ஜூலை 4 ம் தேதி அமெரிக்கர்களுக்கு மிகவும் பிடித்த நாள் ... ஏன் என்றால் இது அமெரிக்காவின் பிறந்தநாள். இந்த நாளை இங்கே மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். நண்பர்கள், உணவு, ஆட்டம், பாட்டம் என்று துவங்கி வான வேடிக்கையோடு இந்நாள் முடியும்.
அதுவும் இந்த நாள் வியாழன், வெள்ளி அல்லது திங்கள் செவ்வாயில் வந்தால் வார இறுதி மூன்று அல்லது நான்கு நாட்களாக மாற்றப்பட்டு கொண்டாட்டம் தான்.
ஒவ்வொரு நகரிலும் இந்த வானவேடிக்கை போட்டி போட்டு கொண்டு நடக்கும். ஜூலை 4 ம் தேதி 9 மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட அரை மணி நேரம் செல்லும்.
சில வருடங்களுக்கு முன் இந்நாளை அடியேன் சொதப்பியதால் (சொதப்பலை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த வருடம் மிகவும் ஜாக்கிரதையாக, முன்னேற்பாடாக எங்கள் ஊர் கடற்கரையில் நீரின் மேல் அமைந்துள்ள பாலத்தில் (Pier ) நடக்க இருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எல்லாம் தயார்.
அங்கே என்ன நடந்தது எப்படி நடந்தது என்று புகை படத்துடன் இன்னொரு நாள் பார்ப்போம்.
என் மூத்த ராசாத்தியை பெயர் சொல்லி ஒரு பெண் அழைத்தாள். அனைவரும் திரும்பி பார்த்தோம்.
ஹாப்பி ஜூலை 4த்... வெல்கம் டு யூ ஆல். ஹவ் அ நைஸ் டைம் ....
என்று அந்த பெண் கூற...
அடியேன் .. என் ராசாத்தியிடம்..
மகள்.. இந்த பெண் உன்னுடன் படிப்பவள் தானே ?
ஆமா டாடி , எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க?
இந்த பெண்ணை அடிக்கடி பாத்து இருக்கேன்.
எங்கே.. .?
அது தான் சரியா நினைவில் இல்ல..
நான் சொல்லட்டா?
சொல்லு..
இவ தான் எங்க பள்ளியின் டென்னிஸ் கேப்டன் , நீங்க தான் எங்க பள்ளிக்கூடம் விளையாட்டுனா முதல் வரிசையில் வந்து உக்காந்துடுவீங்களே.. அங்கே பார்த்து இருப்பீங்க..
ஆமாம் மகள்.. அவளே தான்.. அது சரி, இவளுடைய அப்பா தானே நம்ம ஊர் மேயர் ..
மகள் என்னதான் சொல்லு, இந்த பிள்ளைக்கு ஒரு சலுயூட் போடணும்..
ஏன்...?
பள்ளி கூடத்தில் டென்னிஸ் கேப்டன் ஆகுறது என்ன சின்ன விஷயமா?
ஹெலோ.. வாட் அபௌட் மி.. சல்யூட் மி டூ... அதே பள்ளியில் தான் நான் கோல்ப் டீம் கேப்டன்..
ஆமா இல்ல.. சல்யுட்ஸ் டூ போத் ஆப் யூ. சரி இந்த பிள்ளை எப்படி இங்க? அப்பா அம்மா இல்லாம?
ஐயோ .. அவ விருந்துக்கு வரல.. இன்னைக்கு வேலைக்கு வந்து இருக்கா?
என்னாது.. வேலைக்கா?
ஆமா டாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே வேலைக்கு வந்தால் இரட்டை சம்பளம்..
ஏன்...
என்ன வேலை..?
வெயிட்ரஸ்...
அட பாவி.. மேயர் பொண்ணு வெயிட்ரஸா ?
அதுல என்ன தப்பு..?
சரி... அவ வேலைக்கு போரா? நீ ஏன் போகல?
டாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே விருந்து இருக்கு, எங்கேயும் போகாதேன்னு நீங்க தானே சொன்னீங்க..
ஆமா இல்ல...
என்று சொல்லி அங்கே நடந்து கொண்டு இருந்த ஆட்டம் பாட்டத்தில் கவனத்தை திருப்பினேன்.
இருக்கையின் இருபுரமும் .. கடல்.. குடும்பம் குடும்பமாக அனைவரும் மகிழ்ச்சியாய் இருப்பதை பார்க்கையில் மனது குதுகலித்தது.
இடை இடையே இந்த பெண் எங்களிடம் வந்து .. .குடிக்க .. சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அன்பு தொல்லை...
