Sunday, November 9, 2014

அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" !விசு நான், பரதேசி பேசுறேன்,  இப்ப பேசலாமா இல்ல பிறகு அழைக்கட்டுமா?

பேசலாம் அண்ணே, என்ன விஷயம்?


இல்ல, ஒரு முக்கியமான விஷயம் பேசவேண்டும், கொஞ்சம் நேரம் தேவைப்படும்.. அதுதான்.

இப்பவே பேசலாம், சொல்லுங்க.

ஒரே நிமிஷம் இரு விசு, நம்ம மதுரை தமிழன் வேறொரு லைனில் இருக்கார், அவரையும் கனெக்ட் பண்றேன்.


சரி அண்ணே... 

ஹலோ, மதுரை தமிழன் பேசுறேன்..

நான் பரதேசி, கூடவே விசுவும் இங்க இருக்கார்.

என்ன தமிழா, பின்னாலே என்னமோ தடால் புடால்னு சத்தம்?

ஒன்னும் இல்ல விசு, மனைவி கையில் இருந்து பூரி கட்டை வழுக்கி விழுந்தது. அதுதான்.

விசு, தமிழா, ஒரு முக்கியமான விஷயம்.

சொல்லுங்க பரதேசி..

போன மாதம் மதுரையில் ஒரு வலைபதிவர்களின் சந்திப்பு நடத்தி , ஒருவரையொருவர் நேர்முகமாக சந்தித்து ரொம்ப சந்தோசமாக பேசி சிரித்து பழகி இருகின்றார்கள்.

ஆமா , அண்ணே..நான் கூட நிறைய பதிவில் அதை பற்றி படித்தேன். நம்ம ஊரில் நடந்து இருக்கு நமக்கு போக முடியவில்லையேன்னு, தமிழனுக்கும் சேர்த்து நான் ஒப்பாரி வைச்சேன்.

அது சரி, பரதேசி அண்ணே.. இப்ப அதை பத்தி இங்கே என்ன பேச வரீங்க?

மதுரை, அந்த மாதிரி ஒரு சந்திப்பு நிகழ்ச்சி இங்கே அமெரிக்காவில் வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை.அதை பத்தி உங்கள் இருவரிடமும் பேசவேண்டும் என்று யோசித்தேன் . அதுதான் இந்த போன் கால்.

பரதேசி அண்ணே, கேக்க நல்லா இருக்கு.. நம்ம "ரிலாக்ஸ் ப்ளீஸ் வருணையும்" மற்றும் நம்ப "வாஷிங்டன் நண்பா "  அவரையும் கூட கூப்பிட்டு பேசலாம். 

விசு.. வருண் அவர்கள் தளம் தான் "ரிலாக்ஸ் ப்ளீஸ்" ஆனா ஒவ்வொரு பதிவையும் போட்டு விட்டு அவர் பின்னூட்டத்தை  படிக்கும் வரை யாரும் கொஞ்சம் கூட ரிலாக்ஸ் பண்ண முடியாது.

அண்ணே, அவர் வழி தனி வழி, தன மனதில் பட்டதை, என் வழிதனி வழின்னு சொல்லிடுவாரு. மூத்த பதிவர், இந்நாட்டில் வாழ்பவர், கண்டிப்பா ஆதரவு தருவார்.

"நண்பா "அவர் வாசிங்டன் பார்ட்டி. நம்ம பரதேசி அண்ணன் போடும் பதிவுக்கு எல்லாம் இவர் தான் ஆடிட்டர். இவர்  சேவை நமக்கு தேவை...    என்ன சொல்றீங்க?

நல்ல ஐடியா. இவன் ரெண்டு பேரை நீ காண்டக்ட் பண்ணு விசு.

சரி, எப்ப எங்க? அண்ணே..

அதை நம்ப எல்லாரும் பேசி தான் முடிவு பண்ணவேண்டும் விசு..நீ என்ன சொல்ற?

நான் என்ன சொல்ல இருக்கு அண்ணே? 

கிழக்கு சீமையில் இருக்க நீங்க - மதுரை தமிழன்- வருண்-நண்பா எல்லாரும் சேர்ந்து இடத்த நேரத்த சொல்லுங்க, நமக்கு அது ஓகே. 

மார்ச் மாசம் போல பண்ணலாம் விசு, ஆனால், கிழக்கில் வேண்டாம், ரொம்ப குளிர் -பனியா இருக்கும். மேற்கில் அந்த நேரம் அருமையான வானிலை. கலிபோர்னியாவில் வைத்து கொள்ளலாம். நீ என்ன சொலுற விசு?

