திங்கள், 5 ஜனவரி, 2015

."விசுAwesomeமின்துணிக்கைகள்" இன்றோடு முடிந்தது.

என் இனிய தமிழ் மக்களே...

அனைவருக்கும்  எங்கள் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
எங்கள் குடும்பம்
சும்மா கிடந்த சங்கை ஊத்தி கெடுத்த கதை போல்.. "ஆலை இல்லாத ஊரில் இலுப்பப்பூ  சர்க்கரை"  என்று குண்டு சட்டியில் குதிரை ஒட்டி கொண்டு இருந்த என்னை .. அன்பு அண்ணன் பரதேசி @ நியூ யார்க் என்ற பெயரில் பதிவு எழுதி வரும் ஆல்ப்ரெட் .. விசு .. நீங்க கண்டிப்பாக எழுத வேண்டும் என்று சொன்னார்.



என்னத்தை எழுதுவது என்று கேட்ட என்னை .. எதை பற்றியானாலும் எழுது ஆனால் உன் தனி தன்மையை விட்டு விடாமால் எழுத்து என்றார்.  படித்தவர், நான்கும் அறிந்தவர் ஆயிற்றே, அவர் சொல்லை தட்ட முடியுமா? நானும் எழுத ஆரம்பித்தேன்.

கிட்ட தட்ட நாள் ஒன்றுக்கு ஒரு பதிவு போல் எழுதி வந்தேன். ஜூலையில்  இருந்து டிசம்பர் வரை 250 பதிவிற்கும் மேல் எழுதி ஆகிவிட்டது.

இவ்வளவு எழுத்கின்றாயே...? இதில் என்னத்த கிழித்தாய் என்ற கேள்வியும் வந்தது உண்டு. அவர்களுக்கு இந்த பதில்.

"சென்ற ஜூலை மாதத்தில் இருந்து என்னுடைய நட்புகளின் எண்ணிக்கை பல நூறாக மாறியது. முகம் தெரியா தோழமைகள். ஆனால்  ஒவ்வொருவரின் பின்னூட்டத்தை பார்கையிலேயும் என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். எதோ பள்ளி நாட்களில் கூட படித்த தோழர்கள் நான் எழுதியதை படித்து பாராட்டியது போல் ஒரு உணர்ச்சி.  அதுதான் நான் எழுதி கிழித்ததால் சம்பாதித்தது".

சரி என்னத்த கிழித்தாய் என்பவர்களை விட்டு விட்டு .. என்னத்த கண்டாய் என்று கேட்பவர்களுக்கு ...

என்னத்த கண்டேனா? என்னை நானே கண்டேன். நான் எழுதும் நகைச்சுவை பதிவை படித்து விட்டு ..ரசித்து சிரித்தேன் ...என்ற பின்னோட்டத்தை படிக்கையில் என்னை நானே கண்டேன்...என்னை பார்த்து நானே சிரித்தேன்..

நான் எழுதிய "சொந்த கதை சோக கதை"யை படித்து விட்டு.. "கண் கலங்கியது" என்ற பின்னோட்டத்தை படித்தவுடன், வெற்றி களிப்பில் நான் மிதந்ததை மீண்டும் ஒரு முறை கண்டேன்.

எழுதுவதில் தான் என்ன ஒரு திருப்தி. அதற்க்கு வரும் பின்னோட்டத்தில் தான் என்ன ஒரு சுகம்! என் பதிவை படித்துவரும் "அமைதியான வாசகர்களுக்கு" (Silent Readers) ஒரு விண்ணப்பம். ஒருமுறை தங்கள் பின்னோட்டத்தை பெயரோடு தாருங்கள். அது ஒன்று தான் நான் இங்கே எதிர்பார்ப்பது.

சரி தலைப்பிற்கு வருவோமா?

கடந்த ஆறு மாதங்களாக விசு மின் துணிக்கைகள் என்று Blogspot தளத்தில் இருந்து எழுதி தமிழ் மணத்தில் இணைத்து வந்த நான், சில மாதங்களுக்கு முன் எனக்காக ஒரு தளத்தை அமைத்து கொண்டேன். சென்ற வாரம் என் புதிய தளமான

www.visuawesome.com 

தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆதலால் இன்று முதல் என்னுடைய புதிய பதிவுகள் இந்த புதிய தளத்தில் தான் வெளியிட படும்.  இன்னும் சில நாட்கள் என் Blogspot  கணக்கையும் திறந்து வைத்து இருப்பேன். இந்த மாத இறுதி போல் அந்த கணக்கை முடித்து கொள்வேன்.

என் பதிவை படித்து வரும் அருமை தோழமைக்கு.. என் புதிய தளத்தை குறித்து கொள்ளுங்கள். அங்கே சென்று உங்கள் மின்னஞ்சலை Subscribe  செய்தால், என் புது பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.

மற்றும் என் பதிவுகள் தொடர்ந்து தமிழ் மணதில் இணைக்க படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

கடந்த ஆறு மாதங்களாக விசு மின் துணிக்கைகள் என்று Blogspot தளத்தில் இருந்து எழுதி தமிழ் மணத்தில் இணைத்து வந்த நான் .. சில மாதங்களுக்கு முன் எனக்காக ஒரு தளத்தை அமைத்து கொண்டேன். சென்ற வாரம் என் புதிய தளமான

www.visuawesome.com 

தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆதலால் இன்று முதல் என்னுடைய புதிய பதிவுகள் இந்த புதிய தளத்தில் தான் வெளியிட படும்.  இன்னும் சில நாட்கள் என் Blogspot  கணக்கையும் திறந்து வைத்து இருப்பேன். இந்த மாத இறுதி போல் அந்த கணக்கை முடித்து கொள்வேன்.

என் பதிவை படித்து வரும் அருமை தோழமைக்கு. என் புதிய தளத்தை "குறித்து"கொள்ளுங்கள். அங்கே சென்று உங்கள் மின்னஞ்சலை Subscribe  செய்தால், என் புது பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு தானாக வந்து சேரும்.  (பொதுவாக இந்த வரவேற்ப்பு மின்னஞ்சல்  Spam  மற்றும் junk  பெட்டிக்கு போக வாய்ப்புண்டு, அங்கேயும் சற்று பார்த்து கொள்ளுங்கள். இந்த அஞ்சலின்  subject  : (விசுAwesomeமின் துணிக்கைகள் Welcome to our newsletter )

மேலே சொன்னது யாரையாவது குழப்பி இருந்தால், உங்கள் மின்னஞ்சல் விலாசத்தை பின்னோட்டத்தில் தரவும். தங்கள் விலாசத்தை நானே இணைத்து விடுகின்றேன்.


மற்றும் என் பதிவுகள் தொடர்ந்து தமிழ் மணத்தில் இணைக்க படும் என்றும் தெரிவித்து கொள்கிறேன்.

தங்கள் ஆதரவிற்கு நன்றி... தொடர்ந்து எழுதுவோம்....

www.visuawesome.com

11 கருத்துகள்:

  1. இத இத இதைத்தான் எதிர்ப்பார்த்தேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. வாழ்த்துக்கள் . இதையே கஸ்டம் டொமைனுக்கு மாற்றி இருக்கலாமே .
    நான் எனது ப்ளாக் ஸ்பாட்டை ஆறுமாதங்களுக்கு முன்பு GO DADDY இல் கஸ்டம் டொமைன் பெற்று மாற்றி உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்
    புதிய தளத்துக்கு மாறியமைக்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள்.... முடிந்தால் பலோவர் கெட்ஜெட்டை இணையுங்கள்

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    வாழ்த்துக்கள் ,நன்றாக எழுதுகிறீர்கள் .தொடர்ந்து படித்து வருகிறேன்
    எழுதத் தொடங்கி சில காலங்களிலேயே உங்களின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்படுதுகிறது .மேலும் சிகரங்களை அடைய எனது வாழ்த்துக்கள்
    உங்கள் குடும்பத்தினருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    பதிலளிநீக்கு
  6. "//ஒவ்வொருவரின் பின்னூட்டத்தை பார்கையிலேயும் என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம். எதோ பள்ளி நாட்களில் கூட படித்த தோழர்கள் நான் எழுதியதை படித்து பாராட்டியது போல் ஒரு உணர்ச்சி. அதுதான் நான் எழுதி கிழித்ததால் சம்பாதித்தது".//"

    உண்மை. உண்மை. எனக்கும் இப்படித்தான் தோன்றும்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. வாழ்த்துக்கள் ..தொடர்கிறேன் அங்கும் ..
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  8. புதிய பாதை
    புதிய பயணம்
    அசத்துங்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. என்னவோ ஏதோனு கவலைப்பட்டேன்..........ஹப்ப்பா இப்போ ஹாப்பி:))) வாழ்த்துகள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  10. அழகான அருமையான குடும்பம்...

    புதிய தளத்திற்கு வாழ்த்துகள் ! அங்கும் தொடருகிறேன்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...