Saturday, November 29, 2014

போனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...


பள்ளி இறுதி நாட்களில் வெளி வந்த படம் " நினைத்தாலே இனிக்கும்" . ரஜினி காந்த் (அப்போ சூப்பர் ஸ்டார் என்ற அடை மொழி எல்லாம் இல்லை) மற்றும் கமல் ஹாசன் (அன்றும் சரி இன்றும் சரி இவரை உலக நாயகன் என்று என்னால் அழைக்க முடியவில்லை, வட இந்தியாவிலே இவர் படத்தை பார்க்க ஆள் இல்லை, பிறகு எப்படி உலகநாயகன்?) இருவரும் சேர்ந்து நடித்த படம்.

MSV  அவர்களின் 1000மாவது படம் என்று எங்கேயோ படித்த நினைவு, ஆனால் ஊர்ஜிதமாக சொல்ல முடியாது. அருமையான பாட்டுகள், அட்டகாசமான பாத்திரங்கள், மற்றும் ரசிக்க கூடிய நகைச்சுவை.

இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி மற்றும் பூர்ணம் விஸ்வநாதன் இடையே ஒரு போட்டி. ரஜினி சிகரட்டை 10 முறை தூக்கி எறிந்து வாய; பிடிக்க வேண்டும், அப்படி செய்தால் அவருக்கு டொயோட்டா சார், தவறிவிட்டால் .. சுண்டு விரல் வெட்டு படப்பட்டும். இந்த காட்சியை மிகவும் அற்புதமாக டைரக்டர் பாலச்சந்தர் அமைத்து இருப்பார். எதனை முறை வேண்டுமானாலும் இந்த காட்சியை பார்த்து ரசிக்கலாம் (நல்ல வேளை , இந்த படம் அந்த காலத்தில் வந்தது. சிகரட் இருப்பதால் இந்த காலத்து மாமனிதர்கள் இதற்கு தடை விதித்து இருப்பார்கள், அது வேறு விஷயம்).

சரி இப்போது தலைப்பிற்கு வருவோம்... "டொயோட்டா கார் ".!

இந்த டொயோட்டா கார் என்னும் வார்த்தையை நான் முதன் முதலாக என் வாழ்க்கையில் கேட்டதே இந்த படத்தின் மூலமாக தான். இதை கேட்டதில் இருந்து இந்த வாகனத்தின் மேல் ஒரு காதல். பாக்கெட்டில் 10 பைசா இல்லாத நேரத்திலேயே, வாழ்க்கையில் வாங்கும் முதல் கார் டொயோட்டா  கார் தான் என்ற முடிவு.


இதை தான் வாங்கவேண்டும் என்று ஆசை பட்டேன்.. ஆனால்....

இந்த வாரம் தான் "நன்றி திருநாள்" வாரம் ஆயிற்றே, சனியும் அதுவுமாய் , ராசாதிக்கள் இருவரும், துணைவியாரும் நாம் கிளம்பி எங்கேயாவது போகலாம் என்று முடிவு பண்ணிவிட்டார்கள். ஒரு திருமணம் ஆன ஆணிடம் சனி கிழமை உனக்கு என்ன செய்ய விருப்பம் என்று கேட்டால், அவன் சொல்வதெல்லாம்.. வீட்டிலேயே நிமதியாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால், உத்தரவு வந்து விட்டதே... காலையிலே கிளம்பி ஆயிற்று.

எங்கே செல்வது என்று முடிவு செய்யவில்லை. இது லாஸ் அஞ்சல்ஸ் நகரம் ஆயிற்றே. பார்த்து ரசிக்க 1000 இடங்கள் உள்ளது. வண்டியை எடுத்து கொண்டு நால்வரும் கிளம்ப.. மூத்த மகள் .. நாம்  "Grammy Museum"  செல்லலாம் என்றாள். அடேடே, பழம் நழுவி பால் விழுந்த கதை போல் இருகின்றதே ( எனக்கும் ரொம்ப நாளாக இங்கே செல்ல வேண்டும் என்ற ஆசை), சரி என்று வண்டியை விட்டேன்.

இந்த இடம் 10 மணிக்கு தான் திறக்கும் என்று அறிந்து கொண்டு அங்கே அருகில் இருந்த பார்கிங் வண்டியை நிறுத்திவிட்டு அந்த இடத்தை நோக்கி நடந்தோம். அந்த கதவு பூட்டி இருக்க, அங்கே நின்று கொண்டு இருக்கையில் அருகில் இருந்து பாட்டு சத்தம் காதை பிளக்க, என்ன என்று எட்டி பார்த்தேன்.

டொயோட்டா கார் ... பல வித வித மாக நின்று கொண்டு இருந்தன. என்ன விசேஷம் என்று அங்கே விசாரிக்கையில் இன்று ஒரு  "Car Exhibition"  என்றார்கள். சிறு வயதில் வந்த காதலை நினைத்து கொண்டு  ஒவ்வொரு வண்டியாக பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். அருகில் இருந்த பெண் ஊழியர்கள், நீ அமர்ந்து பார்க்கலாம், நாங்கள் புகை படம் எடுத்து உங்கள் மின் அஞ்சலுக்கு அனுப்புவோம் என்று சொல்ல.. இதோ சில புகை படங்கள்.. உங்களுக்காக.


 Daytona Race Car....ல் அடியேன்
மற்றும் ஒரு வண்டியில்...


இந்த கடைசி வண்டியின் அருகே நின்று நான் ஜொள்ளு விட்டு கொண்டு இருக்கையில் என் இளைய ராசாத்தி சத்தம் போட்டு..

டாடி... நீங்க  "Grammy Museum"  வந்தீங்களா இல்ல டொயோட்டா கார் பார்க்க வந்தீங்களா என்று கேட்க்க, காரின் கதவில் உள்ளே என் சுண்டு விரல் இருப்பதை கவனிக்காமல் நானே அந்த கடவை தாடல் என்று சாத்த..

போனது சுண்டுவிரல்... வரவில்லை டொயோட்டா கார்...

www.visuawesome.com


பின் குறிப்பு ;
விசு... நீ முதல் முதலாக வாங்கிய கார் டொயோட்டா இல்லையே என்று தெரிந்த சில நண்பர்கள் முணுமுணுப்பதை அறிவேன். அது சிறு வயதின்  " Infatuation"  அல்லவா? அதனால் தான் வேறு ஒன்றை வாங்கி விட்டேன். புரிந்தால் சரி...


14 comments:

 1. எப்படியோ தங்களின் டயோட்டா கார் ஆசை நிறைவேறிவிட்டதல்லவா

  ReplyDelete
 2. விசு,

  எனக்கும் டொயோட்டா என்ற வார்த்தை இந்தப் படத்தில்தான் அறிமுகம். அப்போதிருந்த அம்பாசிடர் பியட் கார்களைக் கண்டு டொயோட்டா மாதிரி இல்லையே என்று எண்ணுவேன்- டோயோட்டாவைப் பார்க்காமலே.

  எம் எஸ் வி யின் 1000வது படம் நினைத்தாலே இனிக்கும் என்று ஒரு உறுதிசெய்யப் படாத தகவல் இருக்கிறது. அந்தத் தகவல் உண்மைதான். அந்தப் படத்தில் வரும் ரஜினிகாந்தின் சிகரெட் ரகளை The man from south என்ற ஆங்கில நாவலின் அடிப்படையில் வந்த பல படங்களின் நகல். இதையே முழுக் கதையாகக் கொண்டு ஹாலிவுட்டில் நான்கைந்து படங்கள் வந்திருக்கின்றன. இதையும் ஒரு தகவலாகச் சொல்கிறேன். (எனக்கும் இந்த சூப்பர் ஸ்டார் உலக நாயகன் போன்ற பட்டங்களை குறிப்பிடவே பிடிக்காது. அதுதான் பெயர் இருக்கிறதே)


  பின் குறிப்பு ;
  விசு... நீ முதல் முதலாக வாங்கிய கார் டொயோட்டா இல்லையே என்று தெரிந்த சில நண்பர்கள் முணுமுணுப்பதை அறிவேன். அது சிறு வயதின் " Infatuation" அல்லவா? அதனால் தான் வேறு ஒன்றை வாங்கி விட்டேன். புரிந்தால் சரி...

  ஹா ஹா புரிந்தது. கவனமாக இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி காரிகன்.. இன்று அந்த Grammy Museum" உள்ளே இருக்கும் போது தம்மை அதிகம் நினைத்தேன். நீர் மட்டும் அங்கு இருந்தால்.. நம் இருவருக்கும் "காஞ்ச மாடு கம்பம் கொல்லை " நிலைமை தான்.

   1000கனக்கான புகைப்படங்கள் எடுத்து வந்தேன். அதை வைத்து வரும் நாட்களில் ஒரு பதிவு, கண்டிப்பாக.

   அங்கே நான் மிகவும் ரசித்தது ... "மைகேல் ஜாக்சன் " பற்றிய தகவல்கள். என்னே ஒரு இசை கலைஞ்சன்.

   Delete
 3. கார் அணிவகுப்பு அழகு! கடைசி வரிகள் பஞ்ச்! நன்றி!

  ReplyDelete
 4. விசு,

  கிராமி மியுசியம் போட்டோக்களுடன் விரைவில் உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன். ஆவலைத் தூண்டியது உங்களின் குற்றம். எப்படி?

  ReplyDelete
  Replies
  1. "Grammy Museum" இந்த வாரம் வெளியிடுவேன்!
   குற்றமா .. என்னிடமா? யார் சொன்னது?

   Delete
 5. பத்தாவது முறை ரஜினி சிகரெட் தூக்கிப் போடும்போது அவரது ஆக்டிங் செம்ம தூள்......

  ReplyDelete
  Replies
  1. ஏன் ஐயா... என் சுண்டு விரல் போனதற்கு ஆறுதலாக ஏதாவது சொல்வீர்கள் என்று நினைத்தால்...?

   Delete
 6. விசு,

  அருமையான பதிவு.

  டொயோடா போனால் வேறு வாங்கலாம், விரல் போனால்..?

  எதோ உங்கள் விரலின்மீது அக்கறை கொண்டு இதை எழுதுவதாக (தவறாக) நினைக்க வேண்டாம், உங்கள் விரல் போனால் எங்களுக்கு புதிய பதிவுகள் எப்படி கிடைக்கும்?

  டொயோடா என்றவுடன் நான் முதன் முதலில் வாங்கிய டொயோடா கரோனா நினைவுக்கு வந்தது, உங்களுக்கும் அதில் என்னோடு செய்த பயணம் நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன், அரபு தேசத்தில்.

  கோ.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் டொயோடா கோரோனவில் பிரயாணம் செய்ததை எப்படி மறக்க இயலும்?
   இன்னும் சொல்ல போனால், தங்களின் மிதிவண்டியில் நாம் மூவராக சேர்ந்து கல்லூரிக்கு போனதையும் மறக்கவில்லை.
   விசுவின் விரல் போய் விட்டது, இனி இவன் எழுத மாட்டான் , நாம் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம் என்ற எண்ணம் கொண்டோரின் மனதில் நெருப்பை வார்த்து விட்டீறையா!
   வருகைக்கு நன்றி.

   Delete
 7. டொயோட்டா ஆஹா எங்களுக்கும் மிகவும் பிடித்த கார்.

  கீதா: நாங்கள் அங்கிருந்த போது டொயோட்டா கொரோலா வைத்திருந்தோம்...அதை ஓட்டுவது சூப்பராக இருக்கும். மட்டுமல்ல நாங்கள் வாங்கிய போது அதுதான் மிகவும் சீப்பாக இருந்தது....ஆச்சரியமாக இருந்தது.....விரலுக்கேத்த வீக்கம்?!!?!!? ஓ ஒருவேளை உங்க சுண்டுவிரலை கொடுத்து டெஸ்ட் பண்ணிப் பார்த்தீங்களோ?!!

  ReplyDelete

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...