செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பங்கஜவல்லி ...தீர்க்க சுமங்கலி ..

முகநூல் நண்பர் அமுதன் சாந்தி அவர்கள் தன் முக நூல் சுவற்றில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டு இருந்தார், இதோ அந்த ஸ்டேட்டஸ் ..

//முந்தா நேத்து ஒரு எடத்துல கார்டுக்கு பதிலா கேஷா செலவழிச்சதை மறந்துட்டேன்...

பர்ஸுல பணம் கம்மியா இருக்கவும்
ஒய்ஃப் கிட்ட (தைரியமா),
"எதுக்காச்சும் பணம் எடுத்தியா?" ன்னு கேட்டுட்டேன்...

"இல்லை, சாயங்காலம் வூட்டுக்கு வாங்க பேசிக்கலாம்!"ன்னுட்டாக ஒய்ஃபு...
கஞ்சியா உப்புமாவா இல்ல கரண்டியான்னு தெரியாம டென்ஷனாருக்கு...//


இதை படித்ததில் இருந்தே நான் பலவிதங்களில் குழம்பிவிட்டேன். உலகில் இப்படியும் நடக்குமா?

இதோ என் குழப்பதிர்க்கான கேள்விகள்..

முதலில்.. "கார்டுக்கு பதிலா கேஷா"

இதை என்னால் நம்பவே முடியல. திருமணம் ஆனா ஒரு மனிதனிடம் "கார்ட் -கேஷ்" இரண்டும் உள்ளதா? நான் இதை ரெண்டையும் சேர்த்து ஒன்றாக பார்த்த கடைசி நாளை என்னால் மறக்கவே முடியாது.

ஒன்றும் இல்லை, அன்று தான் என் திருமண நாள்.



திருமணம் முடிந்ததில் இருந்து ரொக்கத்தை பார்ப்பது மிக அபூர்வம்.

இளையவளுக்கு ஆறு வயது இருக்கும் போது, வகுப்பில் அவரவரின் தந்தை என்ன பணி   புரிகின்றார் என்ற கேள்வி கேக்க..

டாடி... என்ன வேலை பண்றீங்க?

அடியே நான் பெத்த ராசாத்தி.. உங்க அம்மா மாதிரியே பேசுறியே.. நான் என்னத்த பண்ணுவேன் .உங்க மூணு போரையும் சந்தோஷ படுத்த ஏதாவது பண்ணுவேன். அம்புட்டுதேன்.

அது இல்ல.. நீங்க என்ன வேலை செய்யறிங்க?

கணக்கு பிள்ளை .

அப்படினா?

எங்க கம்பனிக்கு கூட்டல்-பெருக்கல் எல்லாம் நான் தான்.

அங்கேயும் அதுதானா...? க்ளீனரா?

இல்ல மகள்.. கம்பனியுடைய மொத்த வரவு செலவு அம்புட்டைடும் நான்தான் பாத்துக்குறேன்.

வீட்டுலே மட்டும் ஏன் அம்மா பாத்துக்குறாங்க?

அதை நீ அவங்களிடம் கேளு .

மம்மி, டாடி என்ன வேலை பண்றாரு?

ஏதாவது சொதப்பி வைச்சாரா.. என்ன ஆச்சி?

இல்ல,  எங்க டீச்சர் அப்பா என்ன வேலை செய்யிறாருன்னு கேட்டுன்னு வர சொன்னாங்க ?

அவர் கணக்கு பிள்ளை..

அப்படினா?

அவங்க கம்பனியில் எவ்வளவு பணம் இருக்குன்னு எண்ணி சொல்வாரு.

உண்மையாவா? நம்பவே முடியில, எப்படி டாடி. நீங்க .. எப்படி.. சரி நான் உங்களை டெஸ்ட் பண்ணட்டா ?

ஓகே, மகள்.

உங்க பேன்ட்டில் "லெப்ட் சைட்"  பாக்கெட்டில் 20 டாலர், "ரைட் சைட்" பக்கெட்டில் 30 டாலர் இருந்தா உங்களிடம் என்ன இருக்கும்?

வேற யாருடைய பேன்ட்டு  தான் இருக்கும்.

டாடி.!

மகள். சத்தம் போடாத. நீ பிறந்ததில்  இருந்து என்னிடம் 20 டாலர் பாத்து இருக்கியா? என்ன ஒரு அர்த்தமில்லாத கேள்வி இது!

அதுவும் சரிதான்..

