Monday, July 14, 2014

"பாயா" விற்கு பதிலா "சாயா"!வைச்சிக்க நீ!

தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.

ஒரு கையிலே ஓசை எழுப்பி, சுவரில்லாமலே சித்திரம் வரைந்து, மௌன கீதங்களால் மாளிகை அமைத்த பாக்யராஜின் இன்று போய் நாளை வா என்று ஆல் இந்திய ரேடியோ விவித்பாரதியில் 9:30 மணிக்கு கேட்ட பின்பும் எனக்கு தூக்கம் வர மறுத்தது. என்ன சொல்வது. வாழக்கையிலே முதல் முறையாக நாளைக்கு ஒரு காரியம் செய்ய போகிறேன்.

விவரமாக சொல்லுகிறேன் கேளுங்கள்! +2 படிக்கும் நான் சென்னையில் விடுதியில் தங்கி இருந்த நேரம். தீபாவளி விடுமுறைக்காக வடபழனியில் உள்ள என் அத்தை வீட்டிற்கு   சென்று இருந்தேன். 4D பேருந்தை அடையாரில் இருந்து பிடித்து தங்க சாலை வந்து சேர்ந்த போது மணி ஒரு 4 இருக்கும் (அந்த வாகன எண்ணை சரியாக தான் சொன்னேன் என்று நினைக்கேறேன், தவறாக இருந்தால் யாராவது தெரிந்தவர்கள் திருத்துமாறு கேட்டு கொள்கிறேன்). தங்கசாலையில் இருந்து பையை தூக்கி தோளில் மேல் போட்டுக்கொண்டு நடந்து செல்லுகையில் ஒரு நினைப்பு.

அடடடா. இங்கே பாபு உணவகத்தில் அருமையான பாயா கிடைக்குமே, ஒரு விளாசல் விளாசி விட்டு போகலாமா என்று. மண்டை வேண்டாம் என்று சொன்னாலும் இதயம் வேண்டும் என்று சொன்னதால், நேராக சென்று, முதலில் விலை என்ன என்று பார்த்தேன். பாயா: 2 கால் 2 ருபீஸ், 4 கால் 3.50 ருபீஸ், கணக்கியல் படிப்பவன் ஆயிற்றே, அதனால் கல்லாவில் அமர்ந்து இருந்தவரிடம் 4 கால் 3.50 என்றால் 2 காலுக்கு 1.75 தானே என்றேன். அவர் வீட்டில் என்ன பிரச்சனையோ உனக்கு பாயா இல்லை என்று கூறிவிட்டார். (இப்படி தான் ஆம்பூர் சலாம் ஹோட்டலில் ஒரு முறை ஆசையாக சென்று மூளை இருக்கிறதா என்றேன், அவர் உங்களுக்கு முன் வந்தவருக்கு கூட இருந்தது ஆனால் உனக்கு இல்லை என்றான், அதை பற்றி விவரமாக இன்னொரு நாள் எழுதுகிறேன்).



"விசு வாயிலாதாண்டா உனக்கு கண்டம், இனிமேல் சாப்பிட தவிர உன் வாயை எதற்கும் திறக்காதே" என்று சொன்ன என் பாட்டியின் நினைவு வந்தது. ஹாயா, "பாயா" சாப்பிடலாம் என்று போன எனக்கு"கைக்கு எட்டிய கால்" என் வாயினால் வாய்க்கு எட்டவில்லையே என்று நொந்து கொண்டே பக்கத்துக்கு கடையில் ஒரு "சாயா" குடித்து விட்டு அத்தை   வீட்டை நோக்கி நடந்தேன். 




சரி, இப்போது தூக்கம் என் வரவில்லை என்று சொல்லுகிறேன்,. அத்தை வீட்டில் நுழைந்த உடனே என் கண்ணில் பட்டது ஒரு போர்வை போர்த்திய விஷயம். "பாயாவை" நினைத்து கொண்டே வந்ததோ என்னோமோ அதை பார்க்க ஒரு ஆட்டிற்கு போர்வை போர்த்தி நிக்க வைத்ததை போல் இருந்தது. அங்கே வந்த என் அத்தை மகன் சத்தியிடம், இது என்ன என்றேன். அவன் வாய்  எல்லாம் பல். "பார்வையை தூக்கினான் போர்வையை நீக்கினான்". அதனுள்ளே பதுங்கி கிடந்தது சிவப்பு நிறத்தில் லூனா என்று அழைக்க படும் அந்த காலத்து இரு சக்கர வாகனம்.

அதற்கு முன்னால் வரை சைக்கிள் மட்டுமே தொட்டு பழகிய எனக்கு கை கால் எல்லாம் வேர்த்து விட்டது. தொட்டு பார்க்கலாமா என்றேன், தொடலாம், ஆனால் தொட்டவுடன் இந்த துணியால் துடைத்து விடு என்று ஒரு துணியை குடுத்தான். அவன் சற்று அயர்ந்த நேரத்தில், தொடுவது மட்டும் என்ன? அந்த வாகனத்து இருக்கையில் அமர்ந்தே பார்த்து விட்டேன். இது உனக்கா என்றேன், இல்லை இது அப்பாவிற்கு, எனக்கு இன்னும் இதை ஓட்ட வயது பற்றாது என்றான். நான் அவனுடன் சிறியவன், அவனுக்கே குறைந்த வயது என்றால், எனக்கு?

இரவு ஒரு 8 மணி இருக்கும், சத்தி என் அருகில் வந்த ஒரு சதி திட்டம் போட்டான். நாளை காலை அப்பா ஊருக்கு போகிறார், நாம் வேண்டும் என்றால் இந்த வண்டியை எடுத்து கொண்டு ஒரு சிறிய ஆட்டம் போடலாம் என்றான். இதை உனக்கு ஓட்ட தெரியுமா என்றேன், நான் நன்றாக ஓட்டுவேன், முடிந்தால் உனக்கும் சொல்லித்தருகிறேன் என்றான். இதனால் போனது தான் என் தூக்கம்.

திரும்பி, திரும்பி படுத்து எப்போது தூங்க போனேன் என்று எனக்கே தெரியாது. காலை ஒரு 5:15 மணிக்கு எழுந்து, குளித்து புது துணி (எங்க மாமா ஒரு தங்கமான மனசுகாருங்க, எப்ப அவர் வீட்டுக்கு போனாலும் புது துணி வாங்கி வைச்சிருப்பாரு) அணிந்து  கொண்டு சத்தியை எழுப்பினேன். நேரம் என்ன என்ற கேட்ட அவனிடம் 5:45 என்று சொன்னவுடன் கத்த  ஆரம்பித்து விட்டான்.அப்பா 8 மணிக்கு மேல தான் போவாரு அதுக்கு முன்னால நீ மீண்டும் என்னை எழுப்பினால் உனக்கு இன்று "லூனா" கிடையாது என்றான். என்ன செய்வது?

 அத்தை போட்ட காப்பியை  குடித்து கொண்டே "லூனா" அருகில் அமர்ந்து பார்த்து கொண்டு இருந்தேன். என் மனதில் இருந்ததை தெரிந்தவர் போல் என் மாமா, இன்னும் கொஞ்ச நாள் பொறு, உனக்கு ஓட்ட சொல்லி தருகிறேன் என்றார். மனதில் ஒரு திகிலான தில். மாமாவும் அத்தையும் 8 மணி போல் பிரபாத் பஸ் ஸ்டாப் சென்று 33 பேருந்தை பிடித்து (மீண்டும் வாகன என்னில் ஒரு சிறு சந்தேகம்) சென்ட்ரல் ரயில் நிலையம் புறப்பட்டனர். அவர்கள் அந்த பஸ்ஸை பிடிக்கும் வரை நான் காத்து இருந்து வீட்டிற்கு ஓடி வந்த நான் தயாரான நிலையில் இருந்த சத்தியை பார்த்தவுடன் பரவசம் அடைந்தேன்.

நீ தயாரா? நான் தயார் என்றான். சரி உன்னிடம் எவ்வளவு பணம் உள்ளது என்றான்? ஏன் என்று கேட்டேன், பெட்ரோல் போட வேண்டும் என்றான். ஒரு லிட்டர் 7 ருபாய் சொச்சம். என்னிடம் ஒரு 4 அல்லது 5 இருக்கும் என்றேன் (3:50 குறைத்து தான் சொன்னேன், போகும் போது பாபு உணவகத்தில் மீண்டும் ஒரு முறை சென்று வாயை மூடி கொண்டு " பாயா "சாப்பிடலாம் என்ற நப்பாசை). சரி அதை எடுத்துகொள் வரும் போது பெட்ரோல் போட்டு வைக்க வேண்டும், இல்லாவிடில் அவர் "அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்" போல மாறி விடுவார் என்றான். புது துணி போடவில்லையா  என்று கேட்டேன், அதற்க்கு அவன் நான் இதை நேற்றே புது துணி போட்டு ஓட்டினேன் வா போகலாம் என்றான்.

எங்கே போவது? நேராக மெரினா பீச் என்று ஒரு பிளான். ப்ரோட்வயில் நேராக சென்று குறளகம் வந்து சேர்ந்தவுடன், அரை லிட்டர் போட்டால் போதும் ஆளுக்கொரு "கோன்ஐஸ்" வாங்கி கொள்ளலாம் என்றான். சரி என்று அதை ருசித்து விட்டு நேராக பீச் பக்கம்   வண்டியை விட்டோம். கோட்டைக்கு  சற்று முன்னே உள்ள பாலத்தின் அடியில் வண்டியை நிறுத்தி என்னை ஓட்ட சொன்னான். அவன் ஓட்டுவதை ஒழுங்காக கவனித்தால் மிகவும் லாவகமாக அதை ஓட்டினேன்.

கோட்டை அருகில் சென்றவுடன் வண்டியை திருப்பி வீட்டிற்கு செல்லலாம் என்று நினைத்த எங்களுக்கு அங்கே காலை ஓட்டம் ஓடி கொண்டு இருந்த நரசிம்மனை பார்த்தவுடன் ஒரு சந்தோசம். வா நரசிம்மா, நீயும் வண்டியில் ஏறு என்று சொல்லி வந்து கொண்டு இருந்த எங்களுக்கு வழியில் ஒரு ஏழரை சனியன் உள்ளது என்று அப்போது தெரியாது.

பாரிஸ் கார்னர் அருகே வந்து இருப்போம், ஒரு போலீஸ் எங்களை நிறுத்தினார். அவர் நிறுத்தியவுடன் சத்தியும் நரசிம்மனும் பேய் அறைந்ததை போல் (பேய் அறைந்த கதையை இன்னோருநாள் சொல்லுகிறேன்) ஆகிவிட்டனர். எனக்கும் பயம் தான் என்ன இருந்தாலும் அதை வெளியே காட்டி கொள்ளாததால் அந்த போலீஸ் என்னிடம் பேச்சு கொடுத்தார்.

போலீஸ்: எங்கடா போறீங்க?

நான்:வீட்டுக்கு

போலீஸ்: இது டூ வீலெர் ஆச்சே என் மூணு பேர் போரிங்கோ?

நான் :(அப்ப ஒரு வீலுக்கு ஒருத்தன்தான  போலாம்னா பஜாஜ் செடக் வண்டில மூணு வீல் இருக்கே அப்ப மூணு பேர் போலாமா கேட்கலாம்னு யோசித்தேன், ஆனா என் பாட்டி சொன்ன, "விசு உனக்கு வாயில தான் கண்டம் டைலாக் நினைவுக்கு வந்ததால்) "சாரி சார்"

போலீஸ்: இனிமேல் மூணு பேரு போறதுனா ஒருத்தன் ரிக்சாவில் போங்கோ

நான் :ஓகே சார் (வண்டியை ஸ்டார்ட் பண்ணி கொண்டு)

போலீஸ்: நான் பேசினே இருக்கேன், நீ எங்க கிளம்புற

நான்: வீட்டுக்கு சார் 

போலீஸ்: கேட்ட கேள்விக்கு ஒரு மாதிரி பதில் சொல்லுறியே உனக்கு என்ன "குடும்பம் ஒரு கதம்பம்" விசுன்னு நினைப்பா?

நான்:இல்ல சார்

போலீஸ்:சரி ஒரு அஞ்சு ரூபா இருந்தா குடுத்துட்டு போ

நான்: அஞ்சி ரூபா இருந்தாதான் ஒருத்தன் ரிக்சாவில் போய் இருப்போமே சார்

போலீஸ்: விட்டேனே பார். மீண்டும் டைரக்டர் விசு மாதிரி பேசுறியே

நான் :சாரி சார்

போலீஸ்: சரி, பாக்கெட்டில் கை விட்டு பார் அஞ்சு ரூபா இருக்கும்.

நான்: என் பாக்கெட்டில் அஞ்சு ரூபா இருந்தா அந்த பேண்டே வேற யாருதோ சார்.

