புதன், 9 நவம்பர், 2016

அமெரிக்க தேர்தலில் பிடித்தது...

வல்லரசான அமெரிக்க நாட்டில் வாழ்வதை ஒரு வரமாக கருதுபவன் நான். நன்மை தீமை எங்கும் உண்டு... அதை எடை போட்டு பார்த்து நன்மை தான் அதிகம் என்று எனக்கே ஒரு தீர்ப்பு வழங்கி கொண்டு தான் இந்த வாழ்க்கையை இங்கே ஆரம்பித்தேன்.

இந்த நன்மைகளில் ஒன்று தான் இந்த நாட்டின் தேர்தல் முறை. அதில் எனக்கு பிடித்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.




  • அதிபருக்கான வாக்குகளை மக்களே நேரடியாக செலுத்துவது.


  • இரண்டே கட்சி... மூன்றாவது என்று ஒன்று இருந்தாலும். பிரதான கட்சி இரண்டே...


  • பிரச்சாரம்... இந்த தேர்தல் நடக்கையில் அடியேனின் உறவினர்கள் இந்தியாவில் இருந்து வந்து இருந்தார்கள். சாலை ஓரத்தில் இருந்த சிறிய விளம்பர பலகைகளை பார்க்கையில் .. இது என்ன என்று கேட்டார்கள். இது தேர்தல் பிரச்சார அட்டைகள் என்றேன்.. அவர்களால் நம்ப முடியவில்லை. தேர்தல் முடிந்த அடுத்த நாளே இந்த அட்டையை வைத்தவர்களே அதை அங்கு இருப்பதை அப்புற படுத்துவதை பார்க்க முடிந்தது.


  • வாக்குகளுக்காக பணம் - மிக்சி - விசிறி -லொட்டு - லொசுக்கு என்று ஒன்றும் யாருக்கும் தரவில்லை.


  • அதிபராக போட்டியிடுபவர்களுக்கிடையே நேரடி விவாதம். இது மூன்று முறை நடக்கும். அதை நேரடி ஒளிபரப்பு செய்வார்கள் .அதை பார்க்கையில் இவர்களின் செயல் திட்டம் வாக்காளர்களுக்கு விளங்கும்.


  • துணை அதிபர் பதவியும் முக்கியம் தானே. ஒரு வேலை அதிபர் தாம் பதவியில் இருக்கும் போது இறந்து விட்டால் துணை அதிபர் உடனடியாக அதிபராக பதவி ஏற்பார். துணை அதிபர்களுக்கும் இந்த நேரடி விவாதம் ஒரு முறை நடக்கும். 


  • வாக்களிப்பது மிக எளிது. தபாலில் அனுப்பலாம். நேராகவும் செல்லலாம். 


  • வாக்கு அளித்து முடிந்த 5- 8 மணி நேரத்திற்குள் முடிவு. நான்கு ஐந்து நாட்கள் காத்து கொண்டு  இருக்க தேவை இல்லை.


  • கடைசியாக எனக்கு மிகவும் பிடித்த விஷயம்! ஒரு நபர் அதிக பட்சம் இரண்டு முறை  (8 வருடம்) அதிபராக பதவி ஏற்கலாம். அம்புட்டு தான். தள்ளாடும் வயதிலேயும் .. உடல் நலம் இல்லாத போதும் கூட.. பதவி வெறி பிடித்து அலைய ஆசை பட்டாலும், சட்டம் அதற்கு இடம் தராது.


பின் குறிப்பு ;

இதை படித்தபின்.. உடனே... இங்கே தேர்தலில்  இது மோசம் அது மோசம் அதை பற்றி ஏன் எழுதவில்லை என்று பின்னூட்டமிட்ட போவர்களுக்கு ஒரு அறிவுரை. நான் எழுதுவது எனக்கு பிடித்தது. உங்களுக்கு பிடித்ததை நீங்கள் எழுதவும்.

6 கருத்துகள்:

  1. அமெரிக்கத் தேர்தலில் எனக்குப் பிடித்ததும் இந்த வெளிப்படைத் தன்மைதான். பிடிக்காதது, கிட்டத்தட்ட ஒரு சர்வாதிகாரிபோல அதிகாரங்களை அள்ளி -செனட் இருந்தாலும் கூட கொடுப்பது. (ப்ரெசிடெண்ட் ஆலிவுட் படமும் பார்த்தேன்) இப்போது வந்திருக்கும் ட்ரம்ப் பழமை மற்றும் பணக்காரர்களின் ஆள் என்பதாகத்தான் சொல்கிறார்கள். பார்க்கலாம்... காலத்திற்கான பதிவுக்கு நன்றியும் வணக்கமும்.

    பதிலளிநீக்கு
  2. வாக்காளர் ரிஜிஸ்ரேஷன் மிக மிக எளிது... வாக்கு சாவடி மிக மிக அருகில் இருப்பது.....அதிபரைமட்டும் தேர்ந்தெடுக்காமல் அந்த பகுதியில் இருக்கும் பிரச்சனைகளை சொல்லி அதற்கு தீர்வு காண வாக்கு சேகரிப்பது லோக்கல் போலீஸ் அதிகாரி. ஜட்ஜ், கல்வி அதிகாரிகளை தேர்ந்தெடுப்பது என்று இன்னும் பலவற்றை சொல்லி செல்லாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்னா சொன்னேள் போங்கோ.. இதுக்குதான் படிச்சவாளோடு இருக்கணும்னு சொல்றது!

      நீக்கு
    2. ஆமாம் படிச்சவாள் யார் என்று சொன்னால் நானும் அவாகூட சேர்ந்து இருப்பேனே.....

      நீக்கு
  3. நன்றி. உங்கள் பதிவைப் படித்த பின்னர், அரசியல் நடைமுறையில்,ஜனநாயகத்தில் அமெரிக்காவைப் போல இந்தியா மாற வாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  4. அறியாத சில புதிய செய்திகளை தங்களின் பதிவு மூலமாக அறிந்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...