திங்கள், 14 நவம்பர், 2016

அமெரிக்காவில் பாக்யராஜின் லொள்ளு !


உறவினர் ஒருவரின் "திருமணம்" மற்றும் ராசாதிக்களின் "கோல்ப் சீசன்"  மற்றும் "அம்மணியின் ஐம்பதாவது பிறந்தநாள்" என்று கடந்த சில வாரங்கள் படு வேகமாக சென்றது.

எழுத எவ்வளவோ இருந்தபோதும், தமிழர்களுக்கு இப்போது பழக்கமாகிய " இன்னும் மூணு வாரத்தில் சரியாகிவிடும்" என்று ஒரு வாக்கியத்தை எழுதி விட்டு, முக்கியமான காரியங்களில் ஈடுபட்டேன்.

இப்போது, திருமணம் - கோல்ப் சீசன் - பிறந்தநாள் மூன்றும் முடிந்து வந்து இருந்த அணைத்து உறவினரும் இந்திய திரும்ப .. இல்லத்தில் இயல்பு நிலை திருப்பியது என்று ஞாயிறு நண்பகலில்  ஒரு பூனை தூக்கம் போடுகையில் . அலை பேசி அலறியது...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்..

என்னை இப்படி ஏமாத்திட்டேயே.. ?

சாரி தண்டம்.. அந்த 5௦௦-1௦௦௦ மாத்தமுடியாதுன்னு  அந்த பணத்தை உனக்கு கொடுத்தவுடன் தான் எனக்கு தெரிய வந்தது!

என்னாது 5௦௦-௦௦௦ மாத்தமுடியாதா? வாத்தியாரே?

அப்படி தண்டம் கேட்கும் போது தான் தண்டத்திற்கு இந்த விஷயம் இன்னும் தெரியவில்லை என்று சுதாரித்து கொண்டு...

இல்ல... ஐநூறாயிரம் பிரச்சனை தண்டம், நான் என்ன ஏமாத்தினேன்னு கேட்டேன்  ?

இம்புட்டு நாளா என்னமோ உலகத்திலே உன்னை மாதிரி யாரும் சமைக்க முடியாதுன்னு சொன்ன?

இன்னைக்கும் அதே தான் சொல்றேன், விஷயத்துக்கு வா.

உனக்கு சமையே தெரியல , சும்மா "டூப்" விட்டு  இருக்கன்னு சுந்தரி சொல்றா?

அட பாவி.. ஏன்..



காலையில் உங்க வீட்டு அம்மணி உன்னை உழவர் சந்தைக்கு அனுப்புனாங்களா ?

ஆமா ..

என்ன என்ன வங்கின்னு வர சொன்னாங்க..

டேய்.. உன் விஷயத்தை சொல்லு. நான் எல்லாத்தையும் சொல்லிட்டானா .. நீ குடும்பத்தோட லஞ்சுக்கு வந்துடுவ..

வெங்காயம் வாங்கி வர சொன்னா நீ வெள்ளை பூண்டு வாங்கி வந்தியா?

அட பாவி.. எந்த முட்டாளாவது வெங்காயத்துக்கு பதிலா வெள்ளை போன்று வாங்குவானா ? வெங்காயம் எல்லாம் நான் சின்னா வயசாயில்ல பதமா பாத்து வாங்குவேன். இன்னும் சொல்ல போனால், பள்ளி நாட்களில் எனக்கு "வெங்காய  விசு" ன்னு ஒரு பட்ட பெயரே இருந்தது!

"வெங்காய விசு"! கண்டிப்பா இருந்து இருக்கும் வாத்தியாரே.. ஆனா அதுக்கு அர்த்தமே வேற..

சரி நீ விஷயத்தை சொல்லு..

என்ன விஷயம்.

அம்மணி உன்னை வெங்காயம்  வாங்கின்னு வர சொன்னாங்கா?

சொன்னாங்க..

நீ என்னத்த வாங்கின்னு வந்த?

என்று தண்டம் கேட்க்கையில், மனதோ.. காலையில் இல்லத்தில் நடந்த விஷயத்துக்கு போனது!

ஏங்க...

சொல்லு..

முட்டை ஆப்பம் போடட்டா?

முட்டை வேண்டாம் .. வெறும் ஆப்பம், கூட தேங்காய் பால் ...

என்று சொல்லி விட்டு ...

சற்று நேரத்தில் சமையலறையில் மனைவியை பார்த்து..

இன்னைக்கு காலையில் ஒரு கனவு..

