அத்தியாயம் ஒன்றை படிக்க இங்கே சொடுக்குங்கள்..
துப்பறிவாளன் - இரண்டாம் பாகம்! (அத்தியாயம் 1)
மஹேந்திர விளக்கில்லாமலே கிளம்ப.. சுவற்றின் இடுக்கில் மல்லிகாவை புதைத்த இடம் தெரிந்தது...
உன்னை யாரடி வாழ்க்கையில் என்னை சந்திக்க சொன்னது... மனதில் கோபமாக அவளை திட்டினான்..
கனி..
சொல்லு....
சொந்த மகள் ஒருத்தனை காதலிச்சதுக்காக எந்த அப்பனாவது கொலை செய்ய துணிவானா.. என்னால நம்பவே முடியல..
மனோ.. நீ யாரையாவது... லவ் பண்ணி இருக்கியா?
இல்லை...
உன்னை யாராவது?
தெரியல.. ஏன் கேக்குற?
இல்லடா.. மல்லிகா என் மேல விருப்பமா இருந்து இருக்கானு உனக்கு தெரியுது எனக்கு தெரியலை பாரு...
நமக்கு வாழ தெரியல போல இருக்கு கனி...
பேசி கொண்டே வண்டி அண்ணா சாலை வழியாக பாரிஸ் கார்னரை நோக்கி நகர்ந்தது...
மணி 12 போலாக... சாலையோரத்தில் இருந்த கையேந்தி பவனில் ஆளுக்கொரு முட்டை தோசை சாப்பிட்டு... வண்டியை பிராட்வே பகுதியில் நுழைத்தனர் .
இங்கே எங்க வீடு கனி..
பிடாரியார் கோயில் தெரு... வீட்டு நம்பர் 18
நெருப்பெட்டிகள் போல் பல வீடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து இருக்க.. 18ம் எண் வீடு மட்டும், வசதியாக காணப்பட்டது.
வீட்டின் எதிரில் பெரிய கேட்.. அதை ஒட்டி ஒரு வாட்ச்மன் அறை .சுடுகாட்டில் பார்த்த அந்த வெளிநாட்டு காரும் உள்ளே இருந்தது.
பக்கத்து தெருவில் இருந்த மாதா கோயில் எதிரில் மஹீந்திராவை நிறுத்திவிட்டு இந்த தெருமுனையில் இருந்த டீ கடை ஓரமாக நின்று.. ஆளுக்கொரு டீ சொல்லி ...
வாட் இஸ் தி பிளான் ஆப் ஆக்சன் ... கனி..
தெரியல.. ஆனா ...அந்த பொண்ணும் பையனும் இருக்கிற இடத்தை கண்டுபிடிக்கணும்...சீக்கிரமா?
என்னமோ தப்பிச்சிட்டாங்கன்னு சொன்னாங்க,,எங்கேன்னு தெரியல. லெட் அஸ் வெயிட் ....மனோ...
என்று சொல்லுகையிலே.. பெரிய கேட் திறக்கப்பட.. அதில் இருந்து ... சுடுகாட்டில் அலை பேசியில் பேசி கொண்டு இருந்தவன் வெளியே வந்தான்.
இரண்டு பக்கமும் சுற்று முற்றி பார்த்தவன் ...டீ கடையில் இருந்த இவர்களை கண்டுகொண்டு அவசர அவசரமாக இவர்களை நோக்கி வர..
கனி.. நம்மள பார்த்துட்டான்.. கிளம்பு...
பார்த்தான் சரி... நம்ம யாருன்னு அவனுக்கு தெரியாது.. பீ காம்...
இவர்களை நோக்கி நடந்து வந்தவன்... அருகே வந்தவுடன் கையை அவசரமாக பாக்கெட்டில் நுழைக்க...
கனி... பாக்கெட்டில் துப்பாக்கியா..
என்று கேட்க்கும் போனதே.. கைகெட்டும் தூரத்தில் வந்து...பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றை வாயில் வைத்து.. லைட்...என்று சைகையில் காட்ட.. கனியோ.. இல்லை..என்று கடையின் எதிரில் எறிந்த படி தொங்கிய சணல் கயிற்றை காட்டினான்..
