வெள்ளி, 7 நவம்பர், 2014

வெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...

சென்ற வருடம் அமெரிக்காவில் பேராசிரியர் பாப்பையா அவர்களின் தலைமையில் "பிள்ளைகளை வளர்க்க சிறந்த நாடு இந்நாடா (அமெரிக்காவா) அல்ல  தாய் நாடா (இந்தியாவா ) என்ற பட்டி மன்றம் நடந்தது. அதில் அடியேன் அமெரிக்காவே என்று பேசினேன். அதை பதிவாகவும் வெளி இட்டு இருந்தேன்.



அதை பார்த்த ஒரு வாசக நண்பர் நான் கூறியவைகள் தவறு என்றும், இப்போது இந்தியாவின் நிலையே வேறு என்றும்,வெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும் என்றும்...அவர் கருத்தை பின்னோட்டத்தில் வைத்தார்.

என்னுடைய இப்பேச்சை கேட்டு நான் கூறுவதில் இருந்து இந்தியா மாறி இப்போது நிலைமை நன்றாக இருகின்றதா என்று பின்னூட்டம் இடுமாறு தயவுடன் கேட்டு கொள்கிறேன்.





www.visuawesome.com

13 கருத்துகள்:

  1. Hi Visu,

    My son cries as I had to come back to India and admit him in chennai. You just cannot compare the quality of education in US with that of India. They do not have good teachers, infrastructure and the attitude of teachers have not changed. The teachers do not update themselves with the latest concepts and encourage rote learning. They do not encourage students to think and ask questions. Education is really pathetic. Please do not bring your children to India, if they happen to be in a good county school. We were in fairfax county in Virginia and my son was one of the toppers in the school and did International Baccalaureate with 4.25 GPA out of 4.0 (yes, there is no error !)

    பதிலளிநீக்கு
  2. 4.25 GPA.. Do me a favor, take the boy out this evening and send me the tab. Seriously! What do you feed this kid? You must be one proud parent and you should be. Congrats are in order. My daughters are in pretty good County and are good in their studies as well. Thanks for posting your comment. I do appreciate that.

    பதிலளிநீக்கு
  3. தங்களின் கருத்தில் இருந்து மாறுபடுகிறேன் நண்பரே
    தாங்கள் தமிழகத்தில் பிறந்துதானே இந்நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள்
    என்ன கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது மட்டுமல்ல கல்வி
    நாம் எப்படிக் கற்றுக் கொள்கின்றோம் என்பதில்தான் இருக்கிறது
    படிக்கும் காலத்திலேயே துப்பாக்கியை தூக்கி சக மாணவர்களைச் சுட்டுக் கொள்கின்றார்களே, அங்கு , அதுதான் சிறந்த சிறப்பாண கல்வியா?
    கல்வி என்பது பாடங்களை போதிப்பது மட்டுமல்ல,
    ஒருவனை மனிதனாக மாற்ற வேண்டும், அதுதான் கல்வி
    மன்னிக்கவும் நண்பரே, இது என் கருத்து

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரந்தை ஐயா அவர்களின் கருத்துக்கு நன்றி. இத ஒரு நகைச்ச்சுவை பட்டிமன்றமே. இந்த பட்டிமன்றதிர்க்கான தீர்ப்பும் கூட "நல்ல பிள்ளைகள் எங்கேயும் வளரும்" என்பது தான்.
      இதை நான் இங்கே வைத்து மற்றவர்களின் கருத்தை கேட்பதினால் என்னை யாரும், நான் தாய்நாட்டு எதிரி என்று என்ன வேண்டாம்.
      எனக்கு புரிந்தவைகளை கூடி கழித்து பார்த்தேன், எனக்கு இங்கே வாழ்வது தான் சரி பட்டு வரும் என்று அறிந்து கொண்டு இங்கே வாழ்ந்து வருகின்றேன். இந்த பேச்சை பார்த்து மற்றொரு பதிவர் இந்தியாவில் நிலைமை மாறி உள்ளது என்று கூறியதால் தான் இதை மீள் பதிவாக இங்கே போட்டேன். தம் கருத்தை மரியாதையுடன் ஏற்கின்றேன்.

      ஐயா, நான் ஒன்றும் எதுவும் பெரிதான நிலையை என் வாழ்க்கையில் அடையவில்லை. ஒரு கணக்கு பிள்ளையாக என் வாழ்வை தள்ளி கொண்டு இருக்கின்றேன் என்பதை தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன் .
      வருகைக்கு நன்றி!

      நீக்கு
  4. Varun,

    You gotta excuse me my man. I just cant post your comment in here. Hope you understand my take.

    I sincerely appreciate your thoughts, though. Keep visiting.

    பதிலளிநீக்கு
  5. ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும் இங்கே ஏதும் கேட்கவில்லையே...
    பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம் பார்க்க ஒரு சோலையில்லையே...
    வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு துப்ப ஒரு வழியில்லையே...
    ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு ஆட ஒரு ஓடையில்லையே...
    இவ்வூரு என்ன ஊரு...? நம்மூரு ரொம்ப மேலு...
    அட ஓடும் பல காரு... வீண் ஆடம்பரம் பாரு...
    ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு...?


    மாடு கண்ணு மேய்க்க மேயிறதப் பாக்க மந்தைவெளி இங்கு இல்லையே...
    ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட அரச மர மேடை இல்லையே...
    காளை ரெண்டு பூட்டி கட்டை வண்டி ஓட்டி கானம் பாட வழியில்லையே...
    தோழிகளை அழைச்சு சொல்லிச் சொல்லி ரசிச்சு ஆட்டம் போட முடியலையே...
    ஒரு எந்திரத்தை போல அட இங்கே உள்ள வாழ்க்கை...!
    இதை எங்கே போயி சொல்ல...? மனம் இஷ்டப்படவில்லை...
    நம்மூரைப் போல எந்த ஊரும் இல்லை...

    சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா...?
    அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா...?
    பல தேசம் முழுதும் பேசும் மொழிகள் தமிழ் போல் இனித்திடுமா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தனபாலன்... மேலே நிறைய காரியங்களை போட்டுவிட்டு நம்மூர் போல வரும்மான்னு கேட்கின்றீர்களே, நம்ம ஊர் இன்னும் தமிழ் நாட்டில் தானே இருக்கு? அங்க தான் நீங்க எழுதிய விசயங்களில் ஒன்னு கூட இல்லையே.

      நீக்கு
  6. Dont worry, Visu. I do understand that it needs to be filtered. I will visit you again. :) Take it easy. :)

    பதிலளிநீக்கு

  7. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. வருடத்தில் ஆறுமாசம் வேண்டுமானால் இருந்துக்குங்க :)
    எப்பூடி நம்ம தீர்ப்பு !
    த ம 4

    பதிலளிநீக்கு
  9. sir! parents thaan patta kashttangal pillaikal padakudathu ena avakalai nallaa pathukkuranga.

    athu pola nalla vasathikal ella vithathilum america vil ungal pillaikalukku kidichappo ninga en sir thirumpa varanum?

    indiavil nilaimai mosamaaka maarikkondu irukkirathu. ithai nan soli ungalukku theriya vendiyathu kidiyathu.

    antha pattimandram video erkanave oru murai paarthirukkiren.
    nalla pesi irukkurirkal.

    பதிலளிநீக்கு
  10. நல்ல பதிவு நண்பரே! இந்தியா சிறப்பான நாடுதான் அதில் ஐயமில்லை! இந்தியாவை யாரும் குறை சொல்ல முடியாது ஆனால் அதை ஆளும் நம் அரசியல் வாதிகளும், இங்கு நிலவும் சிஸ்டமும் தான் மக்களுக்கு எதிரிகள்:! பல நல்ல சிந்தனையாளர்களையும், அறிவு ஜீவிகளையும், படைப்பாளிகளையும் நாட்டை விட்டே துரத்துகின்றது! வேதியலில் நோபல் பரிசு பெற்ற வெங்கட் இங்கிலாட்நில் இருப்பவர் சொன்னதும் அதே தான். கமலும் கூட சமீபத்தில் நாடு விட்டு வெளியேற விரும்பியது அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிதான். நம் இளைய தலைமுறையினரும் இது போன்ற அரசியல் சட்டங்களையும், சமுதாய அவலங்களையும், கல்வியில் சாதியும், பணமும் விளையாடுவதையும் பொறுக்க முடியாமல் தான் வெளியேற விரும்புகின்றனர். என்ன செய்ய?! இங்கு இன்னும் நிலைஅமி மோசமாக மாறிக் கொண்டுதான் இருக்கின்றதே அல்லாமல் சீர் திருந்தி வர்வதாகத் தெரியவில்லை. இருந்தாலும் நாம் நம் இந்தியா வல்லரசாகிவிடும், உலக அரங்கில் தலை நிமிரும் என்ற நம்பிக்கையுடன், போலி பிம்பத்துடன் நம்மையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்பதுதான் உண்மை!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...