சனியும் அதுவுமாக வீட்டு தொலை பேசி அலறியது....
ஹலோ.. திஸ் இஸ் விஷ்...
வாத்தியாரே...
சொல்லு தண்டம், என்ன தீடீர்ன்னு வீட்டு போன்ல கூப்பிடற? நீ எப்பவுமே அலை பேசியில் தானே அழைப்ப?
இல்ல வாத்தியாரே ... இப்ப தான் மாமியையும் ராசாதிக்களையும் "சூப்பர் மார்க்கெட்டில்" பார்த்தேன். நீ எங்கேன்னு கேட்டேன், வீட்டில் தான் இருப்பதாக சொன்னார்கள். எப்படி வாத்தியாரே சனியும் அதுவுமா அவங்கள கழட்டி விட்டுநீ மட்டும் வீட்டில் தனியா?
தண்டம்.. கண்ணுபோடாத தண்டம் , இது குறிஞ்சி பூ கதை போல்.. கிட்ட தட்ட பனிரெண்டு வருஷத்திற்கு ஒரு முறை தான் நடக்கும்.
கொடுத்து வைத்தவன் வாத்தியாரே நீ!
டேய், பனிரெண்டு வருஷத்திற்கு ஒரு முறைன்னு சொல்றேன், கொடுத்து வைத்தவன்னு சொன்னா என்ன அர்த்தம்?
இங்க பனிரெண்டு வருஷத்திற்கு ஒரு முறை கூட இந்த மாதிரி நல்ல காரியம் நடப்பதில்லை என்று அர்த்தம் ...
சரி .. ஏன் கூப்பிட்ட? அதை சொல்லு..
வாத்தியாரே.. சுந்தரியோட அத்தை பையன் இங்க வந்து இருக்கான்!
தண்டம், அவன் ஒரு மாதிரி "பார்ட்டி" தண்டம் ...அவன் பேரு கூட.."ஒப்பந்தம்" தானே..
இல்ல வாத்தியாரே .. அவன் பேரு "சம்மந்தம்"
பாணி.. அவனுக்கு உன் மேல கொஞ்சம் பொறமை தான் பாணி.
வாத்தியாரே.. அவன் அத்தை பெண் என்னை "லவ்" பண்ணி, எங்களுக்கு "லவ் பைலியர்" ஆச்சி இல்ல .. அதுதான் அவனுக்கு பொறாமை.
தண்டம்.. உனக்கும் சுந்தரிக்கும் தான் "லவ்" வொர்க் அவுட் ஆகி திருமணமே ஆகி விட்டதே .. அதை எப்படி "லவ் பைலியர்"ன்னு சொல்லுவ?
புரியாம பேசாத வாத்தியாரே.. இப்ப எல்லாம் "லவ்" பண்ணிட்டு கழண்டுகொண்டால் தான் "சக்சஸ்"! "லவ்" பண்ண பார்டியையே கல்யாணம் பண்ண "லவ் பைலியர்".
என்னமோ போ தண்டம்.நீ சொந்த செலவில் சூனியம் வைச்சிக்கின, எனக்கு வச்சி உட்டாங்க. போத்திக்கிட்டு படுத்துகிட்டா என்ன , கடிச்சிக்கிட்டு குடிச்சிக்கினா என்ன? முடிவு ஒன்னு தானே..
வாத்தியாரே.. இந்த பழமொழி கொஞ்சம் இடிக்குதே, தப்பா சொல்றேன்னு நினைக்கிறேன்.
ரொம்ப முக்கியம் தண்டம், சரி, அவன் எத்தனை நாளுக்கு இங்கே இருப்பான்?
நாளைக்கு கிளம்பி விடுவான்.. நீ கொஞ்சம் இன்றைக்கு மாலை இப்படி வந்துட்டு போ.. தனியா உட்கார்ந்து இவனை சமாளிக்க முடியல...
சரி, சாயங்கலாம் பார்க்கலாம்.
வாத்தியாரே, இன்னொரு விஷயம்..
சொல்லு தண்டம்...
ஒரு சின்ன "ரிக்வெஸ்ட்"..
சொல்லு.
இவனுக்கு எதிரில் என்னை தண்டம்னு கூப்பிடாத. முழு பெயர் தண்டபாணின்னு கூப்பிடு.. ப்ளிஸ்..