இவர்களை விட்டு தள்ளி அவன் கடையை நோக்கி செல்ல, கனியோ கடைக்காரனை நோக்கி..
அண்ணே, அண்ணா நகரில் இருந்து வரோம். வண்டி பங்ச்சர் ஆயிடிச்சு .. பக்கத்து தெருவில் நிக்க வைச்சிட்டு வந்து இருக்கோம்.. இங்கே யாராவது பங்ச்சர் போடுவாங்களா...
இருக்காங்க.. ஆனா தூங்க போய் இருப்பாங்க. வண்டிய பூட்டிட்டு ஆட்டோ பிடிச்சி வீட்டுக்கு போயிட்டு காலையில் எட்டு மணி போல வாங்க...
மனோ.... கனியை.. இவன் என்ன தான் பிளான் பண்ரான்னு என்று வினோதமாக பார்க்கையில்..
சுடுகாடு ஐந்தாவது ஆளின் அலை பேசி அலறியது... கண் பார்வை சரியில்லை போல.. போனை செலஃபீ எடுப்பது போல் தூர வைத்து எண்ணை பார்த்து ...
ஹலோ....
எங்கடா..?
அங்கேயே இருங்க....
ஒன்னும் பண்ணிடாத..
நான் பசங்கள அனுப்பி வைக்கிறேன், கண்ணுல இருந்து தப்பிக்க வச்சிடாதா.. அண்ணன் ஏற்கனவே கோவமா இருக்காரு...
அலை பேசியை கட் பண்ணினான்..
சுற்றி முற்றி அவன் பார்க்க....
அண்ணே.. ஆட்டோ இங்கே எங்கே கிடைக்கும்...
இங்கேயே இருங்க.. இராண்டாவது ஆட்டத்து சவாரி ஏதாவது வரும்..
தேங்க்ஸ்..
அவனோ கடைக்கு பின்னால் சற்று மறைந்து...அலை பேசியை எடுத்து அழுத்த...
எங்கடா..?
அவங்க மூணு பேரும்...
உடனே கிளம்பி ராணிப்பேட்டை போங்க..
காலையில் அஞ்சு மணிக்கெல்லாம் அங்கே ஆத்தோரம் இருக்கணும்..
நான் இங்கே தான் இருப்பேன்..நீங்க உடனே கிளம்புங்க..உடம்பில் இருந்த மண் எல்லாத்தையும் உதறி போட்டு குளிச்சீங்க தானே.. போற வழியில் போலீஸ் யாரவது நிறுத்துனா.. சாவுக்கு அவசரமா போரோம்ன்னு சொல்லிட்டு போங்க...
மீண்டும் அவன் அந்த பெரிய கேட் போட்ட இல்லத்தை நோக்கி செல்ல...
கனியோ.. கடைக்காரனை நோக்கி...
அண்ணே.. இங்கே வீடு விலை எல்லாம் எப்படி போது?
ஏன் கேக்குற...?
நாங்க ரியல் எஸ்டேட் புரோக்கர்.. ஆட்டோ வர வரைக்கும் ஏதாவது தெரிஞ்சிக்கலாம்னு...
இங்கே வீடு எதுவுமே கிடைக்காது தம்பி.. அந்த பெரிய கேட் வீடு ஆள் யாருன்னு உனக்கு தெரியாது போல இருக்கே..
யார் அண்ணே.. வீடை பார்த்தா வசதியா இருக்குற மாதிரி தெரியுதே..
விலை கேக்கும் போதே யோசித்தேன்.. நம்ம பொது பணி துறை அமைச்சரோட மச்சினன் வீடு.. இந்த தெருவிலே எது விலைக்கு வந்தாலும் வாங்கி போட்டுடுவாரு..
ஓ... தேங்க்ஸ் அண்ணே.. ஆட்டோ எதுவும் வராது போல இருக்கு.. நாங்க வண்டிப்பக்கம் போய் பாக்குறோம்.
சில்லரையை கொடுத்துவிட்டு இருவரும் நகர.