போலீஸ் : திரும்பவும் விசு டைலாக்?

நான் : சாரி சார்

போலீஸ்: இப்ப எவ்வளவு காசு தான் கொடுக்க முடியும்?

நான்: இங்கேயே வெயிட் பண்ணுங்கோ நான் வீட்டில போய் எடுத்துட்டு வரேன்.

போலீஸ்: நீ வராட்டி.

நான்: இவங்க ரெண்டு போரையும் விட்டு விட்டு போறேன். இவங்க தான் கரண்டீ

போலீஸ்: நீ வராட்டி இவங்க ரெண்டும் பேருக்கும் தீபாவளி ஒரு நாள் முன்னாலே வரும்

நான்: ஏன் சார்?

போலீஸ்: (என் பேச்சில் மயங்கி விட்டார் போல்), இவ்வளவு நல்லா பேசுறியே உன் பெயர் என்ன தம்பி?

நான் :"விசு" சார்!

போலீஸ் : என்னை விட்டுருன்னு (அவர் லத்திய சைக்கிளில் லாவகமாக சொருவி வண்டிய எடுத்தார்).

அவர் சென்றவுடன் வண்டிய ஸ்டார்ட் பண்ணி ஏறுங்கடான்னு சொன்னேன். ரெண்டு பேரும் ஒன்னா சேர்ந்து " மாப்பு நீ வண்டியை வீட்டுக்கு எடுத்துட்டு போ, நாங்க பின்னாலே நடந்து வரும்னு சொன்னாங்கோ.

வீட்டில் வந்து கதவை திறந்த எனக்கு ஒரே அதிர்ச்சி, மாமாவும் அத்தையும் ரயில மிஸ் பண்ணிட்டு நாளைக்கு போகலாம்னு திரும்பி வந்துட்டாங்க. மாமா என்னிடம் நேராக, வண்டிய எங்க எடுத்துன்னு போனன்னு கேட்டார். ஒன்னும் இல்ல மாமா, பக்கத்து தெரு குழாயில் தண்ணி போட்டு (வண்டிக்குத்தான்) துடைக்கலாம்ன்னு தள்ளிண்டே போனேன்னு சொன்னேன். அப்ப ஏன்  வண்டி இன்னும் அழுக்கா இருக்கு? மாம்ஸ், அங்க தண்ணி வரல. சரி, இந்தா ஒரு பக்கெட்  தண்ணி, அந்த போலீஸ் காரனிடம் சமத்தா பேசின இல்ல? அதே போல் சமத்த கழுவுன்னாரு.

மாம்ஸ், அது நடந்தே அரை மணி நேரம் ஆச்சி, உங்களுக்கு எப்படி தெரியும். அட பாவி, சென்ட்ரலில் இருந்து வரும் 33,  பாரிசில் ஒரு அஞ்சு நிமிஷம் கூடவே நிப்பானே உனக்கு தெரியாதா? என்ன?. அப்ப பார்த்தேன். அது சரி அவங்க ரெண்டு பேரும் ஏன் பேய் அறைஞ்ச மாதிரி ரோட்டில உட்கார்ந்து விட்டார்கள் என்றார் சிரித்துகொண்டே.
நண்பர்களே, Jokes apart, நாம் அனைவரும் வாழ்கையில் பல நல்ல மனிதர்களை சந்தித்து இருப்போம். என் வாழ்வின் எனக்கு கிடைத்த இந்த மாமா மனிதர்களிலே மாணிக்கம். யாருக்கும்,எப்போதும் தீங்கு நினைக்காதவர். அவரிடம் நான் கற்று கொண்டது எவ்வளவோ நல்ல விஷயங்கள். நன்றி மாம்ஸ்.

http://www.visuawesome.com/

Sunday, July 13, 2014

மலையாள கரையோரம் தமிழனின் உடை(ரையாட)யல் .....

"கடலை நோக்கி போனாரே...
கானாமதான் போனோரே
போய் வரும் போ எந்து கொண்டு வரும்...
கை நிறைய..
போய் வரும் போ எந்து கொண்டு வரும்...'

என்று பாடி கொண்டே என் அலுவலகத்தில் நுழைந்தான், என்னுடன் பணி புரியும்  என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்" (என்ன பெயர் வித்தியாசமாய் இருக்கேன்னு பாக்கறீங்களா, அந்த கதையை இங்க படியுங்கள்).

மிஸ்டர் குஞ்சு குஞ்சு... "யு ஹவெ எ குட் வாய்ஸ்,  அருமையா பாடுறிங்க"

என்று பின்னால உதவும்ன்னு ஒரு பொய் சொல்லி ஆரம்பிச்சி வைத்தேன்.

மிஸ்டர்.விசு நீங்க கூட, கிட்டார தூக்கி கொண்டு சில நேரம் கம்பெனி பார்ட்டியில் பாடுவதை நானும் கேட்டு இருக்கேன் . நீங்களும் நல்லா பாடுறிங்க

அவனும் ஒரு பதில் பொய்ய சொல்லி உடனே அந்த கணக்க செட்டில் பண்ணிட்டான்.

நன்றி மிஸ்டர் குஞ்சு குஞ்சு, எதோ என்னால முடிஞ்ச வரை... பயணங்கள் முடிவதில்லை மோகன் (அவர் கிட்டார் வாசிக்கிறேன்னு சொல்லி, இடியாப்பத்திற்க்கு மாவு பிசைந்ததை வேறு ஒரு நேரத்தில்)எழுதுகிறேன்) போல இல்லாவிடினும்.. ஏதோ ஏழைக்கு ஏத்த எள் உருண்டை போல்.

சரி மிஸ்டர் விசு, நீங்க மலையாள பாட்டு கேட்பீர்களா?

இல்லை மிஸ்டர் குஞ்சு குஞ்சு, பொதுவா சொல்ல போனா தமிழ் மக்கள் மலையாள படம் தான் பார்ப்பார்கள், மலையாள பாட்டு கேட்க்க மாட்டார்கள்.

அந்த விஷயத்தை நானும் கேட்டு இருக்கேன், மிஸ்டர். விசு, அது ஏன் அப்படின்னு சொல்ல முடியுமா?

மத்தவங்கள பத்தி எனக்கு சொல்ல முடியாது. எனக்கு மலையாள பட  ஒளிபதிவு பிடிக்கும் அதுதான்.

மிஸ்டர் விசு உங்களிடம் தனியா ஒரு விஷயம் பேச வேண்டுமே?

தனியாவது, மிளகாயாவது.. சொல்லுங்கோ...

நம்ப ஆபீஸ் இந்த மூர்த்தி இருக்காரே.. அவரை பத்தி நீங்க என்ன நினைக்கிரீங்கோ?

என்னத்த சொல்லுவேன் மிஸ்டர் குஞ்சு குஞ்சு.. என்னத்த சொல்லுவேன்,
(if you don't have anything good to say about someone, dont say anything at all, that's my policy)

என்ன உங்களுக்கும் அவருக்கும் ஏதாவது பிரச்சனையா?

இல்லை மிஸ்டர் விசு. இவர் உங்களை போல இல்ல, நீங்களும் தமிழ் தான் அவரும் தமிழ் தான்!

நான் பாண்டிய பரம்பரை  (மதுரை) மூர்த்தி (சோழன்) என்பது பாலக்காடிற்கு எப்படி தெரியும்? என்று மனதில் நினைத்து கொண்டேன்.

சொல்லுங்க மிஸ்டர். குஞ்சு குஞ்சு.

இல்லை மிஸ்டர் விசு. நீங்கள் எப்ப பரஞ்சாலும் ஒன்னு தமிழில் பறையறீங்க, இல்லாட்டி ஆங்கிலத்தில் பறையறீங்க.

எஸ், மிஸ்டர் குஞ்சு குஞ்சு "வாட் இஸ்  யுவர் பாயிண்ட்"?

இந்த மூர்த்தி மட்டும் ஏன் ஆங்கிலமும், தமிழும் கலந்து பரையீரார்?

அது அவர் ஸ்டைல் மிஸ்டர் . குஞ்சு குஞ்சு, அதுல உங்களுக்கு என்ன பிரச்னை?

இல்ல நேத்து கூட என் ஆபீஸ் வந்து, "இந்த டாகுமெண்ட் உடனே டைப் பண்ணி ட்ரன்ச்பர் பண்ணுனு" சொன்னார்.

ஆமா, மிஸ்டர் குஞ்சு குஞ்சு,  நீங்கள் சொன்ன உடனே தான் கவனிச்சேன். ஒவ்வொரு வார்த்தையும் தமிழ்- ஆங்கிலம் மாறி மாறி தானே வருது. சரி
அதுல என்ன பிரச்சனை?

இல்ல மிஸ்டர் விசு , நீங்க இந்த ஆபீசில் சேர்ந்ததில் இருந்து எல்லாரும் என்னை மிஸ்டர் குஞ்சு குஞ்சுன்னு தான் கூப்பிடுராங்கோ.

ஆமாம் மிஸ்டர் குஞ்சு குஞ்சு, அது தான் உங்க பெயர், அது எப்படி வந்தது தான் எனக்கு முதல் நாளே விவரமா சொன்னீங்களே , இப்ப அதனால் என்ன பிரச்சனை?

இல்ல மிஸ்டர் விசு, போன வாரம் மூர்த்தி என்னிடம் வந்து'  மிஸ்டர். குஞ்சு குஞ்சு, "உங்க நேம் உடைய மீனிங் என்னான்னு" கேட்டான்.

ஓகே, மிஸ்டர் குஞ்சு குஞ்சு, குஞ்சு என்றால் மலையாளத்தில் "ஸ்மால்' அல்லது 'லிட்டில்" என்று அர்த்தம் என்று சொன்னீர்களே.அதுமட்டும் அல்லாமல் கேரளாவில் கடை குட்டி பிள்ளைக்கு குஞ்சுன்னு பேர் வைப்பார்கள்என்றும் , உங்கள் வீட்டில் ஏற்கனவே கடைசி பிள்ளை என்று நினைத்து  உங்கள் அண்ணனுக்கு குஞ்சு என்று பெயர் வைத்து சில வருடங்கள் கழித்து நீங்கள் பிறந்ததால் உங்களுக்கு "குஞ்சு குஞ்சு'என்று வைத்தார்கள் என்று சொன்னீர்கள் அல்லவா? அதை மூர்த்திக்கும் சொல்வது தானே.

மிஸ்டர் விசு, நீங்கள் சொன்ன மாதிரியே தான் நானும் மூர்த்திக்கு விவரித்து சொல்லி மலையாளத்தில் "ஸ்மால் - லிட்டில் " என்று அர்த்தம் என்று சொன்னேன், அதில் இருந்து தான் பிரச்னை ஆரம்பித்து விட்டது.

மிஸ்டர் குஞ்சு குஞ்சு, அதில் என்ன பிரச்னை ?

இவன் மூர்த்தி தான் எப்போதும் "ஆங்கிலதில் ஒரு வார்த்தை தமிழில் ஒரு வார்த்தை" என்று மாறி மாறி பேசுவானே போன வாரத்தில் இருந்து என்னை எல்லார் எதிரிலும் " ஸ்மால் குஞ்சு" என்று அழைக்க ஆரம்பித்துவிட்டான்.

என்று கூறிய குஞ்சுவிடம் நான், இந்த சோழ பரம்பரை பசங்களே '  சோமாரீங்கோ" என்று சொல்லி எங்கள் பாண்டிய-சோழ பகையை புதுப்பித்து கொண்டேன்.


http://www.visuawesome.com/

சரவணபவ சாம்பாரும், சங்கரா மீனும்...


தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.

மும்பை வாழ்வின் மற்றொரு நாள். வார இறுதி, கமல்ஹாசன் நடித்த தூங்காதே தம்பி தூங்காதே கிங் சர்க்கிளில் உள்ள அரோரா தியேட்டரில் வந்துள்ளது என்று கேள்வி பட்டவுடன் நாங்கள் கிளம்பிவிட்டோம். இந்த நாட்களில் கமல் படங்களை தமிழர்கள் அதிகம் பார்த்தாலும் "ஏக் துஜே கே லியே" படத்தில் அறிமுகம் ஆனாதால் சில வடஇந்தியரும் கமல்ஹாசன் படத்தை பார்க்க விரும்புவார்கள். நான் மற்றும் அறையில் இருந்த மற்ற நண்பர்களும் மேட்னி காட்சிக்கு கிளம்பி விட்டோம். எங்கள் இல்லத்தில் இருந்து அரோரா தியேட்டர் ஒரு 30 நிமிட நடை. போகின்ற வழியிலேயே மதிய உணவை அங்கே அருகே உள்ள ஐயங்கார் உணவகத்தில் முடித்து கொண்டு போகலாம் என்று ஒரு திட்டம்.





