சென்ற மாதம் தலைநகரில் நடந்த படுகொலையை தொடர்ந்து " கொலையில் முடியும் காதலுக்கு முற்று புள்ளி வைக்கமுடியுமா"? என்ற தலைப்பில் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் விவாதம் நடந்தது.
இந்த விவாதத்தில் ... பல சமூகநல ஆவலர்கள் பலர் இருந்தனர். அவர்கள் கூட திருஷ்டி பூசணிக்காய் போல் " மயில் சாமி " என்னும் நடிகர்.
இந்த விவாதத்தில் பேச இவரை தவிர வேறு யாருமே கிடைக்கவில்லையா? ஒரு கொடூரமான சம்பவம் நடந்து இருக்கின்றது. அதை பற்றி அதிகம் பேசுவது... YG மஹேந்திரன் .. எஸ் வி சேகர் , குஷ்பூ... இப்போது மயில் சாமி.
தமிழ்நாட்டுக்கு கேடு காலம் தான் என்று நினைக்கின்றேன்.
சரி.. இப்போது விவாதத்திற்கு வருவோம்.. மயில் சாமியின் கருத்து ..
நான் காதல் திருமணம் தான் செய்தவன். என் மனைவியை நான் திருமணம் செய்வதற்கு முன் ஐந்து பேரை காதலித்து இருக்கின்றேன். என் மனைவியை நான் ஐந்தாவதாக தான் காதலித்தேன் (கணக்கு குமாரசாமி கணக்கு போல் இருக்கு, அது வேற கதை.)
ஐந்தாவதாக என்னை காதலித்த பெண்ணை நான் மனம் முடித்து கொண்டேன்.
இந்த கொலையாளி ராம்குமார் கோபபட்டு இருந்தது போல் நான் கோப பட்டு இருந்து இருந்தால் .. நான்கு பேரை ( நாளா .. ஐஞ்சா ..) கொலை செய்து இருக்கலாமே.. அது தவறு..
நான் காதலிப்பவரை திருமணம் செய்வதை விட நம்மை காதலிப்பவரை திருமணம் செய்ய வேண்டும்..
அட பாவி.. ... இந்த ஆசாமியை எப்படி தொலைக்காட்சியில் பேச வைக்கின்றார்கள்..
மயில் சாமி அவர்களே....
ஐந்து முறை காதலித்தீர்களா...? அட பாவி.. ஐம்பது வயதிற்கும் மேலே ஆனபின்னும் காதல் என்றால் என்னவென்றே தெரியாமல் வாழ்ந்து இருக்கிறாயே...
காதல் என்பது .. ஒரு மனிதனுக்கு வாழ்வில் ஒரே ஒரு முறை தான் வரும். இவள் கிடைக்கவில்லை என்றவுடன்.. அடுத்தவள்.. அவள் இல்லவள் என்றவுடன் அடுத்தவள் என்று.. எவளாவது என்னை விரும்புவாளா என்பது காதல் அல்ல.. .அதற்கு வேறு வார்த்தை உண்டு.
சிலபேர் திருமணத்திற்கு முன் யாரையுமே காதலிக்காதவர்கள். கருமமே கண்ணாயிரம் என்று நான் உண்டு என் வேலை உண்டு என்று இருந்தவர்கள். இவர்கள் கொடுத்த வைத்த ஆட்கள். இவர்களுக்கு கல்யாணம் செய்தவைரையே காதலிக்கும் பாக்கியம்.
திருமணத்திற்கு முன் காதலித்த சில பேருக்கு அந்த காதல் மணமாக அமைந்துவிடும் .சிலருக்கு அமையாது. அப்படி அமையாதவர்கள் கூட வேறு ஒரு ஆணையோ பெண்ணையோ மணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களுக்கு அவர்களின் துணையின் மேல் .. பாசம் இருக்கும், நேசம் இருக்கும், ஸ்பரிசம் இருக்கும்.. காமம் இருக்கும்.. தாக்கம் இருக்கும் ..தாகம் இருக்கும்... ஆசை இருக்கும்... மோகம் இருக்கும் ... துணைக்காக உயிரே தருவார்கள்...
இருந்தாலும்... காதல் இருக்காது ..
ஏன் என்றால்... காதல் என்பது ஒருவனுக்கு ஒருத்திக்கு ஒரு முறை தான் வரும்.
ஐந்து பேரை காதலித்தேன் என்று சொல்லும் உங்களுக்கு அது புரியாது.
