முகநூல் நண்பர் Raj Nath தன்முகநூல் பக்கத்தில் இப்படி ஒரு கருத்தை பகிர்ந்து இருந்தார்
//நம்ம கிறிஸ்தவ மக்கள் ரொம்ப நல்லவங்க .!
எப்படினா ?
மாரியம்மன் கோவிலில் கூல் ஊத்தின குடிக்கமாட்டாங்க
பிள்ளையார் கோவிலில் சுண்டல் கொடுத்தால் வாங்கமாட்டாங்க தனக்கு தெறிந்தவர்கள் கொடுத்தால் வாங்கமட்டாங்க .....
ஆனால் ?
அவர்களுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய நண்பர்கள் நோம்பு கஞ்சியும் ,
பிரியாணியும் போட்டா
மூக்கு முட்ட சாப்பிடுராங்க.? //
அடியேன் கிருத்துவன் என்ற காரணத்தினால் அவருக்கு பதில் சொல்ல கடமை பட்டுள்ளேன்.
மாரியம்மன் கோயிலின் கூழையும், பிள்ளையார் கோயிலின் சுண்டலையும், கிறித்துவர்கள் யார் கொடுத்தாலும் உண்ணமாட்டார்கள் என்பது உண்மையே.
இதற்கு காரணம்.. இந்த உணவு மாரியம்மனுக்கு அல்லது பிள்ளையாருக்கோ படைக்கப்பட்டதால் அல்ல.., இதற்கான காரணமே வேறு.
நாங்கள் பொதுவாக அசைவ பிரியர்கள்.
நீங்கள் வேண்டுமானால் மாரியாத்தாவிற்கு கோழி சூப்பும்.. பிள்ளையாருக்கு வேறு ஏதாவது அசைவ ஐட்டமும் படைத்து விட்டு எங்களிடம் எடுத்து வாருங்கள்.
உனக்கு - எனக்கு என்று அடித்து பிடித்து சாப்பிடுவோம்.
மற்றும் நீங்கள் கூறிய கூற்றில் சொல் பிழை இல்லாவிடில் பொருள் பிழை ஒன்று உள்ளது.
//அவர்களுக்கு தெரிந்த ஒரு இஸ்லாமிய நண்பர்கள் நோம்பு கஞ்சியும் ,
பிரியாணியும் போட்டா மூக்கு முட்ட சாப்பிடுராங்க.? //
இஸ்லாமியர் கொடுக்கும் நோம்பு கஞ்சியை மூக்கு பிடிக்க யாரும் சாப்பிட முடியாது. கஞ்சி என்பது ஒரு திரவம். அதை வேண்டுமானால் தொண்டை முட்டும் வரை குடிக்கலாம்.
சரி.. இந்த நோம்பு கஞ்சியும் சைவம் தானே .. நீங்கள் தான் அசைவ பிரியராயிற்றே.. மாரியாத்தாவிற்கு வைத்த கூழை சைவம் என்று வெறுத்த நீங்கள் .. இஸ்லாமியர் செய்த நோம்பு கஞ்சை மட்டும் எப்படி குடிக்கின்றீர்கள் .. என்று நீங்கள் கேட்க நினைப்பது..
இங்கே எதிரொலிக்கின்றது.
நண்பரே.. இஸ்லாமிய நண்பர்கள் முதலில் கொடுக்கும் நோம்பு கஞ்சியை நாம் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் ... நாளை அவர்கள்.. நாம் ஏதோ டையட்டில் இருக்கின்றோம் என்று பிரியாணி அனுப்பாமல் விட்டுவிட்டால்...
நாளை மூக்கு முட்ட பிரியாணி சாப்பிடவேண்டுமென்றால் இன்று மூக்கை பிடித்து கொண்டு நோம்பு கஞ்சை குடித்தாக வேண்டும்.
இது காலத்தின் கட்டாயம்..
Jokes Apart...
நண்பரே... புனித வேதாகமத்தில் எம்பெருமான் ஏசுபிரான் கூறுவது ... :
மத்தேயு 15ம் அதிகாரத்தில் ...
பின்னர் ஏசு...
11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.
12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரோ என்றார்கள்.
13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும்.
14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
15 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான்.
16 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா?
17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள்ளே சென்று பின்னர் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.
இந்த வார்த்தைகளை சரியாக புரிந்து கொள்ளாதவர்கள்.. தான்.. இந்த கூழையும் , சுண்டலையும் வேண்டாம் என்று சொல்வார்கள்.
என்ன நான் சொல்ல வருவது ... புரிந்ததா?
நன்றி.
பின் குறிப்பு :
சின்ன வயதில் இந்து நண்பர்கள் வீட்டில் இருந்து .... "மாவிளக்கு"ன்னு ஒரு இனிப்பு வரும். அதன் ருசியே தனி. அதன் மேல் உள்ள விருப்பத்தினால் நான் என் நபர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொண்டேன். அம்புட்டு ருசி.
இதுல ஒரு விஷேஷம் பாருங்க. இதே "மாவிளக்க" சில நண்பர்கள் "விளக்குமா" ன்னு சொல்லுவாங்க. அது ஏன்னு கொஞ்சம் விளக்குமாறு... கேட்டு கொண்டு...விடை பெறுகிறேன்.
ஸ்தோத்திரம்...விசு சார்...
பதிலளிநீக்குகூழானாலும் குளித்துக்குடி என்பதால் குளித்துவிட்டு இந்த கூழை குடிக்கவேண்டுமே என்ற அழுப்பாய் கூட இருக்கலாம்...
மாரியாத்தாவும்,மேரியாத்தாவும், இதை அறியாதவன் வாயில மண்ணு...
என்னமோ போங்க திடீர்னு உணர்ச்சிவசப்பட வைத்துவிடுகிறீர்கள்..
நாங்கல்லாம் கொழுக்கட்டை ,கூழ் பஞ்சாமிர்தம் திருப்பதி laddoo எது கிடைச்சாலும் சாப்பிடுவோம்
பதிலளிநீக்குசிலர் வாங்கி உண்பார்கள்! சிலர் மறுத்துவிடுவார்கள்! அது அவர்களது விருப்பம்! கட்டாயப்படுத்துவதோ துவேஷம் கொள்வதோ தவறு!
பதிலளிநீக்குபிதாவே, (விதண்டாவாதம் பேசும்)இவர்களை மன்னியும்.
பதிலளிநீக்குமாரியாத்தா.... sorryயாத்தா..
கோ