தண்டம்..சாரி.. பாணி.. சாரி பாணி. ... நான் உன் மனத நோகடிக்கனும்னு ...
ச்சே.. ச்சே .. வாத்தியாரே.. என்ன பேசற? நீ என்னை "தண்டம்னு" கூப்பிடு "முண்டம்னு" கூப்பிடு.. எனக்கு பிரச்சனயே இல்லை.. ஆனால் இவனுக்கு எதிரில் வேண்டாம்..
என்ன பிரச்சனை ஆச்சி.. விவரமா சொல்லு.
இல்லை போன முறை இங்கே வந்தான் இல்லை. இங்கே நீயும் சுந்தரியும் என்னை தண்டம்னு கூப்பிடறத பாத்துட்டு ..இவனும் தண்டம்ன்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டான். இவனை விட பெரிய தண்டம் எவனும் இல்லைன்னு சொல்லி கொஞ்சம் சத்தம் போட்டேன். இப்ப நீ என்னை அப்படி கூப்பிடறத கேட்டான்னா .. மீண்டும் ஆரம்பிச்சிடுவான்.
சரி தண்டபாணி..
வாத்தியாரே.. நீ இப்ப தண்டம்னே கூப்பிடு.. அவனுக்கு எதிரில் அப்படி கூப்பிடாதே..
சரி, தண்டபாணி.... சாரி.. தண்டம்.
மாலை தண்டபாணியின் இல்லத்தில்..
வா வாத்தியாரே..
சொல்லு பாணி.. எப்படி இருக்கீங்க?
வாத்தியாரே.. இது சுந்தரியுடைய கசின் "சம்மந்தம்", போன வருஷம் கூட நீ சந்தித்து இருக்க? இப்ப சும்மா விசிட் பண்ண வந்து இருக்கார்.
நல்லா நினைவு இருக்கு, பாணி...
மிஸ்டர் விசு, போன வருஷம் நீங்க இவரை தண்டம்னு தானே கூப்பிடுவிங்க ,
இப்ப என்ன பாணின்னு வித்தியாசமா?
நாங்க ரொம்ப நாள் நண்பர்கள், ஒருத்தரை ஒருத்தர் எப்படி வேண்டுமானாலும் கூப்பிட்டு கொள்வோம், அது எங்களுக்குள் ஒரு பந்தம் .
அவருக்கு இஷ்டம் இல்லாவிடில் அப்படி அழைப்பது தவறு, நீங்கள் அவரை தண்டபாணி என்றே அழையுங்கள்.
அப்ப, இவரை "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா" எப்படி தான் அழைப்பது.
எல்லாரையும் "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா" அழைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே... மந்தம்..ஐ மீன் சம்மந்தம்!
பின் குறிப்பு;
அடுத்த நாள் காலையில்,
வாத்தியாரே.. அடுத்த சனி வீட்டுக்கு வா வாத்தியாரே.. உனக்கு வட பாயசம் ... சக்கரை பொங்கல் போடுறேன்.
ஏன் பாணி..?
என்ன தீடீர்னு .. பாணி .. ஆணின்னு .. நீ தண்டம்னே கூப்பிடு, பரவாயில்லை ..
விஷயத்த சொல்லு .. ஏன் எனக்கு சிறப்பு விருந்து?
வாத்தியாரே.. வாய் தவறி சொன்ன மாதிரி "மந்தம்" ஐ மீன் சம்மந்தம்னு நீ சொன்ன தானே.
பாணி.. அது உண்மையாகவே வாய் தவறி தான் வந்தது...
உனக்கு ..? வாய் தவறி.. சரி, விஷயத்திற்கு வா.. நேத்து நீ போனவுடன்..மந்தம் ...ஐ மீன் சம்மந்தம் ..மிஸ்டர் விசு, வாய் தவறி மந்தம்னு கூப்பிடாருன்னு யாருக்கும் சொல்லிடாதேன்னு காலில் விழாத குறை.
அப்ப இனிமேல் உன்னை தண்டம்னு கூப்பிட மாட்டான்னு சொல்லு .
மவனே , அப்படி கூப்பிட்டான் .. மந்தம் செத்தான்..