அடுத்து... என்னை காதலிக்காதலால் ... நான் அந்த நான்கு பேரை கொன்று இருக்கலாமா?
என்ன ஒரு அர்த்தமில்லாத கருத்து. கொன்று தான் பாரேன். இந்த பேச்சு அறியாமையின் உச்சக்கட்டம். இவரை எப்படி பொதுமேடையில் பேச அழைக்கின்றார்கள் .... எல்லாம் நம் தலைவிதி...
அடுத்து.. நடுவில்.... அனைவரையும் கவரும்படி.. ஒரு தத்துவம்...
"நான் காதலிப்பவரை திருமணம் செய்வதை விட நம்மை காதலிப்பவரை திருமணம் செய்ய வேண்டும்.."
அட பாவி.. "இடம் பொருள் ஏவல்" என்றால் கிலோ என்னவென்று கேட்பீர் போல் உள்ளதே.. இந்த கருத்தை சொல்லும் இடமா இது.
தற்போது வரும் செய்திகளை கேட்டால்.. இது ஒரு தலை காதல் போலவும்.. அந்த பெண் தான் காதலை ஏற்காதலால் தான் இவர் இந்த கொலையை செய்தார் என்றும் ஒரு கருத்து நிலவுகின்றது.
மயில் சாமியின் கருத்து படி பார்த்தால்.. அந்த ஆண் தான் இவளை காதலித்தாரே .. அதனால்.. இந்த பெண் தன்னை காதலித்த இந்த ஆணின் காதலை ஏற்று கொண்டு மணந்து இருந்தால் இந்த கொலையே நடந்து இருக்காதே...
என்ன ஒரு அர்த்தமில்லா பேச்சு...
நெஞ்சு பொறுக்குதில்லையே...
ஊடங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்.. தயவு செய்து இந்த மாதிரி சமூக விஷயங்களுக்கு கூத்தாடிகளை அழைத்து வராதீர்கள்! இந்த கூத்தாடிகளினால் நாட்டை இழந்தோம், இழந்து கொண்டு இருக்கின்றோம்.. இவர்கள் கூத்தாட வந்தவர்கள்.. கூத்தாடிவிட்டு போகட்டும்.
இவர்களின் கருத்து நமக்கு எதற்கு...?
நன்றாக படித்தவர்கள், சமூக நலவாதிகள், தன்னாலவர்கள் போன்றோரை அழைத்து அவர்களின் கருத்தை கேளுங்கள்.. கூத்தாடிகள் ... கூத்தாடினால் மட்டும் போதும்.

மயில்சாமி என்னத்தையோ உளறித் தொலைக்கட்டும், ஆனால் உங்கள் கருத்தில் வேறு படுகிறேன்.
பதிலளிநீக்குகாதல் என்பது வாழ்வில் ஒரே ஒரு முறை தான் வரும் என்பதெல்லாம் கொஞ்சங் கூட ஏற்புடையதன்று. நீங்க கடைசியா பார்த்த படம் "பூவே உனக்காக"வா?! அதுல தான் "காதல்ன்றது செடியில் பூக்குற பூ.., உதிர்ந்தா அதே பூ திரும்ப மலராது.."ன்னு பாட்டனி தத்துவம் ஒன்னு வரும். (அதே பூ எப்படி வரும்!! இன்னொரு பூ தானே வரும்..!!)
மேலும் நீங்க சொல்றாப்புல பாத்தா யாரும் மறுமணமே செய்துகொள்ள முடியாது போல..!!
//துணையின் மேல் .. பாசம் இருக்கும், நேசம் இருக்கும், ஸ்பரிசம் இருக்கும்.. காமம் இருக்கும்.. தாக்கம் இருக்கும் ..தாகம் இருக்கும் ஆசை இருக்கும்... மோகம் இருக்கும் ...என் தான் துணைக்காக உயிரே தருவார்கள்... இருந்தாலும்... காதல் இருக்காது..//
- பெரும்பான்மையானவர்கள் போல் உங்களுக்கும் அதே குழப்பம். காதல்-ன்ற வார்த்தையே தமிழில் கிடையாது. காமம் மட்டுமே இலக்கியங்களில் இருந்து தொன்று தொட்டு வருகிறது. காமத்திலே தலைவன்-தலைவி இருவருக்குமுண்டான அன்பு, பாசம், நேசம், ஸ்பரிசம், கலவி, ஊடல், கூடல் மோகம், தாகம், தாக்கம் எஸ்ட்றா, எஸ்டரா அனைத்தும் அடங்கும்.