நான் மற்றும் நண்பன் ரமேஷ், என் அருமை நண்பன் டொமினிக் மூவரும் கிளம்பி வெளியே செல்கையில் தான் நினைவிற்கு வந்தது, நண்பன் டொமினிக் ஒரு ஸ்ட்ரிக்ட் "நான் வேஜெடேரியன்" மருந்திற்கு கூட காய் சாப்பிடமட்டான் (முந்தானை முடிச்சு பார்த்தன் பின் கூட முருங்கை காய் சாப்பிடாத அளவு பிடிவாதம்). இவன் எப்படி சனி கிழமையும் அதுவுமாக ஐயன்ன்கார் உணவகத்தை ஒத்து கொண்டான் என்று சிறு சந்தேகம். ஒரு வேலை, இந்த உணவகம் தியேட்டர் போகும் வழியில் உள்ளதால் தான் ஒத்து கொண்டான் என்று எனக்கு நானே பதில் சொல்லி கொண்டு வீட்டை விட்டு கிளம்பினோம். ஒரு இரண்டு நிமிடம் நடந்து இருப்போம். டொமினிக் எங்களிடம் நீங்கள் இருவரும் உணவகத்திற்கு செல்லுங்கள் நான் அருகில் உள்ள தபால் நிலையம் போய் ஒரு சிறு வேலை முடித்துவிட்டு அங்கே வந்து சந்திக்கிறேன் என்றான்.சரி என்று ஒத்துக்கொண்டு நாங்கள் கிளம்பினோம். அங்கே ஐயங்கார் கடையில் அதிக கூட்டம். அதில் அநேகர் "தூங்காதே தம்பி தூங்காதே "படம் பார்க்க போகிறவர்கள் என்று நினைக்கிறேன். ஒரு மேசை காலி ஆனதும்  நானும் ரமேசும் அதில் அமர்ந்தோம் அப்போது காக்க உட்கார பனம் பழம் விழுந்ததை போல் நண்பன் டொமினிக் அங்கு வந்த சேர்ந்தான். மூவரும் ஆளுக்கொரு தாலி (இதற்க்கு ஏன் தாலி என்று பெயர் வைத்தார்கள் என்று எனக்கு இன்றும் புரியவில்லை) சொன்னோம். இங்கே வேலை செய்பவர்கள் அனைவரும் தமிழரே. அதனால்  ஒருவருக்கொருவர் தமிழில் பேசி பழகுவோம்.

மூவருக்கும் வாழை இலை வைத்தார்கள். அதில் அங்கு வேலை செய்த சர்வரே சிறிது நீர் தெளித்து எங்களை இலையை துடைத்து கொள்ள சொன்னான். அவன் சொன்ன படியே துடைத்து விட்டு அமர்ந்தோம். ஆளுக்கு ஒரு மிளகு அப்பளமும் ஊருகாயும் வைத்தார்கள். நாங்கள் மூவரும் அப்பளத்தை கொறித்த படியே, பார்க்க போகும் படத்தில் நடித்த சுலக்ஷ்னா சாரி கமல்ஹாசனை பற்றி பேசி கொண்டு இருந்தோம். சாதம் வருவதற்கு முன் அப்பளம் ஸ்வாஹா. சாதம் எடுத்து வந்த ஆளிடம் நண்பன் டொமினிக் அப்பளம் கிடைக்குமா என்றான். அவர் பதிலாக அப்பளம் உங்களுக்கு ஏற்கனவே வைத்தாகிவிட்டது என்றவுடன் டொமினிக் அவரிடம், அது எங்களுக்கும் தெரியும் ஆனால் அந்த சர்வர் இலையின் மேல் அதிக நீரை ஊற்றியதால் அப்பளம் வெத்தலை போல் நொந்து விட்டது அதனால் வேறு ஒரு இலையும் அப்பளமும் எடுத்து வா என்றான். எனக்கு அப்போதே தெரிந்து விட்டது "வேதாளம் மரம் ஏற போகின்றது என்று". நான் டொமினிகிடம் சும்மா வம்பு பண்ணாதே, வெந்ததை தின்று சினிமாவிற்கு போகலாம் வா என்று சொன்னேன். பிறகு நான் மெதுவாக அவனிடம் அது சரி, சனியும் அதுவுமாய் எப்படி இங்கே வந்தாய்? நீ வெட்டு குத்து ஆள் ஆச்சே! இந்த பூல் பூண்டு வகையறா எல்லாம் உனக்கு பிடிக்காதே என்றேன்.

அதை நான் சொன்னவுடன் நண்பன் டொமினிக் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை. அதை பார்த்தவுடன் எனக்கு புரிந்துவிட்டது, இவன் தன்னுடைய விளையாட்டை ஆரம்பிக்க போகிறான் என்று. என்ன செய்ய போகிறான் என்று தெரியவில்லை ஆனால் ஏதோ வில்லங்கம் செய்ய போகிறான் என்று மட்டும் தெரியும்.

மீண்டும் இலை வந்தது, கூடவே அப்பளமும் வந்தது. இவன் இலையை நன்றாக துடைக்கும் வரை அவன் அப்பளத்தை வைக்கவில்லை. இலை துடைத்தாயிற்று, அப்பளம் வைத்தாயிற்று. சாதம் போட்டாகிவிட்டது. அனைவரும் சாப்பிட ஆரம்பிக்கும் வேளையில் நண்பன் டொமினிக் தன பேன்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிறிய பொட்டலத்தை எடுத்தான். அதில் மூன்று வருத்த மீன் துண்டுகள். இவன் தபால் நிலையம் போகிறேன் என்று சொல்லிவிட்டு தனபால் மிலிடரி கடைக்கு போய் வந்து இருக்கிறான். மூவருக்கும் ஆளுக்கொரு துண்டு. உடனடியாக நாங்கள் அந்த "முழு துண்டை சோற்றில் மறைத்து"  அதன் மேல் அப்பளத்தை வைத்து மறைத்து சாப்பிட ஆரம்பித்தோம். துண்டை மறைத்து வைத்தாலும் வாசனையை என்ன செய்வது? அருகில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் அனைவரும் வாசனை முகர்ந்து சற்று முகம் சுளித்தனர். அங்கே வந்த சர்வரும் சுற்றும் முற்றும் பார்த்து அருமையான அந்த வாசனையை என்ன ஒரு நாற்றம் என்று அநாகரிகமாக சொன்னான்.




பாதி சதம் ஸ்வாஹா ஆகிய போது அந்த மீன் துண்டு "இலை மறைவு காய் " போல் தலை காட்ட துவங்கியது. உடனே சர்வரை அழைத்து சாதம் கேட்டோம். முதலில் இருப்பதை சாப்பிட்டு முடி போடுகிறேன் என்றான். அது பிரச்சனையில் போய் முடியும் என்று அவனிடம் சிறிது சத்தம் போட்டு சாதம் வாங்கி மீண்டும் அந்த மீனை மறைத்தோம், முடித்தோம். அங்கே இருந்த மற்ற அனைவரும் என்ன இங்கே மீன் நாற்றம் ( அது வாசனையப்பா) மீன் நாற்றம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். நாங்கள் மூவரும் மட்டும் எங்கள் உணவை "என்சாய் மாடிவிட்டு" அந்த இடத்தை விட்டு கிளம்பினோம். பொதுவாக அந்த இலைய அப்படியே விட்டு போகும் நாங்கள் அன்று மட்டும் இலைய குப்பையில் வைத்ததை பார்த்த அந்த சர்வரே நன்றி சொன்னார். முள்ளை மறைக்க வேண்டுமே. எல்லாம் முடிந்து காசை கட்டிய பிறகு நண்பன் டொமினிக் சிறிது உணர்ச்சி வசப்பட்டு "பல்குத்த" ஏதாவது உண்டா என்றான். அங்கே இருந்த கல்லா பெட்டி சிங்காரம் "சைவ ஹோடேலில் பல்குத்த கேட்ட முதல் ஆள் நீ தான் என்று சொன்னவுடன் விஷயம் பெரிதாகும் முன் நாங்கள் சினிமாவிற்கு கிளம்பினோம்.

அங்கு இருந்து கிளம்பி ஆளுக்கொரு "ஜரிதா பீடா" போட்டு கொண்டு நேராக அரோர தியேட்டர் வந்து சேர்ந்தோம். அங்கே வந்து சேர்ந்தவுடன் அங்கு வந்த சில வடநாட்டு கமல் ரசிகர் இருவர் நேராக எங்களிடம் வந்து " பிக்ச்சர்க்கா நாம் கியா ஹே" என்றார்கள். டொமினிக் உடனடியாக "தூங்காதே தம்பி தூங்காதே"என்றான். அதை கேட்டவுடன் அந்த இருவரும் பேய் அறைந்த மாதிரி (பேய் அறைந்த கதையை கண்டிப்பா இன்னொரு நாள் சொல்லுறேன்) ஆகி.."கியா மத்லப்"? என்ற அடுத்த கேள்வி கேட்ட அவர்களுக்கு நண்பன் டொமினிக் ஐ மீன் " "சோனா மத் சோட்டா பாய் சோனா மத்" என்றான். மீண்டும் மீனா என்று நான் யோசிக்கையில் தியேட்டர் மணி அடிக்க "பட்டுகோட்டை போட்டு வைச்ச பாட்டு"சத்தத்தை கேட்டு உள்ளே நுழைந்தோம்.

http://www.visuawesome.com/

மூட நம்பிக்கையா? எனக்கா? அமெரிக்காவிலா?

மூட நம்பிக்கையா? எனக்கா? அமெரிக்காவிலா? விவரமா சொல்லுறேன்... நேரத்திக்கு வந்துடுங்கோ..

மாப்பு, பை தி வே, இந்திய நேரப்படி திங்கள்  காலை  7 மணிக்கு போட்டு இருக்கியே... ராகு... சேது.... சனி... மணி எல்லாம் பாத்து பண்ணியா?


MASALA.FM ஆன் லைனில் சந்திப்போம். லுக்கிங்பார்வர்ட்!




சாம்பிள் :

என்ன விசு.. உன் பக்கத்து வீட்டு  வெள்ளைக்காரன் போகும் போதே.. எங்க போரேன்னு கேட்டு விட்டான். போற காரியம் விளம்பாது. வா, வீட்டில் போய் ஒரு டம்பளர் தண்ணி குடிச்சிட்டு போலாம்.

தண்டபாணி, ஏழுகடல் தாண்டி வந்தும் உனக்கு இதுல நம்பிக்கை இருக்கா?

இந்த ஏழு கடலையே நான் நல்ல நேரம் பார்த்துதானே தாண்டினேன். சரி, அவன் போயிட்டானா பாரு?

இவன் இப்படி கேக்கும் பொது, பக்கத்துக்கு வீட்டு வெள்ளைக்காரன், ரெடி ஆகி எங்களோடவே வரன்னு கிளம்பிட்டான்.

விசு, இவனுன் வரானே, இப்ப மூணு பேரு ஒன்னா போன்னா காரியம் விளம்பாதே? என்ன பண்ணலாம்?

தண்டம்... தண்டபாணி.. இந்த மூணு பேர் லாஜிக் எல்லாம் நம்ப ஊரில். இவங்க மூணு பேர் சேர்ந்து "மூனு"க்கே போய் "தாயின் மணி கோடி, தாயின் மணிக்கொடி" ன்னு சொல்லி கொடியே ஏத்தனவங்க.. நீ பேசாமா வா...

http://www.visuawesome.com/

அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?

நான் ஒரு மொழிபெயர்ப்பாளி. எந்த மொழி என்று கேட்கின்றீர்களா? அது ஒரு பன்மொழி. பெண்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட்டு விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை தான் நான் மொழிபெயர்த்து சொல்பவன். 
ஆண்குடிமக்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். தங்குளுடைய மனைவியோ, காதலியோ, அம்மாவோ, பாட்டியோ, மகளோ, அக்காவோ, தங்கச்சியோ ஏன் பக்கத்து வீட்டு மாமியோ எதோ ஒரு விஷயத்தை தங்களிடம் சொன்னால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மறந்து விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை "நல்லதோர் குடும்பம்" போல் செல்லும்.

இந்த மொழிபெயர்ப்பை சமூக சேவையாக கருதி நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். இந்த அருமையான கலையை நான் கற்று மற்ற நண்பர்களுக்கும் சொல்லி தருவதால் விசுவாசம் என்ற என் பெயர் இப்போது விசு "Awesome" என்று மாறிவிட்டது 


தங்களில் சில பேர் இங்கே என்னை ஒரு சந்தேக பார்வையுடன் பார்ப்பது புர்கின்றது, அதுவும் நியாமான சந்தேகம். ஆதலால் மேலே எழுதுவதற்குள் ஒரு உதாரணம்.


