டாடி... சீக்கிரம் கிளம்புங்கோ...
கதறினாள் மூத்த ராசாத்தி..
எப்படியும் மறந்து இருப்பாள், நாமும் தூங்குவதை போல் பாசாங்கு செய்யலாம் என்று செயற்கையான குறட்டையை சத்தமாக விட்டு கொண்டு... மறுபக்கம் சாய்ந்து படுத்தேன்....
சனி மதியம்... பூனை தூக்கம் அரிதுதான்...
ஒன்றும் இல்லை இன்று காலையில் எழுந்தவுடன் அவள் சொன்னது...
"Hidden Figures" என்ற ஒரு படம் வெளிவந்துள்ளது. நாம் கண்டிப்பாக குடும்பத்தோடு அந்த படத்திற்கு இன்று இரவு போகவேண்டும்.
என் மனதிலோ படமா...ரஜினிகாந்தின் பாபா படத்தில் இருந்து பாதியில் எழுந்து வந்ததில் இருந்து நமக்கு படம் என்றாலே அலர்ஜி என்றல்லவா வாழ்ந்து வருகிறேன். ஆங்கிலமோ தமிழோ.. எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளிட்டு வாழ்ந்த்து கொண்டுவருகிறேன். இவளோ.. இன்று குடும்பத்தோடு... படம்.. என்று சொல்லிக்கொண்டு....
மகள்.. ரொம்ப டயர்ட்... அடுத்த வாரம்....
நோ.. அடுத்த வாரம் நேரம் இருக்காது. டுடே இஸ் தி டே... கெட் ரெடி.. என்று சொல்லி விட்டு கிளம்ப...
நானோ கூகிள் சென்று "Hidden Figures " என்று தட்ட...ஆப்ரிக்க அமெரிக்க வழி வந்த மூன்று பெண்கள் ஒரு படத்தில் வந்தனர்.
ஐயகோ.. இது மனித உரிமை பற்றிய படமா... அவர்கள் உடையை பார்த்தால் கிட்டத்தட்ட ஐம்பது வருடங்களுக்கு முன்னால் போடும் உடை போல் உள்ளதே...இது இந்த அம்மணிகள் பட்ட கஷ்டத்தை தோல் உரித்து காட்டுமே... என்று ஒரு தயக்கம். எனக்கு இந்த சோகமான படங்கள் பிடிக்காது. மூன்றாம் பிறையை முதல் நாள் பார்த்து விட்டு மூன்று நாள் அழுதேன்.
இந்த மூன்று அம்மணிகளை பார்த்தால்...கமலா காமேஷ் - ஸ்ரீ வித்யா - K R விஜயா மூன்று பேரின் சோகம் போல் தெரிகிறதே ....என்று நினைத்து கொண்டே வண்டியில் ஏறினேன்.
டாடி... பி சீயர்புல்...இட்ஸ் எ குட் மூவி.
ஓகே..
நான்கு பேரும் டிக்கட்டை வாங்கி உள்ளே செல்கையில்.. இளையவளோ என் அருகில் தான் அமருவேன் என்று ஆடம் பிடிக்க...
விளம்பரங்கள் ஆரம்பித்தது. அனைவரின் அலை பேசியையும் அமைதியாக்குங்கள் என்று அறிவுப்பு வர நாங்களும் பணிய...
முதல் காட்சி..
இந்த மூன்று பெண்மணிகளும் சாலையின் ஓரத்தில் பழுதான ஒரு வாகனத்தில் இருக்க..ஒரு வெள்ளை காவல் அதிகாரி அவர்களை நோக்கி வர...
மனதிலோ... ஆரம்பிச்சிட்டாங்கய்யா... ஆரம்பிச்சிட்டாங்க என்று நினைக்க..
அதிகாரி அவர்களின் அடையாள அட்டையை கேட்க...
அவர்களும் அதை அளித்து விட்டு... நாங்கள் மூவரும் NASA வில் வாகனத்தில் புரிகிறோம் என்று சொல்ல...
NASA வா என்று நிமிர்ந்து அமர்ந்தேன்.அது என்னமோ... விண்வெளி ஆராய்ச்சி என்றாலே எனக்குள் ஒரு உற்சாகம். அப்போல்லோ 13 என்ற படத்தை ஆயிரம் முறை பார்த்து ரசித்து இருப்பேனே..
அடுத்த ஒன்னறை மணி நேரம் ... என் வாழ்வின் சிறந்த சில நிமிடங்கள் என்றே சொல்லலாம். ஒரு அருமையான நதியின் ஓட்டத்தை போல்.. என்னே ஒரு ஓட்டம்.
ஒவ்வொரு காட்சியும் அமைக்க பட்ட விதம்... எடுக்க பட்ட விதம்.. வசனம்.. திரைக்கதை அமைப்பு ...நடிப்பு... என்று ...
பெண் உரிமை, சம உரிமை, காதல், வேலை, பிள்ளை பாசம், நட்பு, அதிகாரம், விண்வெளி ...என்று.. எத்தனை கோணம்....
சொல்ல வேண்டிய விஷயங்கள் அநேகம் இருந்தாலும் அதை சொல்லி உங்களின் சந்தோசத்தை கெடுக்க விரும்பவில்லை ..
கண்டிப்பாக குடும்பத்தோடு சென்று பாருங்கள். இது நம்மையும் நம் பிள்ளைகளையும் கண்டிப்பாக உற்ச்சாக படுத்தும்.
பின் குறிப்பு : படத்தில் இரண்டு காட்சிகளில் கணவன் மனைவி முத்த காட்சிகள் உண்டு. எந்த ஒரு விரசமும் இல்லாமல் அழகாக எடுத்து இருப்பார்கள். இந்த இரண்டு காட்சி வரும் போதும் என் கண்களை மூட தான் இளையவள் என் அருகில் அமர ஆர்ப்பாட்டம் போட்டாளாம்.

நல்லதொரு ஆர்ப்பாட்டம்...!
பதிலளிநீக்குநல்லது. லிஸ்டில் சேர்த்துவிடுகிறேன்.
பதிலளிநீக்குநானும் பார்க்கலாம் என்றிருக்கிறேன்....வேலூர் புத்தக வெளியீட்டில் சந்தித்தோம்...ஞாபகம் வருதா?
பதிலளிநீக்கு- இராய செல்லப்பா தற்போது நியூ ஜெர்சியில் இருந்து.
http://ChellappaTamilDiary.blogspot.com
பாக்யராஜ் சில்லறை காசு இறைக்கறது எல்லாம் அங்கே கிடையாதோ?
பதிலளிநீக்குபார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறோம் விசு!
பதிலளிநீக்குகீதா: டங்கல் ஹிந்திப் படம் முடிந்தால் பாருங்கள் விசு! அருமையான படம் உண்மைக் கதை! உங்களுக்குத் தெரிந்திருக்கும்....