மனோ.. இந்த நம்பரை குறிச்சிக்கோ.. உடனே போலீசுக்கு போன் போட்டு இந்த நம்பரை ட்ரெஸ் பண்ண சொல்லு.. ராணிப்பேட்டை.. பக்கம் இருப்பாங்க போல இருக்கு..
இது என்ன நம்பர்..
டே.. அவன் கண் தெரியாம போனை அரை கிலோமீட்டர் தள்ளி வச்சி பார்தானே.. அப்பவே என் போனில் ஜூம் போட்டு எடுத்தேன்..
நான் என்ன பண்ணட்டும்..
போலீஸ் என்ன சொல்றாங்கன்னு பாரு.. அதுவரை இங்கேயே மறைஞ்சி நின்னு இவன் மூமென்ட்டை கவனி..
நீ...
நான் அந்த நாலு பேரை கண்டு பிடிச்சின்னு வரேன்.. போனை கையிலே வைச்சின்னு இரு.. அந்த சட்டை எங்கே...?
வண்டியில் தான்.. அது எதுக்கு..?
அப்புறம் சொல்றேன்..ஜாக்கிரதையா இரு..
மஹேந்திராவை எடுத்து கொண்டு.. அழுத்தினான்..
மணி காலை 1 போல்..பால் வண்டி மற்றும் செய்தி தாள் வண்டிகளின் நடவடிக்கை ஒன்று மட்டுமே தெருவில்...
அரை மணி நேரம் ஒட்டியவன்...வண்டியை நிறுத்திவிட்டு.. பழைய உடைந்து போகும் நிலையில் இருந்த கட்டிடத்தில் நிறுத்தி.. இரண்டாவது மாடியில் இருந்த கதவை தட்டி திறக்காதலால் எட்டி உதைத்து திறக்க..அந்த அறையில் மல்லிகாவின் தம்பி தங்கை மற்றும் மாமா உறங்கி கொண்டு இருக்க..
மாமாவை எழுப்பினான்..
வேணா.. பால்கனி மட்டும் வேண்டா..
ஒரு உதவி...
அநியாயத்துக்கு அவளை கொன்னுட்டாங்களே... எப்படி சார்.. மனசு வரும்..
ஒரு உதவி.. சீக்கிரம்..
இந்த சட்டையில்.. உள்ள லேபிள் பார்.. ராம் டைலர்ஸ் வியாசர்பாடி.. உன் ஏரியா தான்..
ஆமா.. ஆனா இது எங்கேன்னு தெரியாதே..
காலருக்கு கீழே இருக்க மார்க்?
இது வண்ணான் மார்க்..இது... வட்டம் போட்டு.. உள்ள சதுரம்.. மூணரை புள்ளி.. நம்ம ஏரியா வண்ணான் தான்...
எந்த வண்ணான்னு சரியா சொல்ல முடியுமா?
சார்.. நான் இஸ்திரி போடுறவன் தான்.. வண்ணான் இல்ல.. அவங்க தெருவுக்கு போனா கண்டு பிடிச்சிடலாம்..
இப்ப காலையில் ரெண்டு மணி போல. முழிச்சின்னு இருப்பாங்களா...?
சிரித்தான்..?
ஏன் சிரிக்கிற...
வண்ணான் வேலைக்கு போற நேரம்ன்னு ஒரு பழமொழி நீ கேள்வி பட்டது இல்லையா சார்?
இவனும் சிரித்து கிளம்பினார்கள்..
பத்தே நிமிடம்....
வழியில்..
மனோ.. எனி அப்டேட்..?
போலிஸ்ட்ட சொல்லிட்டேன்.. நம்பரை ட்ரெஸ் பன்றாங்க .. நீ எங்க..
ஒரு அரை மணி நேரம் கொடு... இந்த ஆளுங்கள பிடிச்சிடுவேன்னு நினைக்கிறேன்.
கதவை தட்டினார்கள். .. மூட்டை இரண்டை தூக்கி கொண்டே கதவை திறந்தவன்..
என்ன கதிர் .. மல்லிகா செத்துட்டாளாமே.. என்ன ஆச்சி?
அப்புறம் சொல்றேன்.. இது யார் கிராக்கி தெரியுமா?
மூணரை புள்ளி.... ஆறுமுகம் தான்..
