ஞாயிறு, 31 ஜூலை, 2016

மயக்கமா... வருத்தமா ?

வெள்ளி மாலையும் அதுவுமா அம்மணி ...

சீக்கிரம் வெளிக்கிடுங்க .... 

வெளிக்கிடுவதையெல்லாமா .. .வெளிப்படையா சொல்லுவாங்க..இது கொஞ்சம் டூ மச்...

உங்க காதுல ...மச்சாள் வீட்டுக்கு விருந்துக்கு போகணும் .... நல்ல முஸ்பாதியா இருக்கும்... விசர் கதை கதைக்காம வெளிக்கிடுங்க...
அடே.. அடே .. நம் அம்மணியின் இல்லத்து - ஈழத்து   உறவினர்களோடு விருந்து  என்றால்.. .ஆட்டமும் பாட்டும் தானே... 

அங்கே வந்து பகுடியா கதைக்கிறேன்னு எதையும் சொதப்பி வைக்காதிங்க... 

அங்கே வந்து நான் என்னத்த கதைக்கிறது ? நீங்க கதைக்கிறத புரிஞ்சிக்கிறதே பெரிய கதையாச்சே...

என்று மனத்தில் சொல்லிக்கொண்டே வண்டியை விட்டேன்..

இல்லத்தை அடைந்தோம்.... அழைத்தவர்கள் "நிற்பன நடப்பன பார்ப்பன நீந்துவன" என்று வகையறாக்களை அடுக்கி வைத்து இருந்தார்கள்.

சத்த நேரம் காத்திருப்போமா... இன்னொரு குடும்பம் "பிட்டு
" எடுத்துனு வராங்கோ...

அவங்க என்ன பரீட்சைக்கா வராங்க..?

ஏன், அப்படி விசுரா கேக்குறீங்க ?

இல்ல ... "பிட்டு" எடுத்துன்னு வராங்கன்னு சொன்னீங்களே..

பரீட்சையா ..? என்ன கதைக்கிறிங்க ... ? அவங்க சாப்பிட " பிட்டு" எடுத்துன்னு வராங்க..

ஓ.. புட்டு...

வியாழன், 28 ஜூலை, 2016

"கலைப்புலி - பேரரசு " சின்ன சின்ன ஆசை!

அட பாவி...

கவி பேரரசு கலைபுலியிடம் காபாலி படத்துக்கு ஒரு நயாபைசா கூட தராமல் 4,000 டிக்கட் வாங்கினு போனாராமே

எப்படியும் இந்த டிக்கட்களை பேரரசு தன்னுடைய ரசிகர்களுக்கு இலவசமா தந்து இருக்க மாட்டாரு.... (அப்படி இலவசமா தந்து இருந்தா இந்த பதிவுக்கான மன்னிப்பை இங்கேயே கேட்டு கொள்கிறேன்.) பின்னர் இந்த டிக்கட்கள் என்னவாகி இருக்கும்?

சரி.. இந்த விஷயத்துக்கு போகும் முன்னால், கலைப்புலி ரொம்ப கறார்  பார்ட்டியாச்சே... அவர் எப்படி இவருக்கு 4,000 டிக்கட் இலவசமா  கொடுத்தாரு?

சம்பந்தம் எங்கேயோ இடிக்குதே மொமெண்ட்....

கபாலி படம் வெளியிட்ட அன்று ஒரு டிக்கட் கிட்டத்தட்ட 1,500 ரூபாய்க்கு போனது. சரி.. ஒரு ஐநூறை தரகருக்கு கொடுத்துட்டு மீதியை எடுத்தா கூட ... ஒரு டிக்கட் ஆயிரம் ரூபாய்.

எனக்கு கணக்கு சொல்லி கொடுத்த வாத்தியார் சரியா சொல்லி கொடுத்து இருந்தார்னா இந்த இரண்டையும் பெருக்கி பார்த்தா நாற்பது லட்சம்.

கலைப்புலி நாற்பது லட்சத்தை இனாமா பேரரசுக்கு கொடுத்தாரா?  ஏன் கொடுத்து இருப்பார்?  இத்தனைக்கும் இந்த படத்தில் பேரரசும் சரி.. தமிழின்  அடுத்த நம்பிக்கை " கார்க்கி" யும் சரி பணி புரியலையே..

மீண்டும், சம்மந்தம் எங்கேயோ இடிக்குது மொமெண்ட்.

சரி... கலைப்புலி தாணு இரா போட்டு சுறா புடிக்கிறாருனே வைச்சிக்குவோம். இப்ப முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.