கரும்பு தின்ன கூலியா.இங்க "பே ஏரியா"வில் நிறைய தமிழ் பதிவர்கள் இருகின்றார்கள். ஒருவரும் பெயரை சொல்லி கொள்ள மாட்டார்கள், ஆனால் , அவரகளை எல்லாம் அறிந்து கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. 

அது சரி விசு.. அமெரிக்க சந்திப்பு என்று இல்லாமால், வட அமெரிக்கா என்று போட்டு நம்ம கனடாவில் உள்ள பதிவர்களையும் அழைக்கலாமே. 

தப்பே இல்லை அண்ணே...அனால், கனடா ஆட்களை கூப்பிட்டால் எனக்கு பிரச்சனை. 

என்ன பிரச்சனை விசு..?

கனடாவை கூப்பிட்டாயே, எங்களை ஏன் அழைக்க வில்லை என்று இங்கிலாந்தில் உள்ள "கோயில் பிள்ளையும்", "அஞ்சலினும்" கோவித்து கொண்டால்?

சரி, அது ஓர் பிரச்சனையே இல்லை.

கலிபோர்னியாவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" என்று போட்டு தாக்கிடலாம்.

என்று இவர்கள் அனைவரும் சொல்லும் போது, ஏன் மூத்த மகள்... டாடி.. 5:45 ஆகிவிட்டது.. சீக்கிரம் எழுங்கள், எனக்கு பள்ளிக்கூடம் நேரம் ஆகின்றது என்று எழுப்பினாள்

அடே டே, கனவா..நல்லதொரு கனவு தான். காலை கனவு பலிக்கும் என்பார்கள் என்று வண்டியை கிளப்பினேன்...

எங்கள் நேரமோ காலை 6 மணி. கிழக்கு புறத்திலோ 9 மணி.. (அவர்கள் எங்களோடு 3 மணி நேரம் முன்னே செல்பவர்கள் ஆயிற்றே...) என் கைபேசி அலறியது...

ஹலோ.. திஸ் இஸ் விசு.

விசு ... அல்பி.. பரதேசி அட் நியூ யார்க் பேசுறேன்..இப்ப பேசலாமா? இல்ல பிறகு அழைக்கட்டுமா?

பேசலாம் அண்ணே, என்ன விஷயம்?

போன மாதம் மதுரையில் ஒரு வலைபதிவர்களின் சந்திப்பு நடத்தி , ஒருவரையொருவர் நேர்முகமாக சந்தித்து...

ஒ.. கனவு பலித்துவிடும் போல  இருக்கே?

www.visuawesome.com


37 comments:

 1. அட போங்க ஜெயலலிதாவும் கலைஞரும் ஒன்றாக சேர்ந்து அரட்டை அடித்தார்கள் என்று சொன்னால் கூட உலகம் நம்பும் ஆனால் மதுரைத்தமிழன் போனில் பேசினாரா என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்..

  ReplyDelete
 2. //மதுரை, அந்த மாதிரி ஒரு சந்திப்பு நிகழ்ச்சி இங்கே அமெரிக்காவில் வைக்க வேண்டும் என்று ஒரு நப்பாசை.//

  நான்னெல்லாம் வெளியில் இருந்துதான் ஆதரவு அதாவது வேடிக்கை மட்டும் பார்ப்பது.. ஹீஹீ

  ReplyDelete
  Replies
  1. அப்படி சொல்லிபுட்டா எப்படி தமிழா..? உங்க ஊரில் விசேஷம்.. நீங்க கலந்து கொள்ள வேண்டாமா?

   Delete
 3. Replies
  1. கண்டிப்பாக பலிக்கும் என்று ஒரு நம்பிக்கை.. பார்க்கலாம்..

