ஞாயிறு, 25 அக்டோபர், 2015

டிங்கிரி டிங்காலே .... மீனாக்ஷி.. டிங்கிரி டிங்காலே ...

சனியும் அதுவுமா மதியம் அதுவுமா  அம்மணியும் கண்மணிகளும் வெளியே சென்ற இருந்த நேரம். வெளியே சிறிய மேகமூட்டம். இல்லத்தில் அமர்ந்து, நமக்கு பிடித்த பழைய பாடல்கள் சிலவற்றை கேட்கலாம் என்று கணினியை தட்டினேன்.

பொதுவாகவே இந்த மாதிரி பாடல்கள் கேட்க்க ஆரம்பித்தால் சந்திரபாபு அவர்களின் " பம்பர கண்ணாலே" பாடல் தான் முதலில் வரும். அந்நாள் இம்முறை.. அந்த பாடலுக்கு பதில் சந்திரபாபுவின் மற்றொரு பாடலான டிங்கிரி டிங்காலே என்று தட்டினேன்.

Picture Courtesy : Google

பாடல் பார்த்த எனக்கு ஆச்சரியம். இது சந்திரபாபுவின் பாடல் அல்ல. இது 1958ல்  இலட்சிய நடிகர் SSR  நடித்த "அன்பு எங்கே" என்ற படத்தின் பாடல்.  வேதா அவர்களின் இசையில் TMS  பாட, SSR  ஆடி பாடி நடித்த பாடல். இந்த பாடலை எழுதிய ஆசிரியர்  என்று தெரியவில்லை (இங்கே தான் நண்பர் காரிகனின் உதவி நமக்கு தேவை படுகின்றது).


1958ல் "உலகம் போகும் போக்கை பாரு"என்று நக்கலாக எழுதி கலாய்த்துள்ளார். இப்போது இருந்து இருந்தால் இந்த பாடலை எப்படி எழுதி இருப்பாரோ ?

இந்த பாடலில் பிடித்த சில வரிகள்.

"அதிகமாகப் படிச்சுப் படிச்சு மூளை கலங்கிப் போச்சு
அணுகுண்டைத் தான் போட்டுகிட்டு அழிஞ்சு போகலாச்சு"

என்னே ஒரு உண்மை!

மற்றும் சில வரிகள் ...

'கறியும் கூட்டும் சோறும் தின்ன மாட்டார் இந்த மைனர்
காஞ்சு போன ரொட்டித் துண்டும் சூப்பும் இவரு டின்னர்'

நல்ல வேளை இந்த பாடல் அந்த காலத்தில் வந்தது. இந்தகாலத்தில் 'கறி" என்று சொன்னதால் இந்த பாடலை தடை செய்ய சொல்லி பல கட்சிகள் கிளம்பி இருக்கும்.

இன்னொரு வரி ...

'அப்பன் பாட்டன் ஆஸ்தியெல்லாம் சிகரெட்டாக மாறி
ஐயா வாயில் புகையுது பார் ஐயம் வெரி சாரி"



இந்த பாடல் முழுவதும் நிறைய நக்கல். தமிழ் உச்சரிப்பு மன்னன் SSR  ஆட்டதிலேயும் நிபுணர் என்பதை இன்று தான் அறிந்தேன். அவர் மட்டும் அல்லாமல் இந்த பாடலில் வரும் மற்ற நடன கலைஞர்கள் மிகவும் அற்புதமாக நடனம் ஆடி உள்ளனர். மொத்த பாடலுமே மிகவும் ரசிக்க தக்க முறையில் படமெடுக்க பட்டுள்ளது.

மொத்த பாடலும் கிட்டதட்ட ஐந்து நிமிடங்கள் போகும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த பாடலை கூர்ந்து கவனித்து பார்த்தால் இன்னொரு விஷயம் புரியும். மொத்த பாடலிலும் மொத்தம் 5 அல்லது 6 முறை தான் எடிட் செய்ய பட்டு இருக்கும்.  அவ்வளவு அழகான அருமையான உழைப்பு.  பாராட்டியே ஆக வேண்டும்.

நீங்களும் ரசித்து பாருங்களேன்.

இந்த பாடலை யு டூபில் தந்த வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.




7 கருத்துகள்:

  1. விசு,

    ஒரு நல்ல கருத்தான பாடலை விவாதித்ததற்கு பாராட்டுக்கள். இந்தப் பாடலை இயற்றியது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். வேறு யார் இப்படி எழுத முடியும்?

    பதிலளிநீக்கு
  2. ரசிக்க வைத்த பாடல்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல் பட்டுக்கோட்டையாரின்...

    7 இடங்கள் எடிட்டிங்க் அப்படித்தான் தெரிகின்றது அதுதான் ஷாட்ஸ்...அதுவும் ஷாட்கள் எல்லாம் எப்படி இவ்வளவு அழகாக ஒரே ஷாட் பல நிமிஷங்கள் ஷாட்ஸும் அதே போன்று கன்டினியுட்டி ஆஃப் ஷாட்ஸ் எல்லாம் அழகு...டெக்னிகல் டெவெலப்மென்ட் அவ்வளவாக ஆகாத நாட்கள்..அருமை..

    பதிலளிநீக்கு
  4. அருமையான ஒரு பகிர்வு.. மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  5. மிக மிக அற்புதமான பாடலை
    பகிர்ந்து இரசிக்கத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    அப்படியே நேயர் விருப்பமாய்
    எனக்கும் பிடித்த அந்தக் கண்ணாலே
    பேசிப் பேசியை பதிவிட்டால்
    மிக்க மகிழ்ச்சி கொள்வோம்

    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...