வெள்ளி, 16 ஜனவரி, 2015

"ரஜினி-விசு- இளையராஜா" ...ஒரு தனி பந்தம்!

சென்ற வாரம் நான் இட்ட " ரஜினிகாந்த் அவர்களை பற்றி விமசரிக்க கூடாதா?" என்ற பதிவிற்கு சில பின்னோட்டங்கள் வந்து இருந்தன.

அதில் ஒன்று நண்பர் காரிகன் இட்ட :
 //இணையத்தில் பல எழுதப்படாத விதிகள் உள்ளன. அதில் ஒன்று ரஜினிகாந்த், இளையராஜா மற்றும் சச்சின் டெண்டுல்கர் போன்றவர்களை யாரும் விமர்சித்துவிடக்கூடாது என்பது. இது ஒரு சர்வாதிகாரப் போக்கு. மேலும் இவ்வாறு விமர்சனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உளவியல் ரீதியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளார்கள் என்று கருத இடமிருக்கிறது//



இந்த கருத்தை நான் அலசி கொண்டு இருக்கும் போது பெயர் சொல்ல விரும்பாத ஒரு நண்பர் இதற்கு பதில் பின்னோட்டம் அழுத்தி இருந்தார்  அது :

//காரிகன் கூறியது போல ரஜினியை கூட விமர்சிப்பவர்கள் உண்டு ஆனால் இளையராஜாவை விமர்சிப்பது ஒரு தேச துரோக குற்றமாகவே கருதபடுகிறது எங்கே இந்த விசு வை இளையராஜாவை எதிர்த்து விமர்சனம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்//

இந்த இரண்டு பின்னூட்டங்களும் என்னை சற்று தடுமாறத்தான் செய்தது. முதலாவதாக நான் என் பதிவில் ரஜினி அவர்களை தவறாக விமரிசிக்கவில்லை என்று தான் சொல்லுவேன்  (அந்த இடுகையை படிக்க இங்கே சொடுக்கவும்).

என் தனிப்பட்ட கருத்தான "ரஜினி அவர்கள் தன வயதிற்கு ஏற்ற பாத்திரத்தில் மற்றும் வில்லன் போல் பாத்திரங்களில் நடித்தால் தமிழ் திரை உலகத்தில் இன்னும் ஒரு வலம் வரலாம் என்று தான் சொல்லி இருந்தேன்.

இந்த பெயர் சொல்ல விரும்பாத நண்பர் ... "விசுவை வேண்டுமானால் இளையராஜாவை எதிர்த்து விமர்சனம் செய்ய சொல்லுங்கள் பார்க்கலாம்?"
 என்று கேட்டுள்ளார்.

நண்பர் அவர்களுக்கு, முதலாவதாக என் தளத்திற்கு வந்து என் பதிவை படித்து அதற்கு பின்னூட்டம் அளித்ததற்கு மிக்க நன்றி. இப்போது உங்கள் சவாலுக்கு வருவோம்.

இளையராஜாவை எதிர்த்து கண்டிப்பாக என்னால் விமர்சனம் செய்ய இயலாதையா .. கண்டிப்பாக இயலாது. அவரை எதிர்த்து நான் விமர்சிப்பது வானத்தை நோக்கி படுத்து கொண்டு எச்சில் துப்புவது போல் ஆகும். ஏன் என்று சொல்கிறேன்.. நேரம் இருந்தால் படித்து செல்லவும். இளையராஜா  மட்டும் இல்லாமல் இங்கே நாம் ரஜினி அவர்களையும் இணைத்து பேசியதால் " ரஜினிக்கும் எனக்கும் இளையராஜவிர்க்கும்" உள்ள அருமையான நட்ப்பை என்னால் முடிந்த வரையில் எடுத்து சொல்ல முயற்சிக்கிறேன்.
யாருப்பா அங்க.. நடு சென்டர்ல எங்க நண்பன் விசுக்கு ஒரு சேர் போடு..

12 -13 வயது போல் இருக்கும் என்று நினைக்கின்றேன். "காளி" என்று ஒரு படம். அந்த படத்தில் ரஜினி அவர்கள்  தன் உடன்பிறந்தோரின் பிள்ளைகளை  மகிழ்விக்க .. "அடி ஆடு பூங்கொடியே" என்று பாடுவார்.  அதுதான் எங்கள் மூவரின் நட்ப்பின்முதல் படி.  ஏதோ தொப்புள் கொடியில் இருந்து வந்தது போல் ஓர் உணர்ச்சி. இவர்கள் இருவரோடு வளர ஆரம்பித்தேன்.
அடுத்த சில வருடங்களில், பள்ளியில் நண்பன் ஒருவன் தன் தந்தையின் சிகரெட் பாக்கட் ஒன்றை எடுத்துவர , மைதானத்தின் பின் புறத்தில் மரத்தின் மறைவில் நின்று அதை கொளுத்தாமலே  ... "ஒரு பூவனதுல நெஞ்சு துடி துடிக்குது ..." என்று பாடினேனே !

அடுத்த வருடம்.. ரெண்டும் கெட்டான் வயது என்பார்களே அப்போது ரசித்த " ராஜா ராணி ஜாக்கி" யை மறக்க முடியுமா ?

அதன் பின் பதினாறை தாண்டிய பின் ... பள்ளியில் ஒரே ஒரு உயிர்க்கு மட்டும் கேட்க்கும் படி ..உதித்த " சந்தன காற்றே, செந்தமிழ் ஊற்றே"...போல தான் வருமா?

பாடலை கேட்ட அந்த செவி ... "செவிழ் கிழிந்து விடும்" என்று "செவிழ் கிழிய சத்தம்" போட, அடுத்த ரெண்டு மாதம் எனக்கு தெரிந்ததெல்லாம் ....
"வெள்ளை புற ஒன்று" தான்.

செவிழ் கிழிந்தாலும் பாராவயில்லை என்று.. ரெண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டு கொண்டு ... "காதலின் தீபம்  ஒன்று" என்று அலைந்தேனே அதை விட்டு கொடுக்க இயலுமா? இப்படி அலைகையில் நண்பன் என்று கூடவே இருந்த ஒரு எட்டயபுரதன் .. "மாமு அது எனக்கு செட்" ஆகிவிட்டது என்று சொன்னவுடன்.. எனக்கு மருந்தே... "ஊரை தெரிஞ்சிகிட்டேன், உலகம் புருஞ்சிகிட்டேன்" மட்டும் தானே.

பிறகு, சரி நம் படிப்பை நாம் முடிக்கலாம், எனக்கு என்று ஒருத்தி இல்லாமலா போவாள் என்று நினைக்கையில் உறக்கம் வந்ததோ இல்லையோ... " வா வா மஞ்சள் மலரே" என்ற கவி தானே வந்தது.

அந்த பாடலை சில வருடங்கள் பாட .. அடே டே, நீ திருமணதிற்கு தயார் என்று பெரியவர்கள் சொல்ல .. பெண் பார்க்கும் முன்னே.. நானே மனதில் மணந்து கொண்ட.. " சுந்தரி கண்ணால் ஒரு பேச்சை" தான் மறுக்க இயலுமா?

பாடலை புரிந்து கொண்ட ... என் அம்மா பெண் பார்க்கும் படலத்தை ஆரம்பித்தார்கள் என்று தெரிந்தவுடன்.. "அம்மா என்று அழைக்காத " பாடல் அல்லவா எனக்கு பிடித்த பாடல் ஆகிவிட்டது.

இப்படி வளர்ந்த என்னை வளர்த்த இளையராஜாவை எதிர்த்து நான் விமரிசிப்பது .. கனவில் கூட....

தோல்வியை ஒப்பு கொள்கிறேன் நண்பரே, என்னால் இளையராஜாவை எதிர்த்து விமர்சனம் செய்ய இயலாது.     

பின் குறிப்பு ;

அது சரி, அந்த பாட்டோட ஏன் நிருத்தி விட்டீர்கள் என்று கேட்க துடிக்கும் ஆர்வகோள் நண்பர்களுக்கு ...

அப்புறம் தான் கல்யாணம் ஆகிவிட்டதே அடுத்த படம் 'வீரா", அதில் தலைவருக்கு ரெண்டு பொண்டாட்டி .. இனிமேல் ... இது எல்லாம் உனக்கு அவசியம் இல்ல என்று ஒரு சப்தம் வர... "யக்கா யக்கா ...பொட்டி கடை யக்கா யக்கா" என்று அடங்கி விட்டேன்.

WWW.VISUAWESOME.COM

5 கருத்துகள்:

  1. நண்பர் விசு,

    இதை உடனே எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். முடியவில்லை. மன்னிக்கவும்.

