திங்கள், 10 நவம்பர், 2014

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

ஏங்க... உடனே கூப்பிடுன்னு மெசேஜ் விட்டு இருக்கீங்க...ஆபிசில் கொஞ்சம் பிசி, அதனால உடனே கூப்பிட முடியல? என்ன அவசரம். இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட் ?

ஒன்னும் இல்ல மா, இன்னைக்கு காலையில் நீ ஆபிசிக்கு போகும் போது தெரியாமல் என் கார் சாவியையும்  எடுத்து கொண்டு போய் விட்டாய்.  மூத்தவளுக்கு வேற ஒரு முக்கியமான பரீட்சை, கொஞ்சம் கூட தாமதமாக போக கூடாதுன்னு சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்..

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

பக்கத்துக்கு வீட்டு ஆளிடம் மெதுவாக பேசி காரை கடன் வாங்கி பிள்ளையை பள்ளியில் விட்டு விட்டு வர வழியில் அந்த வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது. 

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

உடனே பக்கத்து வீட்டுகாரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன், அவர் உடனே கிளம்பி வரேன்னு சொன்னார். அவருக்காக அங்கே காத்து கொண்டு இருக்கும் போது இளையவளிடம் இருந்து போன். பள்ளிக்கு தாமதமாக போக கூடாதுன்னு அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள். 

எப்படியாவது வந்து  விடுகிறேன்னு அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு பெருமூச்சு விடுகையில் பக்கத்துக்கு வீடு ஆள் பெட்ரோல் வாங்கி கொண்டு  வந்து சேர்ந்தார்.

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

அதை வண்டியில் ஊத்தி விட்டு, என்னை அருகில் உள்ள "ரெண்ட் எ கார்" கடையில் விட்டு விட சொன்னேன். அவரும் என்னை அங்கே விட்டு விடு சென்றார். அங்கே போய் வண்டிய வாடகைக்கு எடுக்கலாம்ன்னு சொல்லி லைசன்ஸ் எடுத்தா அது போன வாரத்தோடு "எக்ஸ்பயரி" ஆகிவிட்டதாம். அதை நான் கவனிக்கவில்லை. நீயும் உன் லைசன்ச கொஞ்சம் செக் பண்ணிக்கோ ..

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

அங்கயே உட்கார்ந்து அதை புதுபித்து கொண்டு, வண்டிய வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தா.. இளையவள் பையும் கையுமா தயார இருந்தா. ஒரு நிமிஷம் இருன்னு சொல்லி அடுப்பில் பாலை வைத்து ஒரு காபி போடலாம்னு இருக்கையில், இவள் நச்சரிப்பு தாங்காமல், சரி இவளை பள்ளியில்
 விட்டு விட்டு வரலாம் என்று கிளம்பினேன். அவளை விட்டு விட்டு திரும்பி வரும்போது தான், அட பாவி..அடுப்பில் பாலை வைத்து விட்டு வந்து விட்டேனே என்ற நினைப்பு வந்தது..

 அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

கொஞ்சம் வேகமாகவே வண்டியை ஒட்டிக்கொண்டு வரும் போது அங்கே இன்றைக்கு தான் வைக்க பட்டு இருந்த "கமெராவில்" மாட்டிகொண்டேன். இன்னும் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 400 டாலருக்காவது ஒரு டிக்கட் வரும்ன்னு நினைக்கின்றேன்.

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

நேராக வீட்டிற்கு வந்தேன்...நல்ல வேளை பெரிய தீ எதுவும் இல்லை. உங்க அம்மாவுடைய பால் பாத்திரம்ன்னு "ரொம்ப செண்டிமெண்டு" என்று நீ  பாதுகாத்து வைத்து இருந்தாயே... அந்த பால் பாத்திரத்திற்கு இன்றைக்கு "பால்", மொத்தம்மா டோட்டல் டேமேஜ்.

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

சரி, இதுவும் கடந்து போகும் என்று நினைக்கையிலே... வீட்டில் இருந்த புகை அந்த "ஸ்மோக் டிடேக்டர" ஸ்டார்ட் பண்ணிவிட.. வீடு முழுக்க ஒரே சத்தம். அதை கேட்டு விட்டு இந்த பக்கத்து வீட்டு ஆளு 911க்கு போன போட, அஞ்சி நிமிஷத்தில் தீயணைப்பு நிலையத்து வண்டி வேறு வந்து விட்டது.  

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

அவங்கள பேசி அனுப்பிவிட்டு ஆபிஸிற்கு போக நேராக குளிக்க போனேன். அங்கே போய் சோப்பு போட்டு திரும்பவும் தண்ணிய திறந்தா , தண்ணி வரவில்லை. இது என்னடா என்று பார்த்தால்... இந்த தீயணைப்பு ஆட்கள் அதில் ஏதோ மூடி வைத்து போய் விட்டார்கள் போல் இருக்கு. ஒரு துண்டை கட்டி கொண்டு, சோப்பை துடைத்து விட்டு..குடிக்க வைத்து இருந்த குளிர் தண்ணீரில் உடம்பு நடுங்க சோப்பை துடைத்து கொண்டு இருக்கும் போது.. தொலை பேசி .. இந்தியாவில் இருந்து. அதை எடுக்கும் முன் நின்று விட்டது. உங்க வீட்டில் இருந்து தான் "வாய்ஸ் மெசேஜ்"  வந்தது.. உங்க சித்தி யாரோ ரொம்ப வியாதிப்பட்டு மருத்துவ மனையில் இருக்காங்கலாம், அவங்க பேரு கூட சொன்னாங்க நினைவிற்கு வரல. பாவம். 

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

எல்லாத்தையும் முடித்து விட்டு அவசர அவசரமா ஆபிஸ்க்கு கிளம்பி போனேன். அங்கே 9 மணிக்கு ஒரு மீட்டிங். ஒரு 10 நிமிடம் தாமதம் ஆகிவிட்டதேன்னு சொல்லி வண்டிய கொஞ்சம் ஸ்பீடாவே விட்டேன். போற வேகத்தில் பக்கத்துக்கு வீட்டு நாயை கவனிக்கவில்லை. நல்லவேளை, அது வாலை மட்டும் தான் டமாஜ் பண்ணேன்னு நினைகின்றேன்.  "ஜேர்மன் ஷெபர்ட்" நாய் இப்ப "டோபெர்மான்"  போல் ஆகிவிட்டது.

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

ஆபிஸ் பார்கிங்கில் வண்டிய விட்டு அவசர அவசரமா 5 - 5 படிகட்டா தாண்டி செல்கையில் கால் இடறி விழுந்து மேல் படிக்கட்டில் இருந்து கீழ் படிக்கட்டுக்கு உருண்டு வந்தேன்.

அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?

நல்ல வேளை அங்கே, இருந்த "சமந்தா", சமத்தா ஒரு அம்புலன்சை கூப்பிட்டு, அவளே, என் கூட மருத்துவமனைக்கு வந்து என்ன அங்கே அட்மிட் பண்ணி எல்லா உதவியும் செஞ்சா..

எவ அவ... சமந்தா.....? எவ்வளவு நாளா இந்த பழக்கம்?



www.visuawesome.com

22 கருத்துகள்:

  1. அருமையான நகைச்சுவை எழுத்து/அனுபவம்..
    Timing வசனங்கள்
    "ஜேர்மன் ஷெபர்ட்" நாய் இப்ப "டோபெர்மான்"
    அந்த பால் பாத்திரத்திற்கு இன்றைக்கு "பால்"
    "சமந்தா", சமத்தா ஒரு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி நண்பா.. தொடர்ந்து வாரு(று) ங்கள்

      நீக்கு
  2. அது சரி..
    ஆமா.. யாரு சமந்தா?
    எங்களுக்கு தெரிஞ்சு "அனு" தான் இருந்தாங்க முன்னாடி..
    இல்லையா நண்பர் பரதேசி அவர்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பா, ஒரு பதிவை போட்ட ரசிக்கணும்.. ஆராயக்கூடாது.. அனுவை நானே மறந்து விட்டேன்.. நீங்கள் ஏன் மறுபடியும் நினைவு படுத்தி அணு அணுவாய் தண்டிகின்றீர்கள்.

      நீக்கு
    2. கண்டிப்பாக -- நன்றாக ரசித்து சிரித்தேன்..
      ஏனோ அனு நினைவுக்கு வந்தார்கள்..கேட்டுவிட்டேன்..
      நீங்களே மறந்த அனுவை ..நினைவு "படுத்திய" என்னை மன்னிக்கவும்...

      நீக்கு
  3. மிக அருமை படித்து ரசித்தேன்.. நீங்க உண்மையிலே ரொம்ப talentன ஆளுங்க....பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கேயோ எப்பவோ படித்த ஒரு டெக்ஸ்ட் மூலமா வந்தத வைச்சி ஒரு பில்ட் அப் தான். வேறு ஒன்னும் இல்லை தமிழா... தங்கள் பாராட்டிற்கு நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. வருகைக்கு நன்றி கரந்தை அவர்களே... என்னத்த சொல்வேன்.. போங்க..

      நீக்கு
  5. பதில்கள்
    1. ரசித்தது மட்டும் அல்லாமல் நேரம் எடுத்து அதை ரசித்தேன் என்று சொல்லி என்னை உற்சாக படுத்துகின்றீர்களே, அதற்கு உமக்கு நன்றி.

      நீக்கு
  6. எங்கேயோ எப்பவோ படித்த ஒரு டெக்ஸ்ட் மூலமா வந்தத வைச்சி ஒரு பில்ட் அப் தான்.///

    அட நெஜமாலுமே சம்பவங்கல் உங்கலுக்கு நடந்ததா ஒரு பயத்துல படிச்சிட்டு வந்தேனே. அவ்வ்வ்..

    நல்லா யோசிக்குரீங்க! பதிவை ரசித்தேன் சார்!

    பதிலளிநீக்கு
  7. கஷ்டத்தையும் நகைச்சுவையா சொல்லியவிதம் சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாம் வள்ளுவர் பாணி தான் தளிர் . "துன்பம் வரும் வேளையிலே சிரிங்க"

      நீக்கு
  8. அப்ப வாழ்க்கையில் திரும்பவும் வழுக்கி விழுந்தாச்சா ?
    எல்லாத்தையும் சொன்னது சரிதான் , அதற்காக சமந்தா சமத்தா "உதவி" பண்ணதையும் சொல்லனுமா அட அசடு அசடு ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கள்ளம் கபடம் இல்லாத மனசு அண்ணே ! என்ன நடந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிடுவேன்.

      நீக்கு
  9. "சமந்தா" வின் பணி
    நல்லதோர் எடுத்துக் காட்டு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  10. ஏற்கெனவே இதே மாடல்ல படிச்சிருக்கேன்... சில புதிய தகவல்கள் இணைத்திருந்தமையால் முழுமையாய் படித்தேன்.... அதென்னங்க பக்கத்து வீட்டுக்காரங்க பக்கத்துக்கு ஒரு வீட்டுக்காரங்க ஆகிட்டாங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்கனவே இந்த மாடலா? ஒ... நான் எழுதிய "பெண்களில் பிடித்தது "துப்பறியும் வீம்பு" பற்றி சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். முழுமையாக படித்ததற்கு நன்றி.. பக்கத்துக்கு வீடு... தவறை திருத்தி விட்டேன்.. சுட்டி காட்டியதற்கு நன்றி.

      நீக்கு
  11. ஹாஹஹஹஹஹ....அய்யய்யோ! அப்புறம்?

    கன்னம் ரொம்ப வீங்கிடுச்சோ?!!!

    அசாத்தியமான எழுத்து நண்பரே! அபாரம்! மிகவும் ரசித்தோம்!

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...