இந்த 4,000 டிக்கட்டை பேரரசு யாருக்கு கொடுத்து இருப்பாரு.  கல்லூரிகளில் தமிழ் துறையில் நடக்கும் விழாக்கு போகவே 500 புத்தகம் வாங்குனா தான் வருவேன்னு சொல்ற அரசு ஆச்சே நம் பேரரசு ... எப்படி இத்தனை டிக்கட்டை உபயோகித்து இருப்பார்?

கபாலி தோல்வி ... என்ன சொல்லவருகின்றார் வைரமுத்து...


என்ன தான் அனுபவம்  இருந்தாலும் சில நேரங்களில் பொது இடங்களில் மேடை பேச்சுகளில் "ஆனைக்கும் அடி சறுக்கும் " என்பது போல் எவருக்கும் தடுமாற வாய்ப்புண்டு.

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த ஆங்கில பேச்சாளர் .... அவர் திருமண விழாவில் நன்றி அறிவிக்கையில்...

" I thank everyone from the bottom of my heart and my Wifes bottom too...."

என்று நன்றி கூறியதை  எப்படி மறக்க முடியும்?

சில நேரங்களில் பட்டிமன்றத்தில் மற்றும்  பொது இடத்தில் அடியேன் உபயோகித்த தவறான வார்த்தைகள் தான் எத்தனை... எத்தனை..? அதை வைத்து தொடர் பதிவே போடலாம்.

சிலர், பேசுகையில் ... நகைசுவையாக பேசுகின்றோம் என்று நினைத்து சொதப்பி விடுவார்கள்.. நகைச்சுவை என்பது ஒரு உணர்வு. அது அனைவருக்கும் கிடைக்காது. நகைச்சுவையை செயற்கையாக நம் இயல்பான வாழ்க்கையில் சேர்த்தோமானால் அது விவஸ்தையாக  தான் முடியும்.

சரி தலைப்பிற்கு வருவோம்.


கபாலி தோல்வி  என்று வைரமுத்து பொது மேடையில் பேசினார் என்று ஒரு செய்தி வந்தது. இந்த செய்தியை படித்ததும்.. எனக்கு முதலில் உதித்த எண்ணம்...

அட பாவி... ஒரு வேளை இந்த படத்தில் வைரமுத்துவிற்கு பங்கு இல்லையா...மற்றும்.... தமிழின் அடுத்த நம்பிக்கை கார்க்கி வைரமுத்துவுக்கு பங்கு இல்லையா?

இவர்கள் இந்த படத்தில் பணி புரியவில்லை என்று ஊர்ஜிக்கப்படுத்தி கொண்ட பின்னர், ஒரு வேளை ... இது பொறாமையா? அல்ல ஒரு இளம் இயக்குனர் தனக்கு வாய்ப்பு தரவில்லை என்ற ஒரு வெறுப்பா?

என்று நினைத்தேன்.

பேரரசு ஆயிற்றே.. ஒரு வேளை, இவர் புகழ்ச்சி வஞ்சில் (அதுதாங்க வஞ்புகழ்சசிக்கு எதிர்பதம், இதுக்கு சரியான வார்த்தையை பின்னூட்டத்தில் போடுங்க)  பேச வந்ததை மக்கள் தவறாக புரிந்து கொண்டார்களா.. ?

இருக்காதே.. காலையில் கக்கூசுக்கு போனேன் என்பதை கூட பேரரசு நிறுத்தி
 நிதானமாக.... அவருடைய சிம்ம குரலில்...

காலையில் கக்கூசுக்கு போனேன்.....

நான் ...

வாங்காத  கடன் தீர்க்க

காலையில் காகக்கூசுக்கு போனேன் ..

அப்படின்னு நின்னு நிதானமா தானே பேசுவார்..

மக்கள் தவறாக புரிந்துகொள்ள முடியாதே ..

என்று நினைத்து கொண்டு ... காணொளியை தட்டினேன்.

வைரமுத்து பேசி கொண்டு இருந்தார்..

பா ரஞ்சித் ... கோட்.... கபாலி --- என்று ... நகைச்சுவையாக பேசுவதாக நினைத்து கொண்டு சொதப்பி கொண்டு இருந்தார். இவர் நகைசுவை என்று நினைத்து பேசி கொண்டு இருந்ததற்கு சிலர் சிரிக்க..  அடுத்து...

புரிந்து கொள்வதை பற்றி பேசினார்,,,

அதை புரிந்து கொண்டேன்.. இதை புரிந்து கொண்டேன் என்று பேசி கொண்டே வந்த பேரரசு ..

"கபாலியின் தோல்வி... காபாலியின் தோல்வி"  என்று இரண்டு முறை
 நிதானமாக பேசினார்.

இந்த செய்தி வெளியே வந்ததும், இப்போது, என்னை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் ... நான் இங்கே ஒரு வார்த்தையை விட்டுவிட்டேன்... சொல்ல வந்த்ததே வேறு என்று புலம்ப ஆரம்பித்தார்.

வைரமுத்து அவர்களே....

"சட்டியில் இருப்பது அகப்பையிலே ... புத்தியில் இருப்பது வார்த்தையிலே.."

கவியரசின்  பாடலை தாம் நிச்சயமாக கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். அந்த கருத்தையே பயன் படுத்தி... தாம் எழுதிய....

"தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து .."

என்ற வார்த்தைகளும் எவ்வளவு உண்மை.

சொல்ல வந்ததை சொல்லிவிட்டீர்கள்.. இப்ப சாக்கு போக்கு எதுக்கு?

பின் குறிப்பு :

இந்த வார நாதரித்தனம் செய்தாலும் நாசூக்கா செய்யணும் விருதை பெறுபவர்... பேரரசு..

இவருக்கு பேரரசுன்னு பெயர் வந்த கதைக்கு இந்த விருதை இவருக்கு வாழ்நாள் விருதா தரலாம்.. அது வேற கதை..

ஒரு வார்த்தையை விட்டுட்டேன்.. ஒரு வார்த்தையை விட்டுட்டேன்னு சொல்றாரே.. ஒரு வேளை அவர் சொல்லவந்தது....

கபாலியின் (படு) தோல்வி... கபாலியின் (படு) தோல்வி...யா..

கூடுதல் செய்தி... 

கபாலி படம் கண்டிப்பாக எனக்கு பிடிக்கும் என்று என்னை அறிந்த சில நல்ல உள்ளங்கள் சொன்னதால்..இந்த வார இறுதியில் பார்க்க இருக்கின்றேன்.


அறிந்த நண்பர் ஒருவர் பேரரசின் இந்த பேச்சுக்கான தொடர்பை இணைக்க சொன்னார்.. அவர் விருப்பத்திற்கு இணங்கி... இதோ.... எங்கே பார்த்து விட்டு சொல்லுங்கள் அவர் என்ன வார்த்தையை தவற விட்டார் என்று ..?





வெள்ளி, 22 ஜூலை, 2016

ரஜினியை நிம்மதியாக வாழவிடுங்கள் ப்ளீஸ்...

அனைவரும்  அதிகம் எதிர்பார்த்த "கபாலி" இந்த வாரம் வெளிவந்தது. பாபா படத்தின் போது நொந்து  பாதியில் எழுந்து வந்த நான், அதற்கு பிறகு வந்த படங்களை  பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.

இடையே நண்பர்கள் வற்புறுத்தியதால் இரண்டு படங்கள் பார்க்க நேரிட்டது. அதில் ஒன்று "மொழி" நன்றாக ரசித்து பார்த்தேன். அடுத்து "சிங்கம் 2", அதை பார்த்த அடுத்த நான்கு நாள் காதில் "ங்கோயினு" ஒரு சத்தம் ...

அதோடு  நிறுத்திவிட்டேன், புதுப்படங்களை தான் நிறுத்திவிட்டேன். நேரம் இருக்கும் போது பழைய படங்களை பார்ப்பேன். சென்ற வார இறுதியில் கூட ரஜினியின் " கழகு" என்ற படத்தை பார்த்தேன். என்னை பொறுத்தவரை அருமையான படம். அட்டகாசமான இசை  மற்றும் பாடல்கள். இந்த படம் ஏன் தோல்வியடைந்தது என்று என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை.

சரி... தலைப்பிற்கு வருவோம்.

கபாலி படத்தின் ஸ்டில்கள் சில நாட்களுக்கு முன் பார்க்கையில்... அடேங்கப்பா.. வயதிற்கு  ஏற்ற பாத்திரம்.. ரஜினி அட்டகாசமாக இருக்கின்றார் என்ற எண்ணம் வர கூடவே ஓர் நப்பாசை. பல வருடங்களுக்கு பின் ஒரு நல்ல ரஜினி படம் பார்க்க வாய்ப்பு உள்ளது போல் இருக்கின்றதே என்று மனதில் ஓர் அசை போட்டேன்.

