2016 செப் மாதம் பள்ளி கூடம் துவங்கியதில் இருந்தே மனதில் ஓர் அமைதியின்மை. மூத்தவள் பள்ளி இறுதி வருடமாயிற்றே. அடுத்த வருடம் கல்லூரிக்கு போக வேண்டும்.
பொதுவாக இங்கே இந்தியர்களின் பிள்ளைகள் 100 க்கு 80 % சதவீதம் கல்லூரியில் என்ன படிக்க போகின்றாய் என்று கேட்டால் அதற்கு வரும் பதில் .. Pre Medicine.
இந்த Pre Medicine என்ற படிப்பு இந்திய பெற்றோர்களுக்கு என்றே வந்த சனி என்று தான் சொல்லவேண்டும். இந்த படிப்புக்கு ஏற குறைய நான்கு வருடங்கள் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும். அதற்க்கு எக்கசக்க செலவு, அதை முடித்தால் பின்பு மருத்துவ கல்லூரியை சேர்ந்து மருத்துவராகலாம். இந்த Pre Medicine முடிப்பது என்பது குதிரை கொம்பு. நிறைய பிள்ளைகள் கிட்டத்தட்ட 3 வருடம் படித்து விட்டு தங்களால் முடியவில்லை என்று விலகி கொள்வார்கள்.
அமெரிக்காவின் கல்வி திட்டத்தின் படி ஒருவர் 26 - 28 வயதிற்குள் மருத்துவரானார் என்றல் அது பெரிய விஷயம்.
நானும் சரி - என் தோழமைகளுக்கு சரி முதல் பரம்பரை குடியேறிகள் ( First Generation Immigrants). நாங்கள் இந்தியாவில் படித்ததால் எங்களுக்கு இந்திய கல்வி திட்டம் சற்று தெரியும்.
18 வயதில் +2 முடித்து விட்டு அடுத்த 4 - 5 வருடங்களில் ஒருவர் மருத்துவர் -தணிக்கையாளர் - செவிலியர் - என்று ஏதாவது ஒரு துறையில் சான்றிதழ் பெற்று வேலைக்கு வந்து விடலாம்.
இந்த முறை இன்றும் மனதில் இருப்பதால் .. சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தியா அனுப்பி அங்கே மருத்துவம் படிக்க வைத்து 23 - 24 வயதில் இந்திய மருத்துவராக்கி மீண்டும் பிள்ளைகளை இங்கே ஒரு தகுதி பரீட்சை எழுத சொல்லி 26 வயதிற்குள் மருத்துவராக்கி விடுவார்கள். இப்படி செய்தால் இரண்டு அல்லது மூன்று வருடம் நமக்கு மிச்சம். இரண்டு அல்லது மூன்று வருடத்தத்தோடு .. நிறைய பணம் மிச்சம்.
ஆனால் எல்லா இல்லத்து பிள்ளைகளும் இதற்கு ஒத்து போக மாட்டார்கள். அடியேனின் இல்லத்தில் பிள்ளைகள் கண்டிப்பாக ஒத்துவரமாட்டார்கள் என்பதை நானும் அம்மணியும் அறிவோம்.
சரி.. இந்த வருட துவக்கத்தில் இருந்து ஏன் மனதில் அமைதி குலைந்தது. பள்ளி இறுதி ஆண்டில் இருக்கையில் டிசம்பர் மாதம் போல பிள்ளை எந்த கல்லூரியில் சேர போகின்றாள் என்பதை முடிவு செய்தாக வேண்டும்.
இந்தியாவை போல் +2 இரண்டாம் வருடத்தில் வரும் மதிப்பெண் போல் இங்கே முறையில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்த மாதிரி தேர்வு முறையும் இல்லை.
9வது முதல் 12 வரை நாம் தினந்தோறும் எப்படி படித்தோம் - எவ்வாறு வீட்டு பாடங்களை படித்தோம் என்று வாரந்தோறும் கூட்டிக்கழித்து GPA (Grade Point Average) என்று ஒன்றை வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும். அதுமட்டும் இல்லாமல் SAT என்ற இன்னொரு தேர்வு. இந்த GPA மற்றும் SAT முறைகளில் நல்ல மதிப்பெண் பெற்று இருந்தால் நல்ல கல்லூரிக்கு சென்று விடலாம்.
இன்னொன்று .. படிப்புக்கான பண உதவி (Scholarship) ... இது ஒரு கம்ப சூத்திரம்.
படிப்புக்கென்ற பண உதவி நம் இனத்தோருக்கு கிடையாது. கடந்த 15 ஆண்டிற்குள் இங்கே வந்த இந்தியர்கள் பெரும்பாலும் நல்ல ஒரு படிப்பு படித்து நன்கு சம்பாதிக்கும் வேலையில் இருப்பதால் நாம் இந்த படிப்புக்கான உதவி தொகை பெற முடியாது. இந்த தொகை பெரும்பாலும் வருமானம் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு தான்.
இசை - மற்றும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கினால் இந்த உதவி தொகை பெறுவது சற்று எளிது.
இங்கே தான் வந்தது அடியேனின் "அமைதியின்மை" ...
ராசாத்தி.. கேக்குறேன்னு தப்பா யோசிக்காத ?
அப்ப கேக்காதீங்க?
அப்புறம் பின்னாளில் ஏன் கேக்கலைன்னு நீ கவலை பட கூடாது ...
அப்ப கேளுங்க..
இந்தியா போய் மெடிசன் படிக்கிறியா ?
வாட் ?
சரி வேணா விடு..
டாட்.. யு நோ தட் ஐ வுட் பி எ டிஸாஸ்டர் அஸ் எ டாக்டர்..
அப்படி சொல்லாத மகள்.. யு ஆர் ஸ்மார்ட்..
டாட்.. டாக்டராக ஸ்மார்ட்னஸ் மட்டும் போதாது.. யு நீட் மெனி அதர் குவாலிட்டிஸ்...
யு ஹேவ் தோஸ் குவாலிட்டிஸ் ..
ஐ மைட் .... பட் டாட்.. ஐ அம் நாட் வெரி பிரேவ்.
யு டோன்ட் நீட் டு பி பிரேவ் டு பி எ டாக்டர், மகள்...
வாட் ஆர் யு டாக்கிங் டாட்? சும்மா யாராவது கோல்டுன்னு சொன்னாலே அவங்க கூட உட்கார்ந்து ஐ ஸ்டார்ட் க்ரையிங் .. ஐ காண்ட் பி எ டாக்டர்.
சரி விடு.. அப்ப CA படிக்கிறியா?
ஐ மைட்...
இந்தியா போனா 22 வயசுக்குல முடிச்சிடலாம்.. கிவ் இட் எ தாட் ...
ஐ எம் நாட் கோயிங் டு இந்தியா பார் ஸ்டடிஸ் ..
சரி..
இந்த வருடத்தின் பள்ளி ஆண்டின் ஆரம்பத்தில் நடந்தது இந்த பேச்சு..
அன்று முதல் நேற்று வரை, இல்லத்தில் தினந்தோறும்.. அடியேனும் .. அம்மணியும் மூத்தவளை..
படி..
ஹோம் ஒர்க் முடிச்சியா?
GPA கம்மியாகுது..
SAT பரீட்சை எழுதணும்..
பியானோ க்ளாஸ்.. பியானோ ப்ராக்டிஸ்.. பியானோ பரீட்சை...
கோல்ப்.. கோல்ப்... கோல்ப்...
கடந்த நான்கு மாதங்களில் பிள்ளையை கேள்விகளினால் அலைக்கழித்து விட்டோம்.
அவளை பதில் சொல்ல கூட அனுமதிக்கவில்லை.. பல நாள் பிள்ளை ஈர இமையோடு அவள் அறைக்கு செல்ல.. நானும் அம்மணியும்..
எல்லாம் அவள் நல்லதுக்கு தான் என்று ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லி கொள்வோம்.
இதோ டிசம்பர் அருகில் வந்து விட்டது. இந்த வருடத்துக்கான கோல்ப் அணியின் ஆட்டங்கள் முடிந்து விட்டது (2016-2017 Season is Over). ஒவ்வொரு வருடம் இந்த சீசன் முடிந்தவுடன்... இந்த அணிக்கான பாராட்டு - நிறைவு விழா (Banquet ) நடக்கும். அது தான் நேற்று நடந்தது.
அனைவரும் உண்டு முடிக்க ... அணியில் தலைமை பயிற்சியாளர் அணியை சார்ந்த ஒவ்வொரு வீராங்கனையையும் அழைத்து அவர்களின் இந்த வருட சாதனையை பற்றி பேசி சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் தருவார்கள்.
அனைத்து பிள்ளைகளையும் பற்றி பேசி முடித்து விட்டு கடைசியாக அடியேனின் மூத்தவள் பற்றி பேச ஆரம்பித்தார்.
இதோ அந்த காட்சி..
ராசாதிக்கள் இருவரும் ...
நீங்கள் வீட்டுக்கு போங்க.. எங்களுக்கு கொஞ்சம் நேரமாகும் என்று சொல்ல.. அம்மணியும்.. நானும்.. வண்டியில்... சில நொடிகள்.. அமைதி காத்து விட்டு.. பின்னர் எப்போதும் போல் நான் தான் பனிக்கட்டியை உடைத்தேன் (Broke the Ice).
நான் அப்பவே சொன்னேன்... அவ நல்லாத்தான் படிக்கிறானு.. நீ தான் நாலு மாசமா பிள்ளையை ரொம்ப டார்ச்சர் பண்ணிட்ட.. !
இதை கேட்டவுடன் அம்மணி.. உண்மைகளை பிட்டு பிட்டு வைக்க...நானோ..
சரி விடு.. எல்லாம் அவள் நன்மைக்கு தானே அப்படி பண்ணேன்...இதுக்கா என்னை இப்படி சத்தம் போடுவ..
என்று செல்லுகையில் ... வண்டி இல்லத்தை அடைந்தது...
சில நிமிடங்கள் கழித்து, ராசாதிக்கள் இல்லத்தை அடைய காத்து இருந்த நான்..
மகள்.. ஐ அம் சோ சாரி...
தட்ஸ் பைன் .. அப்பாலஜிஸ் அக்சப்டட் .. சாப்டா ஏதாவது இருக்கா?
மகள், நான் எதுக்கு சாரி கேட்டேன்னு நீ கேக்கலையே..?
ஐ டோன்ட் நீட் டு.. ஐ நோ வொய் யு செட் சாரி..
அப்படியா, ஏன் சொல்லு?
பிகாஸ் யு வேர் அன் நெஸ்ஸ்ரிலீ ஷவ்ட்டிங் அட் மீ பார் பௌர் மந்த்ஸ்..
யு ஆர் ரைட் .. ஐ அம் சாரி மகள்..
தட்ஸ் பைன்..... அப்பாலஜிஸ் அக்சப்டட்..
என்று அவள் சொல்லும் போதே அருகில் வந்த அம்மணியோ..
கங்கிராகுலேஷன்ஸ் ...
என்று சொல்ல..
மூத்தவளோ...
தேங்க யு..
என்று சொல்ல..
இருவரும் கட்டிப்பிடி வைத்தியம் செய்து கொள்ள ...
நானோ இளையவளை நோக்கி.. இங்கே ஏன் சும்மா நிக்கிற... சீக்கிரம் போய் படி
என்று சொல்ல..
அவளோ..
நீ திருந்தவே மாட்டியா ?
என்று ஆங்கிலத்தில் கத்த..
பின் குறிப்பு :
இரவு அனைவரும் உறங்கியவுடன்..
மூத்தவள் அறைக்கு சென்று...உறங்கி கொண்டு இருக்கும் அவளை.. இப்பதான் என் தோள்மேல் தூங்கி இருந்தாள்அதுக்குள்ள வளர்ந்து விட்டாள். அடுத்த வருடம் கல்லூரி.. வாழ்க்கையே தலைகீழாக மாறுது ...
என்று நினைக்கையில்..
அவள் கண்ணை திறந்து ..
வாட்ஸ் தி மேட்டர்?
சாயங்காலம் அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நீங்க வர கொஞ்சம் லேட் ஆச்சி..
சோ..
நான் தூங்க போறதுக்கு முன்னால் உன்னிடம் சாரி சொல்லிடலாம்னு அஞ்சு ஆறு முறை போன் பண்ணேன் , நீ எடுக்கவே இல்லை.. கோவமா இருந்தியா..
நோ டாட்.. நாளைக்கு சொல்லலாம்னு இருந்தேன்.. சரி.. உக்காருங்க சொல்றேன்..
சொல்லு..
தட் டைம் ஐ வாஸ் ஆன் அன்னதர் கால்..?
யாரோட?
யுவர் பேவரட் காலஜ் .. தட் கோல்ப் கோச் கால்ட் மீ..
ரியலி .. என்ன சொன்னாரு?
ஹி வான்டட் டு சி மீ..
ஐ அம் சோ ஹாப்பி பார் யு...
எந்த கோர்ஸ் படிக்க போற?
எம் பி ஏ..
அதுக்கு பேசிக் டிகிரி வேண்டுமே..
டாட். இந்த காலேஜில் ஒரு அஞ்சு வருஷ கோர்ஸ் இருக்கு. முதல் மூன்று வருடம் BA (பிசினெஸ்) கடைசி ரெண்டு வருஷம் MBA.. ஒழுங்கா படிச்சா அஞ்சு வருஷத்தில் எம் பி ஏ ..
அப்ப CA ?
அதை அப்புறம் பார்க்கலாம்.
சரி குட் நைட்..
அறைக்கு சென்று அம்மணியை எழுப்பி..
என்னங்க? தூங்குற ஆளை யாராவது எழுப்புவாங்களா?
நன் சொல்ல வரத நம்ப மாட்டே..
சொல்லுங்க..
அந்த காலேஜ் கோச் கூப்பிட்டாராம்.
தெரியும்..
இப்ப தானே எனக்கு தெரியும்.. உனக்கு எப்ப சொன்னா?
அவ வரத்துக்கு லேட் ஆகுதுன்னு சொல்லிட்டு.. அவ பிசியா இருப்பான்னு "வாழ்த்துக்கள்" ன்னு ஒரு டெக்ஸ்ட் பண்ணேன்..
அப்புறம்..
அதுக்கு அவ தெளிவா எனக்கு பதில் டெக்ஸ்ட் பண்ணா..
அப்ப அதை ஏன் எனக்கு சொல்லல?
அப்படி சொல்லிட்டா,.. நீங்க மன்னிப்பு கேக்க மாட்டீங்களே .. அதுதான்..

உங்கள் குழந்தைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குகுழந்தைகளை புரிந்து கொள்வதென்பது மிகக்கடினம் தான்...வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு