ஞாயிறு, 24 ஜனவரி, 2016

ரயிலுக்கும் மெயிலுக்கும் “கைகாட்டி மரம்”

ஏங்க… நேத்து ஒரு லெட்டெர் கொடுத்து போஸ்ட் பாக்ஸில் போட சொன்னேன்னே … போட்டீங்களா…
உடனே போட்டுடனே..
அது ரொம்ப முக்கியமான லெட்டெருங்க, உண்மையா போட்டீங்களா …
இதுக்கு எல்லாமா பொய் சொல்லுவாங்க.. உங்கப்பரானை, போட்டுட்டேன்
அது போய் சேரலிங்க.

நேத்து தானே போட்டது..இந்த வாரத்தில் போய் சேந்துடும்…

ஐயோ … அது ரொம்ப அவசரமானது.. இன்றைக்கு போய் சேராட்டி பிரச்சனை..
ஒரே நாளில் எப்படி போகும்?
ஒரே மாநிலத்தில் இருந்தா ஒரே நாளில் போகும்னு உங்களுக்கு தெரியாதா…?
அது எல்லாம் சும்மா கதை. ஒரு முறை தமிழ் நாட்டில் இருந்து ஆந்த்ராவிர்க்கு ஒரு லெட்டெர் போட்டேன்.. கிட்ட தட்ட 15 நாள் ஆச்சி.
நான் சொல்றது அந்த மாநிலம் இல்ல.. இங்கே அமெரிக்க மாநிலம். கலிபோர்னியாவில் எங்கே இருந்து எங்கே லெட்டர் போட்டாலும் அடுத்த நாளே போய்டும். உண்மையா சொல்லுங்க போட்டீங்களா ..
உண்மையா சொல்றேன் போட்டேன்.
எந்த போஸ்ட் பாக்ஸில் போட்டீங்க..
நம்ம போஸ்ட் பாக்ஸில் தான்…
மேலே போகும் முன் போஸ்ட் பாக்ஸ் பற்றிய ஒரு குறிப்பு. அமெரிக்காவில் பொதுவாக ஒவ்வொரு இல்லத்திற்கும் அவர்கள் வசிக்கும் தெருவில் 100 மீட்டருக்குள் நமக்கு என்று தனியாக ஒரு போஸ்ட் பாக்ஸ் ஒதுக்க பட்டு இருக்கும்.
தினந்தோறும் நமக்கு வரும் தபாலை தபால்காரர் அந்த பெட்டியில் வைத்து விட்டு போவார். அதே பெட்டியில் நாம் அனுப்ப வேண்டிய தபால்களையும் வைத்து விட்டால் அவர் அதை எடுத்து கொள்வார். எப்போதாவது ஒரு முறை நம்முடைய கை எழுத்து தேவை படும் நேரத்தில் வீட்டு கதவை தட்டுவார்கள் . நாம் கை எழுத்து இட்டு அதை பெறலாம்.
அம்மணி நேற்று கொடுத்த கடிதத்தை நான் எங்களுக்குரிய பெட்டியில் போட்டது நன்றாக நினைவிற்கு வந்தது.
இப்போது தொடர்வோம் …
அங்கே போட்டு இருந்தா கண்டிப்பா தபால்கார் எடுத்து இருப்பாரே..
ஒரு வேளை அவர் வந்து இருக்க மாட்டார்..
இருங்க … ஒரு நிமிஷம் நான் போய் பாக்ஸ பார்த்துட்டு வரேன்…
நீ என்னை நம்ப மாட்டற..
நம்பிக்கை விஷயம் இல்லீங்க… இதில் எதோ தவறு நடந்து இருக்கு, ஒரே நிமிஷம் இருங்க வரேன்..
ஏங்க… நீங்க போட்ட கடிதம் அங்கேயே இருக்கு..
நான் தான் சொன்னேன்னே .. அதை அதில் போட்டேன்னு.
கடிதத்தை போட்டீங்க.. ஆனால் அந்த கைகாட்டியை மேலே தூக்கி வைச்சிங்களா ?
என்னாது கைகாட்டியா…? இது என்ன ரயிலா … கைகாட்டி மேலே ….கீழேன்னு … என்ன சொல்ற..?

ஏங்க, அந்த பெட்டியில் வெளியே போற தபால் வைச்சா அந்த கைகாட்டிய மேலே தூக்கி வைக்கணும் என்பது உங்களுக்கு தெரியாதா..?
இது என்ன புதுசா இருக்கு…எப்ப இருந்து இது..?
நூற்றுகணக்கான வருசமா இந்த பழக்கம் இருக்கு .. அது உங்களுக்கு தெரியல…
வெளிய போற தபாலை நம்ம பெட்டியில் வைக்கிறோம்.. கை காட்டிய விடு.. தபால் கார் நம்ம தபாலை உள்ளே போட அந்த பெட்டிய திறக்கும் போது, வெளியே போகும் தபாலை பார்த்து இருப்பார் இல்ல.
கண்டிப்பாக.. அவர் பார்த்தால் எடுத்து இருப்பார்.
சோ … இது அவர் தப்பு.. நாளைக்கு அவரை பார்த்தா சொல்லு.
ஏங்க… உங்களுக்கு இந்த விஷயம் உண்மையிலேயே புரியிலையா… இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்களா?
இந்த விஷயம் புரியிது … ஆனால் நீ என்ன சொல்ல வரேன்னு புரியல..
நேத்து நமக்கு தபால் ஏதாவது வந்து இருந்தா, அந்த பெட்டியை திறந்து இருப்பார்., நம்ம கடிதத்தை பார்த்தவுடன் அதை எடுத்து இருப்பார்.
அப்ப நமக்கு கடிதம் எதுவும் வந்து இல்லாட்டி..
நம்ம பெட்டிய திறக்கவே மாட்டார்.
அப்ப நம்ம அங்கே வைச்ச வெளியே போக வேண்டிய கடிதம்?
அதுக்கு தாங்க .. நம்ம எப்பவுமே வெளியே போக வேண்டிய கடிதத்தை அதில் வைச்சா .. அந்த கைகாட்டிய மேலே தூக்கி வைக்கணும் .


