புதன், 26 நவம்பர், 2014

கிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்திய கிரிக்கெட்டின் தறுதலைகள்?

கிரிக்கெட் செய்திகளை வேண்டுமென்றே தவிர்த்து வந்த எனக்கு இன்று வலை தளம் சென்ற வுடன் ஒரு அதிர்ச்சி செய்தி. ஆட்டக்களத்தில் போட்டியில் பங்கேற்று கொண்டு இருந்த ஒரு வீரர் வேகமாக போடப்பட்ட பந்து தலையில்   பட்டதினால் மயங்கி விழுந்தது மட்டும் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு பிறகு இறந்து விட்டார் என்பதே.



25 வயதே ஆன பில் என்ற இந்த வீரரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். ஒரு ராணுவ வீரனுக்கு எப்படி போர்களத்தில் மரணம் ஒரு பெருமையோ , அதை போல் தான் நான் இந்த மரணத்தை கருதுகின்றேன்.
Phil Hughes (1988-2014)

இந்த வாலிபரை இழந்த இவரின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
கிரிக்கெட் ஆட்டத்தை பல வருடங்களாக நான் தவிர்த்தவந்துள்ளேன் . அதற்கானா காரணம் சூதாட்டம், மற்ற வீரர்கள் - அதிகாரிகள் - நிர்வாகிகளின் பண ஆசை  மற்றும் நாற்காலி ஆசை.


எனக்கு தெரிந்த வரை  இது  கிரிகெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது மரணம் . இங்கிலாந்தை சேர்ந்த வில்ப்றேத் சலக்   (Wilfred Slack) என்ற வீரர்  மைதானத்தில் மாரடைப்பில் இறந்தார்.  1986-87 போல் நினைக்கின்றேன், கபில் தேவ் தலைமையில் இந்தியா இங்கிலாந்தை ஆடிய பொது இவர் ஆட்டத்தை நான் நேரடி ஒளிபரப்பில் கண்டுள்ளேன். துவக்க ஆட்டக்காரர் இவர். இந்த போட்டிகளில் நன்றாக ஆடாவிட்டாலும், கால் திசையில் நின்று நம் அணியின் கிரண் மோரேயை  வானத்தில் பறந்து பிடித்த   ஒரு காட்ச், அந்நாட்களில் மிகவும் சிறந்த காட்சாக  இருந்தது.

அதன் பின் சில வருடங்கள் கழித்து இந்தியாவை சேர்ந்த ராமன் லம்பா என்ற துவக்க ஆட்டக்கார், பங்களாதேஷ் நாட்டில் நடந்த ஒரு போட்டியில் மட்டையின் அருகே நின்று பீல்டிங் செய்து கொண்டு இருக்கையில் பந்து தலையில் பட்டு நினைவு இழந்து சில மணி நேரங்களில் இறந்தார்.

இன்று இறந்த பில் எனக்கு தெரிந்து மூன்றாவது நபராக மைதானத்தில் இறந்துள்ளார்.

இந்த சோகமான நிகழ்ச்சியை அனைவரும் கேட்டு வரும் வேளையில், இந்தியா கிரிக்கெட் நிர்வாகிகளுக்கு ஒரு வேண்டுகோள். இந்த விளையாட்டிற்காக  சிலர் உயிரையும் விட தயாராக உள்ளனர், ஆதலால் இதுவரை மட்டையும் பந்தையும் கையில் எடுக்காத நீங்கள், பண மற்றும் அரசியல் பலத்தினால் இந்த பெரிய பதவியில் அமர்ந்து உள்ளீர்கள்.  சற்று உண்மையாக செயல்படுங்கள்.

2 கருத்துகள்:

  1. "சற்று உண்மையாக செயல்படுங்கள்"...சரியான கருத்து..
    அந்த ஹெல்மெட் நிறுவனம், அவர் பழைய மாடல் போட்டு இருந்தார். புது மாடலில் கூடுதல் பாதுகாப்பு செய்து இருகிறோம், அதை உபயோகித்து இருந்தால் இதை தவிர்த்து இருக்கலாம் இன்று சொல்லி இருப்பதாக படித்தேன்.. அதனால் உலகின் மிக பணக்கார வாரியம் ஆனா BCCI தரமான விளையாட்டு பொருட்களை வாங்க வழி வகை செய்யட்டும்..

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...