எழுமின் - சர்வதேச தமிழ் பெண்களுடன் ஒரு காலை!
அனைத்திற்கும் முன்...
எனக்கும் "எழுமின்" பெண்களுக்கும் என்ன?
மூன்று தலைமுறை மகளிரோடு வாழும் என் வாழ்வின் இலட்சியத்தை சொன்னால் அது புரியும் .
அம்மா (எனக்கு நான்கு வயது இருக்கும் போது கணவனை இழந்தவர்கள்) :
இவன் வாழ்வை பார்க்க அவருக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று எண்ண வேண்டும்.
மனைவி : நான் பெற்ற என் இரு மகள்களுக்கும் இவனை போலவே ஒருவன் அமைய வேண்டும்.
மகள்கள் : நாளை எங்களுக்கும் மகள்கள் பிறக்கையில் இவனை போல் ஒரு தந்தை வேண்டும்.
இந்த மூன்றை மட்டுமே இலட்சியமாக வைத்து கொண்டு வாழும் ஒரு சராசரி மனிதன் தான். வாழ்வின் மற்ற அனைத்துமே இந்த மூன்றில் தான் அமைந்துள்ளது. இதில் வெற்றி என்றால் வாழ்வே வெற்றி.
சரி, தலைப்பிற்கு வருவோம்.
நேற்று, "எழுமின்" என்ற அமைப்பை சார்ந்த அருமை தோழி புவனா கருணாகரன்...
"விசு!!, எழுமின் சார்பாக TWI (சர்வதேச தமிழ் பெண்கள்) ஒரு Zoom நிகழ்ச்சி நடத்த போறோம், நேரம் இருந்தால் வரவும்"
என்று ஒரு அழைப்பை தர..
"அங்கே என்ன செய்ய போகின்றீர்கள்?!!"
"என்னையும் சேர்த்து பதினாறு பெண்கள் பேச போகின்றோம், பெண்களில் எழுச்சியை (Empowerment?) பத்தி!!!"