கூடவே அறிந்த சில நண்பர்கள்.. இந்த படத்தின் இயக்குனர் ரஞ்சித் அவர்களை பற்றி மிகவும் புகழந்து பேச என் நப்பாசை பேராசையாகியது.

இருந்தாலும் வேலையின் நிமித்தம் முதல் நாளே போக முடியாத நிர்பந்தம். சரி, வார இறுதியில் பார்த்து கொள்ளலாம் என்று இருந்தேன்.  படம் வெளியானது.. முதல் காட்சியை இந்தியாவில் பார்த்த ஒரு ரஜினி ரசிகரை அழைத்து ....

எப்படி... இருந்தது...

ஹ்ம்ம்,.. ஓ கே....

அம்புட்டுதான்.

ரஜினியின் தீவிர ரசிகரே ஓ கே என்று உற்சாகம் இல்லாமல் சொல்லிவிட்டதால் ... என்னுடைய நாப்பாசை மீண்டும் வீணாகி போனது.

பிறகு, இங்கே அந்த படத்தை  பார்த்த நண்பர் ஒருவரை மதிய  உணவு வேளையில் சந்திக்க நேர்ந்தது.

கபாலி , பார்த்திங்களா...

வியாழன், 21 ஜூலை, 2016

கபாலி ! முதல் நாள்.. முதல் காட்சி...

விசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு கல்லூரிக்கு வந்து விடு, கும்பலா போய் தாக்கிடலாம்.

டேய்.. சத்தமா பேசாதா, வீட்டில் அம்மா இருக்காங்க, நீ சொன்னது மட்டும் காதில் விழுந்தது.. மவனே.. உங்க அம்மா எங்க அம்மா, மற்றும் ஊரில் இருக்கிற எல்லா அம்மாக்களும் நாளைக்கு கல்லூரிக்கு வந்து அவங்க அவங்க பிள்ளைகள் ஒழுங்கா படிக்குதா இல்ல சினிமாவிற்கு போகுதான்னு பார்க்க வந்துடுவாங்க...





சரி... வெடி வேட்டுக்கள் எல்லாம் வாங்கியாச்சா?

எல்லாம் தாயார் .. விசு.. நீ நேரத்துக்கு வந்துடு..

டேய்.. என்னமோ ஆயிர கணக்கில் செலவு பண்ணி நூலகம் எதோ ஆரம்பிச்சி, அத ரிப்பன் கட் பண்ணி நான் தான் திறந்து வைக்க வேண்டும் என்ற லெவெலுக்கு போற.. இது சும்மா ஒரு சினிமாடா ...

சனி, 9 ஜூலை, 2016

எஸ் வி சேகர்-YG மஹேந்திரன்- கிரேசி மோகன் ..நாடக ஒற்றுமை

சும்மா நேரம் போகலையேன்னு ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்.. அதுல தான் எத்தனை திடுக்கிடும் உண்மைகள் வெளியே வருது .... 





வெள்ளி, 8 ஜூலை, 2016

மாரியாத்தா கூழுக்கும், நோம்பு கஞ்சிக்கும் ஒரு "ஸ்தோத்திரம்... "


முகநூல்   நண்பர்  Raj Nath தன்முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்து இருந்தார்

//நம்ம கிறிஸ்தவ மக்கள் ரொம்ப நல்லவங்க .!
எப்படினா ?
மாரியம்மன் கோவிலில் கூல் ஊத்தின குடிக்கமாட்டாங்க 
பிள்ளையார் கோவிலில் சுண்டல் கொடுத்தால் வாங்கமாட்டாங்க தனக்கு தெறிந்தவர்கள் கொடுத்தால் வாங்கமட்டாங்க .....
ஆனால் ?
அவர்களுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய நண்பர்கள் நோம்பு கஞ்சியும் ,
பிரியாணியும் போட்டா 
மூக்கு முட்ட சாப்பிடுராங்க.? //

அடியேன் கிருத்துவன் என்ற காரணத்தினால் அவருக்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.

மாரியம்மன் கோயிலின் கூழையும், பிள்ளையார் கோயிலின் சுண்டலையும், கிறித்துவர்கள் யார் கொடுத்தாலும் உண்ணமாட்டார்கள் என்பது உண்மையே.

இதற்கு காரணம்.. இந்த உணவு மாரியம்மனுக்கு அல்லது பிள்ளையாருக்கோ படைக்கப்பட்டதால் அல்ல.., இதற்கான காரணமே வேறு.