அப்படி மேலே தூக்கி வைச்சா..?
அந்த தபால் காருக்கு நம்ம பெட்டியில் வெளியே போக வேண்டிய கடிதம் இருக்குன்னு தெரியும்..
இது எப்படி எனக்கு இத்தனை வருசமா தெரியாமல் போச்சி..,
அது தான் எனக்கும் புரியலங்க..
சரி.. நாளையில் இருந்து ஜாக்ரதையா இருக்கேன்..
போங்க.. திரும்பவும் போய் அந்த பெட்டியில் போட்டுட்டு அந்த கைகாட்டியை மேலே தூக்கி நிக்க வச்சிட்டு வாங்க…
சிறிது நேரம் கழித்து….வீட்டின் அழைப்பு மணி கேட்க்க …
வா தண்டம்….
வாத்தியாரே.. சுந்தரி.. இந்த வாழை …
வாழை பஜ்ஜி செஞ்சு கொடுத்தாங்களா…
ஆமா.. சூடு இருக்கும் போதே கொடுத்துட்டு வர சொன்னா..
தண்டம்… இந்த பை சூடாவே இல்ல..
பஜ்ஜி இல்ல வாத்தியாரே…நீ தான் எதோ உடம்பில் …மாணிக்கம் வைரம் வைடூரியம்ன்னு கல் சேத்து வைச்சின்னு இருக்கியாமே,.அதுக்கு வாழை தண்டு சாறு குடிக்கனும்மா.. அதுதான் வாழை தண்டு கொடுத்து அனுப்பினா..
தேங்க்ஸ், தண்டம்..
சரி வாத்தியாரே.. வார இறுதியில் பார்க்கலாம்.. காலையில் சீக்கிரம் வேலைக்கு போகணும்..
பின் குறிப்பு :
காலை .. ஏழு மணி..அலை பேசி ரிங்கியது…
வாத்தியாரே.. நேத்து ராத்திரி உன்னிடம் வாழை தண்டு கொடுத்துட்டு வெளியே வந்தேன் இல்ல.. அப்ப உங்க தெருவில் உள்ள போஸ்ட் பாக்ஸ பார்த்தேன்.. எல்லா பெட்டியிலேயும் அந்த கைகாட்டி கீழே இருக்கு, உங்க வீட்டுது மட்டும் மேலே இருந்தது.. உனக்கு எதுவும் பிரச்சனை வரகூடாதுன்னு நான் உங்க வீட்டுதையும் கீழே திருப்பி வைச்சேன்..
அட பாவி…அது ஏன் மேலே இருக்குதுன்னு உனக்கு தெரியாது..?
சும்மா அழகுக்கு தான்..
அமெரிக்காவில் எத்தனை வருசமா இருக்க..?
15 வருசத்துக்கும் மேல்..
உனக்கு இந்த கை காட்டி விஷயம் உண்மையாகவே தெரியலையா.இல்ல தெரியாத மாதிரி நடிக்கிறியா?
ஆமா … பெரிய ரயில்.. கைகாட்டி.. மேலே ,, கீழன்னு..செஞ்ச உதவிக்கு “தேங்க்ஸ்” சொல்லிட்டு போனை வை வாத்தியாரே..
தேங்க்ஸ்..
என்னங்க..நேத்து அவ்வளவு சொல்லியும் .திரும்பியும் அந்த கைகாட்டிய மேலே வைக்காம வந்து இருக்கீங்க…
அது வந்து.. தண்டம்..
தண்டம் … தண்டம்ன்னு உங்களையே திட்டிக்கிரத நிறுத்திட்டு ….”செய்வன திருந்த செய்யுங்க!
நான் வேறொரு தளத்தில் எழுதி கொண்டு இருந்த போது வெளிவந்த பதிவு, படிக்காத நண்பர்களுக்காக ....

4 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லா எழுதுறீங்க. ஒரு செய்தியை ரொம்ப நகைச்சுவையோடு சொல்லும் கலையில் நீங்க பின்னுறீங்க. நிறைய செய்திகளை இந்தமாதிரித் தொடர்ந்து எழுதினால் நீங்களும் 'இன்று ஒரு தகவல்' தென்'கச்சியைவிட நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. ஓஹோ இப்படியெல்லாம் இருக்கா ?
    தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்களை
    இப்படிச் சுவாரஸ்யமாகச் சொல்வது சிலரால்
    மட்டுமே சாத்தியம்
    படம் போட்டிருந்தது புரிந்து கொள்ள உதவியது

    (நான் இன்னும் ஐந்து மாதத்திற்குள்
    உங்கள் ஊர் குறித்து இதுபோல் நிறையத் தெரிந்து கொள்ள
    வேண்டி இருக்கிறது.பகிர்ந்தால் நல்லது )

    வாழ்த்துக்களுடன்....

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...