    அந்த அனானி சொன்னது ஒரு விதத்தில் உண்மையே. இளையராஜாவைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை நானும் திரு அமுதவன் அவர்களும் வைப்பதால்தான் நாங்கள் இருவரும் பல எதிர்ப்புகளுக்கு ஆளாகிறோம்.

    நீங்கள் மட்டுமல்ல. உங்கள் என் வயதை எட்டிய எவரும் இளையராஜா இசையின்றி தங்கள் பள்ளி கல்லூரி காலகட்டங்களை கழித்திருக்கவே முடியாது. எனக்கும் இளையராஜாவின் பல பாடல்கள் என் நினைவுகளை மீட்டெடுக்கும். இருந்தும் அதன் ஒரு காரணத்தினாலேயே அவரது இசையை விமர்சிக்காமல் இருக்க முடியாது என்பதையும் தெரிவிக்கிறேன். எனது இசை ரசனை வெறும் இளையராஜா இசையினால் மட்டுமே வடிவமைக்கப்பட்டதல்ல. தமிழில் ஒரே படத்திற்கு இசை அமைத்த சிவாஜி ராஜா என்பவரது இசை கூட என்னை பல நினைவுகளுக்கு இட்டுச் செல்லும். இதை நான் வெளிப்படையாகவே சொல்கிறேன். எல் வைத்தியநாதனின் காக்கைச் சிறகினிலே நந்தலாலா என்ற பாடலை ஒரே நல்ல பாடல் என்ற அளவில் தூக்கி எறிந்துவிட முடியுமா? பல இளையராஜா பாடல்கள் அளித்த இன்பத்தை இந்த ஒரே பாடல் எனக்களித்தது.

    உங்களால் இளையராஜாவை எதிர்த்து எதுவும் சொல்ல முடியாது இருக்கலாம். அது உங்களின் தனிப்பட்ட விருப்பம். அதை நான் மதிக்கிறேன். அதே நேரம் என்னால் அப்படி இருக்க முடியாது என்பதையும் சொல்கிறேன்.இதனால் உங்களின் எண்ணத்தை எதிர்ப்பவன் என்று என்னை அடையாளப்படுத்தவேண்டாம். கருத்துக்களைத் தாண்டிய இணைப்பு நம்மிடம் இருப்பதாக நான் நினைக்கிறேன்.

    இதற்கு வரும் பின்னூட்டங்களை வைத்து நாம் இன்னும் பேசலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காரிகன்,

      வருகைக்கு நன்றி. என்னால் இளையராஜாவை எதிர்த்து விமர்சிக்க முடியாது என்று ஒப்பு கொண்டேனே தவிர மற்றவர்களின் கருத்தை மறுப்பேன் என்று சொல்லவில்லை.

      எதற்கு மன்னிப்பு? நாம் இங்கே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு தானே இருகின்றோம்.

      "காற்றுக்கென்ன வேலி' என்ற படத்தில் சிவாஜி ராவ் அமைத்த .. " கடல் நீரிலே தன மீனை தேடினான் - பெருங்காட்டிலே தன மானை தேடினான் என்ற பாடலை ரசித்தவன் நான். இந்த படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் போது, இந்த பாடலை நான் முனுமுனுத்து கொண்டே இருந்தேன்.
      இளையராஜா தன பண பலத்தினால் சிவாஜி ராவ் போன்ற இசை அமைப்பாளர்களை விழுங்கி விட்டார் என்று அப்போது ஒரு பேச்சு அடிபட்டதும் உண்மை தான் .

      காக்காய் சிறகினிலே ..... அது ஒரு பஞ்சாமிர்தம். நான் என்னத்த சொல்ல?

      மீண்டும் ஒரு முறை உமக்கு நன்றி காரிகன் . தம்மோடு உறவாடும் போது தான் எத்தனை "மலரும் நினைவுகள் "

      நீக்கு
  2. பதில்கள்
    1. அருமை நண்பரே.. ஒரு வாசகம் என்றாலும் திருவாசகம்..
      உண்மை..

      நீக்கு
  3. விமரிசனத்துக்கு அப்பாற்பட்டு யாரும் இல்லை! பொதுவெளியில் ஒருவர் வரும்போதே விமர்சனத்திற்கு ஆளாகவே நேரிடும்! இளையராஜாவின் சிறந்த பாடல்களை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...