என் இனிய BJP நண்பர்களுக்கு ....
நம் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை உண்மையாகவே பயமா தான் இருக்கு. எந்த புள்ளி விவரத்தை எடுத்து பார்த்தாலும் சரியான அடிவாங்கி இருக்கோம். இது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
இப்போது தான் நாம் கொஞ்சம் அறிவு பூர்வமாக சிந்திக்க வேண்டும். மத்தியில் உள்ள அரசு is on denial. தாங்கள் நல்ல நோக்கோடு செய்த சில காரியங்கள் எதிர்பார்த்த முடிவை தரவில்லை. அதனால் இந்த இழப்பு என்பதை ஒத்து கொள்ள வேண்டும்.
ஆனால் இதுவரை மத்திய அரசு இந்த இழப்பு பெரிய இழப்பு இல்லை என்றும் .. சிறிய இழப்பே என்றும் அதுவும் தற்காலிகமானதே என்று சொல்லி கொண்டு வருகின்றார்கள்.
இந்த அணுகுமுறை நம் நாட்டை சீரழித்து விடும். BJP கட்சியை சார்ந்த பொருளாதார நிபுணர்கள் உடனடியாக தங்கள் சுயநலத்தை விட்டு வெளியே வரவேண்டும். தற்போதைய பொருளாதார நிலைமையை பற்றி தங்கள் ஆட்சிக்காரர்களுக்கு எடுத்து சொல்லவேண்டும்.
இப்படியே அமைதியாக.. பொருளாதார நிலைமை தானாகவே சரியாகிவிடும் என்று இருந்தால், அது இவர்கள் நம் நாட்டிற்கு செய்த துரோகமாகிவிடும்.
கடைசி ஆறு குவாட்டர்களில் GDP குறைந்து கொண்டே வருகின்றது. GDP குறைவதை ஏற்று கொள்ளாமல் அதை கணக்கிடும் விதத்தை மாற்றி வைத்து GDP எதுவும் குறையவில்லை என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்ளக்கூடாது.
மத்திய அரசு வெளியே, சமாளித்து கொண்டு உள்ளே "இதுவும் கடந்து போகும் " என்று இருந்தால் அதை விட பெரிய தவறு வேறு எதுவும் இல்லை.
இது எல்லாவற்றிக்கும் மேலாக..
ஒருத்தன் டாக்டர்.. கால் வலி தாங்க முடியல டாக்டர் என்று அலறினானாம். உடனே அந்த டாக்டர் அருகில் இருந்த சுத்தியை எடுத்து அவன் மண்டையில் ஓங்கி அடித்து... கால் வலி எப்படி இருக்கு என்று கேட்க்கையில் அவனோ..
காலை விடுங்க டாக்டர்.. மண்டை வலி தாங்க முடியல என்றானாம்.
இப்படி எதுவுமாகிவிட கூடாது. இந்த அரசாங்கம் இந்த இழப்பை மறுத்து கொண்டு கொஞ்ச நாள் மறைக்கலாம் . ஆனால் அது விதையை மண்ணிலும் விந்தை மடியிலும் மறைப்பதற்கு சமம்.
என் பயம் ஒன்றே ஒன்று தான். இந்த பொருளாதார இழப்பை மக்கள் பேசாமல் இருக்க அந்த டாக்டர் சுத்தியால் மண்டையில் அடித்ததை போல் மக்களை அடித்து விட கூடாது. அது மதம் - ஜாட்ஜி - மொழி சார்ந்த வன்முறையாக இருந்து விட கூடாது.
மற்றும், இந்தியாவில் சிறந்த பொருளாதார நிபுணர்கள் இருக்கின்றார்கள். கட்சி மதம் தாண்டி அவர்களின் புத்தியை உபயோகித்து கொள்ளவேண்டும்.
அப்படி செய்தால் இதுவும் கடந்து போகும். அதை விட்டுவிட்டு.. இது ஒரு இழப்பே இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால்... நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதை தான்.
உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை.... Stop the Bleeding! இரத்த கசிவை உடனடியாக நிறுத்த வேண்டும். புல்லட் ரயில் போன்ற திட்டங்கள் நல்லது தான். ஆனால் அது தற்போது தேவை இல்லை. முதலில் இருப்பதை திருத்த வேண்டும்.
60 வருட காங்கிரஸ் ஆட்சியானல் தான் என்று சொல்லி கொண்டு உதாசீன படுத்திவிட முடியாது. அப்படியே உதாசீன படுத்தினால்... அந்த 60 வருடம் காங்கிரஸ் ஆட்சி 100 வருட ஆட்சியாக மாறிவிடும்.
இதை படிக்கும் BJP ஆட்கள் சற்று சிந்திக்கவும். Let your People know that we need to block this hole. Otherwise we all are going to sink.
BJP யின் தமிழக பேச்சாளர்கள் நாராயணன் - ராகவன் மற்றும் தலைவர்கள் தமிழிசை போன்றோருக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியவில்லை. இவர்கள் மூவரும் அவரர் துறையில் சிறந்தவர்களாக இருக்கலாம் ஆனால் இவர்கள் பொருளாதாரத்தை பற்றி பேசும் போது நாட்டு மக்களின் பொது அறிவை கேவலப்படுத்துவது போல் உள்ளது. They really insult our intelligence!
இவர்கள் பேசும் பேச்சை கேட்டால் கடந்த மூன்று ஆண்டுகளில் நம் நாட்டின் பொருளாதாரம் ஒரு உன்னத நிலைமையை அடைந்தது போல் இருக்கும். நிதி அமைச்சர் ஜட்லீ நம் தற்போதைய நிலைமையை நன்கு அறிந்து இருக்கின்றார். அடுத்து என்ன செய்வது என்று அவருக்கு தெரியவில்லை. அதனால் இந்த இழப்பு தாற்காலிமாகமானது என்று சொல்லி வருகின்றார்.
ஆனால் நம்மூர் BJP பேச்சாளர்களோ இங்கே இழப்பு எதுவும் இல்லை என்கின்றார்கள்.
இதில் ஒருவர் கூறுகிறார்.. GDP 2 % தான் இறங்கிவிட்டதாம். அவருக்கு ஐயோ. GDP ஒரு சதவீதம் இறங்கினால் அது ஒன்னரை லட்சம் கோடி நட்டம். இரண்டு சதவீதம் என்றால் அது மூன்று லட்சம் கோடி நட்டம்.
தயவு செய்து தவறான கருத்துக்களை பகிராதீர்கள். நட்டம் நம் அனைவருக்குமே.
உங்கள் பாணியிலே முடிக்கின்றேன்..
பாரத் மாதாக்கி ஜே..