சரி தண்டம், சந்திப்போம். இன்னொரு விஷயம்.
என்ன சொல்ல வரன்னு எனக்கு தெரியும் வாத்தியாரே, நானே சொல்லட்டா?
எங்கே சொல்லு?
வடைக்கு நீ கெட்டி தேங்காய் சட்னி வச்சி தான் சாப்பிடுவ, அது தானே..
அதே தான்!
நண்பர்களே, நீங்களே சொல்லுங்கள். மந்தம் என்று நான் அவரை அழைத்தது வாய் தவறி வந்தது தானே?
www.visuawesome.com
நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த Blog Spot ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..

Picture courtesy : Google
அந்த தண்டம் நல்லா "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா" இருக்கு மிஸ்டர் விசு, நானும் அப்படியே கூப்பிட்டால் இவர் கோபபடுகின்றார்.அவருக்கு இஷ்டம் இல்லாவிடில் அப்படி அழைப்பது தவறு, நீங்கள் அவரை தண்டபாணி என்றே அழையுங்கள்.
அப்ப, இவரை "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா" எப்படி தான் அழைப்பது.
எல்லாரையும் "ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா" அழைக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லையே... மந்தம்..ஐ மீன் சம்மந்தம்!
பின் குறிப்பு;
அடுத்த நாள் காலையில்,
வாத்தியாரே.. அடுத்த சனி வீட்டுக்கு வா வாத்தியாரே.. உனக்கு வட பாயசம் ... சக்கரை பொங்கல் போடுறேன்.
ஏன் பாணி..?
என்ன தீடீர்னு .. பாணி .. ஆணின்னு .. நீ தண்டம்னே கூப்பிடு, பரவாயில்லை ..
விஷயத்த சொல்லு .. ஏன் எனக்கு சிறப்பு விருந்து?
வாத்தியாரே.. வாய் தவறி சொன்ன மாதிரி "மந்தம்" ஐ மீன் சம்மந்தம்னு நீ சொன்ன தானே.
பாணி.. அது உண்மையாகவே வாய் தவறி தான் வந்தது...
உனக்கு ..? வாய் தவறி.. சரி, விஷயத்திற்கு வா.. நேத்து நீ போனவுடன்..மந்தம் ...ஐ மீன் சம்மந்தம் ..மிஸ்டர் விசு, வாய் தவறி மந்தம்னு கூப்பிடாருன்னு யாருக்கும் சொல்லிடாதேன்னு காலில் விழாத குறை.
அப்ப இனிமேல் உன்னை தண்டம்னு கூப்பிட மாட்டான்னு சொல்லு .
மவனே , அப்படி கூப்பிட்டான் .. மந்தம் செத்தான்..
சரி தண்டம், சந்திப்போம். இன்னொரு விஷயம்.
என்ன சொல்ல வரன்னு எனக்கு தெரியும் வாத்தியாரே, நானே சொல்லட்டா?
எங்கே சொல்லு?
வடைக்கு நீ கெட்டி தேங்காய் சட்னி வச்சி தான் சாப்பிடுவ, அது தானே..
அதே தான்!
நண்பர்களே, நீங்களே சொல்லுங்கள். மந்தம் என்று நான் அவரை அழைத்தது வாய் தவறி வந்தது தானே?
www.visuawesome.com
நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த Blog Spot ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..
tongue slip ஆயிடிச்சு.. உங்களுக்கு? எல்லாரும் நம்பிட்டோம்.. :)
பதிலளிநீக்குவாங்க நண்பா .. நீங்கள் சொல்வதை பார்த்தல் என்னை நம்பவில்லை என்று தோன்றுகின்றது.
நீக்குநண்பரே,
பதிலளிநீக்குஉங்களுக்கு சும்மாவே வாய் அப்பப்ப ஸ்லிப் ஆகும் என்பது எங்களுக்கு தெரியாதே.
சம்மந்ததொட வாய பந்த் பண்ணீட்டிங்களே நண்பரே.
அருமையான நாரதர் (தண்ட )பாணி வார்த்தை விளையாட்டு.
நட்புடன்
கோ
ஹா... ஹா...
பதிலளிநீக்குநம்பிட்டோம்...!