சென்ற வாரம் ” லிங்கா ரஜினியின் கடைசி படமா? ” என்ற தலைப்பில் ஒரு பதிவு இட்டு இருந்தேன். அறிந்த பதிவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு செய்தி, ஒரு பதிவு பல வாசகர்களை பெற வேண்டும் என்றால் அதற்கு தேர்ந்த தலைப்பு இருக்க வேண்டும், என்ற உண்மை.
நிறைய பேர் படிக்க வேண்டும் என்று தலைப்பை தேர்ந்து எடுத்தாலும் நம் பதிவிற்கும் அந்த தலைப்பிற்கும் தொடர்பு இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் யோசிப்பேன். இந்த தலைப்பு ஒரு கேள்வி குறியாக இருந்தாலும், அந்த பதிவை முடிக்கையில், தன் வயதுக்கு தகுந்தாற்போல் இல்லாத படங்களில் ரஜினி காந்த் நடித்தது இதுவே கடைசி என்று தான் இந்த பதிவை முடித்தேன்.
அதுமட்டும் அல்லாமல், நானும் ஒரு காலத்தில் ரஜினி அவர்களின் ரசிகனாக இருந்தேன் என்றும், பின், பாபா படத்திற்கு பிறகு வந்த அவரின் எந்த படத்தையும் பார்க்கவில்லை என்றும் எழுதி இருந்தேன். அதற்கான காரணத்தையும் அங்கே குறிப்பிட்டு இருந்தேன்.
கடைசியாக முடிக்கையில், ஒரு வில்லனாக அறிமுகமாகிய ரஜினி அவர்கள் மீண்டும் பல வேடங்களில் (வில்லன் பாத்திரம் உட்பட) நடிப்பாரா? அவ்வாறு நடித்தால் இன்னும் சில வருடங்கள் நிலைத்து நிற்கலாம் என்று எழுதி இருந்தேன்.
இந்த பதிவிற்கு பல பின்னூட்டங்கள் வந்து இருந்தன. பொதுவாக எல்லாரும், இனி அவர்வில்லனாக நடிக்கும் வாய்ப்பே இல்லை என்று கூறினார்கள் .
இந்த பதிவில் அருள் என்ற வாசகர் “தலைவர் எப்படி நடித்தாலும் பார்ப்பதற்கு என்னை போல் கோடி பேர் உண்டு, தலைவர் விசிறி என்கிற பெயரில் எதுவும் உளற வேண்டாம்” என்று பின்னூட்டம் இட்டு இருந்தார்.
படித்தவுடன்..சுருக்கு என்று கோபம் தலைக்கு ஏறியது. நானா? உளறுகின்றேனா? 25 வருடங்கள் என் பணத்தையும் நேரத்தையும் செலவு பண்ணி ரசித்து பார்த்தேனே என் விருப்பத்தை நான் வெளியே சொன்னால் அது உளறலா? என்று நினைத்தேன்.
சரி, நான் யார் என்று அருள் அவர்களுக்கு தெரியாதே, அதனால்.. அவருக்கு பதில் அளிக்கையில் ” தங்களின் அறியாமை” என்று ஒரு பதில் இட்டு இருந்தேன்.
அதற்கு பதில் அளித்த அருள் அவர்கள்..
// எனக்கு தேவையா இந்த பதிவு என்று தலைப்பை வைத்து vittu..ஒரு பொது இடத்தில் தனது கருத்தை பதிவிடும்பொழுது மற்றவர் கருத்துக்களும் வரத்தான் செய்யும் நண்பா! நீங்கள் வேண்டுமானால் intellectual ஆ இருங்கள் நாங்க “ignorantes” இருந்து விட்டுபோகிறோம் .. ரஜினி சார் சொன்ன maathiri.. “மக்ககளுக்கு ஒரவர் நடிப்பு எப்பொழுது போர்ரடிக்குதுன்னு ஒரு நடிகருக்கு தெரியும்” அப்பொழது அவர் நடிப்பை நிறுத்தி விட வேண்டும்..” நிச்சியமாக ரஜினி சாருக்குதெரியும் ..மேலும் அவர் எங்களை சந்தோஷ படுத்த தான் நடிக்கிறாரேதவிர..இன்னும் பணம் , பேர் ,புகழ் பெருவதற்குஅல்ல ..அவர் இப்படி நடிப்பது தான் எங்களுக்குபிடிச்சி இருக்கு ..LION ALWAYS BE LION //
என்று அதற்கு ஒரு பதில் அளித்து இருந்தார்.
இந்த பின்னோட்டத்தில் அருள் அவர்கள் ரஜினிகாந்த் பணம் பேர் புகழிற்காக நடிப்பது இல்லை என்று எழுதி இருந்தார். பெயரையும் – புகழையும் விடுங்கள், ரஜினி அவர்கள் பணத்திற்காக நடிப்பது இல்லை என்ற உண்மை எனக்கு தெரியாது. அருள் அவர்கள் எழுதியது போல் ரஜினி அவர்கள் ஒரு வேளை பணத்திற்காக நடிக்கவில்லையா? வியப்பில் நான்.