சொல்லுங்க..

நீ என்னை  ஆப்பம் போடட்டானு   கேக்குற..

பாவி மனுஷ.. அது கனவா.. நான் நிஜமாவே தான் கேட்டேன்.

அப்ப இன்னைக்கு காலையில் ஆப்பமா?

தேங்காய் பால் ?

பயப்படாதிங்க .. உங்களை தேங்காய் திருக சொல்ல மாட்டேன். இங்கே ரெடி மேட் இருக்கு.

என்னது தேங்காய் பால் .. ரெடி மேடா ? நைஸ்.

சரி சீக்கிரம் சாப்பிட்டு .. பக்கத்துல உழவர் சந்தை இருக்கு அங்கே போயிட்டு வாங்க.

நான் வேனும்ம்னா சந்தைக்கு போயிட்டு வந்து சாப்பிடட்டுமா?

இல்ல.. சாப்பிட்டு போங்க .. இவளுங்க ரெண்டு பெரும் ஆப்பம் , ஆப்பம்ன்னு உயிரை எடுக்குறாளுங்க.

அப்ப முதலில் அவளுங்களுக்கு போட்டு கொடு.. நான் சந்தைக்கு போயிட்டு வந்து சாப்பிடுறேன்..

கொஞ்சம் கூட புரியாம பேசுறீங்களே..

என்ன புரியில..

எப்பவுமே ஆப்பம் சுட்டா, முதலில் ஒரு நாலு அஞ்சு ஆப்பம் நல்லா  வராது.

அதனால..

நீங்க முதல் நாலு அஞ்சு ஆப்பத்தை சாப்பிட்டு போங்க.. அப்புறம் அவங்களுக்கு நான் செஞ்சி தரேன்.

அட பாவி.. நல்லா வராத ஆப்பம் எனக்கா?

பின்ன என்ன அவளுக்களுக்க கொடுக்க முடியும்? "ஷேப்" சரியா வராட்டி என்னை பத்தி என்ன நினைப்பார்கள்.?

சரி கொடு..

என்று சொல்லி சாப்பிட்டு கொண்டே சந்தையில் என்ன என்ன வாங்கணும் என்று கேட்க.. .

உங்களுக்கு ஏற்கனவே டெக்ஸ்ட் பண்ணிட்டேன் ... போய் வாங்கினு வாங்க..

சாப்பிட்டு கிளம்பினேன்...

போகும் வழியில் என்ன என வேண்டும் என்பதை படித்தேன்.. முதலிலேயே  "ஸ்ப்ரிங் ஆணியன்ஸ்".. என்று இருந்தது... தொடர்ந்து பல..

இந்த உழவர் சந்தை  வாரம் ஒருமுறை ஒரு பார்க்கிங்கில் நடக்கும். பெரும்பாலும் அவர்கள் ரொக்கத்தை தான் விரும்புவார்கள்.

முதல் கடையிலே அந்த ஸ்ப்ரிங் ஆனியன் வாங்கி கொண்டு பின்னர் மற்றவற்றை வாங்க துவங்கினேன்.

நன் முன்னே பின்னே பார்க்காத சில காய் வகையறாக்கள்.

ஆரஞ்சு  நிற காளி பிளவர்...



ஒரு வேளை  கேரட்டையும் காலி பிளவரையும் பக்கத்துல பக்கத்துல வைச்சு இருப்பாங்களோ?


பின்னர் ஊதா நிறத்தில் ஒரு காலி பிளவர். கத்திரிக்காய்க்கும்  காளிபிளவருக்கும் ஏதாவது...?


நிறைய விஷயங்கள் இருந்தது...

அனைத்தையும் வாங்கி வந்து ... இல்லத்தை அடைந்து, அமருகையில்..

ஏங்க... நீங்க வெளியே போனவுடன் போட்ட ஆப்பம் எல்லாம் சூப்பரா வந்து இருக்கு , இந்தாங்க கடைசி ஆப்பம் உங்களுக்கு என்று மனைவி சொல்ல..

அதையும் சாப்பிட்டு வீட்டுக்கு அறைக்கு மணி நேரம் தூங்க போகையில் தான் தண்டபாணியின் அலை பேசி..

வெங்காயம் வாங்கி வர சொல்லல தண்டம்..ஸ்ப்ரிங் ஆனியன்.. தான் வாங்கின்னு வர சொன்னாங்க,,

ஸ்ப்ரிங் ஆனியன்.. சரி, நீ என்னத்த வாங்கினு வந்த..

பாணி. ஸ்ப்ரிங் ஆனியன் சுலபமா வாங்கிடலாம்.. அதுல தப்பு பண்ண வாய்ப்பே இல்ல.

அங்கே போய் அம்மணியிடம் விசாரி..

அவன் சொல்லும் போதே... அம்மணி..

ஏங்க,

வெங்காயத்துக்கும்   வெள்ளை  பூண்டுக்கும்  வித்தியாசம் தெரியாதா ? என்னத்த வளத்தங்களோ போங்க...




மேலே வெங்காயம் .. கீழே வெள்ளை பூண்டு.. ஆறு வித்தியாசம் கூட இல்லையே.. 



இல்லையே சரியாதான் வாங்கினேன், எங்க காட்டு?

இதோ..

அட பாவி... வெங்காயம் போலவே இருக்கு? சத்தியமா சொல்றேன்.. வாழ்க்கையில் இம்புட்டு நாளா நான் பூண்டு செடியே பார்த்தது இல்ல ....ஒரு அஞ்சு நிமிஷம் இரு.. ஸ்பிரிங் ஆனியன்  வாங்கின்னு வரேன்..

பரவாயில்லை விடுங்க.. இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான். மதியம் வஞ்சர மீனில் பூண்டு கொழம்பு செய்யுறேன்.

அதே டே.. வஞ்சர மீனில் பூண்டு கொழம்பு.. TR பட டைட்டில் போல நீளமா, கேக்கவே நல்ல இருக்கு.

என்று பேசி கொண்டே இருக்கையில் ...

வாத்தியாரே..

சொல்லு..

அந்த பூண்டு இலையில் என்ன செய்ய போறீங்க?

ஒன்னும் இலை.. திரும்பவும் நட்டு வைக்க போறோம். ஏன்..

இல்ல , சுந்தரி தான் சொன்னா.  அதுல வஞ்சர மீனை போட்டு பிரட்டினா  பேஷா இருக்கும்னு.. அது தான், உங்க வீட்டில செஞ்சா வந்துட்டு போலாம்னு..

வஞ்சர மீனுல பூண்டு கொழம்பு.. அது எல்லாம் எங்க வூட்டு அம்மணிக்கு தெரியாது. உங்க வீட்டில செஞ்சா கூப்பிடு .. நாங்க குடும்பத்தோடு வந்துட்டு  போறோம்.


பின் குறிப்பு :

வாத்தியாரே..

சொல்லு..

உங்க அம்மணி சும்மா இல்லாமல் சுந்தரியிடம் .. சந்தையில் எல்லாம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்ல, சுந்தரியும் என்னை சந்தைக்கு அனுப்பிட்டா?

ஜாக்கிரதையா இரு தண்டம்.. வெங்காய இலையும் வெள்ளை பூண்டு இலையும் ஒரே மாதிரி இருக்கு.

ரொம்ப  அவசியம்.. நீ  இலைன்னு   சொன்னவுடன் தான் ஞாபகம் வருது. அங்கே ஒரு டப்பாவில் முருங்கை இலை போட்டு வித்துனு  இருந்தாங்கலாம்.

அது முருங்கை இலை இல்லை.. முருங்கை கீரை.

ரொம்ப அவசியம் ..

வாங்குனியா?

எங்கே வாங்கினேன்? காலையிலே ஒரு இந்தியன் வந்து மொத்த கூடையும் அள்ளினு  போய்ட்டாராம். 

2 கருத்துகள்:

  1. அடப்பாவிங்களா நீங்க முருங்கைகீரையை சீக்கிரம் வாங்கி இருக்க கூடாதா? நீங்க வாங்காததால் அதை எவனோ ஒரு இந்தியன் மொத்தமா வாங்கி நீயூஜெர்ஸிக்கு அனுப்பிட்டாங்க அதை இங்கே உள்ள படேல் கடையில் கறிவேப்பிலையை விட மிக கொஞ்சமாக போட்டு அதைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள் எங்க வீட்டாம்மா விடுவாங்களா அதை எல்லாத்தையும் வாங்கி அடை தோசை அது இது என்று எல்லாத்திலுல் போட்டு என்னை வதக்குகிறாங்க...ஹும்ம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன மதுர... உங்களை அறியாமலே ஒரு உண்மைய உளறிட்டிங்களே.. வீட்டுல என்ன சமைச்சாலும் அதுல ஒரு முருங்க ஐட்டம் போல இருக்கே.. நடக்கட்டும் நடக்கட்டும் ...

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...