   Delete
 4. ஆகா... “கனவு காணுங்கள்“ என்று நம்ம அப்துல் கலாம் சொன்னாலும் சொன்னார், வகுப்புல தூங்குற பயலுகள எழுப்பி என்னடான்னு கேட்டா “அப்துல் கலாம் சொன்னத செஞ்சா ஏன் சார் எழுப்பித் திட்றிங்க“னு கேட்டாய்ங்களாம்... ஆனா, சில நல்ல கனவுகள் பலித்தால் நல்லதுதான். அட்லாண்டா வந்திருக்கும் தேமதுரத் தமிழ் கிரேஸ்பிரதிபாவையும் சேர்த்துக்கொண்டு, புதிய நண்பர்களை -புதுக்கோட்டை கணினித் தமிழச் சங்கம்“ போல ஒன்றை ஆரம்பித்து செயல்பட்டால் நிச்சயமாக ஒரு 50பேர் கொண்ட அமெரிக்கத் தமிழ்வலைப்பதிவர் மாநாட்டையே நடத்தலாமே? (அப்படியே ஒரு கன்செஷன்ல எங்களுக்கும் ஏர்-டிக்கெட் வாங்கி அனுப்ச்சா நாங்களும் தமிழ்நாட்டுப் பிரதிநிதியா வந்துருவோம்ல..) சரி சரீ...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ஐயா. தேமதுரத் தமிழ் கிரேஸ்பிரதிபா அவர்களுக்கு ஓர் மின் அஞ்சல் எழுதியுள்ளேன். அவர்கள் பதில் வந்ததும் உமக்கு தெரிவிக்கின்றேன். தாம் வர சம்மதிப்பதும் ஓர் நல்ல செய்தியே. எங்கள் மானசீக குரு.. அண்ணன் அல்பியிடம் (பரதேசி அட் நியூ யார்க்) தம் கருத்தை எடுத்துரைத்தேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

   Delete
 5. வலைப் பதிவர் நிகழ்ச்சி நடத்துவது முடியாத காரியமல்ல. ஒற்றுமையோடு செயல்பட்டால் முடியும். ஆனா பிரச்சனை அதுவல்ல. நடந்து முடிந்த மதுரை வலைப் பதிவர் சந்திப்பில் நடந்த சில விரும்பத்தகாத சம்பவங்களாள் சில பதிவர்கள் வருத்தமடைந்ததாக படித்தேன். அது தான் தவிர்க்க வேண்டியது

  ReplyDelete
  Replies
  1. ஒரு நல்ல காரியம் நடக்கும் போது சில இடர்கள் நடைபெறுவது இயல்பே. நல்லதை எடுத்து கொள்வோம். மற்றவைகளை தவிர்ப்போம். வருகைக்கு நன்றி.மாது.

   Delete
  2. சகோதரருக்கு, நான் மதுரை வலைப்பதிவர் சந்திப்பில் காலை முதல் மாலை வரை இருந்தேன். அமைதியாக சிறப்பாகவே நடந்தது.. நீங்கள் “விரும்பத் தகாத” என்ற தொனியில் எதைச் சொல்லுகிறீர்கள் என்று தெரியவில்லை.

   Delete
  3. நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிய வில்லைய மாது. நானும் முழுமையாக அங்கு இருந்தேன். விரும்பத் தகாத சம்பவம் ஏதும் நடந்ததாகத் தெரியவில்லையே. இதைப் பற்றிய பதிவுகள் எழுதியபோது கலந்து கொள்ளாத ஒருவர் ஆதங்கப் பட்டு கூறியதையும் அது தொடர்பாக பாலகணேஷ் பதிவையும் பார்த்து சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவரும் பதிவர் சந்திப்பை ஏதும் குறை கூறவில்லை. முந்தைய பதிவர சந்திப்புகளை பற்றி அவ்வளவாக யாரும் எழுதவில்லை என்றே தெரிவித்திருந்தார்.

   ஒவ்வொருவருக்கும் சில விஷயங்களில் ஒத்த கருத்தும் சில விஷயங்களில் மாறுபட்ட கருத்தும் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதற்கும் சந்திப்பிற்கும் சம்பந்தம் ஏதுமில்லை. பதிவுகளில் காராசாரமாக விவாதித்துக் கொள்வதற்கும் ஒன்று கூடுவதற்கும் தொடர்பு இல்லை. எத்தகைய கருத்துடையவரும் விழாவில் கலந்து கொள்வதால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது

   Delete
  4. உண்மைதான். திரு.முரளிதரன் அவர்கள் சொன்னது போல திரு.பாலகணேஷ் அவர்களின் பதிவை படித்துதான் இதை எழுதினேன். தவறுக்கு மன்னிக்கவும். மதுரை பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போனதில் வருத்தப்படும் பதிவர்களில் நானும் ஒருவன்

   Delete
 6. Replies
  1. அற்புதம் ஐயா.. அற்புதம்... இந்த மாதிரி நிகழ்ச்சியில் நான் சேர முடியாமல் போனதே... வருகைக்கு நன்றி...2010ல் இவ்வளவு பெரிய நிகழ்ச்சியா? கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

   Delete
 7. அட படிக்க நிஜம்னு நினைச்சேனே... இருந்தாலும் உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்.... கனவுகள் தானே அனைத்துக்கும் முதல் படி..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கு நன்றி எழில் அவர்களே... கனவு பலித்தால் நன்றே...