நாங்கள் பொதுவாக அசைவ பிரியர்கள்.


நீங்கள் வேண்டுமானால் மாரியாத்தாவிற்கு கோழி சூப்பும்.. பிள்ளையாருக்கு   வேறு ஏதாவது அசைவ ஐட்டமும் படைத்து விட்டு  எங்களிடம்  எடுத்து வாருங்கள்.

வியாழன், 7 ஜூலை, 2016

சுவிஸ்ஸில் இருந்து வரல .. கருப்பு...!

என் மனதில் இருந்த வயித்தெரிச்சலை முகநூல் ஸ்டேட்டஸாக போட்டேன்... அது எங்கே போய் முடிஞ்சதுன்னு  நீங்களே பாருங்க.. 

முடிந்தால் எதுகை மோனையோடு பின்னூட்டத்தில் கன்டினியூ ப்ளீஸ் ..

சிறந்த நாளாகிய பிறந்த நாள்.....

ஜூலை 4 ம் தேதி அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாள் ... ஏன் என்றால் இது அமெரிக்காவின் பிறந்தநாள்.  இந்த நாளை இங்கே மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். நண்பர்கள், உணவு, ஆட்டம், பாட்டம் என்று துவங்கி வான வேடிக்கையோடு இந்நாள் முடியும்.

அதுவும் இந்த நாள் வியாழன், வெள்ளி அல்லது திங்கள் செவ்வாயில் வந்தால் வார இறுதி மூன்று அல்லது நான்கு நாட்களாக மாற்றப்பட்டு கொண்டாட்டம் தான்.

ஒவ்வொரு நகரிலும் இந்த வானவேடிக்கை போட்டி போட்டு  கொண்டு நடக்கும். ஜூலை 4 ம் தேதி 9 மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட அரை மணி நேரம் செல்லும்.

சில வருடங்களுக்கு முன் இந்நாளை அடியேன் சொதப்பியதால் (சொதப்பலை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த வருடம் மிகவும் ஜாக்கிரதையாக, முன்னேற்பாடாக எங்கள் ஊர் கடற்கரையில் நீரின் மேல் அமைந்துள்ள பாலத்தில் (Pier ) நடக்க இருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எல்லாம் தயார்.

அங்கே என்ன நடந்தது எப்படி நடந்தது என்று புகை படத்துடன் இன்னொரு நாள் பார்ப்போம்.

ஆண்டவன் படைச்சான் 
மாலை ஐந்து மணிக்கு பாலத்தை அடைந்தோம். கடற்கரையில் ஆயிரக்கணக்கோர் இருக்க, கொடுத்து  வைத்த சிலர் ( ஆண்டவன் படைச்சான் .. பாணியில்) எங்களுக்காக தயார் பண்ணி வைத்து இருந்த மேசையை நோக்கி நடக்கையில்...

செவ்வாய், 5 ஜூலை, 2016

மருத்துவ தொழிலுக்கு ஒரு கேவலம்... நெஞ்சு பொறுக்குதில்லையே

மனதை மிகவும் பாதித்த விஷயம்...நெஞ்சு பொறுக்குதில்லையே..

பொதுவாகவே " இளகிய மனது கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்" என்ற எச்சரிக்கையுடன் வரும் காணொளியை நான் எப்போதும்  தவிர்த்துவிடுவேன். வளரும் பருவத்தில் இருந்தே இந்த மாதிரியான காட்சிகள்   என்னை மிகவும் பாதிக்கும், தூக்கத்தை இழந்து துக்கத்தோடு அலைய நேரிடும்.

சென்ற வாரம், முகநூலில் அலசி கொண்டு இருக்கும் போது இப்படி ஒரு காணொளி இது போல் எச்சரிக்கையோடு வந்தது. அதில் ஒரு நபர் நாயை ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில் அதன் மதில் சுவரின் மேல் வைத்து பிடித்து கொண்டு இருந்தார்.

நான் , அந்த எச்சரிக்கையை  சாதாரணமாக எடுத்து கொண்டு, இது பழக்க பட்ட நாய் போல் உள்ளது.. அந்த மதில் சுவரில் குதித்து ஏதாவது வித்தை காட்டும் என்று நினைத்த்து சுட்டியை அழுத்த... அந்த நாயும் தான் வாலை ஆட்டிக்கொண்டே அந்த நபருக்கு தன் மேல் உள்ள நம்பிக்கையை காட்டியது...

சில நொடிகள் தான்..

அந்த மனிதன்.. சிரித்துக்கொண்டு இருக்கைகளினாலும் அந்த நாயை தூக்கி அந்த மாடியில் இருந்து தூக்கி ஏறிய... அந்த ஜீவன் ... நாடு வானில்  .....
எனக்கோ இன்னும் நம்பிக்கை.. ஓ.. கீழே யாராவது ஒரு வலையோ அல்லது ..வேறு எதையோ வைத்து  இதை பிடிப்பார்கள் என்று தான் நினைத்தேன்... ஏன் என்றால் இந்த அயோக்கியனின் சிரிப்பு அப்படித்தான் இருந்தது.

அவ்வளவு தூரத்தில் இருந்து தள்ளப்பட்ட அந்த நாய்..  மரத்தில் அடிபட்டு... தரையில் மோதி ஒரு மரணஓலமிட்டது..

ஒரு சில நிமிடங்கள் நான் அதிர்ந்து போனேன்.

சனி, 2 ஜூலை, 2016

ஊரு ரெண்டு பட்டா ஊடகங்களுக்கும் கூத்தாடிக்கும்....

சென்ற மாதம் தலைநகரில் நடந்த படுகொலையை தொடர்ந்து " கொலையில் முடியும் காதலுக்கு முற்று புள்ளி வைக்கமுடியுமா"? என்ற தலைப்பில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது.

இந்த விவாதத்தில் ... பல சமூகநல ஆவலர்கள் பலர் இருந்தனர். அவர்கள் கூட திருஷ்டி பூசணிக்காய் போல் " மயில் சாமி " என்னும் நடிகர்.

இந்த விவாதத்தில் பேச இவரை தவிர வேறு யாருமே கிடைக்கவில்லையா? ஒரு கொடூரமான சம்பவம் நடந்து இருக்கின்றது. அதை பற்றி அதிகம் பேசுவது... YG  மஹேந்திரன் .. எஸ் வி சேகர் , குஷ்பூ... இப்போது மயில் சாமி.

தமிழ்நாட்டுக்கு கேடு காலம் தான் என்று நினைக்கின்றேன்.

சரி.. இப்போது விவாதத்திற்கு வருவோம்.. மயில் சாமியின் கருத்து ..

வெள்ளி, 1 ஜூலை, 2016

Y G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு!

உங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் "உசந்த ஜாதி"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி!உங்கள் படிப்பை என்னால் உறுதி  செய்ய முடியாவிட்டாலும் .. அந்த காலத்திலேயே "பொறியியல் பட்டம் " பெற்றவர் என்ற ஒரு கருத்து நிலவியது.

பொது இடங்களில் இத்தனை நாள் தாம் நடந்து வந்த  விதம் தம்மை ஒரு நன்னடத்தை உள்ள மனிதனாகதான் காட்டி வந்தது. இவை அனைத்தும் தாம் செய்த ஒரு ஒரு முட்டாள்தனமான காரியத்தினால் சுக்கு நூறாக போனது.

முகநூலில் யாரோ அனுப்பிய ஒரு தகவலை பகிர்ந்தேன் என்கின்றீர்கள். என்ன ஒரு யுக்தி. மஹேந்திரன் அவர்களே... யாரோ ஒருவர், தமக்கு அறிமுகமல்லாதவர் எழுதிய கருத்தை.. அதில் எனக்கு உடன் பாடு உண்டு, அதனால் அதை மற்றவர்களுக்கு பகிரும் உரிமையும் உண்டு என்று சொல்லி செய்த தவறை நியாயப்படுத்துகின்றீர்கள்.

இரண்டு வாரத்திற்கு முன் தம் அருமை நண்பர் ஆருயிர் தோழன் எஸ் வீ சேகர், இப்படி தான் மற்ற ஒரு நபரின் கருத்தை தான் எழுதியது போல் காட்டி .... வாங்கி கட்டி கொண்டாரே ..... அது தமக்கு தெரியாதா?

ஒரு உண்மையும் இல்லாத ஒரு தகவலை அதுவும் ஜாதி - மதம் - கட்சி என்று எதையும் விட்டுவைக்காமல் வந்த கருத்து.. அதில் அவசியம் இல்லாத ஒரு பெயர் வேறு..

நான் அந்த பெயரை படிக்கவில்லை, அதில் குறிப்பிட்ட மதத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் அந்த கருத்தில் எனக்கு உடைபட்டு உண்டு, அதனால்  பகிர்ந்தேன்.

என்ன ஒரு கேவலமான . "Excuse".

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...