பிற்காலத்தில் வந்த புதுக் கவிஞர்கள், சினிமாக் கவிஞர்கள், குமுதவிகடகுங்கும கவிஞர்கள் எல்லாம் சேர்ந்து "காமம்"ன்னா ஜலபுலஜங்ஸ்ன்னும், "காதல்"ன்னா புனிதம்ன்னும் புதுசா கண்டுபுடிச்சு அடிச்சு விட நாமளும் சேர்ந்து ஜோதியில் ஐக்கியமாகிட்டோம்..!!
http://www.nambalki.com/2016/07/blog-post_3.html
இன்றைய நம்பள்கி தளத்தில் உள்ள வீடியோவைப் பாருங்களேன்.., காமரூன் காரணப் பெயரில் உங்களுக்கான விளக்கம் உள்ளது.
அம்பி.... எத்தனை முறை சொல்றது.....நான் படம் பாக்குறதில்லேன்னு.. Dude... Thanks for dropping by, thats my thought and I stand by it. Shall we agree to disagree....
பதிலளிநீக்குha ha ha
நீக்குவள்ளுவரே காமத்துப்பால் தானுங்க எழுதியிருக்கார்.., காதல்பால் இல்லையே!?
`காம நோயுற்று அதனால் துயர் பொறுக்கல்லேன்..'
'காமம் ஒழிவ தாயினும் யாமத்துக் கருவி மாமழை வீழ்ந்தென அருவி...'
'நோய் அலைக்கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண் மகற்கு அமையும்..'
'...ஊர்துஞ்சு யாமமும் விடியலும் என்று இப் பொழுது இடைதெரியின் பொய்யே காமம்'
'...தீப்புனல் நெரிதா வீந்து உக்கா அங்கு தாங்கும் அளவைத் தாங்கி காமம் நெரிதரக் கைந் நில்லாதே...'
இதெல்லாம் குறுந்தொகை, கலித்தொகை வகையறா பாடல் வரிகள்...
இந்த காதல், ஒத்த ரோசா சமாச்சரமெல்லாம் இதுல இல்லீங்கோவ்...!!
மறுபடியும் சொல்றேன், i strongly wrangle with this post!!
விசு,
பதிலளிநீக்குகாதல் பற்றிய உங்கள் பார்வை இன்னும் நமது தமிழ் சினிமாவிலிருந்து விலகாமல் இருக்கிறதே? ஒரு முறைதான் காதல் வரும் என்று சொல்வது சினிமாக்காரர்களின் புளுகு. அவன் ஐந்து தடவை கல்யாணம் செய்து கொள்வான். வெளிப்படையாக தெரியாமல் குடும்பம் நடத்துவான். ஆனால் தான் எடுக்கும் படங்களில் மட்டும் கற்பு, காதல், புனிதம், என்று பார்க்கிறவர்களுக்கு பாடம் நடத்துவான். இதை நம்பியே நமது பெண் வர்க்கம் மறுமணம் என்ற வார்த்தையை குறித்து அஞ்சுகிறது. கணவன் என்னத்தை செய்தாலும் அவனை விட்டுப் போகாதே என்ற போனஸ் உபதேசம் வேறு. நேற்று வந்த இறைவி என்ற கருமம் கூட இதே கருத்தை சொன்னது. இவனுக நம்மை யோசிக்கவே விடமாட்டாங்க.
இவனுக சொல்றத எல்லாம் இன்னுமா நம்பிகிட்டு இருக்கீங்க?
காரிகன்.. படத்தை பார்த்து என் கருத்தை வளர்த்தவன் அல்ல நான். இது என் சொந்த கருத்து..
நீக்குஊடகங்களுக்கு பரபரப்பான செய்தி வேண்டும்! அதற்காக யாரை வேண்டுமானாலும் அழைத்து கருத்து கேட்டு இப்படி அசிங்கபடுத்தி கொள்கின்றது!
பதிலளிநீக்குஇந்த மாதிரி நிகழ்ச்சிகளே கூத்தாடித்தனமாத்தான் இருக்கும்....
பதிலளிநீக்குBRO I AM SURPRISED BY YOUR USAGE OF HE WORD ambi IN UR REPLY TO MALAR
பதிலளிநீக்குsoon all will be using the following words in ur blogs
BANGALI MACCHHAN MACCHI ELE OYY YYE etc