மேயர் மகளை வேலை வாங்குவதா ? எதுவுமே வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டு எனக்கு தேவையானவைகளை நானே எடுத்து கொண்டேன்.
சில நிமிடம் கழித்து..ராசாத்தியிடம் ..
எவ்வளவு பெரிய இடத்து பெண்.. . இவ்வளவு சிம்பிளாக வேலை செய்து கொண்டு.. நீயும் அவளை வேலை வாங்குகின்றாயே.. அது சரி.. அவள் என்ன உன்னை மட்டும் அவ்வவளவு ஸ்பெஷலாக கவனிக்கின்றாள்..?
என்று கேட்க..
டாடி.. போன வெள்ளி கிழமை.. "கோல்ப் கிளப்பில்" ஒரு விருந்து. அதற்கு அவள் அவளுடைய குடும்பத்தோடு வந்து இருந்தாள். அன்று அவர்கள் மேசைக்கு அங்கே நான் தான் வெயிட்ரஸ்.. நான் அவங்கள நல்ல கவனித்தேன்.. அதுக்கு தான் அவள் இப்ப நம்ம குடும்பத்தை நல்லா கவனிக்கிறா...
மனதில்...
என்ன ஒரு சமூதாயம்.. 16 வயது சிறுமிகள் - பள்ளிக்கூட மாணவிகள்.. கோடை விடுமுறையில் தங்களால் முடிந்த வேளையில் .. ஏற்ற தாழ்வு மனது இல்லாமல்.... பணக்காரன் - ஏழை வித்தியாசம் இல்லாமல் .. ஒருவருக்கொருவரை உற்சாக படுத்தி கொண்டு...
இருக்கையில்.. அந்த பெண் அருகில் வந்து..
லாஸ்ட் கால் பார் ட்ரிங்க்ஸ் அண்ட் புட்... கிச்சன் வில் கிளோஸ் நௌ.
என்று சொன்னாள்..
நன்றி என்று சொல்லி நாங்கள் அமர....சில நிமிடங்களில்.. அவள் தன் உணவை எடுத்து கொண்டு எங்கள் மேசைக்கு வந்து ..
கேன் ஐ ஜாயின் யூ ...
என்று என் மகளிடம் கேட்க..
அவளும்.. ஒரு நாற்காலியை இழுத்து போட...
நானோ..ராசாத்தியின் காதை கடித்தேன்
மகள்.. இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து விட்டு இங்கேயே சாப்பிடுகின்றாளே.. இன்று சம்பாதித்தது எல்லாம் இதுக்கே சரியாக இருக்குமே..
டாடி. ஷி டசன்ட் ஹவ் டு பே. இட்ஸ் பிரீ பார் தே ஒர்க்கர்ஸ்..
மனதில்..
அட பாவி மகளே.. இதை முந்தியே சொல்லி இருக்க கூடாதா? உன்னையும் வேலைக்கு அனுப்பி இருப்பேனே.. அநியாயத்திற்கு ஒரு கூடுதல் டிக்கட் வாங்கிட்டேனே.. என்று புலம்புகையில்..
என்ன டாடி.. மனதில் .. எனக்கு ஏன் டிக்கட் வாங்கினோம்ன்னு யோசிக்கிறீர்களா...
சீசீ...அப்படி இல்ல..
என்று நான் புளுக ..
தேசிய கீதம் முழங்க, அனைவரும் எழுந்து நிற்க...பாடல் முடிந்ததும் வான வேடிக்கை ...
God Bless America...
பின் குறிப்பு :
டாடி.. மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.
வாட் டு யூ மீன்?
போன வெள்ளி கிழமை அவங்க அப்பா எனக்கு நல்ல டிப்ஸ் தந்தார். அதனால நீங்களும்..
எவ்வளவு தந்தார்..? அதை என்ன பண்ண?
அதுவா முக்கியம்..? மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.
கண்டிப்பாக மகளே .. என்று என்னால் முடிந்ததை அந்த பெண்ணிடம் கொடுத்து அனைவரும் மகிழ்ந்தோம்.
Only in America..."In God We Trust and One Nation &Under God..."
அதுவும் இந்த நாள் வியாழன், வெள்ளி அல்லது திங்கள் செவ்வாயில் வந்தால் வார இறுதி மூன்று அல்லது நான்கு நாட்களாக மாற்றப்பட்டு கொண்டாட்டம் தான்.
ஒவ்வொரு நகரிலும் இந்த வானவேடிக்கை போட்டி போட்டு கொண்டு நடக்கும். ஜூலை 4 ம் தேதி 9 மணிக்கு ஆரம்பித்து கிட்டதட்ட அரை மணி நேரம் செல்லும்.