நான் கூறிய அறியாமை, அவர் என்னை பற்றி அறியாமல் சொன்னதற்காக மட்டுமே, நான் என்னை அறிவாளி என்றும் மற்றவர்களை அறியாதவர்கள் என்றும் என்று சுட்டிக்காட்ட அல்ல. இந்த பதிவைஅருள் அவர்கள் படித்தால் அதை புரிந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
சரி, இன்றைக்கான கேள்விக்கு வருவோம்” :
நாங்கள் தான் தலைவரின் விசிறி, நீங்கள் உளறாதீர்கள் என்று கூறும் ரஜினியின் தீயற ரசிகர்கள், ரஜினியின் அடுத்த படத்தில் மீண்டும் அவர் தன் பேதி வயது உள்ள பெண்ணோடு ஆட்டம் பாட்டம் போடுவதை பார்த்து ரசிக்க மாட்டார்கள் என்று நான் நினைக்கின்றேன்?
நீங்கள் என்ன நினைகின்றீர்கள்…?
பின் குறிப்பு ;
எங்கே நம் நண்பன் (ரஜினி ரசிகன்) வருண் அவர்களை சில நாட்களாக இந்த பக்கத்தில் காணவில்லை?
www.visuawesome.com
www.visuawesome.com
ஒரு சிலர் இப்படித்தான் தீவிர ரசிகர்களாக இருந்து நடிகர்களை தாங்குகிறார்கள்! ஆனால் நடிகர்கள் ரசிகர்களை அப்படி தாங்குவது இல்லை! பணத்திற்கு ரஜினி நடிக்கவில்லை என்று சொல்லுவது செம காமெடி!
பதிலளிநீக்குவிஸ்வா sir, நான் உங்களை காயப்படுத்தனும்னு எழுதலை.ரஜினி சார் மீது எல்லோரும் அவரவர் இஷ்டத்துக்கு, அவர் இப்படி nadikkanum, அப்படி நடிக்கக்கூடாது என்று சொல்வதற்கு தான் என் போன்ற எப்பொழுதும் ரஜினி சாரின் கோடிக்கணக்கான தலைவரின் உண்மையான ரசிகர்களின் எதிர் வினை. இப்பொழுதும் சொல்கிறேன் (சொல்கிறோம்) நாங்கள் திரையில் பார்க்கும் தலைவரின் ரசிகர் koottamalla.. அவரின் நேர்மை, மனிதபண்பு, உண்மை, மற்றவர்களை காய படுத்தாத தன்மை ரசிகர் பால் அவர் கொண்ட பேரன்பு, தலைகனம் இல்லாமை, எதிரியையும் மன்னிக்கும் குணம் போலித்தனம் இல்ல வாழ்க்கை இதன் பால் ஈர்க்கப்பட்டவர்கள். அவர் எந்த வயது பெண்ணோடும் நடித்தாலும் பார்க்க தயாராகவே உள்ள கோடிகனக்கானவர்கள் ...இது ஒரு மன ரீதியான பந்தம் இது சொன்னால் உங்களுக்கு புரியுமா என்று தெரியவில்லை ஆனால் எங்களுக்கும் தலைவருக்கும் அது புரியும்ம் . :)
பதிலளிநீக்குவாங்க அருள். தம் கருத்தை தாங்கள் முன் வைத்தீர்கள், தாம் தந்த தன்னிலை விளக்கத்திற்கும் நன்றி. ஒரு பொது இடத்தில் ஏதாவது பேசினால் இம்மாதிரியான கருத்து வேறுபாடுகள் கண்டிப்பாக வரும், அதை நாகரீகமாக நீரும் நானும் விவாதிதோமே, அது தானே சமுதாயம்.
நீக்குவருகைக்கு நன்றி.
அதே போல் பணத்திற்காக என்று சொன்னது பணம் எனக்கு vendum, இன்னும் இன்னும் என்று பணதசையினால் alla.. ஹோப் யு underdstand..
பதிலளிநீக்குபுது வலைப் பூவில் சந்திப்போம் நண்பரே
பதிலளிநீக்குதம 1
பதிலளிநீக்குரஜினி அவர்களின் கலைச்சேவையை நீங்கள் எப்படி இப்படி குறைத்து மதிப்பிடமுடியும்? உங்கள் மீது குறையில்லை. உங்களது ஆசிரியர்கள் செய்த குற்றம். கலைக்கு மதிப்பு கொடுக்கத் தெரியாத நீங்கள் என்னதான் படித்தீர்களோ?
பதிலளிநீக்குஉங்களுக்கு மைனஸ் ஓட்டு!
விசு,
பதிலளிநீக்குஇணையத்தில் பல எழுதப்படாத விதிகள் உள்ளன. அதில் ஒன்று ரஜினிகாந்த், இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை யாரும் விமர்சித்துவிடக்கூடாது என்பது. இது ஒரு சர்வாதிகாரப் போக்கு. மேலும் இவ்வாறு விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று கருத இடமிருக்கிறது.
ரஜினிசாரின் ஆஸ்ரம் பள்ளியில் ஒரு ஏழை ரசிகரின் பிள்ளைக்கு சீட் வாங்கித்தர அருள்சாரால் முடியுமா? அட்லீஸ்ட் அந்தப்பபள்ளியின் வாசலையாவது ஒரு ஏழை மிதிக்க இயலுமா
பதிலளிநீக்குகாரிகன் கூறியது போல ரஜினியை கூட விமர்சிப்பவர்கள் உண்டு ஆனால்
பதிலளிநீக்குஇளையராஜா வை விமர்சிப்பது ஒரு தேச துரோக குற்றமாகவே கருதபடுகிறது எங்கே இந்த விசு வை இளையராஜா வை எதிர்த்து விமர்சனம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்