Wednesday, September 2, 2015

ஓரம் போ .. ஓரம் போ...

நண்பர் ஒருவர் இல்லத்தில் அமர்ந்து மற்ற நண்பர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது வாயெல்லாம் பல்லோடு நுழைந்தான் அருமை நண்பன் ஆருயிர் தோழன் தண்டபாணி...

வாத்தியாரே...

சொல்லு தண்டம்..

சொன்னா நம்ப மாட்ட...

அப்ப சொல்லாத...

என்னா வாத்தியாரே.. பேச்சுக்கு சொன்னா...

சரி சொல்லு...

நேத்து காலையில் ஒரு 6 மணி போல் ... சொன்னா நம்ப மாட்ட ...?


டேய் .. எத்தனை முறை தான் அதையே சொல்லுவ? சொல்ல வந்த விஷயத்த சொல்லு ..

ஒன்னும் இல்ல...

அப்ப பரவாயில்ல விடு..

வாத்தியாரே.. நீ என்ன பேச விடவே மாட்டுறியே...

சரி பேசு..

நேத்து காலையில்...

ஆறு மணி போல்.... மேலே சொல்..

சொல்றன் வாத்தியாரே... உன் வண்டி போலவே ஒரு வண்டி.. அதில் உன்னை மாதிரியே ஒரு ஆள் பயணிகள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு இருக்க ... உன் மூத்த ராசாத்தி போலவே ஒரு  பொண்ணு வண்டிய ஒட்டின்னு..

எத்தனை மணின்னு சொன்ன?

 ஆறு மணி போல வாத்தியாரே..

காலையில் ஆறு மணிக்கு நீ எப்படி வெளியிலே...?
அது வேற கதை வாத்தியாரே.. அதை விடு... எப்படி .. உன் வண்டி மாதிரியே.. உன்ன மாதிரியே ... உன் ராசாத்தி மாதிரியே... எப்படி..

ஒரு வேளை இப்படி இருக்குமா? தண்டம் ...

எப்படி...?

சொன்னா நம்பனும்..

சொல்லு வாத்தியாரே .. நம்புற மாதிரி சொல்லு...

அது ஒரு வேளை நானா இருக்குமோ ?

நானும் யோசித்தேன் வாத்தியாரே.. இருந்தாலும் கொஞ்சம் இருட்டா இருந்ததில் தெரியல...

பாணி.. அது நான் தான்..

அப்ப வண்டிய ஒட்டுனது ?

என் மூத்த ராசாத்தி தான்...

என்னா சொல்ற வாத்தியார ..? உண்மையாவா ?

ஆமா பாணி... ஓட்ட ஆரம்பிச்சிட்டா ?

என்னால நம்பவே முடியல... இப்ப தானே வாத்தியாரே தோள் மேலே போட்டு
பாட்டு பாடினு இருந்தே.. அதுக்குள்ள..

டேய்.. அது இப்ப இல்ல.. 13 வருஷத்துக்கு முன்னால.. இப்ப 16 ஆச்சி..

ஏன் வாத்தியாரே.. சின்ன பிள்ளை. 130 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டும் போது உனக்கு பயம் இல்லையா?

இப்ப தான் பாணி இந்த வேகம்.. ஒரு மூணு மாதமா மெதுவா ஓட்டுற தெருவில் ஒட்டி பழக்கினோம் .

சரி.. நீ கூட இருக்க .. பயம் இல்லா ... தனியா வண்டிய எடுத்துன்னு போனா?

அதுக்கு இன்னும் ஒரு வருஷம் இருக்கு பாணி...முதல் வருஷம் கூட ஒரு பெரியவங்க இருந்தாதான் ஓட்ட முடியும் .

அப்ப என் பிள்ளையும் அடுத்த வருஷம்..

கண்டிப்பா வண்டி ஓட்ட ஆரம்பிக்கணும்..

நினைத்து பார்க்கவே முடியல வாத்தியாரே.. +2 படிக்கும் போது சைக்கிள் ஓட்ட கூட எங்கப்பா என்னை விடல.. அவ்வளவு பயம்.

அது எல்லாம் அந்த காலம் பாணி... இப்ப ஆண்டவன் மேலே பாரத்த போட்டுட்டு ஒரு பிரார்த்தனையும் பண்ணிட்டு அனுப்ப வேண்டியது தான்.

பின் குறிப்பு :

இவ்வளவு உரையாடலையும் கேட்டு கொண்டு இருந்த மற்ற நண்பர்கள் :

கொடுத்து வைச்சவன், சித்தப்பூ நீ.. இனிமேல் டாஸ்மாக்கு போனா... ஒரு போன் போட்டா போதும் .. நீ வண்டி ஓட்ட தேவையில்ல .. ராசாத்தியே வந்து உன்னை கூட்டினு போய்டுவா ..

அடே டே.. இனிமேல் காலையில் 5:30 க்கு எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு நீ கூப்பிடினு போக தேவை இல்ல.. நிம்மதியா 8 வரை தூங்கலாம்..

இந்த காய்கறி வாங்குற சமாசாரம் எல்லாத்தையம் மெதுவா சொல்லி கொடுத்துடு. அதுக்கு பிறகு உனக்கு சனிக்கிழமை மதியம் .. குட்டி தூக்கம் போட வாய்ப்பு.

அடேங்கப்பா.. இனிமேல் அவசரத்துக்கு சொந்தம் பந்தம் கூப்பிட்டா அடுத்த விமானத்தில் நீயும் மனைவியும் போகலாம். ரொம்ப சந்தோசம்.

இதையெல்லாம் கேட்டவுடன் .. யார் யாருக்கு என்ன என்ன பிரச்சனை என்று ஒரளவு புரிந்தது. 

3 comments:

 1. இதையெல்லாம் கேட்டவுடன் .. யார் யாருக்கு என்ன என்ன பிரச்சனை என்று ஒரளவு புரிந்தது.///


  hahahaa final touch super sir!!!

  ReplyDelete
 2. உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவர்க்கு, வாழ்த்துக்கள்,

  ReplyDelete
 3. ஹஹஹஹஹ் கடைசி வரி பின் குறிப்புல....

  டாஸ்மாக் செம.,...அஹஹ

  ReplyDelete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...