ஏங்க, பக்கத்து வீட்டு மாமி புதுசா ஒரு கம்மல் போட்டு இருக்காளே, நீங்க பார்த்தேளா?    இதுதான் கேள்வி 

இதில் அவர்கள் சொன்னது என்ன என்பதே முக்கியம் அல்ல. என்ன சொல்ல வந்தார்கள் என்பது தான்  முக்கியம். இந்த மாதிரி கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வது தவறாகிவிடும். இங்கே இவர்கள் சொல்ல வந்தது பக்கத்து வீட்டு மாமி கம்மலை பற்றியே அல்ல.அவர்கள் மனதில் உள்ளது , தன் கணவன் பக்கத்து வீட்டு மாமியை நோட்டம் விடுகிறானா என்பதே.  இந்த கேள்விக்கு அவரின் கணவர் " ஆமாம் இல்ல, நானும் பார்த்தேன் மாங்காய் வடிவுலெ  ஓரத்தில ஒரு இலையோடு நல்ல கம்மல் என்று சொன்னால் அவருக்கு அங்கே சங்கராபரணம் தான்.

இந்த கேள்விக்கு அவரின் பதில் "பக்கத்து வீட்டில் மாமியா? புதுசா குடி வந்து இருக்காளா? எனக்கு தெரிஞ்சு ஒரு நடுத்தர வயது ஆண் தானே தங்கிவுள்ளார்"  இப்படி சொன்னால் தான் வாழ்க்கை ஓடும்.

சரி, இப்ப இவங்க என்ன சொல்ல வந்தாங்க என்று பார்ப்போம். பக்கத்து வீட்டு மாமியின் கம்மலை பற்றி இவர்களுக்கு ஒன்றும் அக்கறை இல்லை. இவர்கள் சொல்ல வந்ததே.. 'அவர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக புது புதுசா வாங்கி போடறாளே? உனக்கு வாழ்க்கை பட்டதில் இருந்து நான் என்னத்த கண்டேன்'? இங்கே அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டால் இந்த ஆண் மகன் இங்கே தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. இவர் உடனே செய்ய வேண்டிய வேலை, ஒரு அழகான கம்மலை அவர்களுக்கு பரிசு அளிப்பது தான்.

சரி உங்கள் மொழிபெயர்ப்பு சந்தேகம் சற்று குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலே செல்வோம்.

இவ்வாறாக என் சமூக சேவை ஓடி கொண்டு இருக்கும் வேளையில், மாஸ்கோவில் இருந்து நண்பன் ராஜிடம் இருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு.

விசு... என் தோழி ஒருவர் MASALA.FM  என்று ஒரு online ரேடியோ நடத்துகின்றார்கள். நீ ஏன் உன் சமூகசேவையை அந்த ரேடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆண்களுக்கு செய்ய கூடாது? உன் சேவை எங்கள் எல்லாருக்கும் தேவை என்றார்.


உடனே அந்த அம்மணியிடம் தொடர்பு கொண்டு பேசி முடித்ததில் உருவானது தான் 'வைச்சிக்க நீ வித் பேராசிரியர் விசுawesome" .இந்த நிகழ்ச்சியில் நான் வாரம் ஒருமுறை வந்து என்னால் முடிந்த மொழி பெயர்ப்பை சொல்லுவேன். அங்கே உள்ள நேயர்களும் என்னிடம் மின் அஞ்சலின் மூலமாக என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு புரியாத விஷயத்தை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.  இந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடித்ததே பெண்கள் என்னிடம் விடும் சவால் தான். சில பெண்கள் என்னிடம் நான் என் கணவரிடம் இப்படி சொன்னேன் - இப்படி நடந்து கொண்டேன்' அதின் உள்ளர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும், நீங்கள் முடிந்தால் பதில் கூறவும் என்பர், நான் கூறும் பதில் ஆச்சரியத்தையும் அதிசத்தையும் தரும். இந்நிகழ்ச்சியை நீங்களும் masala .FM ல் கேட்கலாம். உங்களுக்கான கேள்விகளையும் நீங்கள் அங்கே  உள்ள மின் அஞ்சலின்மூலமாக எனக்கு அனுப்பலாம். நான் உங்களுக்கு சரியான பதில் தருவேன்.

சவுண்ட் க்லௌட் சாம்பிள் இங்கே....

இந்த வாரம் நம் நேயர்களில் ஒருவர்.. " நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன், ஆனால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டேன்".நான் ஏன்  இப்படி செய்கிறேன் என்று என்னை கேட்டு ஒரு சவால் விட்டு இருக்கிறார். அவருக்கான பதில் அடுத்த இடுகையில்...

தொடரும்...

Saturday, July 12, 2014

டைகர் சோறும் ஜாஸ் புட்டும்...

தமிழ்மண(ன)ம் வாசகர்களுக்காக ஒரு மறு வெளியீடு.

ஆங்கில படங்கள ரசித்து பார்க்க முடியாத காலம் அது. ஏன் என்று சொல்லுகிறேன், பொறுமை ப்ளீஸ். முதல் காரணம் இந்த வெள்ளைக்காரன் பேசும் கொலகொல இங்கிலிஸ் கொஞ்சமும் புரியாது. இரணடாவது காரணம் கண்ணுக்கு குளிர்ச்சியா வர காட்சிகளை சென்சர் பண்ணிவிடுவார்கள். இருந்தாலும் பரவாயிலைன்னு எப்பவாவது ஒரு முறை ஆங்கில படம் பார்க்க ஒரு சந்தர்பம் வரும்.

சொன்னா நம்ப மாட்டீங்க . 80'ஸ் எல்லாம் ஆங்கில படம் அமெரிக்காவில ரிலீஸ் ஆகி ஒரு 5-10 வருஷம் கழிச்சிதான் நம்ம ஊருக்கு வரும். அப்படி வந்த ஒரு படம் தான் "ஜாஸ்". அதுவரை சுறா என்றாலே "புட்டு" என்று மகிழ்ந்து வந்த எங்களுக்கு சுறா மீனை வைச்சி ஒரு முழு படம் எப்படி எடுப்பார்கள் என்பதே பெரிய ஆச்சரியம்.

சரி, கதைக்கு போவோம். வேலூரில் உள்ள ஊரீஸ் கல்லூரியில் படித்து கொண்டு இருந்த நாட்கள் அது. அங்கே Taj, Apsara, dinakaran, Raja மற்றும் பல சினிமா கொட்டகைகள் உண்டு. இதில் தினகரின் தியேட்டரில் மட்டும் தான் ஆங்கில படம் ஓடும். எங்கள் கல்லூரிக்கு மிகவும் அருகில் இந்த தியேட்டர் இருப்பது எங்கள் எல்லோருக்கும் மிக்க வசதி. உண்மையாக சொல்ல போனால், எங்கள் வகுப்பறையில் இருந்து கல்லூரி நூலகத்தை விட  தாஜ், அப்சரா அருகில் இருக்கும். இந்த நேரத்தில் தான் தினகரன் தியேட்டரில் "இஸ்தான்புல் இளசுகள்" (That man from Istanbul எவன் மொழிபெயர்தானோ ) என்ற படத்தை தூக்கி விட்டு ஜாஸ் ரிலீஸ் செய்ய பட்டது.வேலூரை சுற்றி ஜாஸ் பட சுவரொட்டிகள். அதில் ஒரு பெண் கடலின் மேல் நீந்துவாள்,அவள்க்கும் கீழே ஒரு பெரிய சுறா மீன் அவளை "ஸுவாக" செய்ய காத்துகொண்டு இருக்கும். போஸ்டர் ஒட்டிய முதல் சில நாட்களில் எங்கள் கண்களுக்கு அந்த போஸ்டரில் ஒரு சுறா இருந்ததே தெரியாது. தவறாக நினைக்க வேண்டாம். அந்த சுறவின் படம் ஆங்கில எழுத்தான "A" என்ற வடிவத்தில் இருந்ததால் நாங்கள் அனைவரும் அதை "அடல்ட்ஸ் ஒன்லி" என்று நினைத்து கொண்டோம்.




படம் ரிலீஸ் ஆனா மறுநாள் காலை காட்சி செல்வதாக ஒரு திட்டம். நான், நண்பன் பாலாஜி, குரு, எலி (அவர் பெயர் ரொம்ப நீளம், அதனால் நாங்க சுருக்கி எலின்னு கூப்பிடுவோம்), முத்து, ஜான் (இவர் பெயர் மட்டும் ஜான் இல்ல, ஆளு உயரமும் ஜான் தான்), மற்றும் பாய் என்று செல்லமாக அழைக்கப்படும் பைசல் அனைவரும் போவதாக ஒரு பேச்சு. 

அந்த காலத்தில் நாங்க என்ன செய்தாலும் ஒரு பிளான் பண்ணிதான் தான் செய்வோம். எல்லோருமாக சேர்ந்து முதல் பீரியடில் அட்டடன்ஸ் கொடுத்துவிட்டு பிறகு எஸ்கேப் என்ற ஒரு திட்டம். காலை ஒரு 9 மணிக்கு வகுப்பு ஆரம்பிக்குமுன் அனைவரிடமும் காசு இருக்கிறதா என்று  கணக்கு  பார்த்து விட்டு (B.com Students) முதல் வகுப்பு முடிந்தவுடன் கிளம்பிவிட திட்டம்.  

எவன் செய்த பாவமோ, அன்றைக்கு பார்த்து எங்கள் முதல் வகுப்பு எடுக்கும் Prof. Arullapan அவர்களுக்கு பதிலாக எங்கள் Head of the Dept Dr. Arunasalam வந்துவிட்டார். அவரை பார்த்த எங்கள் அனைவருக்கும் ஒரே அதிர்ச்சி. இவரை ஏமாற்றவே முடியாதே. இப்ப என்ன செய்வது. அவர் எப்போதுமே வகுப்பு ஆரம்பிக்கும் பொது அட்டேன்ட்ஸ்  எடுக்க மாட்டார். வகுப்பு முடியும் போது தான் எடுப்பார். சினிமா போக நினைத்த எங்கள் முகங்கள் பேய் அறைந்ததை (பேய் அறைந்த கதையை வேறு ஒரு நாள் சொல்கிறேன்) போல் ஆகி விட்டது. இவ்வளவு நேரம் இருந்த நட்பு பிரிந்து. அவனவன் அவனவனுக்கு தெரிந்த முறையில் எஸ்கேப் என்று கண்ணிலே பேசி கொண்டோம். நேரம் 9:45. படமோ 10:15. படத்தின் முதல் சீனில் தான் கதையே அமைந்து உள்ளது என்று பங்களூரில் இருந்த ஏன் சித்தி பையன் சொன்னாதால் என்னால் அங்கே உட்கார இயலவில்லை. அப்போதுதான் நினைவிற்கு வந்தது, Dr. அருணாசலத்தின் வீக் பாயிண்ட். அவரின் வகுப்பில் யார் கொட்டாவி விட்டாலும் அவருக்கு பிடிக்காது. உடனடியாக அந்த மாணவனை எழுப்பி நான்கு வார்த்தை சொல்லி போய் முகத்தை கழுவி கொண்டு வா என்று அனுப்பிவிடுவார். பெண் பார்க்க போன மாப்பிளை போல ஒரு ஏக்கத்தோடு அவர் பார்வை என்மேல் படாதா என்று ஏங்கி கொண்டு இருந்த வேலையில் என்னை பார்த்தார். உடனே ஏன் வாய் கிளியும் அளவுக்கு ஒரு கொட்டாவி விட்டேன். எழு, இழவு, கழுவு என்று அனுப்பிவிட்டார்.  

நான் வெளியே செல்லும் போது ஏன் முகத்தில் ஒரு வெற்றி சிறிப்பு. சினிமாவிற்கு வர இறுக்கும் மற்ற நண்பர்கள் முகத்தில் ஒருசொல்ல முடியாத சோகம்.  என்ன செய்வது? ஒவ்வொருவனும் செய்கையினாலே எனக்கு ஒரு டிக்கெட், எனக்கு ஒரு டிக்கெட் என்று கேட்டான்.  சரி, சரி என்று தலை ஆட்டிக்கொண்டே கிளம்பினேன். மனதில் ஒரு நெருடல். அடடா வேறு ஏதாவது செய்து அனைவரையும் அழைத்து கொண்டு வந்த இருக்கலாமே? 

அவசரமாக போய்கொண்டு இருந்த ஏன் தோள்மேல் ஒரு கை விழுந்தது. இவ்வளவு அவசரமாக எங்கே போகிறாய் என்று கேட்ட P.E. Instructor விக்டரை, ஒன்னும் இல்ல சார், லேட் ஆச்சி என்ற ஒரு உண்மையை பொய்யாக சொன்னேன். சரி, இன்னும் அரை மணி நேரத்தில் காலேஜ் ஸ்லொ சைக்கிள் போட்டி இருக்கு, உங்கள் வகுப்பில் யாராவது கலந்து கொள்வார்களா என்றார். அட பாவி, கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி சொல்லி, என்னுடன் சினிமாவிற்கு வர இருந்த அனைத்து நண்பர்கள் பெயரையும் ஒரு தாளில் எழுதி கொடுத்தேன். அது மட்டும் இல்லாமல் அடுத்த வகுப்பு ஆரம்பிக்கும் முன் அழைத்தால் தான் வருவார்கள் இல்லாவிட்டால் வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டு, எங்களுக்கே உரித்தான கல்லூரி போகி மரத்து அடியில் அமர்ந்தேன்.5 நிமிடங்கள் கழித்து பார்த்தால் என் நண்பர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடி வந்தார்கள். பாலாஜி நேராக வந்து, மாமு, யார் பண்ண புண்ணியமோ, PT  எங்க பேரை மட்டும் கூப்பிடாருன்னு சொன்னான். நடந்த கதையை அவனுக்கு விளக்கிவிட்டு வந்த வேலைய பார்க்க கிளம்பினோம். 



படம் ஆரம்பித்தது. முதல் சில காட்சிகள் எல்லாமே இருட்டில் எடுக்கபட்டது. என்ன நடக்குதுனே தெரியவில்லை, அந்த பெண் நீந்தவும் இல்லை அந்த சுறா அறிமுகமான காட்சியும் இல்ல. எல்லாம் சென்சார் கட்டிங். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்த சுறாவை வெளிச்சத்தில் காட்டினார்கள். அதை பார்த்த எலி மாமு, இது மட்டும் நம்ம கையில கிடைத்தால் ஒரு கல்யாணத்துக்கே புட்டு செய்யாலாமே என்றான். முதல் காட்சியை காட்டாத காரணத்தினால் நண்பன் பைசல் குழம்பி போய் விட்டான்.  இந்த சுறா என்ன பண்ணிவிட்டதுன்னு இதை இந்த துரத்து துரத்துகிறார்கள் என்று கேட்டான்.  ஆனாலும் சும்மா சொல்ல கூடாது. அருமையான படம். ஸ்டீவென் ரொம்ப அட்டகாசமா எடுத்து இருந்தார்.

இடைவேளைக்கு பின்னால் சில காட்சிகளில் நாங்கள் அதிர்ந்து விட்டோம். நாங்கள் அனைவரும் அந்த காலத்தில் அருகில் உள்ள கிணறில் நீச்சலடிக்க செல்வோம். இந்த படம் பார்த்த பின், சில நாட்கள் அந்த கிணற்றிற்கு கூட நீந்த செல்லவில்லை. அவ்வளவு பயம். 

அது சரி, இந்த கதைக்கும் தலைப்புக்கும் என்ன சம்மதம் என்று பார்க்கின்றீர்களா? அது ஒன்னும் இல்லங்க. அடுத்தநாள் மதிய உணவு நேரத்தில் அனைவரும் அமர்ந்து, யார் யார் என்ன உணவு எடுத்து வந்தீர்கள் என்று வழக்கம் போல் கேட்டோம். அப்போது அங்கே இருந்த "எலி மாம்" சொன்னால் பதில் தான் "  டைகர் சோறு ஜாஸ் புட்டு" அதாவது "புளி சோறு சுறா புட்டு". அப்படியே அவன் எடுத்து வந்த சுறா புட்டை சாப்பிடும் போது தோளின் மேல் ஒரு கை விழுந்தது. நீ சொன்ன ஒருத்தனும் சைக்கிள் போட்டிக்கு வரவேயில்லே என்று சொன்ன PE Victor முகத்தில் சரியான கடுப்பு. அது ஒன்னும் இல்ல சார், நம்ப பசங்க slow சைக்கிள் போட்டிக்கு ஸ்லௌவாதான் போகணும்னு தப்பு கணக்கு போட்டு விட்டார்கள் என்று ஒரு பொய்யை உண்மையாக சொன்னேன்.

http://www.visuawesome.com/

என் பெயர் விசு... எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு.

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஓமான் நாட்டின் தலைநகரமான மஸ்கட் என்னும் ஊரில் குப்பை கொட்டி கொண்டு இருந்த நாட்கள். நல்ல வேலை. திருமணம் ஆகி சில நாட்களே. என்ன விசு.. புது வீடு, புது கூலிங் கிளாஸ்சு, புது காரு, புது பொண்டாட்டி என்று அவனவன் கேட்க்கும் நாட்கள். இப்படி போகையில் என் அருமை நண்பன் "இளந்தோப்பு கிழிஞ்செயில் மத்தாய் அமநிகுட்டி குஞ்சு குஞ்சு"" என்று பெயர் கொண்ட நல்லதோர் "பாலக்காட்டு மாதவன்" என்னோடு பணி புரிந்து வந்தார்.

கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்!


ஏன் சொல்லுறன்? நிதானமா கேளுங்கோ. இயக்குனர் சிகரத்தின் பரம ரசிகனாக இருந்த நான், நடுவில் சில நாட்கள் அவர் எடுத்த படங்களை பார்ப்பதை விட்டு விட்டேன். ஏன் தெரியுமா? வீட்டில் உள்ள பெண்களிடம் வாங்கும் திட்டே தாங்கமுடியாது, அதை மறக்க படம் பார்க்க போகலாம் என்றால், இவர் சரிதாவையும், சுகாசினியையும் வைத்து நம்மை நம் சொந்த செலவிலே திட்டி வைப்பார். சரி, அதற்க்கும் தலைப்பிற்கும் என்ன சம்மந்தம்? நிதானம் ப்ளீஸ்..

நான் இங்கே எழுத போவது "நினைத்தாலே இனிக்கும்" என்ற படம் தான். அது விஸ்வநாதன் அவர்களின் 1000மாவது படம் என்று கூட நினைக்கிறேன்   (எங்கேயோ, எப்போதோ படித்த நினைவு, ஆனால் கண்டிப்பாக கூறமுடியாது). அருமையான கதை, அட்டகாசமான நடிகர்கள், வெளி நாட்டு ஷூட்டிங், சூப்பர் காமடி, இதை எல்லாம் விட அருமையான இசை.

சில நாட்களுக்கு முன்னால் இந்த படத்தை மீண்டும் ஒரு முறை காணும் வாய்ப்பு கிடைத்தது.  அதை பார்த்து முடித்தவுடன் வந்தது தான் இந்த நினைப்பு " கே. பாலச்சந்தர் ரொம்ப ராசியானவர்"!சரி இப்போது விஷயத்திற்கு வருவோம். இந்த படம் இந்நாளில் எடுக்க பட்டு இருந்தால் இது ரீலீசே ஆகி இருக்காது என்று நான் நினைத்தேன். ஏன் என்று சில கருத்துக்களை அலசி எடுப்போம்.

 இந்த படத்தின் மிக சிறந்த காமடியே, ரஜினி காந்த், பூர்ணம் விஸ்வநாதனிடம் சவால் விட்டு சிகரெட்டை  பத்து முறை தூக்கி போட்டு வாயில் பிடிக்க முயல்வது. வெறும் வாயில் மெல்லும் இக்கால அரசியல் வாதிகளுக்கு இந்த காட்சி.. அவல் அல்ல, பபிள் கம் போட்டது போல்...இந்த காட்சியை வைத்தே ஒரு 6 தடை வாங்கி இருப்பார்கள். இந்த காட்சி படம் பார்ப்பவர்களை சிகரெட் பிடிக்க ஊக்குவிக்கும் மற்றும், சிகரெட் மட்டும் இல்லாமல் மற்றும் பிஸ்கட், பீடா, வாழைபழம் எல்லாவற்றையும் மக்கள் இந்த மாதிரி தூக்கி போட்டு பிடித்தால் நம் தமிழ் கலாச்சாரம் என்ன ஆகும் என்பாடு தான் இவர்களின் விவாதம்.

அடுத்து, இந்த சாவலுக்கான பரிசே டொயோடா கார். இந்த டொயோடா காரை பூரணம் விஸ்வநாதன் மீண்டும் மீண்டும் சொல்வதால், அவர் அந்நிய நாட்டு சாதனங்களை மறைமுறமாக ஆதரிக்கிறார் என்று அடுத்த கூட்டம் கிளம்பி அடுத்த தடை.

"முக்கா பாட்டில் விஸ்கி, அரை பிராண்டி, கொட்டர் ரம் எல்லாம் கலக்கி காக்டைல்" இந்த வசனத்திற்கு அடுத்த கட்சி மற்றும்  பல தடைகள். பள்ளிகூட கல்லூரி மாணவர்  இந்த காட்சியை பார்த்தால் தவறான வழியில் செல்வார்கள். இதனால் அடுத்த பரம்பரைக்கே கேடு என்ற அடுத்த வாதம்.

"குடிச்சிட்டு பேசறன்னு நினைக்காத? கல்யாணம் மட்டும் பண்ணிக்காத..' இந்த காட்சி -  வசனத்தின் மூலம் தமிழ் கலாசார பரம்பாரியமான திருமணம் வேண்டாம் என்றும், ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் இல்லாமல் வாழலாம் என்று வாலிபரை உற்சாக படுத்துவதால் இந்த படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும்.

இந்திய நாட்டில் பல நல்ல இடங்கள் இருக்க சிங்கப்பூரில் இதை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை, இதனால் அந்நிய செலவாணி மதிப்பு குறைந்து நாட்டின் பொருளாதாரமே சீர் குலைய வாய்ப்புள்ளது என்று மற்றொரு கட்சியின் வாதம்.

தனக்கு பிடிக்காத ஒரு பெண்ணை பார்த்தவுடன் ரஜினி, "சிங்கப்பூரில் வந்து நான் சாமியாராக வேண்டுமா" ? என்ற கேள்வி சாமியார்களின் பெயரையே கெடுத்து விட்டது. சாமீர்யார்கள் என்றால் என்ன "எடுப்பார் கை பிள்ளையா"? அவர்கள் என்ன அழகான பெண்களிடம் தான் பழகுவார்கள் என்ற தவறனா கருத்தை இது மக்களின் மேல் புகுத்துகிறது என்று அடுத்த குற்ற சாட்டு..மேலும் பல குற்ற சாட்டுகள்.

அதனால் தான் சொல்லுகிறன்,  ரொம்ப ராசியானவர் K.Balachander. இந்த படம் இந்த காலத்தில் எடுத்து இருந்தால் " பிரேமாலய பிலிம்ஸ் " போண்டி ஆகி இருக்கும்.

இந்த படத்தை பார்த்த மற்ற இடுகையர்கள், மற்ற குற்றசாட்டுக்களை பின்னோட்டத்தில் போட்டால் மகிழ்வேன்.

பின் குறிப்பு:

என் வாலிப வயதிலே இந்த படத்தை பார்த்து ரசித்தவன் நான். அன்றும் ரசித்தேன், இன்றும் ரசிக்கிறேன். ஆனால்  புகை-குடி-குட்டி என்று என்று இந்த படத்தை பார்த்து என் வாழ்கையை அழித்துகொள்ளவில்லை. ரசித்தேன்..அவ்வளவு தான்!

http://www.visuawesome.com/

Friday, July 11, 2014

ஹிந்தியும் விம்பில்டனும்..



ஜுலை 6, 1986. அந்த நாளை என்றுமே வாழ்க்கையில் மறக்க முடியாது. வேலூர் அருகேயுள்ள காந்தி நகரில் வாழ்ந்து வந்த காலம் அது. அருமையான நண்பர்கள், அட்டகாசமான கல்லூரி, வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ரசித்து வாழ்ந்தகாலம் அது. 1985 வரை வானொலியிலேயே வாழ்ந்து வந்த எங்களுக்கு தொலை காட்சி நிகழ்சிகள் பார்ப்பது என்பது ஒரு கனா. 1986ல் ஒரு சில வசதியான நண்பர்கள் இல்லத்தில் Dyanaro, Solidare என்ற கருப்பு வெள்ளை பெட்டிகள் வர துவங்கிய காலம். வாரம் ஒரு முறை ஒளியும் ஒலியும் மற்றும் சித்ரஹார், சித்ராலீலா மற்றும் என்றாவது ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் டென்னிஸ் ஒலிபரப்பு. 

இந்நாட்களில் எங்களின் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். கிரிக்கெட், கிணற்று நீச்சல், ரஜினி -கமல் யார் பெரியவர் என்ற பட்டி மன்றம் மற்றும் என்றாவது ஒரு சினிமா. இப்படி போய்கொண்டு இருந்த காலத்தில் குறுஞ்சி பூ பூத்தார் போல் எங்கள் வீட்டிற்கு ஒரு பல வண்ண தொலைக்காட்சி பெட்டி அரபு நாட்டில் இருந்து வந்தது. அது வந்த இரண்டே நாட்களில் என் நண்பர்களின் எண்ணிக்கை பத்து மடங்கு ஆகிவிட்டது. கருப்பு வெள்ளையில் கிரிக்கெட் பார்த்து வந்த எங்களுக்கு கலர் டிவியில் ஆஸ்திரேலியாவில் இருந்து ஒளிபரப்பாகும் Benson and Hedges Cricket. 

கிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் எல்லோரும் தினம் தோறும் 9வது தெருவில் உள்ள பாலாஜி இல்லத்தில் சேருவோம். நான், பாலாஜி, வாட்மோர் என அழைக்க படும் வெங்கட், முதல் வீட்டு சந்தானம், பிரதீப், கிருஷ்ணன், குரு, பிரகாஷ் மற்றும் சில நண்பர்கள் சேர்ந்து மணி நேர கணக்கில் கிரிக்கெட் விளையாடுவோம். பாலாஜியும், வெங்கட்டும் பக்கத்துக்கு வீட்டில் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் எப்போதுமே போட்டி. சினிமாவில் "கமலா-ரஜினியா" கிரிக்கெட்டில் 'ஸ்ரீகாந்தா-சாஸ்த்ரியா" என்று இவர்கள் போடும் சண்டைதான் எங்களுக்கு தீனி. 

கிரிக்கெட்டை அதிகமாக விளையாடும் நாங்கள் அனைவரும் டென்னிஸ் விளையாட்டை ரசித்து பார்ப்போம். அப்படி டென்னிஸ் விளையாட்டை ரசிக்கும் நாட்களில் வந்தது தான் இந்த "ஹிந்தியும் விம்ப்ளேடனும்". 1985 வரை Borg-Connors-McEnroe தான் ஜாம்பவான்கள். இப்படி இருக்கையில் திடீர் என்று ஜெர்மனியில் இருந்து போரிஸ் பெக்கர் என்ற புதுமுகம் 1985ல் பட்டதை பெற்றான். பெக்கரின் ஆட்டம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. 1986 ஆட்டம் துவங்கிய முதல் அனைவருடைய கவனமும் பெக்கரை நோக்கி சென்றது. சென்ற வருடம் இவர் வெற்றி ஒரு லக் ஆட்டமாக இருக்குமோ என்ற பேச்சு எங்கேயும் இருந்தது.இந்த நிலையில் பெக்கர் தன்னோடு மோதிய அனைவரையும் வீழ்த்தி இறுதி ஆட்டத்திற்கு தகுதி ஆனார். இறுதி போட்டியில் அவர் எதிர்த்து ஆடும் இவான் லேண்டில் உலக no . 1 ஆகா இருந்த நேரம் அது. French, Australian, US open அனைத்தையும் வென்ற அவர் ஒரு புல் தடுக்கி பைல்வான். லண்டன் மைதானத்தில் உள்ள புல்லின் மேல் இவர் ஆட்டம் சற்று தடுமாறும். எப்படியாகிலும் வென்று விடுவேன் என்று சாவாலிட்டு ஆட்டத்தில் இறங்க ஆயத்தமானார். 

இறுதி ஆட்டம் July 6 ,1986. அது ஒரு ஞாயிறு கிழமை. ஆட்டம் தூர்தர்ஷனில் 5 மணிக்கு ஒளிபரப்பாகும். காலை ஆலயத்தை முடித்து கொண்டு நேராக நண்பன் பாலாஜியின் இல்லத்திற்கு சென்றேன். அங்கே அன்றைய ஆட்டத்தை பற்றிய முன்னோட்டங்கள் விவாதிக்கபட்டன. எலாம் பேசி முடித்த பிறகு நண்பன் சந்தானம் அனைவரின் பணத்தையும் சேகரித்தான். ஆளுக்கு 2 ருபாய். பெக்கர்தான் வெற்றி பெறுவான் என்று நானும் அன்று ஆலயத்திற்கு செல்ல வேண்டிய அம்மா கொடுத்த காசை ஆண்டவனிடம் கடன் சொல்லி கட்டி வைத்தேன்.அடியேனின் இல்லத்தில் கலர் டிவி என்பதால் அனைவரும் எங்கள் இல்லத்திற்கு 4:45க்கு கூடுவதாக ஒரு பிளான். மதியம் ஒரு 12 மணி போல் ஒருவொருக்கொருவர் பிரியாவிடை கொண்டு செல்ல முற்படுகையில் நண்பன் பாலாஜி என்னிடம் வந்து தனக்கு 4-5 ஹிந்தி வகுப்பு உள்ளது என்றும் (அவன் ஒன்னும் ஹிந்தி படிக்க போகவில்லை , அந்த கதையே "ஏக் தின் ஏக் கிஸ்ஸான் ரஹதாதா" என்று பிறகு தான் எங்களுக்கு தெரிய வந்தது, அதை பற்றி இன்னொருநாள் எழுதுகிறேன்) 5 மணிக்கு பாடம் முடித்து நடந்து வந்தால் 40 நிமிடம் ஆகிவிடும் என்று சொல்லி என் சைக்கிளை கடன் வாங்கி கொண்டான்.

12:30 போல் வீட்டில் வந்து சேர்ந்து ஞாயிறும் அதுவுமாய் வீட்டில் இருந்த ஆட்டுக்கறி கொழம்பை ஒரு பிடிபிடித்து விட்டு ஏப்பம் விடும் போடு நேரம் 1:15. டென்னிஸ் விளையாட்டுக்கு இன்னும் 4 மணிநேரம் இருகிறதே? அதுவரை என்ன செய்வது என்று நினநிது, கல்யாணமண்டபத்தில் இருக்கும் நண்பன் சடைஆண்டியின் வீட்டிற்கு சென்றேன். சடையும் நானும் சேர்ந்து அருகில் உள்ள டீ கடையில் ஒரு பானம் அருந்திவிட்டு அத்தோடு செய்யவேண்டிய சில கடமைகளையும் செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி ஆக்ஸ்லியம் கல்லூரியை நோக்கி சுள்ளி பொறுக்க கிளம்பினோம்.

அங்கே சென்றவுடன்தான் நினைவிற்கு வந்தது, அடடா.. இன்று ஞாயிறு ஆயிற்றே, கல்லூரி இல்லையே என்று. மீண்டும் வீடு வந்து சேரும் போது மணி 3.45. அப்போதுதான் நினைவிற்கு வந்தது ஆல் இந்திய ரேடியோவின் "நேயர் விருப்பம்". இந்நிகழ்ச்சியில் அந்த நாட்களில் ஹிட்டான ஒரு 6-7 பாடல்கள் ஒளிபரப்பப்படும். ரேடியோவை ஆன் செய்தால் முதல் பாடல், "அடி ஆத்தாடி", தொடர்ந்து "சின்ன மணி குயிலே", பின் "வா வெண்ணிலா", "மாமாவுக்கு குடும்மா குடும்மா" (இளைய ராஜா படா கில்லாடி பா! அதே இசையிலே வார்த்தையை மட்டும் மாற்றி ரஜினிக்கு ""மலையாள கரையோரம் தமிழ் பாடும் குருவின்னு ஒரு ஹிட் கொடுத்துட்டார்) என்ற அட்டகாசமான பாடுகளை கேட்டு முட்டிக்கும் போது மணி 4:55. அஞ்சே பாட்டுல எப்படி ஒரு மணி நேரம் போச்சின்னு கேட்கிறிங்களா? நல்ல கேள்வி. அந்த காலத்தில் பாட்டுபோடும் முன் அதை கேட்ட நேயர் பெயரை ஒருஅரைமணி நேரம் வாசிப்பாங்க. எல்லா பாட்டையும் எல்லா வாரமும் "டெல்லி பாபு" என்பவர் கேட்டதா சொல்லுவாங்கோ.

சொன்னபடியே பாலாஜியை தவிர மற்ற எல்லா நண்பர்களும் வீட்டில் சேர்ந்தாச்சு. டிவியை ஆன் பண்ணினோம். அப்போதான் ஞாயிறு தோறும் வரும் 'sports time 4-5" முடியும் தருணம். பாட்னாவில் நடக்கும் படகு போட்டி காட்டி கொண்டு இருந்தார்கள். சரியாக 5 மணிக்கு அது முடிந்து " Live to Wimbledon" என்ற எழுத்துக்கள் வர எங்கள் வாயெல்லாம் பல். மணியோ 5:10 ஆகிவிட்டது, ஆனாலும் டிவியில் டென்னிசை காணோம். ஒருவேளை விம்பிள்டனில் மழையோ என்று மலைத்து இருக்கும் போது, ஒளி பதிவு சற்று மறைந்து மீண்டும் வந்தது. அதை பார்த்த எங்களுக்கு ஒரே அதிர்ச்சி. தொலைகாட்சியில் மூன்று பேர் அமர்ந்து இருந்தனர். ஒருவர் 'புல்புல்தாரா" ஒருவர் "வயலின்" மற்றொருவர் "தபேலா" வசம் 'ரகுபதி ராகவ ராஜாராம் பாடலை வாசித்து கொண்டு இருந்தனர். அதிர்ச்சியில் அமர்ந்து இருந்த எங்களுக்கு என்ன நடகின்றது என்றே தெரியவில்லை. சில நிமிடங்கள் கழித்து வடமிருந்து இடப்புறமாக சில ஹிந்தி வார்த்தைகள் நகர்ந்தன. எங்களில் ஒருவனுக்கும் ஹிந்தி " நஹி மாலும்". என்ன செய்வது திக்காடி கொண்டு இருக்கும் போது, பழம் நழுவி பாலில் விழுந்து அதுவும் நழுவி வாயில் விழுந்ததை போல் எங்கள் ஹிந்தி பண்டிட் பாலாஜி மூச்சி வாங்கி கொண்டே வந்து சேர்ந்தான்.

அவனை அருகில் அழைத்து நடந்தவற்றை கூறி அந்த ஹிந்தி வார்த்தைகளை மொழி பெயர்த்து கொடு என்று கேட்டோம். அதை படித்த பாலாஜியின் முகம் பேய் அறைந்ததை (பேய் அறைந்ததை நாங்கள் பார்த்ததை இன்னொருநாள் எழுதுகிறேன்) போல் மாறியது. அடுத்த நிமிடமே இந்திய அரசியல் வாதிகளை ஆங்கிலத்தில் திட்டினான். அவனை சற்று நிதானபடுத்தி, இன்று டென்னிஸ் வருமா என்று கேட்டதிற்கு, 'வரும் ஆனா வராது" என்ற இக்கால வார்த்தைகளை அக்காலத்திலேயே சொன்னான். கொஞ்சம் விவரமாக சொல்லு என்றோம். நாங்கள் இவ்வளவு பேசும் போதும், அந்த மூணு பெரும் அதே பாட்டை மீண்டும் மீண்டும் வெவ்வேறு மொழிகளில் வாசித்து கொண்டு இருந்தார்கள். கடைசியாக பாலாஜி வாயை திறந்தான். "பாபு மரகையா" (மணி ரத்தினம் இங்க தான் காப்பிஅடிச்சி இருப்பாரோ?) என்று மிகவும் கோபமாக சொன்னான். அது சரி பாலாஜி, யாரு இந்த பாபுஜி என்று கேட்ட எங்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி. அவர் பெயர் ஜகஜீவன் ராமாம். அவர் துணை பிரதமராக இருந்தவராம், என்று சொன்னான்.  அதை கேட்ட நண்பன் குரு உடனடியாக என்ன? இங்கிலாந்து நாட்டில் ஒரு இந்தியன் பிரதமராக இருந்தாரா? சபாஷ்... அவர் எவ்வளவு நன்றாக ஆட்சி செய்து இருந்தால் விம்பிள்டனை நிறுத்தி  இருப்பார்கள் என்று மார் தட்டி கொண்டான். எனக்கோ சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனை தனியாக அழைத்து இவர் இந்தியாவின் துணை  பிரதமராக இருந்தார் என்று விளக்கி சொன்னேன்.

சரி அவர்தான் இறந்து விட்டாரே, அதற்க்கு ஏன் விம்பிள்டனை நிறுத்தினார்கள் என்று கேட்ட சந்தானத்திற்கு பாலாஜி கொடுத்த பதில் மாரடைப்பையே கொடுத்து விட்டது. "விம்பிள்டன் நடக்குதப்பா, ஆனால் அதை டிவியில் காட்ட மாட்டார்கள்". கூடி வந்து இருந்த பதினைந்து பெரும் குழம்பி விட்டோம். அதற்கு பாலாஜி இன்றுடன் சேர்த்து மூன்று நாட்க்களுக்கு நாடே சோகம் கொண்டாடவேண்டும் என்றான். சோகத்தை எப்படி கொண்டாடமுடியும் என்று கேட்ட பிரகாஷை கொஞ்சம் அமுக்கி வாசிக்க சொல்லிவிட்டு  வாட்மோர் என்ற வெங்கட், இந்த அரசியல்வாதிகள் இருந்தாலும் பிரச்சினை இறந்தாலும் பிரச்னை என்பதை அனைவரும் ஒத்துக்கொண்டு அவரவர் இல்லத்திற்கு சென்றோம். இரவு முழுக்க தூக்கம் இல்லை. பெக்கர் வெற்றியா? லேண்டில் வெற்றியா? 

காலை 5 மணிக்கு எழுந்து நேராக ஓட்டை பிள்ளையார் கோயில் அருகில் உள்ள ராதா கடைக்கு சென்று செய்தி தாளை படிக்கும் போது ஒரு இன்ப அதிர்ச்சி. பெக்கர் நேர் செட்டில் லெண்டிலை வென்றார். அங்கிருந்து கிளம்பி நேராக சந்தானம் வீட்டிற்கு சென்றேன். ஒன்றும் இல்லை என் 4 ரூபாயை வாங்கி கொள்ள. இவ்வளவு சோதனையிலும் 2 ரூபாயாவது வந்ததே என்ற சந்தோஷத்தில் மண்ணை வாரி போட்டான் சந்தானம். எப்படியும் லேண்டில் தான் வெற்றி பெறுவான் என்று எண்ணி நேற்று இரவே எல்லார் பந்தய பணத்தையும் செலவு செய்து விட்டானாம், நாங்கள் மன்னிக்க வேண்டுமாம். 

என்னவோ நாம் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று கூறி, கல்லூரில் சந்திக்கலாம் என்று விடை பெற்றேன். நாங்கள் எல்லோரும் வேறு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் ஆயினும், அவரவர் குல தெய்வத்திற்கு பயந்தவர்கள். கல்லூரியில் மதிய உணவிற்கு அமர்கையில், நண்பன் பாலாஜி, நம்மில் ஒருவன் எதோ ஒரு தெய்வ குற்றம் செய்து இருக்கின்றோம், அதனால் தான் நேற்று அப்படி நடந்தது என்றான். அனைவரும் ஒற்றுமையாக இருக்கலாம் என்று ஒத்துகொண்டோம். அனைவரும் பிரிகையில் மனதில் ஒரு உளைச்சல். நேற்று காலை ஆண்டவனுக்கு படைக்க வேண்டிய காணிக்கையை பந்தயமாக கட்டியதால் இருக்குமோ..


நீங்களே சொல்லுங்கள்.

http://www.visuawesome.com/
Our gang celebrating 25th Anniversary of B.com Graduation...


Thursday, July 10, 2014

திக்குமுக்கு ஆடிய பேராசிரியர் பாப்பையா (8:10) கூர்ந்து கவனிக்கவும்

எனக்கே கணக்கா? அனுமாருக்கே ஹை ஜம்ப்பா?


(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய....தொடர்ச்சி

இந்த சேகரும் டேவிட்டும் வண்டிய கிளப்பிட்டு போனதும் வீட்டில் வந்து படுத்தேன். தூக்கம் வரல. எவ்வளவு நெஞ்சு தைரியம் இருந்தா அவன் எனக்கே கணக்கு சொல்லி கொடுத்து இருப்பான், அதுதாங்க.. சென்ற இடுகையில் சேகர் சொன்னானே  யோ, "(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய"! அந்த நினைத்தவுடன் கொஞ்சம் கடுப்பே ஏறி எப்ப தூங்க போன்னணு எனக்கே தெரியில?

San Diegoக்கு இல்ல ... சந்தானம் வீட்டிற்கு ..

ட்ரிங்....ட்ரிங்....

சனியும் அதுவுமா, அதுவும் அம்மணியும் கண்மணிகளும் ஊரில் இல்லாத நேரத்தில் யாருடா நமக்கு போன் பன்றாங்கோனு அரை தூக்கத்தில் எழுந்து போனை பார்த்தா அதில் "தண்டம்-சுந்தரிஸ் ஹஸ்பன்ட்" என்று போட்டு இருந்தது.

Wednesday, July 9, 2014

'ஒன்று நூறாகி தலை குனிந்து நிற்கும் நெல் கதிர் வயல்'

 'இதுதானே நாம் கற்ற பள்ளி" யின் தொடர்ச்சி..


அருமையான மாணவர்களே... ஆசீரீயர்களே, மற்றோரே..வணக்கம்.
என் தொழில் சார்ந்த இடத்திலும் சரி, ஆன்மிக வாழ்கையிலும் சரி, சமூக வாழ்கையிலும் சரி நான் பல இடங்களில் பேச வாய்ப்பு கிடைத்ததுள்ளது.  இந்த இடங்களில் எல்லாம் பேசுகையில் எனக்கு வார்த்தைகள் தயக்கம் இல்லாமல் வரும். ஆனால் இன்று ஏனோ மனதில் ஒரு தயக்கம். ஒரு பயம். இருந்தாலும் அதை எல்லாம் மீறி சில வார்த்தைகளை மட்டும் சொல்லி விட்டு போகிறேன்.

Monday, July 7, 2014

(400-350-5)/3=15 தானே எடு அந்த 15 ரூபாய....

என் "முத்து குளிக்க வாரீகளா' பதிவை படித்து விட்டு இங்கே வந்த நண்பர்களுக்கு , அந்த "நுப்பது' கலாய்த்தல் கதை இரண்டு பாகம், இந்த முதல் பகுதியை படித்து கடைசி வரியில் உள்ள தொடர்ச்சி அடுத்த பாகம்" சென்றால் தான் சுவராசியமே. தங்கள் பொறுமைக்கும் வரவிற்கும் நன்றி!


பங்களூர் வாழ்கையின் மற்றொரு நாள். சனியும் அதுவும் எந்த சனியனின் சச்சரவும் இல்லாமல் மதியம் ஒரு 11 மணி போல் ஒரு பூனை தூக்கம் போட்டு கொண்டு, இடையில் இளையராஜாவின் "வர வர காதல், கசக்குதையா' என்ற பாடலை உணர்சிகரமாகே கேட்டு பாடி கொண்டு இருந்த வேளை.

இதுதானே தம்பி நாம் கற்ற பள்ளி..

மனதிற்குள் ஒரு பயம் கலந்த சந்தோசம். சந்தோசம் ஏன் என்று புரிகிறது. ஆனால் பயம் ஏன் என்று தான் தெரியவில்லை. 25 வருடத்திற்கு பிறகு நான் படித்த பள்ளிகூடத்திற்கு செல்கிறேன், இருந்தாலும் ஏதோ பள்ளி சீருடை அணிந்து கொண்டு பரீட்சைக்கு போவது போல ஒரு பயம். இந்த நிகழ்ச்சிக்கு

சில நாட்கள் முன்பு..

ஹலோ...சிர்காழி LMC  பள்ளிகூடமா?

ஆமா சார்.. நீங்க யார்?
என் பெயர் விசு, நான் இந்த பள்ளியில் பல வருடங்களுக்கு முன்னால் படித்தவன்.

ரொம்ப சந்தோசம் சார், உங்களுக்கு என்ன வேணும்?

ஒன்னும் இல்ல சார், நான் இப்ப வெளி நாட்டில் இருக்கேன், இன்னும் ஒரு 3 மாதத்தில் இந்தியா வர ஒரு திட்டம். என் பிள்ளைகளை அழைத்து கொண்டு நான் படித்த பள்ளிகூடத்தையும், தங்கிய விடுதியையும் காட்டவேண்டும் என்று ஒரு விருப்பம், அதை பத்தி தான் கொஞ்சம் பேச வேண்டும்.

ரொம்ப சந்தோசம் சார், எப்ப வரீங்கன்னு சொல்லுங்க, நாங்க உங்களுக்கு வேண்டியத தயார் செய்யுறோம்.

சார், அங்கே நான் படிக்கும் பொது ஐடா டீச்சர் - ரபேல் வாத்தியார்னு ஒரு தம்பதிகள் இருந்தார்கள், அவங்க இருக்காங்களா?

சார், அவங்க ரெண்டு பெரும் ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகி விட்டது. ஆனால் பள்ளிகூடத்து பக்கத்தில் தான் அவர்கள் வீடு  உள்ளது. நீங்க வந்தா பார்க்கலாம்.

ரொம்ப சந்தோசம் சார், 3 மாதத்தில் சந்திப்போம்.

இந்த தொலைபேசி முடிந்து அடுத்த சில நாட்களில் நான் இங்கே வரும் தேதி மற்றும் நிகழ்சிகள் பற்றி சில பேசி முடி செய்தோம். இந்த நாள் தான் அந்த நாள்.

அருகே இருந்த ஒரு ஹோடேலில் இருந்து நான் என் வீட்டு அம்மணி, மற்றும் இரண்டு கண்மணிகளும் புறப்பட்டு பள்ளிக்கூடம் நோக்கி சென்று கொண்டு இருக்கும் போது மனதில் பல மலரும் நினைவுகள்.
என் 9வது வகுப்பு ஆசிரியர் இளங்கோவன் ..தம்பி விசு...நீ நல்லா படிக்கிறவன். சின்ன வயதிலே தகப்பனை இழந்து விட்டாய். உனக்கு ஒரு சின்ன அறிவுரை. நிறைய காசு செலவு ஆகும் மருத்துவம் பொறியியல் எல்லாம் படிக்க  நீ கொடுத்து வைக்க வில்லை. நல்ல  படிப்பாகவும் இருக்கனும், அதே நேரத்தில் செலவும் இருக்க கூடாது. அதுக்கு ஒரே வழி, நீ கொஞ்சம் கஷ்டப்பட்டு படித்து தணிக்கையாளன் ஆகி விடு. என்ன ஒரு அருமையான அறிவுரை. "வைச்சிக்க நீ" ன்னு மனதில ஆழமா ஒரு இடத்தில அந்த அறிவுரைய போட்டு வைத்துக்கொண்டேன்.கரும்பு தின்ன கூலியா? என்று அன்று நினைத்தேன்.

வாகனத்தில் செல்லும் போது வழியில் காக்கி உடை அணிந்து கொண்டு NCC  மாணவர்கள் பயிற்சி எடுத்து கொண்டு இருந்தனர். அடடே, நாம் NCCல் இருக்கும் போது மாலையில் தானே பயிற்சி செய்வோம், ஏதாவது ஒரு விசேஷ நாட்களில் தானே காலையில் பயிற்சி நடக்கும் என்று நினைத்து என் NCC நாட்களில் சில வினாடிகள் என்னை துலைத்தேன்.

அடுத்த சில நிமிடங்கள் கழித்து நானும் என் குடும்பத்தினரும் தலைமை ஆசிரியரின் அறையில். அறையில் என்று சொன்னதும் தான் நினைவிற்கு வந்தது, என் தலைமை ஆசிரியர் அற்புதராஜ். பெயருக்கு ஏற்றபடி வாழ்ந்தவர். கண்டிப்பானா அன்பை காட்டுவார். நான் செய்த ஏதோ ஒரு பிழைக்காக அவர் விட்ட "அறை" நினைவிற்கு வந்து விட்டது.  ஒரு நடுக்கத்தோடு அமர்ந்தேன்.

எங்கள் பள்ளியில் தினமும் ஒரு 9 மணிக்கு காலை வழிபாடு நடக்கும். அங்கே மாணவர்கள் அனைவரும் அணிவக்குது நிற்பார்கள். மேடையில் சில மாணவ மாணவியர் சில பாட்டுகள் பாடிய பின் தலைமை ஆசிரியரோ அல்ல வேறு ஒரு ஆசிரியரோ ஒரு சிறிய "பேச்சு-அன்றைய தின அறிவுரை" வழங்கி, பின் அனைவரையும் அவர்தம் வகுப்புகளுக்கு அனுப்பி வைப்பார்.


8:55 போல் ஆகியது. என் எதிரில் அமர்ந்து இருந்த தலைமை ஆசிரியர் எழுந்து, விசு, இன்று காலை வழிப்பாட்டில் நீங்கள் தான் பேச போகின்றீர்கள். எங்கள் மாணவர்கள் அனைவரும் பழைய மாணவனாகிய தங்கள் பேச்சுக்காக ஆவலுடன் காத்து கொண்டு இருகின்றார்கள் என்று ஒரு குண்டை தூக்கி போட்டார். என்ன பேச போகிறோம் என்று யோசிப்பதற்குள் அறையின் வெளியே இருந்து.... ATTENTION .. என்று ஒரு சப்தம் கேட்க்க எட்டி பார்த்த நான் வியர்த்தே போய்விட்டேன்.