   Delete
 8. நல்ல விசயம்! பலிக்கட்டும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. இதற்கு தான் நான் alfy அவர்களின் தளத்தில் இரண்டு நாள் முன்பே சொன்னேன்..
  "தலைவர் விசு வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விசு வாழ்க..வாழ்க.."
  என் கனவும் நனவாகும் போல் இருக்கிறது..

  ReplyDelete
 10. முதலில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" தலைவர்..
  அப்படியே கலிபோர்னியா தமிழர்கள் தலைவர்..
  அதை வைத்து ஹாலிவுட் என்ட்ரி.. தலைவா படம் - ரீமேக்..
  அப்புறம் கலிபோர்னியா கவர்னர்..
  அப்படியே போய்ட்டே.. அமெரிக்க ஜனாதிபதியே தான்..

  நண்பர் alfy'யும், நானும், கிழக்கு பகுதியை பிரச்சாரம் பார்த்துப்போம்..
  நண்பர் மதுரை தமிழன் துணை இருப்பார்..

  தலைவர் விசு வாழ்க.. வருங்கால அமெரிக்க ஜனாதிபதி விசு வாழ்க..வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. Nanbaa... Dude,... All I had was a dream, you are turning that into a "Nightmare"...

   Delete
  2. "Nightmare" for people only.
   நமக்கு எதுக்கு அது பற்றி பேசிக்கிட்டு..
   கவலையை விடுங்க.. நாங்க பார்த்துக்குறோம்.. :)

   Delete
 11. அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" ! என்றால்
  விசா, டிக்கட் எல்லாம் இலவசமாகக் கிடைக்குமா?

  சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 12. நான் ரெடி . ஆனால் நியூயார்க்கில் வைத்தால் அத்தனை ஏற்பாடுகளையும் நான் செய்து விடுவேன். கூடும் இடம் ரெடி ( 50 முதல் 500 வரை சமாளிக்கலாம்) . தமிழ்ச்சங்க
  நண்பர்களும் உதவுவார்கள் .சர்ச் கெஸ்ட் ஹவுசில் குறைந்த கட்டணத்துக்கு தங்குமிடமும் தயார். தேதியை சொல்லுங்கள் விசு .கனவை நனவாக்கலாம் .

  ReplyDelete
  Replies
  1. இதுக்கு தான் அண்ணே 'உங்கள மாதிரி ஆட்களிடம்" எப்பவுமே தொடர்ப்பு வைத்து கொள்ள வேண்டும். சூப்பர் ஐடியா.. நியூயார்க் ..சிடியில் வைத்து கொள்ளலாம். ஆட்சேபனையே இல்லை. ஆனால், இங்கே இருக்கின்ற நிறைய பதிவர்களை எப்படி தொடர்பு கொள்வது. அவங்க தான் வெளியவே வர மாட்டேன் என்று அடம் பிடிகின்றார்களே... அவர்கள் எல்லாரும் வந்தா நல்லா இருக்கும். அதற்கு ஒரு யோசனை சொல்லுங்களேன்.

   Delete
  2. பெரியவர் முத்து நிலவனும் வர தயார் போல இருக்கு. அவர் தலைமையில் ஒரு பட்டிமன்றதையும் போடலாமே...அப்படி பட்டிமன்ட்ட்ரம் போட்ட.. என்னை தயவு செய்து அவர் வருண் தலைமையில் உள்ள அணியில் போடுங்க. நீங்க வேண்டும் என்றால் உங்க ஆடிட்டர் "நண்பா" தலைமையில் உள்ள அணியில் பேசுங்கள்.

   Delete
  3. நண்பர் வருணின் எதிர் அணியில் நானும் alfy'யும் ஆ!!!
   நண்பர் alfy'காவது "பில்ட்-அப் மட்டும் தான் ஸ்ட்ராங்க். மத்தபடி பேஸ்மெண்ட் கொஞ்சம் வீக்’தான்".
   நமக்கு பில்டிங்'கும் சேர்த்து வீக்...