எங்க இருப்பான்?
இப்ப தான் கிளம்புவான்.. வா காட்டுறேன்..
ஆறுமுகம்... இது உன்னோடதா?
ஆமா .. கதிர்.. உன் கையில் எப்படி...?
இல்ல.. யாருது...
கதிர்... இது போலீஸ் கேஸ்.. சௌரகார்பேட் மாணிக்லாளோட ஒரே பையன்... பிரேம் லால்.. ரெண்டு மாசத்துக்கு முன்னால காணாம போய்ட்டான்.. அவனோட சர்ட்... உன்கையில் எப்படி... ?
இல்ல இஸ்திரிக்கு வந்துச்சி... திரும்பவும் வாங்க வரலை..அதுக்கு தான்..
அத ஏன் ராத்திரி ரெண்டு மணிக்கு... கேக்குற...
தூக்கம் வரல.. அதுதான்..
சாக்கிரதை கதிர்.. பேசாம போலீசிடம் சொல்லிடு...
சரி.. நான் கிளம்புறேன்..
என்று சொல்லும் போதே.. கனியின் அலை பேசி அலறியது...
சொல்லு மனோ..
அந்த ஆள் திரும்பவும் கடை பக்கமா வாரான் கனி..
ஒரு வேலை பண்ணு.. உன் கையில் உள்ள ரெண்டாவது போனை கொஞ்சம் சார்ஜ் பண்ணி கொடுங்கன்னு அந்த கடை காரனிடம் சொல்லிட்டு நீ அந்த போனில் உனக்கே ஒரு போன் போட்டு சொருகிவிட்டு கார் பக்கம் போறேன்னு சொல்லிட்டு வந்து.. உன் போனில் என்ன பேசுறாங்கன்னு கேளு...
ஓடி சென்று சொன்னதை செய்துவிட்டு மறைந்தான்..
வந்தவனோ மீண்டும் ஒரு சிகரெட் பற்ற வைத்து... அலை பேசி அலற... சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு....
சொல்லு ...
26 ரங்கநாயகி தெரு..
அரசன்பேட்
ராணிப்பேட்டை.
சரி.. பத்திரம்.. ஒன்னும் பன்னிடாத...
நான் வரேன்...காலையில் அஞ்சு மணிக்கு பெருசுட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.. இப்ப எழுப்ப முடியாது..
அவன் கிளம்ப.. மனோவும் விலாசத்தை குறித்து கொள்ள...
கனி...அட்ரஸ் கிடைச்சது...
26 ரங்கநாயகி தெரு..
அரசன்பேட்
ராணிப்பேட்டை.
அவன் காலையில் அஞ்சி மணிக்கு கிளம்புறானாம்.. ஒன்னும் பன்னிடாதன்னு திருப்பி திருப்பி சொல்றான்.. நான் உன்னை அங்கே மீட் பன்னுட்டா..
வேணாம்.. ஊபர் ஒன்னு பிடிச்சி பூந்த மல்லி வந்துடு... நான் அங்கே வெயிட் பண்றேன்.. டைம் வேஸ்ட் பண்ண வேண்டாம்..
போலீஸ் போன் பண்ணா?
அந்த போன் ட்ரெஸ் மட்டும் பண்ண சொல்லு..
சீக்கிரம் கிளம்பு..
கதிர்.. இந்தா ..இந்த பணத்தை பிடி.. ஒழுங்கா இஸ்திரி போடு.... பசங்கள படிக்க வை..ஆட்டோ பிடிச்சின்னு போ.. நான் அவசரமா கிளம்பனும்..
சரி சார்.. அநியாயத்துக்கு மல்லிகாவை...
நான் வரேன்,. என்று கனி கிளம்ப....
இருட்டில்...
சார்.. ரெண்டு பேர்.. பிரேம் லால் சட்டையை எடுத்துன்னு வந்து .,,, இது யார் சட்டைன்னு வண்ணான் கிட்ட விசாரிச்சாங்க.. அந்த ஆள் வண்டி நம்பர் இதோ ...
என்று அலை பேசியில் ஒப்பித்து கொண்டு இருந்தான்...
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக