தமிழக அரசியலை சித்தரிக்கும் அடியேனின் பாடல்... (மேலே சொடுக்குங்கள்))
மே மாதம் 17ஂ தேதி தேர்தல்... கடந்த ஐம்பது வருடமாக அடுப்பில் இருந்து நெருப்பு .. நெருப்பில் இருந்து அடுப்பு...என்று காலத்தை தள்ளு விட்டோம்...
நாம் என்ன செய்வோம். நம்மக்கு வாய்த்தது, அப்படி! டெல்லியை பார்த்தால் பொறாமையாக உள்ளது. உன்னால நான் கேட்டேன் என்னாலே நீ கெட்ட என்று சொல்லி கொண்டு இருந்தவர்களுக்கு "அம் ஆத்மி" என்ற விமோசனம் கிடைத்தது.
ஆரம்பத்தில் அரசியல் நிர்வாக அனுபவம் இல்லாமல் அவர்கள் தடுமாறினாலும், நாட்க்கள் செல்ல செல்ல இவர்களுடைய ஆட்சி சிறப்பாக அமைந்ததே என்று சொல்லலாம்.
அடுத்த வருடம் பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருக்கும் தேர்தலில் .. அம ஆத்மி கட்சிக்கு அனைத்து இடங்களும் இவர்களுக்கே என்ற ஒரு பேச்சு அடி படுகின்றது.
நமக்கு இப்படி ஒரு வாய்ப்பு இப்போதைக்கு இல்லை. ஒரு காரியம் பண்ணலாம். நம் தொகுதியில் நிற்பவர்களிலே சிறந்தவரை நல்லவரை தேர்ந்தெடுங்கள்.
இந்த ஒரு முறை கட்சியை பார்த்து வாகு அளிக்காதிருங்கள். வேட்ப்பாலர்களை பார்த்து வாக்குகளை அளியுங்கள். அணியாது தொகுதிகளிலேயும் கண்டிப்பாக ஒரு நல்ல வேட்பாளர் இருப்பார். அவரை அறிந்து ஆதரியுங்கள். இதுவே இம்முறை நாம் நமக்கு செய்யும் பெரிய உதவி...
செய்வீங்களா ... செய்வீங்களா .....
வந்தோரை வாழவைத்தாய் உன் பெருமை
வாடியதை கண்டதும் வாடினாய் உன் தன்மை.
வள்ளுவனின் வம்சமே உன் மொழி வாய்மை.
இப்ப பிச்ச்சகாரனாகிவிட்டாய் .. ஐ டோன்ட் நோ வொய்....
அடுக்குமொழி பேசிக்கிட்டே ஆப்பு வைச்சாள் ஒய்
ஆடவந்த கூத்தாடி ஆள வைச்சோம் ஒய்
மருத்துவரு வந்தவுடன் மரத்த காணோம் ஒய்
கேனையங்க ஊருக்குள கேப்டன் நாட்டாமை.
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....
சொந்த செலவில் ஒய் ... சூனியம் தான் ஒய்.
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
கையில வெண்ணை ..ஐ டோன்ட் நோ வொய்.
உடன் பிறப்புகளே...
வாக்காள பெருமக்களே..
மக்க்களே.. மக்களே...
உங்கள் பொன்னான வாக்குகளை...
கருப்பு பணம் காட்டிடிச்சு டாடா பை பை.
கொண்டு வரேன்னு சொன்னவர் ஆல்வேஸ் இன் தி ஸ்கை
இல்லத்துக்கு பல லட்சம் அது தேர்தல் பொய்.
மல்லையாக்கு நல்ல நேரம் வைச்சான் பீச்சாங்கை..
ஆதினமும் சொல்லூராரு அம்மாதானு ஒய்
மே தினமும் கும்பலோடு தள்ளாடுது ஒய்
சாதிகொரு கட்சி வச்சி கொல்லுறாங்க ஒய்.
மீதி உள்ள அல்பங்களும் அள்ளுராங்க ஒய்.
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....
பேய்க்கு பயந்தோம் ஒய். இப்ப பிசாசாடோ ஒய்..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
ஈயத்த பாத்து ஒய் ...ஐ டோன்ட் நோ வொய்.
அம்மாவின் ஆணை படி
மாப்பிள்ளை அவருதான் ஆனா அவரு போட்டு இருக்க டிரஸ் பத்தி நான் மறந்துட்டேன்.
அப்புறம் எதுக்கு டா ஷார்ட் நேம் சூப்பி?
மூணு மாசம் முன்னாலே பெஞ்சது மழை.
திறந்து விட்ட ஏறினால எத்தனை கொலை.
வெள்ளம் காஞ்சி நிலம் வறண்டு வெயில் வந்த வேளை
அம்மாவோட மீட்டிங் போனா பாடையில் மாலை .
90 க்கும் மேலே ஆச்சி இன்னும் பேராச ...
கே ந கு தலைவருக்கு முடியல பேச
இலவசம்ன்னு சொல்லி காட்டுவான் ஆச
பரதேசியாகிடுவான் வாங்காத காச
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....
ஏறி ஆத்தா ஒய் ஏரிடிச்சி ஒய் .
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
அடுப்பில பூனை ... .ஐ டோன்ட் நோ வொய்.
தொங்கு சட்டசபை வந்தால் ...
எந்த கட்சியும் யாரோடும் சேர வாய்ப்பு உள்ளது.
கூட்டணியில் ஏதுங்க கொள்கை, கோட்பாடு..
அம்மா வரட்டும்ம்னு காத்துன்னு இருக்கோம்...
2ஜியில் 2லட்சம் கோடி கொள்ளை
போட் ஹௌச்சில் போன் எக்சென்ஜ் இல்லை எல்லை.
சொத்து குவிப்பு வழக்குல கொஞ்சம் நாள் உள்ள
செய்வீங்களா .. செய்வீங்களா .. எனக்கு இல்ல பிள்ளை.
மணல் இல்லாமல் காஞ்சி போச்சு பாரு ஆறை
மலையெல்லாம் பேத்துட்டாங்க காணோம் பாறை
அரசாங்க ஆபிசில் ஊருது சாரை
போனது போச்சி, போடு புதிய பாதை..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்....
கட்டை விரலில் மை...டாஸ்மாக் கடை..
ஐ டோன்ட் நோ வொய்....ஐ டோன்ட் நோ வொய்.
வெந்தத தின்னு ஒய் ....ஐ டோன்ட் நோ வொய்.
உலகிலேயே சிறந்த ஜனாயக நாடு பாரதம் என்று ஜப்பானிய பிரதமர் கூறினார்.
உடன் பிறப்புகளே...
மாண்புமிகு அம்மாவின் ஆணை படி... இந்த பாட்ட இப்ப முடிச்சிடறேன்..
இன்றுடனே ஒழித்திடுவோம்i இந்த சுடுகாட்டை
நல்ல ஆளா பாத்து போடு உன்னோட வோட்டை
நல்லவர் வென்றால் அது நம்மோட கோட்டை..
நம் வாழ்க்கை நம் கையில்...
இருக்கையில், இதுவரையில்..
தடம் மாறி தடுமாறி....
ஐ டோண்ட் நோ வொய்...