   Delete
 13. விசு,

  தமிழ்மணம் நடத்துபவர்களே அமெரிக்காவில்தான் இருக்காங்களாம்! :)))

  எனக்குத் தெரிய

  * பாஸ்டன் ஷ்ரிராம்

  * இளா

  * பழமை பேசி

  போன்றோர் யு எஸ் ல இருந்து பதிவிடுவார்கள். இவங்க எல்லாம் எனக்கே மூத்த பதிவர்கள்! :) இப்போ நீங்கள்லாம் வந்ததும் எங்கே போனாங்கனு தெரியவில்லை. முகநூல், ட்விட்டர்னு போயிட்டாங்களோ என்னவோ.

  நல்ல முயற்சி! நல்லா நடத்துங்க! :)))

  இதுபோல் ஒரு நல்ல காரியத்துக்குப் போயி என்னை ஏன் இப்படி கனவுகண்டு அழைக்கிறீங்க? சந்திப்பின்போது கொஞ்சம்கூட ரிலாக்ஸ் பண்ண ஆசையில்லையா? :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண் . தமிழ் மணம், இங்கே வசிப்பவர்களா? நல்ல செய்தி தான். அவர்களும் இந்த பதிவை பார்த்து ஏதாவது ஒரு யோசனை கூறினால் நன்றாக இருக்கும். கண்டிப்பாகே என்றாவது ஓர் நாள் தம்மை சந்திப்பேன்.. அப்போது.. ரிலாக்ஸ் தான்..

   Delete
  2. பாஸ்டன் அண்ணா, இளா அண்ணா, பழமைபேசி அண்ணா, தஞ்சாவூரான் ஓஆர்பி ராஜா தொடங்கி நான் வரை பழைய பிளாகர்ஸ் எல்லாரும் கூகிள் பிளஸ்சில் செட்டில் ஆயிட்டோம். அங்க வாங்க வருண்ணே. அப்புறம் கயல் எப்படி இருக்காங்க? உங்ககிட்ட பேசியே பல வருஷம் ஆச்சு!!!

   Delete
 14. visu:

  * சொ சங்கரபாண்டி (aka சுடலைமாடன்)

  * சுந்தர வடிவேலு

  * தமிழ் சசி

  இவர்கள் எல்லாம் தமிழ்மணத்தை நடத்தியவர்கள். இன்றைய நிலையில் "தானியங்கி"யாகத்தான் தமிழ்மணம் இயங்குகிறது. இருந்தாலும் தானியங்கியை இயங்க வைத்தவர்கள்/வைப்பவர்கள் இவர்கள் என்பது என் புரிதல்..

  இவர்களை நீங்க ஃபெட்னா வில் சந்தித்தும் இருக்கலாம்..உங்க நண்பர்களாகக் கூட இருக்கலாம். :)

  I dont know their personal situation today and how much they want to get involved in bloggers related stuff and all. But I am sure they will certainly help you and direct you and assist you at least from the "remote"! !

  Wish you all the best! :)

  ReplyDelete
 15. அமெரிக்காவில் "உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு" சிறப்பாக நடைபெற வேண்டும். அயல்நாட்டிலுள்ள நமது தமிழ் வலைப் பதிவர்கள் முகங்களைக் காணவேண்டும் என்பது எனது ஆசை.
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி தமிழ் அவர்களே. உங்கள் விருப்பமே எங்கள் ஆசையும். எத்தனை பதிவர்கள் ஆவலாயிருகின்றார்கள் என்று பார்த்து பின்னர் இதற்கான அடுத்த காரியத்தை கவனிப்போம்.

   Delete
 16. நண்பரே! முதலிலேயே இதுகனவாகத்தான் இருக்கும் என்று தெரிந்தது என்றாலும் தங்களது கனவு மெய்ப்பட வேண்டும்! நல்ல விஷயமே! தங்களது பாட்டும், நடனமும் இருக்கும் தானே!!!!!! காண ஆவல்!

  ReplyDelete
  Replies
  1. ஆடலுடன் பாடலும் சேர்த்து ரசிப்பதில் தானே சுகம் சுகம் சுகம் !
   இந்த சந்திப்பு கண்டிப்பாக நடக்கும் என்ற ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு. நீங்களும் வரலாமே!

   Delete
 17. கனவு நனவாக வாழ்த்துக்கள்.

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...