அங்கே அணி வகுத்து நின்ற NCC மாணவர்கள் எனக்கு "Walk of Honor" அளித்தனர்.  By the right, quick march.. என்று கூறி ஒரு Salute  அடித்து விட்டு  Left, right,  left  என்று இருபுறம் நடந்தனர். நானும் NCC (தேசிய மாணவர் படையை) சேர்ந்தவன் தானே, பழைய பழக்க தோஷத்தில் நெஞ்சை நிமிர்த்து கொண்டு அந்த பெருமையை ஒரு பதில் Salute அடித்து ஏற்று கொண்டேன். , நடுவில் என் மனைவி பிள்ளைகளோடு நடந்த எனக்கு என்னையும் அறியாமல் ஒரு சந்தோசம் கலந்த சின்ன பெருமையான புன்னகை. என் காலத்தில் எத்தனை பேருக்கு இந்த மரியாதையை நான் அளித்தேன் என்று சில வினாடிகளில் பல வருடங்களை கடந்து சென்றேன்.
இருபுறம் படை சூழ மேடையில் ஏறினேன். அருமையான பாடல்கள். அன்றைக்கான வேத வாசிப்பு. இப்போது என்னை பேச அழைத்தார்கள். மொழிபெயர்க்க யாராவது தேவையா என்ற கேள்விக்கு, நான் இல்லை தமிழிலே பேசுகிறேன் என்று கூறிவிட்டு... என்பேச்சை ஆரம்பித்தேன்..


என்ன பேசினேனா? அடுத்த இடுகையில்..

Sunday, July 6, 2014

என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன் ஆனால் செய்ய மாட்டேன்..

சென்ற இடுகையின்  தொடர்ச்சி..

இந்த வாரம் நம் நேயர்களில் ஒருவர்.. " நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன், ஆனால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டேன்".நான் ஏன்  இப்படி செய்கிறேன் என்று என்னை கேட்டு ஒரு சவால் விட்டு இருக்கிறார்.


அவருக்கான பதில் இதோ இங்கே..

சச்சின் ஒப்பற்ற வீரர்.. ஆனால் உப்பற்ற மனிதர்.


டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா சச்சினை யார் என்றே தெரியாது என்ற ஒரு உண்மையை சொன்னதினால் சச்சின் ரசிகர்கள் கோபம் அடைந்தனராம். அட அப்பரண்டீஸ்கலா.

அடுத்தாத்து அம்புஜத்த பார்த்தேளா?


நான் ஒரு மொழிபெயர்ப்பாளி. எந்த மொழி என்று கேட்கின்றீர்களா? அது ஒரு பன்மொழி. பெண்கள் எந்த மொழியில் பேசினாலும் அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை விட்டு விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை தான் நான் மொழிபெயர்த்து சொல்பவன்.
ஆண்குடிமக்கள் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். தங்குளுடைய மனைவியோ, காதலியோ, அம்மாவோ, பாட்டியோ, மகளோ, அக்காவோ, தங்கச்சியோ ஏன் பக்கத்து வீட்டு மாமியோ எதோ ஒரு விஷயத்தை தங்களிடம் சொன்னால், அவர்கள் என்ன சொன்னார்கள் என்பதை மறந்து விட்டு என்ன சொல்ல வந்தார்கள் என்பதை புரிந்து கொண்டால் நம் வாழ்க்கை "நல்லதோர் குடும்பம்" போல் செல்லும்.

இந்த மொழிபெயர்ப்பை சமூக சேவையாக கருதி நான் பல வருடங்களாக செய்து வருகிறேன். இந்த அருமையான கலையை நான் கற்று மற்ற நண்பர்களுக்கும் சொல்லி தருவதால் விசுவாசம் என்ற என் பெயர் இப்போது விசு "Awesome" என்று மாறிவிட்டது.


தங்களில் சில பேர் இங்கே என்னை ஒரு சந்தேக பார்வையுடன் பார்ப்பது புர்கின்றது, அதுவும் நியாமான சந்தேகம். ஆதலால் மேலே எழுதுவதற்குள் ஒரு உதாரணம்.


ஏங்க, பக்கத்து வீட்டு மாமி புதுசா ஒரு கம்மல் போட்டு இருக்காளே, நீங்க பார்த்தேளா?    இதுதான் கேள்வி

இதில் அவர்கள் சொன்னது என்ன என்பதே முக்கியம் அல்ல. என்ன சொல்ல வந்தார்கள் என்பது தான்  முக்கியம். இந்த மாதிரி கேள்விகளுக்கு உடனே பதில் சொல்வது தவறாகிவிடும். இங்கே இவர்கள் சொல்ல வந்தது பக்கத்து வீட்டு மாமி கம்மலை பற்றியே அல்ல.அவர்கள் மனதில் உள்ளது , தன் கணவன் பக்கத்து வீட்டு மாமியை நோட்டம் விடுகிறானா என்பதே.  இந்த கேள்விக்கு அவரின் கணவர் " ஆமாம் இல்ல, நானும் பார்த்தேன் மாங்காய் வடிவுலெ  ஓரத்தில ஒரு இலையோடு நல்ல கம்மல் என்று சொன்னால் அவருக்கு அங்கே சங்கராபரணம் தான்.

இந்த கேள்விக்கு அவரின் பதில் "பக்கத்து வீட்டில் மாமியா? புதுசா குடி வந்து இருக்காளா? எனக்கு தெரிஞ்சு ஒரு நடுத்தர வயது ஆண் தானே தங்கிவுள்ளார்"  இப்படி சொன்னால் தான் வாழ்க்கை ஓடும்.

சரி, இப்ப இவங்க என்ன சொல்ல வந்தாங்க என்று பார்ப்போம். பக்கத்து வீட்டு மாமியின் கம்மலை பற்றி இவர்களுக்கு ஒன்றும் அக்கறை இல்லை. இவர்கள் சொல்ல வந்ததே.. 'அவர்கள் எல்லாம் எவ்வளவு அழகாக புது புதுசா வாங்கி போடறாளே? உனக்கு வாழ்க்கை பட்டதில் இருந்து நான் என்னத்த கண்டேன்'? இங்கே அவர்கள் சொல்ல வந்த விஷயத்தை புரிந்து கொண்டால் இந்த ஆண் மகன் இங்கே தப்பிக்கும் வாய்ப்புகள் உண்டு. இவர் உடனே செய்ய வேண்டிய வேலை, ஒரு அழகான கம்மலை அவர்களுக்கு பரிசு அளிப்பது தான்.

சரி உங்கள் மொழிபெயர்ப்பு சந்தேகம் சற்று குறைந்து இருக்கும் என்று நம்புகிறேன். மேலே செல்வோம்.

இவ்வாறாக என் சமூக சேவை ஓடி கொண்டு இருக்கும் வேளையில், மாஸ்கோவில் இருந்து நண்பன் ராஜிடம் இருந்து  ஒரு தொலைபேசி அழைப்பு.

விசு... என் தோழி ஒருவர் MASALA.FM  என்று ஒரு online ரேடியோ நடத்துகின்றார்கள். நீ ஏன் உன் சமூகசேவையை அந்த ரேடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ஆண்களுக்கு செய்ய கூடாது? உன் சேவை எங்கள் எல்லாருக்கும் தேவை என்றார்.

உடனே அந்த அம்மணியிடம் தொடர்பு கொண்டு பேசி முடித்ததில் உருவானது தான் 'வைச்சிக்க நீ வித் பேராசிரியர் விசுawesome" .இந்த நிகழ்ச்சியில் நான் வாரம் ஒருமுறை வந்து என்னால் முடிந்த மொழி பெயர்ப்பை சொல்லுவேன். அங்கே உள்ள நேயர்களும் என்னிடம் மின் அஞ்சலின் மூலமாக என்னை தொடர்பு கொண்டு தங்களுக்கு புரியாத விஷயத்தை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள்.  இந்த நிகழ்ச்சியில் எனக்கு பிடித்ததே பெண்கள் என்னிடம் விடும் சவால் தான். சில பெண்கள் என்னிடம் நான் என் கணவரிடம் இப்படி சொன்னேன் - இப்படி நடந்து கொண்டேன்' அதின் உள்ளர்த்தம் எனக்கு மட்டும் தான் தெரியும், நீங்கள் முடிந்தால் பதில் கூறவும் என்பர், நான் கூறும் பதில் ஆச்சரியத்தையும் அதிசத்தையும் தரும். இந்நிகழ்ச்சியை நீங்களும் masala .FM ல் கேட்கலாம். உங்களுக்கான கேள்விகளையும் நீங்கள் அங்கே  உள்ள மின் அஞ்சலின் மூலமாக எனக்கு அனுப்பலாம். நான் உங்களுக்கு சரியான பதில் தருவேன்.

இந்த வாரம் நம் நேயர்களில் ஒருவர்.. " நான் தினமும் என் கணவரிடம் என்ன சமைக்க வேண்டும் என்று கேட்ப்பேன், ஆனால் அவர் கேட்டதை மட்டும் செய்து தர மாட்டேன்".நான் ஏன்  இப்படி செய்கிறேன் என்று என்னை கேட்டு ஒரு சவால் விட்டு இருக்கிறார். அவருக்கான பதில் அடுத்த இடுகையில்...

தொடரும்...

அந்த பதிலை இங்கே படிக்கலாம்.

Saturday, July 5, 2014

தண்டமா போன "தண்டபாணி"

சென்ற இடுகையின் தொடர்ச்சி..

விசு... தண்டபாணி பேசுறேன்...

சொல்லு தண்டம்..


செலவு எட்டணா... வரவு எப்படியண்ணா?

சென்ற இடுகையின் தொடர்ச்சி...

பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !



அது சரி.. இப்ப இவன் 'நோ தங்கமணி என்சாய்னு' சொல்லிட்டான் இல்ல. இவன் ஆசையை நம்ப நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு நப்பாசை. இந்த போனை பேசி முடித்தவுடன் நேராக எனக்கு பிடித்த "பாஸ்ட் பூட்' உணவகத்திற்கு வண்டியை செலுத்தினேன். மனதில் ஒரு உளைச்சல்.
"நாங்க ஊருக்கு போன உடனே, காஞ்ச மாடு கம்ப கொல்லையில் நுழைஞ்ச மாதிரி கண்ட இடத்தில போய்  சாப்பிட்டு உடம்பை கெடுத்து வைக்காதீர்கள்" என்ற சத்தம் "அசரீரீ" போல் எதிர் ஒளியோடு கேட்டது.


பனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை !

இது கோடை விடுமுறை, இந்தியாவில் வாழும் உங்களுக்கு அல்ல, கடல் தாண்டி இங்கே அமெரிக்காவில் வாழும் எங்களுக்கு. இந்தியாவில் கோடை விடுமுறை  மார்ச்ல் ஆரம்பித்து மே மாத கடைசியில் முடிந்து விடும். ஆனா இங்கே இந்த விடுமுறை ஜூன் இறுதியில் ஆரம்பித்து செப்டம்பர் வரை போகும்.

Saturday, June 28, 2014

சுவாரஸ் இல்லாமல் சுவாரசியமே இல்ல .


எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே மனதில் பட்ட கதை ஆதாம் ஏவாள் மற்றும் அவள் அந்த பழத்தை கடித்த "கடி"! இந்த கடியை நினைத்து நொந்து கொண்டு இருக்கையில் நம்ப உருகுவேவை சேர்ந்த கால்பந்து ஆட்டக்காரர் "சில்லினோ" எனும் இத்தாலிய வீரரை "சில்லி சிக்கன்" என்று நினைத்து கடித்து வைத்து விட்டார்.

அவர் கடித்த பின்பு அவரும் சரி மற்ற வீர்களும் சரி போட்ட நாடகம் 3வது படிக்கும் போது  நான் போட்ட ஒரு சண்டையை தான் நினைவுபடுத்தியது.
சரி, அதை விடுங்கள், கதைக்கு வருவோம். இப்போது கால்பந்து அதிகாரிகள் அவருக்கு 9 ஆட்டங்கில் தடை விதித்ததால் உருகுவே அணி இவர் இல்லாமல் ஆடவேண்டிய நிர்பந்தம்.
ஒரு கடிக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? ஒருவர் தவறுக்கு ஒரு நாட்டை தண்டிப்பதா? என்னை பொறுத்தவரை இது பிக் பாகெட் அடித்தவனுக்கு தூக்கு தண்டனை கொடுத்தது போல்.
சுவாரஸ் ஒரு தலை (கெட்ட) சிறந்த வீரர். அவரின் சேவை கால்பந்திர்க்கு தேவை.



வேண்டும் ஆனால் இப்படி செய்யலாமே. அடிக்"கடி" மற்றவர்களை "கடித்து" வரும் இவரின் 32 பல்லையும் புடுங்கி விட்டு இவரை ஆட்ட களத்தில் இறக்கலாமே! இப்படி செய்வதின் மூலம் இவரும் ஆடலாம், உருகுவே நாட்டிற்கும் கால்பந்து ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி.
என்ன சரிதானே?

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...