வெள்ளி, 27 ஜனவரி, 2017

இந்த கவர்னர் சனியனை என்ன சொல்றது?

சென்ற வாரம் சென்னையில் நடந்த  புரட்சியில் லட்சக்கணக்கான மாணவர் மாணவியரும் மற்றும் நடுத்தர வயதோரும் சேர்ந்து ராவும் பகலுமாக ஒன்றாக போராடி வந்தனர்.

இந்த போராட்டம் வெற்றியே என்று நடுநிலையாளர்கள் சொன்னாலும்.. வன்முறையில் முடிந்தலால் .. தோல்வியே என்று மிருக நல ஆர்வலர்கள் சொல்லியும் வருகின்றார்கள்.

இந்த போராட்டத்தில்.. எனக்கு பிடித்த சில விடயங்கள்..

யார் ஒருவரின் தூண்டுதலும் இல்லாமல் ஒவ்வொருவரும் தம் தம் உரிமைக்காக வெளியே வந்தது. இந்நாள் வரை "வேலைக்காவைத்தவர்கள்.. அலை பேசியிலே வாழ்ந்து கொடு இருப்பவர்கள்"  என்று தான் நினைத்து இருந்தோம்.. ஆனால் இவர்களோ  நம் எண்ணத்தை மாற்றி அமைத்தார்கள்.



குறிப்பாக சென்னை மெரினாவில் போடாடியவர்களில் பெரும்பாலோனோர் .. ஜல்லி கட்டை பார்த்தே இருக்க மாட்டார்கள். அவர்கள் போராடிய விதத்தை பார்த்தால் "காளை" ஒரு அடையாள சின்னமே..தங்கள் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து அரசியல்வாதிகளால்  ஏமாற்ற பட்டு வருவதால் பொங்கி எழுந்த உணர்ச்சி போராட்டம் என்றே தெரிகின்றது.

நான் அடிக்கடி கூறுவது போல் இது காளைக்கான  போராட்டம் அல்ல..நாளைக்கான போராட்டம்.


அடுத்து.. இத்தனை வாலிப பெண்கள் இருந்தும் ஒரு பாலியல் விபரீதம் இடம் பெற வில்லை. அது மிகவும் பாராட்ட தக்கது. போராட்டத்தின்  நடுவே மின்சாரம் தடை பட்டு போனதும், இவர்கள் தங்கள் அலைபேசியில் ஒளி ஏற்றி போராட்டத்தை காரியமாக  தொடர்ந்தது ... மயிர்கூச செய்தது.

மற்றும்.. போராட்டம் முடிந்து குப்பைகளை அகற்றுகையில்.. ஒரு  "சோமபான" பாட்டில் கூட பார்க்கமுடியவில்லை. இந்த லட்சக்கணக்கானவர்கள் அனைவரும் குடி பழக்கம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் போராட்ட நேரத்தில் இவர்கள் குடியை தவிர்த்து... அவர்களின் ஒழுக்கத்தை காட்டியது.

இந்த போராட்டம் நம் அரசியல் அமைப்பை சற்று ஆட்டியே இருக்கும். சந்தேகமே இல்லை...

இந்த போராட்டத்தில் எனக்கு ஒத்து போகாத விஷயம்..

தலைமை இல்லாத போராட்டம்.... இலக்கு தடுமாறும்.

சில பிரபலங்கள் சுயநலத்தோடு அங்கே வந்தது...குறிப்பாக சிம்பு. இந்த சனியனை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அங்கே வந்து.. நான் மூன்று வருடங்களாக படம் இல்லாமல் இருந்தேன்.. நான் ஒழிந்தேன் என்று நினைத்தீர்களா? நான்.. நான்.. எங்க அப்பா.. நம்ம பிள்ளைகள்.. என்று அவர் பேசியது.. அருவருப்பாக இருந்தது. இந்த TR மற்றும் அவரின் பிள்ளை " தமிழன்டா" என்று கூவுவதை உடனடியாக நிறுத்தவேண்டும். நாம் அனைவரும் தமிழர் தான்.

அடுத்து.. பிடிக்காத காரியம்..ராதா ராஜன்.. இந்த அம்மணி.. ஆரம்பித்தில் இருந்தே மிருகம் நல ஆர்வலர் என்று சொல்லி கொண்டு.. RSS மற்றும் BJP கொள்கைகளை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் ஏறி வநதார்கள். மிருகங்களோடு அதிகம் பழகியால் என்னவோ,, "பிரீ செக்ஸ்" என்றால் கூட இந்த போராட்டக்காரர்கள் வருவார்கள் என்று சொல்லி.. தன் வளர்ப்பு மற்றும் பின்னணியை ஊரறிய சொல்லி விட்டார்கள். இவர்களை இனிமேல் எந்த தொலைக்காட்சியிலும் பார்க்க கூடாது என்பதே என் விருப்பம்.

இந்த அம்மணியின் தோழரும் .. மற்றும் BJP அரசியல்வாதியுமான சண்முகநாதன்.. மேகலாயா கவர்னர் மாளிகையை "சிவப்பு விளக்கு" பகுதியாக மாற்றிவிட்டாராம்.

கொஞ்சம் விசாரித்து பார்த்ததில்.. இவர் நாட்டு பொது சேவைக்காக திருமணமே செய்யாமல் இருந்தவராம். இந்த சனியனின் வாழ்வு முறையின் இந்த வயதிலே இப்படி இருந்தால் இவரின் வாலிபம் எப்படி இருந்து இருக்கும்?

இந்த பாலியல் தொந்திரவு.. தொட்டில் பழக்கம் போல். ஒருவனோடு கூடவே வரும். இது திடீரென்று தொத்தி கொள்ளாது. இவன் வாழ்க்கையில் கடந்த பல  வருடங்களில் இதனை பெண்களை தன் அரசியல் பலத்தை கொண்டு சீரழித்து இருப்பான்? நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது.


இந்த ராதா ராஜனும் சரி ஷண்முகனும் சரி .. சமூகத்தில் இருந்து ஒதுக்கி  வைக்க படவேண்டும்..

5 கருத்துகள்:

  1. சரியா சொன்னிங்க,. இந்த பாதிரியார் சனியனுங்களும் இப்படி தான். நீங்க அமெரிக்கால இருக்கிறதால் உங்களுக்கு தெரியாது. இங்க டெய்லி பாதிரியார்களின் அக்கபபோர் தான். பாதிரி சனியனுங்க ஏதாவது பண்ணி தொலைக்க வேண்ணுயது. அதுக்கு போபு மன்னிப்பு கேட்க வேண்டியது. சண்முகநாதன்கள் கிறிஸ்தவத்திலும் இருக்க தானே செய்வான்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்தை எழுதியவருக்கு முதலில் ஒரு விண்ணப்பம். முதலில் தங்களின் உண்மையான பெயரை சொல்லி கருத்தை வையுங்கள். அதுதான் ஒருத்தருக்கு அழகு. பெயர் சொல்லி கூட கேள்வி கேட்க தைரியமில்லாமல் இருந்தால் என்னையா மனிதர் நீர்.

      சரி.. உங்கள் பின்னூட்டத்திற்கு வருவோம். நான் அமெரிக்காவில் இருப்பதால் அங்கே பாதிரியார் சனியங்களின் போக்கு எனக்கு தெரியாது என்றீர்கள். உண்மை தான். எனக்கு தெரிந்தவற்றை பற்றி நான் எழுதுகிறேன். அந்த பாதிரியார் சனியங்களின் கேவலமான நடத்தையை தான் தாம் தெரிந்து வைத்து இருக்கின்றீர்கள்.. அதை பற்றி தம்மை போல் நால்வர் எழுத வேண்டியதுதானே.

      உங்களுக்கு ஒரு சிறிய அறிவுரை. நாளையே தங்களின் உண்மையான பெயரை வைத்து ஒரு பதிவு ஆரம்பியுங்கள். தங்கள் கண்ணுக்கு தெரியும் அனைத்து பாதிரியார் சனியங்களை பற்றியும் அதற்கு மன்னிப்பு கேட்க்கும் போப்பை பற்றியும் எழுதுங்கள். இந்த சனியங்களின் கேவலமான நடத்தையை நாங்களும் அறிவோம்.

      அப்படி எழுதும் போது தைரியமாக தங்களின் பெயரை போட்டு எழுதுங்கள்.

      நான் ஏன் இப்படி எழுதினேன் என்று கேட்கும் உரிமையே பெயர் சொல்ல பயப்படும் உனக்கு இல்லை.. நீயோ நான் ஏன் இதை எழுதவில்லை என்று கேட்கிறாய்.

      பக்தனாகிய உனக்கு இன்னொரு விஷயம். நீ கண்டிப்பாக சுனா சானா வின் ரசிகனாக தான் இருப்பாய். அவரின் தளத்திற்கு சென்று சில விஷயங்களை கேள்..

      சோனியா காந்தி என்ன படித்தார் ( இந்த சனியன் பிடித்த காங்கிரசை மறக்க நினையஹாலும் இந்த பக்தர்கள் விடமாட்டேன் என்கிறார்களே) எங்கே கக்கூஸ் போனார்.. என்று தரம் பிரித்து சொல்லும் இவரிடம்..

      மோடி என்ன படித்தார் .. ஸ்மிரிதி இராணி என்ன படித்தார் என்று கேட்டு பாருங்கள் .. பதில் வராது.

      அரசியலில் அனைவரின் மொள்ளைமாரித்தனத்தை அறிந்து இருக்கும் இவர் சிலரை மட்டுமே எதிரி என்று கருதுவார். அவர்களை பற்றி தான் எழுதுவார்.

      Bottom line is " Start your own Blog with your identity and write about the wrong doings of people around you, instead of taking offense"

      And BTW, one last question.. Does the wrong doings of Paathriyaar Saniyangal Justify the actions of Raadha Raajan and Shanmuganaathan".

      I am eagerly waiting for your reply (offcourse with your name). And if you cant answer with your identity dont bother writing!

      நீக்கு
    2. அனாமதேயங்கள் அடையாளத்தோடு என்றும் வர மாட்டார்கள்

      நீக்கு
  2. ராதா ராஜனின் வீடியோவை பார்த்தீர்களா? மக்கள் ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டார் என்று உள்ளே தூக்கிப் போட வேண்டிய சனியன் அது

    பதிலளிநீக்கு
  3. இளைஞர்களை நல்ல முறையில் வழி நடத்த ஒரு தலைமை அவசியம். அது இல்லாததால் கொஞ்சம் தடுமாறியது. அரசியல் சாராத, திரை உலகு சாராத நல்ல தலைமை மிக மிக அவசியம். தலைவர் என்றில்லையானாலும் வழி நடத்த அவசியம். இதையேதான் பதிவில் குறிப்பிட்டு வந்தோம் விசு. எனவே நாம் நினைப்பது போல அடுத்த எழுச்சி (நிச்சயமாக வரும்...) யிலேனும் தலைமை ஒன்றிருக்கும். மட்டுமல்ல அவர்கள் அரசியலில் இறங்குவாதானால் அதன் நுணுக்கங்களையும் அறிந்து வர வேண்டும் இல்லை என்றால் மிகவும் கடினம்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...