என்று சொல்லி கொண்டே.. ஆங்கிலத்தில் உங்கள் வேலை என்ன வென்று கேட்க்க நானும் சொல்ல, அவள் கூகிள் தேவதையை தேடி சென்றாள்.

இப்போது நண்பர் அமுதன் சாந்தி அவர்களிடம் வருவோம்.

என்னவொரு கொடுத்து வைத்த மனிதர். திருமணம் முடிந்த பல வருடங்களாகியும் இன்னும் கையில் ரொக்கம். அடே டே! என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கே.

சரி அதை விடுங்க. இவ்வளவு பெரிய  தவறை பண்ணிட்டு அவர் இன்னும் நம்பிக்கையா ....

"கஞ்சியா உப்புமாவா இல்ல கரண்டியான்னு" சொல்றாரே,

அடே டே , இவர் மனைவிக்கு ஒரு சிலை அல்லவா வைக்க வேண்டும்.  இடது கால் சாக்ஸை தெரியாமல் வலதில் அணிந்ததர்க்கே..

"உங்களுக்கு ஒழுக்கம் இல்லை, உங்களோடு வாழ முடியாது"

என்று கூறும் பண்பாட்டு மிகுந்த இந்த காலத்தில் ..

இவருக்கு கஞ்சி- உப்புமா? உண்மையிலேயே கொடுத்துவைத்தவர் தான்.

பின் குறிப்பு :

இவ்வளவு கொடுத்து வைச்ச நண்பர் இன்னும் வாழ்க்கையில் சிறுபிள்ளை தனமாக தான் இருக்கின்றார்.

"முந்தா நேத்து ஒரு எடத்துல கார்டுக்கு பதிலா கேஷா"..

அட பாவி மனுசா..

கல்யாணம் ஆனா ஒரு மனிதன் கார்ட் செலவையும் கேஷ் செலவையும் , மாமியாரையும் மருமகளையும் பிரிச்சி வைக்கிற மாதிரி அல்லவா பிரித்து வைக்க வேண்டும்.

குடும்பத்திற்காக என்ன செலவு செய்ய  வேண்டி  வந்தா மட்டும் தான் கார்ட். அப்ப தான், இது என்ன செலவு .. அது என்ன செலவுன்னு கேள்வி  வராது.

என்னைக்காவது ஒரு நாள் அவங்க முந்தா நேத்து செஞ்ச இட்லிய போன வாரத்து  சாம்பாரோடு ஊற வச்சி "லஞ்சு"ன்னு  சொல்லி ஒரு டப்பா கொடுத்தாங்கனா, அந்த டப்பாவை அப்படியே ஓரங்கட்டி விட்டு மதியம் வெளிய போய் சாப்பிடுவியே.. அதுக்கு மட்டும் தான் கேஷ்  ..

இது கூட தெரியல, இவருக்கு இப்படி ஒரு நல்ல மனைவி...






4 கருத்துகள்:

  1. உங்க பேன்ட்டில் "லெப்ட் சைட்" பாக்கெட்டில் 20 டாலர், "ரைட் சைட்" பக்கெட்டில் 30 டாலர் இருந்தா உங்களிடம் என்ன இருக்கும்?

    வேற யாருடைய பேன்ட்டு தான் இருக்கும்.///சட்டென தெறிக்கும் நகைச்சுவை ...இது தான் விசு ...ஆஹா

    பதிலளிநீக்கு
  2. ஹஹ்ஹஹஹ் விசு....செம...முன்னாடி கூட நீங்களும் நண்பர்களும் இந்த 20 டாலர் சேர்த்து மனைவுக்கு கிஃப்ட் நினைவுக்கு வந்தது...வேறொரு பதிவும் கூட....ஹும் சுதந்திர நாட்டில் சுதந்திரம் இல்லையோ..ஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  3. சிறந்த பதிவு

    உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
    http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  4. என் தோழமைகள் என்னிடம் கேட்டு விட்டார்கள். என் பெற்றோர், உடன் பிறந்தோர் எல்லோரும் கேட்கிறார்கள். நீ இந்த காலத்திலா இருக்கிறாய்?... உன் பேரில் அக்கவுண்ட் இல்லையா?... அவர் என்ன செய்கிறார் என ஒரு போதும் கேட்டதில்லையா? ... என் படிக்காத பெண்டாட்டி ஆடிட்டராட்டம் கேள்வி கேக்கறா?... நீ பேக்கு என்கிறான் என் நண்பன்.... அப்படித்தானோ என்று இப்போது தோன்றுகிறது....

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...