Wednesday, January 21, 2015

எனக்கு வர கோவத்துக்கு .....

"அவர்கள் உண்மைகள்" என்ற பெயரில் நண்பர் மதுரை தமிழன் எழுதி வரும் பதிவுகளை விரும்பி படிப்பவன் நான்.  பதிவுலகத்தில் நான் எழுத ஆரம்பித்த நாளில் இருந்தே என்னுடைய பதிவுகளையும் படித்து என்னை உற்சாக படுத்தி வருபவர் இந்த மதுரை தமிழன். நேற்று அவர் தளத்தில் மனதை மிகவும் பாதித்த ஒரு பதிவை கண்டேன்.
அதில் அமெரிக்க மாப்பிள்ளை (அமெரிக்கா மட்டும் இல்ல, வெளிநாட்டில் வாழும் எல்லா ஆண்களையும் தான் ) என்ற தலைப்பில் ஆனந்த விகடனில் வந்த ஒரு கட்டுரையை பற்றி எழுதி இருந்தார்.
அந்த கட்டுரையை எழுதிய ஆசிரியை  அமெரிக்காவில் வாழும் ஒருவர் தன் மனைவியை எப்படியெல்லாம் துன்புறுத்தினார் என்று விளக்கி எழுதி இருந்தார். இவர் கட்டுரையை பார்த்தால் எதோ வெளிநாட்டில் வாழும் நாங்கள் அனைவரும் மிகவும் கொடூரமானவர்கள், கேவலமானவர்கள் என்று நினைக்க தோன்றும்.
images
நல்லதும் கெட்டதும்,  நன்மையையும் தீமையும் அனைத்து இடத்திலும் உண்டு. அதில் ஒரு இடத்தில நடக்கும் தீமையை எடுத்து கொண்டு ஓர் இனத்தையே தாக்குவது  நல்லது அல்ல.வெளிநாட்டில் வாழும் ஆண்கள் என்ன எடுப்பார் கை பிள்ளையா?
மற்றவர்களை பற்றி தெரியாது, என்னை பற்றி எனக்கு தெரியும் அல்லவா. இந்த கட்டுரையில் அந்த கணவன் செய்த ஒரு காரியத்தையும் செய்ய என்னால் முடியாது. ஏன் என்றால் என் வளர்ப்பு அப்படி.
சரி, இங்கே எனக்கு சொந்தமான கிட்டதட்ட 100 நண்பர்களில் யாரவது ஒருவராவது அப்படி இருப்பார்களா என்று நினைத்தேன், அப்படி யாரும் தெரியவில்லை.
இன்னும் சொல்ல போனால், இந்தியாவில் இருந்து இங்கு விடுமுறைக்கு வந்த என் நண்பன் ஒருவன் .. "என்னால் இந்நாட்டில் ஒருவாரம் கூட தாக்கு பிட்டிக்க முடியாது" என்றான். ஏன், இந்நாட்டின் தப்பவெட்ப நிலையா என்று கேட்டதற்கு .. தப்பவெட்பம் எல்லாம் சரி.. இங்கு இருக்கும்  ஆண்கள் எல்லாரும் "ஒரு இந்திய பெண்" போல் அல்லவா இருகின்றீர்கள் என்று கேவலமாக சிரித்தான்.
ஏன் என்று கேட்டதற்கு...
அவன் அமெரிக்காவிற்கு  விடுமுறைக்கு வந்த இந்த 30 நாட்களில் நிறைய நண்பர்கள் - உறவினர்கள் இல்லத்திற்கு சென்றதாகவும், ஒவ்வொரு இல்லதிலேயும் ஆண்கள் ஒவ்வொருவரும் பெண்களுக்கு சமமாக வீட்டு வேலையை செய்வதாகும் சொன்னான் (அதுவும் தவறான கூற்று தான், சில இல்லங்களில் ஆண்கள் பெண்களை விட கூடுதலாக வேலை செய்கின்றார்கள் என்பதும் நாம் அறிந்ததே).
 
இந்த கட்டுரையில் வந்துள்ள கணவன் போன்ற ஆட்கள் உலகின் அனைத்து இடங்களிலும் உள்ளார்கள், அந்த ஒரு சில ஆட்களை வைத்து ஒட்டு மொத்தமாக எங்கள் எல்லாரையும் ஒரே தராசில் நிறுத்தாதீர்கள்.
இப்படி காலையில் எழுந்து பிள்ளைகளை பரமாரிப்பது, பின் சமையல் அறை வேலை, பின்னர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, பின் அலுவலகம், மாலை,  பிள்ளைகளின் வீட்டு பாடங்கள் பிள்ளைகளின் இதர நடவடிக்கைகள், வீட்டை சுத்தம் படுத்துதல், வங்கி கணக்கு, வரவு செலவு என்று எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகின்றோம்.
இங்கே நாங்கள் ஒன்றும் காலையில்  எழுந்து செய்தித்தாளை கையில் வைத்து கொண்டு காபி பருகி கொண்டு .." அம்மாவிடம் குளிக்க சுடு தண்ணி ரெடி ஆகிவிட்டதா என்றும்..
மாலையில்.. தொலை காட்சியின் எதிரில் அமர்ந்து கொண்டு, சோமபானம் மற்றும் சுறா பானம் அருந்தி கொண்டும் இருப்பதில்லை.


உங்கள் புத்தகம் விற்பனை ஆக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்க்காக எங்களை தறுதலை என்று சொல்லாதீர்கள்.
www.visuawesome.com
நண்பர்களே,
என்னுடைய பதிவுகளும் மற்ற படைப்புகளும் www.visuawesome.com  என்ற தளத்திற்கு மாற்ற பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் இந்த  Blog Spot  ல் அடியேன் இருக்க மாட்டேன்.என்எழுத்துக்கள் தங்களுக்கு பிடித்து இருந்தால் www.visuawesome.com  என்ற தளத்திற்கு வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர் பார்த்து..
6 comments:

 1. யாரோ ஒருவர் செய்யும் தவறை வைத்து எல்லோரையும் மதிப்பிடக் கூடாது என்பது உண்மை.

  ReplyDelete
 2. "அமெரிக்க வாழ் இந்திய ஆண்கள் எல்லாரும் ஒரு இந்திய பெண் போல" என்று தலைப்பு வைத்து இருக்கலாம்

  ReplyDelete
 3. ///இப்படி காலையில் எழுந்து பிள்ளைகளை பரமாரிப்பது, பின் சமையல் அறை வேலை, பின்னர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது, பின் அலுவலகம், மாலை, பிள்ளைகளின் வீட்டு பாடங்கள் பிள்ளைகளின் இதர நடவடிக்கைகள், வீட்டை சுத்தம் படுத்துதல், வங்கி கணக்கு, வரவு செலவு என்று எல்லா வேலைகளையும் பகிர்ந்து செய்து கொண்டு வாழ்க்கையை நடத்தி கொண்டு வருகின்றோம்.////

  நண்பரே இப்படி உண்மையை போட்டு உடைத்து வீட்டீர்களே இனிமேல் இந்தியாவிற்கு செல்லும் போது எப்படி தலை நிமிர்ந்து செல்ல முடியும் ஹீஹீ

  ReplyDelete
 4. // என்னை பற்றி எனக்கு தெரியும்... //

  // என் வளர்ப்பு அப்படி... //

  இவைகளே போதும்...

  ReplyDelete
 5. அயல் நாடுகளில் இருப்பவர்களைப் பற்றி சொந்த நாட்டில் இருப்பவர்கள் கொண்டுள்ள மலிவான சிந்தனைகளில் ஒன்று என்று இதை எடுத்துக்கொள்ளலாம்.

  ReplyDelete
 6. உண்மையை இப்படி படீர்னு போட்டு உடைச்சிட்டீங்களே!

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...