வெள்ளி, 21 நவம்பர், 2014

நண்பனே .. .எனது உயிர் நண்பனே....

விசு, கொஞ்சம் நாளா உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்... ஆனால் பேச முடியில்லை!

வா, தண்டபாணி, கொஞ்ச நாளா பேசவேண்டும் என்று நினைத்தாய், ஆனால் பேச முடியவில்லை என்றால், அது ஒரு நல்ல விஷயமாய் இருக்காதே.. ஏதாவது பிரச்சனையா?

விசு, நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.



அட பாவி, இப்பதான் பேச வேண்டும் என்றாய் அதற்குள் கேட்க்க வேண்டும் என்கின்றாயே, உனக்கு பேச வேண்டுமா அல்ல கேட்க்க வேண்டுமா?

அதுவா முக்கியம்  விசு ?நான் உன்னிடம் கேட்க்கடும்மா? கோபித்து கொள்ள மாட்டாயே.

Photo Courtesy : Google

பாணி, நம் இருவருக்கும் பல வருடங்கள் பழக்கம், எதோ ஒரு விஷயத்த  மனதில் வைத்து கொண்டு என்னிடம் கேட்க வேண்டும் என்று நினைத்த  போதும், நான் கோவித்து கொள்வேன் என்று கேட்காமல் இருக்கின்றாயே, அதிலே நீ என்மேல் வைத்துள்ள நட்ப்பும் பாசமும் தெரிகின்றது.  இந்த விஷயம் என்ன உயிர் போகும் விஷயமா? இதை கேட்டகாமல் விட்டு விடேன்.

இல்ல விசு, நீ என் நல்ல நண்பன் தானே கேட்டாலும் கோவித்து கொள்ளமாட்ட, அதனால் தான் கேட்கலாம் என்று நினைக்கின்றேன்.

தண்டபாணி, நீ சொல்வது தவறு, நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்று நினைத்து இருந்தால் நீ இந்த விஷயத்தை முதல் நாளே கேட்டு இருப்பாய். நீ என்னை கேட்க்காமல் இருந்ததில் இருந்தே நான் கோவித்து கொள்வேன் என்று உனக்கு தெரிந்து இருகின்றது. மறுபடியும், சொல்கிறேன், இது நம் இருவரின் நட்ப்பை பரிசோதிக்கும் என்றால் கேட்க்காமல் இருந்து விடேன்.

நானும் அப்படி தான் யோசித்தேன், இருந்தாலும் உன்னிடம் கேட்காததினால் தூக்கத்தை இழந்தேன்.

சரி, பாணி, உன் நிம்மதிக்காக  கேள், நான் கோவித்து கொள்ள மாட்டேன் என்ற  உத்தரவாதம் தருகின்றேன்.

நீ கோவித்து கொண்டால்?

அப்படி யோசித்தால் கேட்க்காதே.

உன்னிடம் கேட்ட்க்காமல் வீட்டிற்க்கு செல்ல முடியாதே?

ஒ, பிரச்சனை அப்படி போதா? உங்க  வீட்டுக்காரம்மா சுந்தரி ஏதாவது சொன்னார்களா?

அப்படி ஒன்னும் குறிப்பா சொல்லவில்லை, ஆனால், ஒரு விஷயம் உன்னிடம் கேட்ட்க சொன்னார்கள்.

இந்த விஷயத்தில் என் வீட்டுக்காரம்மா இருக்காங்களா?

ச்சே ச்சே .. இல்ல விசு,  இது நம்ப ரெண்டு பேருக்கும் உள்ள பிரச்சனை தான்.

நமக்குள்ள பிரச்சனையா.. என்ன பாணி பயமுறுத்துற ...?

பயப்படற அளவு ஒன்னும் இல்லை... ஆனாலும் உன் மனதை நோகடிக்க கூடாதுன்னு ...

கடல் தாண்டி வந்து வாழுகின்றோம், கை விரல் விட்டு எண்ணிவிடும் அளவுக்கு தான் உறவும் நட்ப்பும் , இந்த பிரச்சனையால நம்ம நட்ப்பு தடுமாறும் என்றால் அதை கேட்க்காமல் விட்டு விடு.

