேனும் பட்ட அவதி பற்றி எழுதி இருந்தேன். இந்த பதிவு அதன் தொடர்ச்சி. இந்த பதிவை படிப்பதற்கு முன் சென்ற பதிவை ஒரு முறை படித்து விட்டு வரும் படி கேட்டு கொள்கிறேன் (இங்கே சொடுக்கவும்) .

சரி.. இன்றைக்கான பதிவிற்கு வருவோம்.  சென்ற பதிவை முடிக்கும் போது ... மாட்டி கொண்டோமா .. மாட்டி கொண்டோமா? என்று தான் முடித்தேன்.



அதை படித்த அருமை நண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்கள்
 //ஆகா மாட்டிக்கொண்டீர்களா//
என்ற ஒரு கேள்வியை பின்னூட்டத்தில் தன கருத்தை பதிவு செய்து இருந்தார்.

அதுமட்டும் இல்லாமல் நண்பர் திண்டுகல் தனபாலன் அவர்கள்
// ஆயிரம் புடவைகள் இருந்தாலும் அவர்களுக்கு புடவைகள் விசயத்தில் மறதி என்பதே கிடையாது...//
என்று இன்னொரு கருத்தை போட்டு இருந்தார்.

கடைசியாக காரிகன் அவர்கள்..
.//எல்லா புடவைகளை அடையாளம் காணக்கூடிய விசேஷ அமைப்பு பெண்களின் மூளையில் இருக்கும்போல//
என்றொரு கருத்தை இட்டு இருந்தார்.

இவ்வாறான கருத்துகளை படித்தவுடன்.. ஒருவேளை ..."பெண்களின் கூந்தலில் வாசனை உள்ளதா"? என்ற கேள்வியை போலவே "பெண்களுக்கு  இயற்கையிலே புடவையை அறியும் உணர்வு உள்ளதா"? என்று ஆராய ஆரம்பித்தேன்.

சரி.. எனக்கும் தண்டபாணிக்கும் நடந்த இந்த விஷயத்தில் நாங்கள் மாட்டி கொண்டோமா இல்லையா என்று இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் , நடந்த காரியத்தை மீண்டும் அசை போட்டு பார்க்கையில் நாங்கள் கண்டிப்பாக மாட்டி இருப்போம் என்று தான் தோன்றுகின்றது.

சரி.. சம்பவம் நடந்த அந்த நாளுக்கு செல்வோமா? என்னய்யா, இங்க என்ன கொலையா நடந்து  விட்டது. சம்பவம் அது இதுன்னு பெரிய பெரிய வார்த்தை ...ஏன் ? ஒரு புடவை விஷயம் தானே என்று சிலர் கூறுவது தெரிகின்றது.. கொலை நடந்து இருந்தாலும் ஒரு தூக்கு தண்டனையோடு முடிந்து விடும், ஆனால் புடவை விஷயத்தில் தவறு நடந்து விட்டால் முதலில் ஆயுள் தண்டனை அதை தொடர்ந்து தூக்கு தண்டனை என்பது நாடறிந்த விஷயம்.

மனைவி இந்தியாவில் இருந்து வாங்கி வந்த ரெண்டு டஜன் புடவையில்  இருந்து ஒன்றை சுட்டு கொண்டு வா, நான் இங்கு இருந்து ஒன்றை எடுத்து கொண்டு வருகின்றேன். நீ எடுத்து வருவதை நான் சுந்தரியிடம் கொடுத்து விடுகின்றேன், நான் எடுத்து வரும் புடவையை நீ உன் வீட்டில் கொடுத்து விடு என்று சொல்ல... நானும் ஒரு புடவை எடுத்து ... ஒரு சூப்பர் மார்கெட் பிளாஸ்டிக் பையில் போட்டு கொண்டு தண்ட பாணி இல்லத்தை நோக்கி கிளம்பினேன். அங்கே தண்ட பாணியில் இல்லத்தின் அருகே...

வாத்தியாரே... என்ன இவ்வளவு நேரம் லேட் பண்ணிட்ட ...?

ரொம்ப டென்சன் தண்டபாணி..  நான் இதுவரை இந்த மாதிரி விஷயம் பண்ணது இல்ல..

சரி.. நல்ல பட்டு புடவை எடுத்து வந்தாயா?

அப்படி தான் நினைக்கின்றேன். இதோ பார் அந்த பையில் தான் இருக்கு.. சரி, உன் புடவை எங்கே?

இதோ வாத்தியாரே..

டேய்.. ஒரு சூப்பர் மார்க்கெட் பையில் போட்டு எடுத்து வர கூடாதா? அப்படியே எடுத்து வந்து இருக்கியே..

சரி.. அதே பையில் போடு.. வரும்போது ஆளுக்கொரு புடவை எடுத்து கொண்டு அவனவன் வீட்டிற்கு போய் நல்ல பெயர் எடுத்து கொள்ளலாம்.

சரி.. வண்டியை ஆட்ட மைதானத்திற்கு விடு..

விசு.. போற வழியில் ஒரு சைனீஸ் சாப்பாடு..

தண்டம்.. எனக்கு என்னமோ பயமா இருக்கு..

வாத்தியாரே.. தப்பு பண்றதுன்னு தீர்மானம் பண்ணியாச்சி .. முழுசா பண்ணிடலாம் ...அப்படியே மாட்டினாலும், கிடைக்க போற தண்டனைக்கு ஏற்ற  குற்றம் பண்ண ஒரு நிம்மதியாவது இருக்கும்..

ஆட்டம் முடிந்தது... அருமையான ஆட்டம்.. நானும் தண்டமும் கூச்சலிட்டு  கொக்கரித்து பார்த்த ஆட்டம்...

மீண்டும் தண்டத்தின் இல்லத்தின் அருகே...

தண்டம்.. ரொம்ப தேங்க்ஸ்... இவ்வளவு டிமான்ட் உள்ள டிக்கட்டை நீ எனக்கு கொடுத்து கூட்டி வந்ததற்கு ரொம்ப நன்றி.. நீ ஒரு நல்ல நண்பன் பாணி..

உணர்ச்சி வச படாத விசு.. இந்த மாதிரி டிக்கட் உனக்கு கிடைத்தால் நீ கண்டிப்பா என்னை கூட்டி கொண்டு போய் இருப்பாய்ன்னு எனக்கு நல்ல தெரியும். பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்லி என்னை பீலிங் ஆக்காத.

சரி நேரம் ஆகுது.. ரெண்டு பேர் போனும் தொடர்ந்து அலறி கொண்டே இருக்கு.. நீ புடவையை எடுத்து கொண்டு கிளம்பு.

அந்த பைய குடு விசு..

இந்தா..

விசு.. இதில் எது நீ எடுத்து கொண்டு வந்த புடவை..?

டேய்.. நீ எடுத்து கொண்டு வந்தத எனக்கு வச்சிட்டு இன்னொன்றை எடுத்துகொள்.

நான் எதை எடுத்து வந்தேன்னு தெரியலையே .. நீ என்ன எடுத்து கொண்டு வந்தாய் என்று நினைவு இருக்கா?

சரியா கவனிக்கவில்லை பாணி.. என்ன தண்டம்.. சொதப்பிட்டியே...

நீ மட்டும் என்னவாம் வாத்தியாரே.. ஒரு புடவை எடுத்துனு வர.. அதன் நிறத்தையாவது பார்த்து இருக்க கூடாதா?

பார்த்தேன் பாணி.. எங்க ரெண்டையும் எடுத்து வெளியே வெளிச்சத்தில் போடு .. நான் கண்டிப்பா கண்டு பிடிச்சிடுவேன்..

ரெண்டையும் வெளியில் போட்டு விட்டு.. தண்டம் என்னிடம்...

வாத்தியாரே.. டிசைன் தான் வேற மாதி இருக்கு .. கலர் ஒரே மாதிரி தான் இருக்கு.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு.. நீ ட்ரை பண்ணி பாரு..

சாரி பாணி.. எனக்கும் குழப்பம்..இப்ப என்ன பண்றது..

வேற வழியே இல்லை ..பூவா தலையா போட்டு ஆளுக்கொன்னு எடுத்துக்க வேண்டியது தான்..

என்ன பாணி சின்ன பையன் போல.. ஒருவேளை... நம்ப எடுத்து கொண்டு வந்ததே வீட்டிற்கு திரும்பவும் போச்சினா... பெரிய பிரச்சனை ஆயிடும்.

வாத்தியாரே.. நீ ரொம்ப பதறுற.. இதோ பூவா தலையா.. தலை தான் வெற்றி.. நான் அடிச்சி சொல்றேன்.. நீ இந்த புடவையை எடுத்துக்கோ.. நான் அதை எடுத்து கொண்டு போறேன்..

எனக்கு என்னமோ இது சரியா படல பாணி..

தைரியமா கிளம்பு வாத்தியாரே.. அப்புறம் பார்க்கலாம்..

சரி பாணி..சந்திப்போம்..

ஓகே வாத்தியாரே.. குட் பை ..

தண்டம், ஒரே நிமிஷம்.. இன்னொருமுறை பூவா தலையா  போட்டு மறுபடியும் ஒரு முறை செக் பணிகொள்ளலாமா?

வாத்தியாரே.. நீ ரொம்ப குழம்பி போய் இருக்கே..கிளம்பு..

வீட்டில்..

எங்கே ஆளே காணோம்.. எத்தனை முறை போன் பண்றது...

ஒன்னும் இல்ல மா.. உனக்கு ரொம்ப நாளா ஒண்ணுமே வாங்கி தரவில்லையா.. திடீரென்று ஒரு ஐடியா.. 10-15 கடையில் ஏறி  இறங்கி உனக்கு ஒரு நல்ல புடவை வாங்கி வந்தேன்.. இதோ..

எனக்கா?புடவையா... எங்க காட்டுங்க.. நல்லாத்தான் இருக்கு.. ஹ்ம்ம்... ஏங்க .. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் வரும் போல இருக்கே..

என்று.. பட்டும் படாமலும் பொடி வைத்து பேசினார்கள்... அவர்கள் புடவையை அவர்களுக்கே திரும்பி கொடுத்து இருப்பேனோ!

www.visuawesome.com

9 கருத்துகள்:

  1. அடடா...! சின்னதாக சந்தேகம் வந்திடுச்சே...! அப்படியே இப்போது தப்பிச்சாலும், என்றாவது ஒரு நாள் துணைவிகள் சந்திக்கும் போது, அதில் யாரேனும் ஒருவர் அந்தப் புடவை கட்டியிருந்தால்... விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும்...!

    // போடி வைத்து பேசினார்கள்... // இப்படி சண்டையும் போடலாம்... ஜாக்கிரதை... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி தனபாலன்.. "போடி"யை பொடிஆக்கிவிட்டேன். சுட்டி காட்டியதற்கு நன்றி

      நீக்கு
  2. வணக்கம்
    சொல்லிச்சென்ற விதம் கவரும் வகையில் உள்ளது பகிர்வுக்கு நன்றி
    த.ம3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. புடவையின் நீளத்தை போல இந்த பதிவும் சுவையாக நீண்டு கொண்டே போகிறது எது எப்படியோ புடவை விஷயம் என்பதால் படிக்க இன்ரெஸ்டிங்காக இருக்கு தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  4. ஆகா பூவா தலையா போட்டுப் பார்க்கும் அளவிற்கு வந்துவிட்டதா

    பதிலளிநீக்கு
  5. புடவை விஷயத்தில் அவர்கள் மறக்க வாய்ப்பே இல்லை!

    பதிலளிநீக்கு
  6. ஒரு புடவை செய்யும் மாயம் என்ன...ஹஹஹஹஹ்ஹ.....சூப்பர் நண்பரே! புடவை.....திரௌபதி புடவையா....அப்படின்னா பதிவு இன்னும் இருக்குன்னு சொல்லுங்க.....நீண்டுகொண்டே போகுமே...நாங்களும் சிரிக்க வாய்ப்பு.....

    கண்டிப்பா இரு பெண்களும் சந்தித்தார்கள் என்றால்...அதுவும் ஒரே புடவை என்றால்....போச்சு போங்க....நீங்க காலி!ஹ்ஹஹாஹ்ஹஹ

    பதிலளிநீக்கு
  7. கொலைகாரன் எப்படியும் தடய்ம்
    விட்டுச் செல்வான் என்பது மாதிரி

    கெட்டிக்காரத் தன்மாய் ஆண்கள் எப்படியும்
    தடயம் விட்டுத்தான் வருவோம்

    சமயத்தில் அது தடயமாய் இல்லாமல்
    பாறையாகக் கூட இருந்து விடுவதுண்டு

    இதில் என்ன நடந்த்திருக்கிறதோ

    காதை இல்லை கண்ணை தீட்டி வைத்திருக்கிறோம்

    டிக்கெட் கொடுத்த "விசு "வாசத்தில்
    தண்டம் பாணியானதை மிகவும் இரசித்தேன்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...