இவ்வளவு நாளா எங்கே இருந்தீங்கன்னு கேக்கற அனைவருமே என் சந்ததி ஆட்கள் (40+). இவ்வளவு நாளா எங்கே இருந்தோம் என்று நாம் வெட்க பட்டு குனிய தான் வேண்டுமே தவிர.. இந்த சந்ததியை கேட்க கூடாது.
கடந்த 50 வருடங்களில் நம்மை நாமே கொத்தடிமையாகி கூத்தாடிகளுக்கு கூஜா தூக்கி குடும்ப அரசியலுக்கு பயந்து... பயந்து வாழ்ந்த நாம் .. இக்காலத்து பிள்ளைகளை கேள்வி கேட்கவே கூடாது.
இந்த போராட்டம் ஜெயா இருந்து இருந்தால் நடந்திருக்குமா.. சந்தேகம் தான். அடிமைகளை வைத்து நாடகமாடி மெரினா முழுக்க இன்று ஜெயாவின் படங்கள் தான் இருந்து இருக்கும். இந்த புரட்சியை கண்டு புலம்ப ஜெயா இல்லையே.. இந்நிகழ்ச்சியை காணும் நிலையில் கருணா இல்லையே என்று ஒரு வருத்தம் மனதில் உள்ளது.
கண்ட நாயையும் சபைக்கு அனுப்பி வைத்தது நம் சந்ததியே. ஏன் கடந்த தேர்தலின் வாக்குகளை பார்த்தால் 75 % வாக்குகள் அளித்தது 40 வயதிற்கும் மேலானோரே.
நாம் கையாளாதவர்காளாக இருந்தோம் என்ற உண்மையை தாழ்மையுடன் ஏற்று கொண்டு... இவர்களாக வாழுவோம்.
இதுவரை ஏன் வரவில்லை என்பதை விட்டு .. இனி எங்களை எங்கே அழைத்து செல்ல போகின்றார்கள் என்பதை நோக்குவோம்.
நம்மை நம்பி இருந்த ஒரு இனத்தையே நம் கையாலாகாதனத்தினால் தாரை வார்த்து கொடுத்த நமக்கு இந்த கேள்வியை கேட்க எந்த உரிமையும் இல்லை.
அதுவரை..... இவர்களை தட்டி கொடுப்போம். முடிந்தால் சமைத்தெடுத்து சென்று ஊட்டிவிடுவோம்... உடல் நலம் இல்லாதவனை உபசரிப்போம்.
ஏட்டு சுரைக்காய் தானே நாம்.. இவனை பாராட்டி ஒரு கவிதை எழுதுவோம். அதற்கும் நேரம் இல்லாவிடில் இவன் செய்கைக்கு ஒரு லைக் போடுவோம். அதை விட்டுவிட்டு இதுவரை எங்கிருந்தீர்கள் என்பது மாபெரும் தவறு.
நாம் தான் வீழ்ந்தோம்.. அவனாவது வாழ்ந்து விட்டு போகட்டுமே..
இப்படிக்கு கேள்வி கேட்க உரிமை இல்லாத கொத்தடிமை.
முடிவில் ஏன் இப்படி...?
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அறுபது வயதுக்கு மேற்பட்ட தலைமுறையினர் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சந்ததி. இன்றய முப்பது வயதுக்கு கீழான இளைய தலைமுறையினர் தங்களது சந்ததிக்கான ஜல்லிக்கட்டு போராட்டத்தில். நம்மை போன்ற நடுத்தர வயதினர்தாம் இத்தகைய எழுச்சி மிகு போராட்டங்களில் ஈடுபடவில்லை. குறைந்ததபட்சம் இன்றய இளைஞர்களின் எழுச்சியை ஆதரிக்க வேண்டும்.
பதிலளிநீக்குசரியான கருத்துக்கள். புது எழுச்சி வர வேண்டும். இப்போது அவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டலும் தேவை என்று தோன்றுகிறது...அரசியல் சாராத...வழிகாட்டல். கள்ளத்தனம் இல்லாத வழிகாட்டல்...பார்ப்போம் ..நல்லது நடக்க வேண்டும் என்ற ஆதங்கமும் எழுகிறது விசு. களத்திலிருந்து நேரடியாகச் சில விஷயங்கள் அறிவதால்...
பதிலளிநீக்குகீதா
வரூஊஊஊஊ..ம்,,, ஆனா வராது அப்டின்னு நெனச்ச பய புள்ளங்கல்லாம் இப்போது இங்க 1 க்கு கூட தனியா போவ பயப்படுதுங்க... இத நீங்க நேருல பாக்கனுமே..!!
பதிலளிநீக்கு