அப்ப சுந்தரிக்கு நான் என்ன சொல்வேன்?

சுந்தரியிடம் நான் பேசுகின்றேன், போன் போட்டு கொடு.

ரிங் ரிங்..ரிங்..

ஹலோ சுந்தரி, விசு பேசுறேன்...

அண்ணா, சொல்லுங்க அண்ணா, தண்டம் அங்க வந்தாரா?

இங்கே தான் இருக்கான், சரி...

அண்ணா, அது எனக்கு பிடிக்காவிட்டாலும், உங்களை கேட்க்க வேண்டாமென்று தான் நினைத்தேன்.. ஆனால் நீங்க கோவித்து கொள்ள கூடாது.

ஐயோ... அவன் இன்னும் ஒன்னுமே கேட்கவில்லை, நீயாவது விஷயத்த சொல்லு.

ஐயோ, அது ஒன்னும் உயிர் போற விஷயம் இல்ல அண்ணா, சும்மா சின்ன மேட்டர் தான் அண்ணா.

அப்ப கேளுங்க, என் தரப்பு விளக்கத்தை நான் முடிந்த வரை தரேன்.

ஐயோ, அண்ணே, விளக்கம் தர அளவுக்கு அது ஒரு விஷயமே இல்லை,

அவரிடம் போன கொடுங்க..

சொல்லு, சுந்தரி... ம் ... ம்...

நான் இன்னும் ஒண்ணுமே கேட்டகவில்லை ....

ம் ... ம்.  ம்...

வாத்தியார் கோவித்து கொண்டால்...

ம்... ம்ம்.... ம்...

நீ சொன்னதால தான் நான் இங்கே வந்தேன்...

ம்.. ம்... ம்... அட பாவி.. இந்த விசயத்தை ஏன் நீ எனக்கு இவ்வளவு தாமதமா சொல்லுற...?

ம் .. ம்ம்..

என்னாது, இப்பதான் தெரிய வந்ததா? நான் மட்டும் வாத்தியாரிடம் கேட்டு இருந்தால் அவர் மனது என்ன பாடு பட்டு இருக்கும்.

ம்.. ம்.. ம்..

அவரிடம் தரேன்,.. நீயே கேளு..

சொல்லு, சுந்தரி..

அண்ணே ரொம்ப சாரி அண்ணே..

எனக்கு ஏன் சுந்தரி சாரி,

ஒரு சின்ன விஷயத்தில் உங்கள ஒரு நிமிடம் தவறா நினைத்து விட்டேன், ப்ளீஸ் என்னை சாரி பண்ணி கொள்ளுங்கள்.

அய்யோ, என்ன விஷ்யம்னே தெரியல ... சாரி சொல்லுற ... நோ ப்ராப்ளம் சுந்தரி.. அப்புறம் சந்திக்கலாம்.

சரி பாணி, நீ கிளம்பு... சுந்தரி கொஞ்சம் பீலிங் ஆகா இருகின்றார்கள்,  நேர வீட்டிற்கு போய்  அவங்கள கவனி.

சரி வாத்தியாரே, உன்னிடம் மனம் விட்டு பேசியது நிம்மதியா இருக்கு, நீயும் மனதில் ஒன்னும் வைச்சிக்காதே, நான் கிளம்புறேன்.

தண்டபாணி, கிளம்பிவிட்டான்.. மனதில் ஒரே உளைச்சல். என்னவா இருக்கும் .எந்த விஷயத்தில் இவங்க ரெண்டு பேரும் நான் தவறு பண்ணி இருப்பேன் என்று நினைத்து இருப்பார்கள். புரண்டு புரண்டு படுத்தேன், தூக்கம் வரவில்லை.

படுக்கையில் இருந்து எழுந்து நேரத்தை பார்த்தால், மணி 1:30.  என்னவா தான் இருக்கும்.. என்னவா தான் இருக்கும்..என்னாவா தான் இருக்கும்.. சரி, மனதை திடபடுத்தி ... பாணியிடமே கேட்டு விடலாம்...

ரிங்.. ரிங்.. ரிங்...

என்ன வாத்தியாரே... கோழி கூவ 4 மணி நேரம்  இருக்கு, அதுக்குள்ள நீ கூவுற..?

பாணி..  நீ கோவித்து கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒன்று கேட்க்க வேண்டும்.


வாத்தியாரே, நீ கேட்க்க போவதில் நான் கோவித்து கொள்வேன் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் அதை ஏன் கேட்க்க வேண்டும், வெளிநாட்டில் வந்து வாழுகின்றோம். விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் உறவும் நடப்பும், அதில் ஒன்றை இழக்க வேண்டுமா?  நான் ஏதாவது தவறு செய்து  இருந்தால் பெருந்தன்மையா என்னை மன்னித்து கொள் என்று போனை கட் செய்தான்...

சிரித்து கொண்டே படுக்கைக்கு சென்றேன்...

பின் குறிப்பு ;
நண்பர்களே, சில நேரங்களில்  " நீ கோவித்து கொள்ளமாட்டாய் என்றால் உன்னிடம் ஒன்று கேட்கவேண்டும்" என்று சொல்லும் போது இதை கேட்டால் மற்றவர் கோவித்து கொள்ள வாய்ப்பு உண்டு என்று அறிந்து தான் கேட்க்கின்றோம். அதை கேட்க்காமலேயே, தவிர்க்கலாமே... தண்டபாணியை போல்...

18 கருத்துகள்:

  1. வணக்கம்
    உரையாடல் அற்புதமாக உள்ளது இறுதியில் முடித்த விதம் நன்று பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. விசு உன்னிடம் முக்கியமாக ஒன்று கேட்க வேண்டும்.கோபித்துக்கொள்ள மாட்டியே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாத்தியாரே, அண்ணே, நீங்கள் கேட்க்க போவதில் நான் கோவித்து கொள்வேன் என்ற எண்ணம் உனக்கு இருந்தால் அதை ஏன் கேட்க்க வேண்டும், வெளிநாட்டில் வந்து வாழுகின்றோம். விரல் விட்டு என்ன கூடிய அளவில் தான் உறவும் நடப்பும், அதில் ஒன்றை இழக்க வேண்டுமா? நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் பெருந்தன்மையா என்னை மன்னித்து கொள்ளவும்

      நீக்கு
  3. சரி மன்னித்தேன் போ, இருக்கட்டும் உன்னை மேடையில் பார்த்துக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. "நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க.." :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்கனா..வர மாட்டிங்க.."
      விட்டுருங்க..

      நீக்கு
    2. இப்படி சொல்லிட்டா எப்படி ?

      நீக்கு
    3. இப்படி அப்படி எப்படி சொன்னாலும்
      நீங்க அதுக்கு எல்லாம் சரிப்பட்டு வர மாட்டிங்க..:-)

      நீக்கு
    4. அய்யோ .... சொக்கா ... சொமநாதா... என்னக்கு இல்லை. என்னமோ சொல்றாரு, ஆனால் எனக்கு இல்லைன்னு சொல்றாரு...

      நீக்கு
  5. பின் குறிப்பு முதன்மைப்பதிவைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள் ஐயா! இந்த பதிவில் எனக்கு மிகவும் பிடித்ததே அந்த பின் குறிப்பு தான்...

      நீக்கு
  6. பின் குறிப்பு : உண்மை... (பல சமயங்களில்...!)

    பதிலளிநீக்கு
  7. சத்தியமாக நாங்களும் உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் மெயில் வழியாக என்று நினைத்திருந்தோம்....சரி சரி...அதான் கடைசில நீங்களே சொல்லிட்டிங்களே....அதே அதே....

    நல்ல கலக்கல் பதிவு., இப்படித்தான் பல சம்யங்களில்....மிகவும் ரசித்தோம்....

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...