வெள்ளி, 28 நவம்பர், 2014

சமையல் குறிப்பு : உருளை கிழங்கு "தடி மாஸ்"

சமையல் குறிப்பை பற்றி பதிவு போடவேண்டும் என்று நினைப்பதோடு சரி, அதை எழுத வாய்ப்பு இல்லையே என்று நொந்து கொண்டு இருந்தேன். அப்படி இருக்கையில், என் இளைய மகள் என்னிடம் வந்து :

டாடி.. நீங்கள் அந்த ஸ்பெஷல் உருளை கிழங்கு செய்து ரொம்ப நாட்கள் ஆகி விட்டது. இன்று செய்யுங்கள் என்றாள். அது உனக்கு ரொம்ப பிடிக்குமா? என்ற என் கேள்விக்கு , நீங்கள் செய்யும் எல்லா சமையலிலும் எனக்கு மிகவும் பிடித்தது அது தான் என்றாள்.



இது மிகவும் சாதாரண விஷயம் ஆயிற்றே, இதற்க்கு இவ்வளவு "பில்ட் அப் " என்று நினைக்கையில் என் மகள், டாடி, போன முறை நீங்கள் செய்த போது இந்த உணவு தான் முதலில் முடிந்தது. எல்லாரும் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள் என்றாள்.

சரி, மகள் கேட்டு விட்டாளே, செய்யலாம் என்று நினைக்கையிலே, இந்த முறை செய்யும் போது மகளை புகை படம் எடுக்க சொல்லி ஒரு பதிவை போடலாம். அதுமட்டும் அல்லாமல், எப்படி செய்யலாம் என்று அவளுக்கும் சொல்லி தரலாம் என்று ஆரம்பித்தேன்.

முதலில் இதற்க்கு என்ன பெயர் வைக்கலாம்?.
"உருளை கிழங்கு பொடிமாஸ்" ஏற்கனவே எடுத்து கொண்ட படியால்.. இதற்கு .. "உருளை கிழங்கு  தடி மாஸ்" என்ற பெயர்! செய்து முடித்து பாருங்கள், பெயரும் பொருத்தமாக தான் இருக்கும்.

"உருளை கிழங்கு  தடி மாஸ்" 
இதற்கான தேவை,

பெரிய பெரிய உருளை கிழங்கு
நல்லெண்ணெய்
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
மற்றும்
பொறுமை.

முதலில் தேவையான உருளை கிழங்கை கழுவி துடைத்து எடுத்து கொள்ளுங்கள்.

பிறகு நல்ல ஒரு நல்ல தீட்ட பட்ட கத்தியை வைத்து கிழங்கை பெரிய அளவில் சற்று தடியாக வெட்டி கொள்ளுங்கள்.

அடுப்பில் சட்டியை ஏற்றி, குறைந்த அளவு நல்லெண்ணெய் ஊற்றி கொள்ளவும். சட்டுவம் சூடான பிறகு உருளை கிழங்கை அதில் போட்டு, நெருப்பை மிகவும் குறைவாக வைத்து கொள்ளவும்.

இந்த கிழங்கு பொன்னிறம் போல் மாறியவுடன், உருளை கிழங்கை எடுத்து ஒரு தட்டில் போட்டு கொள்ளவும்.

பிறகு, தேவையான அளவு உப்பு, மஞ்ச, மிளகாய் தூளை தேவையான அளவு மேலே தூவவும். (இந்த  Bar B Q  வசதி இல்லாதவர்கள் இதை இங்கேயே பரிமாறலாம்.)


இப்போது வெளியே உள்ள  Bar B Que Grilll ன் மேல் போட்டு இரண்டு மூன்று முறை திருப்பி திருப்பி போடவும்.

நன்றாக வெந்த உருளை கிழங்கு நெருப்பின் மேல் போட்டதும் அந்த மிளகாய், உப்பு மஞ்சள் மற்றும் உருளை கிழங்கு அந்த நெருப்பு பட்டு அருமையான வாசனையோடு ருசியாக இருக்கும்.

செய்து பாருங்கள், உங்கள் இல்லத்தையும் சந்தோஷ படுத்துங்கள்.

www.visuwesome.com

14 கருத்துகள்:

  1. இது என்னோட ஃபேவரைட் சைட்டிஷ். சுவை மிகுந்த சத்தான ஒன்று.

    பதிலளிநீக்கு
  2. நல்ல receipe.. அதுவும் இந்த குளிர் காலத்துக்கு சுட சுட ஒரு காபி, டீ உடன் சாப்பிட்டால்..

    பதிலளிநீக்கு
  3. அட வித்தியாசமாத்தான் இருக்கு தடிமாஸ்! செஞ்சு பார்ப்போம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தளிர், தாம் சைவம் என்று எங்கோ படித்த நினைவு. ரொம்ப அருமையா இருக்கும். செய்து பாருங்கள்.

      நீக்கு
  4. ஆகா
    சாப்பிட்டுப் பார்த்துவிட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வாத்தியாரே. வீட்டு அம்மையாரிடம் செய்ய சொல்லுங்கள்.

      நீக்கு
  5. படித்தாகிவிட்டது. இனி ருசிக்கத் தயார்.

    பதிலளிநீக்கு
  6. ஹை! தடிமாஸ். அருமை! நண்பரே! கிச்சனுள்ளும் கைவரிசையா...ம்ம் கலக்குங்கள்!

    இதை அப்படியே முதல் பருவம் முடிந்ததும் நீங்கள் பார் பி க்யூவில் இட்டது போல் க்யூ பண்ணி Skewerல் குத்தி ஓவனில் கிரில் மோடில் வைத்து எடுத்தாலும் நன்றாக இருக்கும் கபாப் செய்வது போல்.....

    பதிலளிநீக்கு
  7. உருளைக்கிழங்கு டாடி மாஸ் என்று பெயர் வைத்திருக்கலாம். :-)

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...