சில வருடங்களுக்கு முன் இந்நாளை அடியேன் சொதப்பியதால் (சொதப்பலை படிக்க இங்கே சொடுக்கவும்) இந்த வருடம் மிகவும் ஜாக்கிரதையாக, முன்னேற்பாடாக எங்கள் ஊர் கடற்கரையில் நீரின் மேல் அமைந்துள்ள பாலத்தில் (Pier ) நடக்க இருக்கும் விருந்தில் கலந்து கொள்ள எல்லாம் தயார்.
அங்கே என்ன நடந்தது எப்படி நடந்தது என்று புகை படத்துடன் இன்னொரு நாள் பார்ப்போம்.
ஆண்டவன் படைச்சான்
மாலை ஐந்து மணிக்கு பாலத்தை அடைந்தோம். கடற்கரையில் ஆயிரக்கணக்கோர் இருக்க, கொடுத்து வைத்த சிலர் ( ஆண்டவன் படைச்சான் .. பாணியில்) எங்களுக்காக தயார் பண்ணி வைத்து இருந்த மேசையை நோக்கி நடக்கையில்...என் மூத்த ராசாத்தியை பெயர் சொல்லி ஒரு பெண் அழைத்தாள். அனைவரும் திரும்பி பார்த்தோம்.
ஹாப்பி ஜூலை 4த்... வெல்கம் டு யூ ஆல். ஹவ் அ நைஸ் டைம் ....
என்று அந்த பெண் கூற...
அடியேன் .. என் ராசாத்தியிடம்..
மகள்.. இந்த பெண் உன்னுடன் படிப்பவள் தானே ?
ஆமா டாடி , எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க?
இந்த பெண்ணை அடிக்கடி பாத்து இருக்கேன்.
எங்கே.. .?
அது தான் சரியா நினைவில் இல்ல..
நான் சொல்லட்டா?
சொல்லு..
இவ தான் எங்க பள்ளியின் டென்னிஸ் கேப்டன் , நீங்க தான் எங்க பள்ளிக்கூடம் விளையாட்டுனா முதல் வரிசையில் வந்து உக்காந்துடுவீங்களே.. அங்கே பார்த்து இருப்பீங்க..
ஆமாம் மகள்.. அவளே தான்.. அது சரி, இவளுடைய அப்பா தானே நம்ம ஊர் மேயர் ..
இருக்கையின் இருபுறமும் கடற்கரை...
ஆமா டாடி..மகள் என்னதான் சொல்லு, இந்த பிள்ளைக்கு ஒரு சலுயூட் போடணும்..
ஏன்...?
பள்ளி கூடத்தில் டென்னிஸ் கேப்டன் ஆகுறது என்ன சின்ன விஷயமா?
ஹெலோ.. வாட் அபௌட் மி.. சல்யூட் மி டூ... அதே பள்ளியில் தான் நான் கோல்ப் டீம் கேப்டன்..
ஆமா இல்ல.. சல்யுட்ஸ் டூ போத் ஆப் யூ. சரி இந்த பிள்ளை எப்படி இங்க? அப்பா அம்மா இல்லாம?
ஐயோ .. அவ விருந்துக்கு வரல.. இன்னைக்கு வேலைக்கு வந்து இருக்கா?
என்னாது.. வேலைக்கா?
ஆமா டாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே வேலைக்கு வந்தால் இரட்டை சம்பளம்..
ஏன்...
மேசை அலங்காரம்
மத்தவங்க எல்லாம் விருந்தில் இருப்பாங்க.. அதனால் இங்கே வேலைக்கு ஆள் கிடைப்பது கஷ்டம்.என்ன வேலை..?
வெயிட்ரஸ்...
அட பாவி.. மேயர் பொண்ணு வெயிட்ரஸா ?
அதுல என்ன தப்பு..?
சரி... அவ வேலைக்கு போரா? நீ ஏன் போகல?
டாடி.. ஜூலை 4 ம் தேதி இங்கே விருந்து இருக்கு, எங்கேயும் போகாதேன்னு நீங்க தானே சொன்னீங்க..
ஆமா இல்ல...
என்று சொல்லி அங்கே நடந்து கொண்டு இருந்த ஆட்டம் பாட்டத்தில் கவனத்தை திருப்பினேன்.
விமான வேடிக்கை.. இந்த விமான வேடிக்கையின் தலைமை பைலட் நம் மண்ணின் மைந்தன் .. இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர் என்றதும்..கரவொலி விண்ணை பிளந்தது.. அவருக்கே கூட கேட்டு இருக்கும் .
இடை இடையே இந்த பெண் எங்களிடம் வந்து .. .குடிக்க .. சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அன்பு தொல்லை...
மேயர் மகளை வேலை வாங்குவதா ? எதுவுமே வேண்டாம் என்று நான் சொல்லிவிட்டு எனக்கு தேவையானவைகளை நானே எடுத்து கொண்டேன்.
சில நிமிடம் கழித்து..ராசாத்தியிடம் ..
எவ்வளவு பெரிய இடத்து பெண்.. . இவ்வளவு சிம்பிளாக வேலை செய்து கொண்டு.. நீயும் அவளை வேலை வாங்குகின்றாயே.. அது சரி.. அவள் என்ன உன்னை மட்டும் அவ்வவளவு ஸ்பெஷலாக கவனிக்கின்றாள்..?
என்று கேட்க..
சூரியன் மறைந்து அந்தகாரம் சூழ்ந்தது..
மனசுக்குள் மத்தாப்பு..
என் மகளோ...டாடி.. போன வெள்ளி கிழமை.. "கோல்ப் கிளப்பில்" ஒரு விருந்து. அதற்கு அவள் அவளுடைய குடும்பத்தோடு வந்து இருந்தாள். அன்று அவர்கள் மேசைக்கு அங்கே நான் தான் வெயிட்ரஸ்.. நான் அவங்கள நல்ல கவனித்தேன்.. அதுக்கு தான் அவள் இப்ப நம்ம குடும்பத்தை நல்லா கவனிக்கிறா...
மனதில்...
என்ன ஒரு சமூதாயம்.. 16 வயது சிறுமிகள் - பள்ளிக்கூட மாணவிகள்.. கோடை விடுமுறையில் தங்களால் முடிந்த வேளையில் .. ஏற்ற தாழ்வு மனது இல்லாமல்.... பணக்காரன் - ஏழை வித்தியாசம் இல்லாமல் .. ஒருவருக்கொருவரை உற்சாக படுத்தி கொண்டு...
இருக்கையில்.. அந்த பெண் அருகில் வந்து..
லாஸ்ட் கால் பார் ட்ரிங்க்ஸ் அண்ட் புட்... கிச்சன் வில் கிளோஸ் நௌ.
என்று சொன்னாள்..
நன்றி என்று சொல்லி நாங்கள் அமர....சில நிமிடங்களில்.. அவள் தன் உணவை எடுத்து கொண்டு எங்கள் மேசைக்கு வந்து ..
கேன் ஐ ஜாயின் யூ ...
என்று என் மகளிடம் கேட்க..
அவளும்.. ஒரு நாற்காலியை இழுத்து போட...
நானோ..ராசாத்தியின் காதை கடித்தேன்
மகள்.. இவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்து விட்டு இங்கேயே சாப்பிடுகின்றாளே.. இன்று சம்பாதித்தது எல்லாம் இதுக்கே சரியாக இருக்குமே..
டாடி. ஷி டசன்ட் ஹவ் டு பே. இட்ஸ் பிரீ பார் தே ஒர்க்கர்ஸ்..
மனதில்..
அட பாவி மகளே.. இதை முந்தியே சொல்லி இருக்க கூடாதா? உன்னையும் வேலைக்கு அனுப்பி இருப்பேனே.. அநியாயத்திற்கு ஒரு கூடுதல் டிக்கட் வாங்கிட்டேனே.. என்று புலம்புகையில்..
என்ன டாடி.. மனதில் .. எனக்கு ஏன் டிக்கட் வாங்கினோம்ன்னு யோசிக்கிறீர்களா...
சீசீ...அப்படி இல்ல..
என்று நான் புளுக ..
தேசிய கீதம் முழங்க, அனைவரும் எழுந்து நிற்க...பாடல் முடிந்ததும் வான வேடிக்கை ...
வான வேடிக்கை ...
அற்புதமான நாள்.God Bless America...
பின் குறிப்பு :
டாடி.. மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.
வாட் டு யூ மீன்?
போன வெள்ளி கிழமை அவங்க அப்பா எனக்கு நல்ல டிப்ஸ் தந்தார். அதனால நீங்களும்..
எவ்வளவு தந்தார்..? அதை என்ன பண்ண?
அதுவா முக்கியம்..? மேக் சூர், யூ டிப் ஹர் வெல்.
கண்டிப்பாக மகளே .. என்று என்னால் முடிந்ததை அந்த பெண்ணிடம் கொடுத்து அனைவரும் மகிழ்ந்தோம்.
Only in America..."In God We Trust and One Nation &Under God..."
நாங்கள் குடுமபத்துடன்
பதிலளிநீக்குஜுலை 3 மற்றும் 4ஆம் நாள்
வாஷிங்டனில் இருந்தோம்
அன்று இரவு நியூஜெர்சியில்
வான வேடிக்கைகளைக் கண்டு
இரசித்தோம்
மிகச் சிறப்பாக இருந்தது
தங்கள்அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..
வாழ்த்துக்களுடன்...